Advertisment

7 ஆம் பாவாதிபதி நின்ற பலன்! -மகேஷ்வர்மா

/idhalgal/balajothidam/result-7th-pavadipati-standing-maheshwarma

7-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகரின் மனைவி அழகாக இருப்பாள். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகருக்கு பல பெண்களுடன் உறவு இருக்கும். அவர் அழகான தோற்றத்துடன் இருப்பார்.

Advertisment

7-ஆம் பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகரின் மனைவி கோப குணம் கொண்டவளாக இருப்பாள். கெட்டவளாக இருப்பாள். தனக்கு ஆண் வாரிசு வேண்டுமென அவள் எப்போதும் நினைப்பாள். ஜாதகருக்கு பெண்களால் ஆதாயம் இருக்கும். பெண்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை அவர் வியாபாரம் செய்வார். தனிமையில் இனிமை காணும் எண்ணம் உள்ளவராக ஜாதகர் இருப்பார்.

Advertisment

seven

7-ஆம் பாவத்திற்கு அதிபதி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார்.

7-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகரின் மனைவி அழகாக இருப்பாள். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகருக்கு பல பெண்களுடன் உறவு இருக்கும். அவர் அழகான தோற்றத்துடன் இருப்பார்.

Advertisment

7-ஆம் பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகரின் மனைவி கோப குணம் கொண்டவளாக இருப்பாள். கெட்டவளாக இருப்பாள். தனக்கு ஆண் வாரிசு வேண்டுமென அவள் எப்போதும் நினைப்பாள். ஜாதகருக்கு பெண்களால் ஆதாயம் இருக்கும். பெண்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை அவர் வியாபாரம் செய்வார். தனிமையில் இனிமை காணும் எண்ணம் உள்ளவராக ஜாதகர் இருப்பார்.

Advertisment

seven

7-ஆம் பாவத்திற்கு அதிபதி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார்.அவருக்கும் சகோதரர்களுக்கும்

இடையே நல்ல உறவு இருக்கும். தன் கஷ்டங்களை ஜாதகர் வெளியே காட்டிக் கொள்ளமாட்டார். 7-ஆம் பாவத்திற்கு அதிபதி பாவ கிரகமாக இருந்தால், ஜாதகரின் மனைவிக்கு ஜாதகரின் தம்பியுடனோ அல்லது நண்பருடனோ ரகசிய உறவு இருக்கும்.

7-ஆம் பாவத்திற்கு அதிபதி 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல குணம் உள்ளவராக இருப்பார். மனம் எப்போதும் அலை பாய்ந்து கொண்டேயிருக்கும். தந்தையின் எதிரிகளுடன்கூட அவர் நன்றாக பேசுவார்.தந்தை கடுமையாக பேசுபவராக இருப்பார். மாமனாரின் வீட்டால், சந்தோஷம் இருக்கும்.

7 ஆம் பாவத்திற்கு அதிபதி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். வாரிசு இருக்கும். தைரியசாலியாக இருப்பார். மனதில் கெட்ட எண்ணங்கள் இருக்கும். பிள்ளைகள் அன்னையை நன்கு பார்த்துக்கொள்வார்கள். பல நேரங்களில் ஜாதகர் வீணாக பேசுவார்.

7-ஆம் பாவத்திற்கு அதிபதி 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு அவருடைய மனைவியுடன் உறவு நன்றாக இருக்காது. மனைவிக்கு நோய் இருக்கும். பிற பெண்களுடன் பழகியதால், ஜாதகருக்கு சிறிய நோய்கள் இருக்கும்.பாவ கிரகமாக இருந்தால், பெண்களால் உண்டான நோயால், மிகப் பெரிய பாதிப்பு இருக்கும்.

7-ஆம் பாவத்திற்கு அதிபதி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பெயர், புகழ் இருக்கும். நல்ல குணம் உள்ளவராக இருப்பார். அனைவரிடமும் கனிவுடன் பழகுவார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

7-ஆம் பாவத்திற்கு அதிபதி 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் திருமணம் செய்துகொள்ளாமல், விலைமாதர்களிடம் உறவு வைத்திருப்பார். சிந்தனை அதிகமாக இருக்கும். ஜாதகர் கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்வார்.

7-ஆம் பாவத்திற்கு அதிபதி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். கம்பீரமாக இருப்பார். மனைவி நல்ல குடும்பப் பெண்ணாக இருப்பாள். பாவ கிரகமாக இருந்தால், ஜாதகர் சுமாரான தோற்றத் துடன் இருப்பார். உயிர் அணுக்களில் பிரச்சினை இருக்கும். 7-ஆம் பாவத்திற்கு அதிபதியை லக்னாதிபதி பார்த்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சட்டம் தெரிந்தவராக இருப்பார்.

7-ஆம் பாவத்திற்கு அதிபதி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கபட தாரியாக இருப்பார். வழக்கு, நீதிமன்றம் என்று பல பிரச்சினைகள் இருக்கும். பாவ கிரகமாக இருந்தால், விரோதிகள் அதிகமாக இருப்பார்கள்.கஷ்டங்கள் அதிகமாக இருக்கும். ஜாதகர் அவசிய மற்ற செயல்களில் ஈடுபடுவார்.

7-ஆம் பாவத்திற்கு அதிபதி 11-ஆம் பாவத்தில் இருந்தால், மனைவி அழகாக இருப்பாள். நல்ல குடும்பப் பெண்ணாக இருப்பாள். நல்ல குணங்களைக் கொண்ட வளாக இருப்பாள். ஜாதகருக்கு நல்ல வருமானம் இருக்கும். பாவ கிரகமாக இருந்தால், ஜாதகருக்கு பல பிரச்சினைகள் இருக்கும். திருமணத்தில் தடை இருக்கும்.

7-ஆம் பாவத்திற்கு அதிபதி 12-ஆம் பாவத்தில் இருந்தால், மனைவியின் நடத்தை சரியாக இருக்காது. கணவரின் தம்பி, நண்பர்கள் ஆகியோருடன் அவளுக்கு கள்ள உறவு இருக்கும். ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிப் பார். செலவுகள் அதிக மாக இருக்கும்.

செல்: 98401 11534

bala080923
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe