Advertisment

8 ஆம் பாவாதிபதி நின்ற பலன்! - மகேஷ்வர்மா

/idhalgal/balajothidam/result-8th-pavadipati-standing-maheshwarma

8-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகருக்கு சில நோய்கள் இருக்கும். அவர் நன்கு படித்தவராக இருப்பார். நிறைய விஷயங்களைத் தெரிந்தவராக இருப்பார். எப்போதும் தன்னைப் பற்றிய சிந்தனையிலேயே இருப்பார்.

Advertisment

8-ஆம் பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், அதுவே பாவ கிரகமாக இருந்தால், ஜாதகருக்கு ஆயுளில் பிரச்சினை இருக்கும். சிலர் திருடர்களாக இருப்பார்கள். மனதில் திருட்டு எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பார்கள். பகைவர்களால் பிரச்சினை இருக்கும். சுபகிரகமாக இருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

8-ஆம் பாவத்திற்கு அதிபதி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு தன் உடன்பிறந்தோருடன்

8-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகருக்கு சில நோய்கள் இருக்கும். அவர் நன்கு படித்தவராக இருப்பார். நிறைய விஷயங்களைத் தெரிந்தவராக இருப்பார். எப்போதும் தன்னைப் பற்றிய சிந்தனையிலேயே இருப்பார்.

Advertisment

8-ஆம் பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், அதுவே பாவ கிரகமாக இருந்தால், ஜாதகருக்கு ஆயுளில் பிரச்சினை இருக்கும். சிலர் திருடர்களாக இருப்பார்கள். மனதில் திருட்டு எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பார்கள். பகைவர்களால் பிரச்சினை இருக்கும். சுபகிரகமாக இருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

8-ஆம் பாவத்திற்கு அதிபதி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு தன் உடன்பிறந்தோருடன் உறவு சரியாக‌ இருக்காது. ஜாதகர் கடுமை யாகப் பேசுவார். சிலருக்கு உடலில் ஏதாவது குறை இருக்கும். மனதில் சஞ்சலம் இருக்கும். தேவையற்றதைப் பேசுவார்கள்.

ss

Advertisment

8-ஆம் பாவத்திற்கு அதிபதி 4-ஆம் பாவத்தில் இருந்தால், தந்தை- மகன் உறவு சரியாக இருக்காது. ஜாதகர் தன் தாயாரின் சொத்தை அபகரிப்பார்.தன் தந்தையை அவர் எதிரியாக நினைப்பார்.

8-ஆம் பாவத்திற்கு அதிபதி 5-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு வாரிசு இருக்காது. சிலர் தங்கள் பிள்ளைகளின் உடல் நலத்தைப் பற்றிய சிந்தனை யிலேயே எப்போதும் இருப்பார்கள். பெயர், புகழ் எளிதில் கிடைக்காது. சுபகிரகமாக இருந்தால், புகழ் கிடைக்கும்.

8-ஆம் பாவத்திற்கு அதிபதி 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பேசுவார்.

சிலருக்கு வயிற்றில் நோய் இருக்கும். ஜாதகர் கோப குணம் உள்ளவராக இருப்பார். குடும்பத்திலேயே அதிகம் உழைப்பவ ராக இருப்பார். எதிரிகளை வெல்வார். நீண்ட ஆயுள் இருக்கும்.

8-ஆம் பாவத்திற்கு அதிபதி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு வயிற்றில் நோய் இருக்கும். சிலர் பிறர் திட்டும் அளவிற்கு மோசமானவர்களாக இருப்பார்கள். மனைவி நல்லவளாக இருப்பாள். ஜாதகர் நன்கு சம்பாதிப்பார். அனைவரிடமும் சண்டை போடுவார்.

8-ஆம் பாவத்திற்கு அதிபதி 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பலசாலியாக இருப்பார். மனதில் எப்போதும் கபட சிந்தனை இருக்கும்.தன் எந்தச் செயலையும் பிறரிடம் ஜாதகர் காட்டிக்கொள்ளமாட்டார்.சிலருக்கு பூர்வீக சொத்து கிடைக்கும். சிலர் வெளித்தொடர்புகளின்மூலம் பணம் சம்பாதிப்பார்கள்.

8-ஆம் பாவத்திற்கு அதிபதி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு நண்பர்கள் இருக்க மாட்டார்கள். அவரை ஆதரிப்பவர்கள் இருக்க மாட் டார்கள். வாழ்க்கையில் பல கஷ்டங்கள் இருக்கும். பல ருக்கு சகோதரர்கள் இருக்க மாட்டார்கள். ஜாதகர் யாரிட மும் அன்பு, பாசத்துடன் பழக மாட்டார்.கடுமையாக உழைத்து, பணத்தை ஈட்டுவார்.

8-ஆம் பாவத்திற்கு அதிபதி 10-ஆம் பாவத் தில் இருந்தால், ஜாதகர் அரசாங்கப் பணியில் இருப் பார். எப்போதும் சுமாரான பணிகளைச் செய்து கொண்டிருப்பார். பெரிய பணிகள் அவருக்குக் கிடைக்காது. பலர் சோம்பேறிகளாக இருப்பார் கள். பிறரைக் குறை கூறிக் கொண்டிருப்பார்கள்.

8-ஆம் பாவத்திற்கு அதிபதி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு இளம் வயதில் பல கஷ்டங்கள் இருக்கும். வாலிப வயதில் சந்தோஷம் இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். ஜாதகர் தைரியமாகப் பேசுவார்.சிலர் ஆரம்பத்தில் ஏழையாக இருந்து, பின்னர் பணக் காரர்களாக வாழ்வார்கள்.

8-ஆம் பாவத்திற்கு அதிபதி 12-ஆம் பாவத் தில் இருந்தால், ஜாதகர் கடுமையாகப் பேசுவார். மனதில் திருட்டு எண்ணங் கள் இருக்கும். தான் நினைப்பது நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார். உடலில் ஏதாவது குறை இருக்கும். சிலருக்கு மரணம் வெளியூரில் நடக்கும்.

செல்: 98401 11534

bala150923
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe