6ஆம் பாவாதிபதி நின்ற பலன்!

/idhalgal/balajothidam/result-6th-pavadipati-standing

6-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பலசாலியாக இருப்பார். வீரத்தனமாக செயல்படுவார். எதிரிகளை வெல்வார். தைரியமாக பேசுவார். பேச்சு அதிகமாக இருக்கும். ஆனால், குடும்பத்தில் தேவையற்றதைப் பேசி, வீண் பிரச்சினைகளை உண்டாக்குவார். மற்றவர்கள் தனக்கு உதவியாக இருக்கவேண்டுமென நினைப்பார். அதற்காக சண்டை போடுவார்.

6-ஆம் பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் சாதுரியமாக பேசுவார். சிறிய அளவில் நோய்கள் இருக்கும். பணத்தைச் சேமிப்பார். நல்லபெயர் இருக்கும். நல்ல வீட்டில் வசிப்பார். வீடு நல்ல பகுதியில் இருக்கும். ஆனால், மனதில் கெட்ட எண்ணங்கள் அதிகமாக இருக்கும். ஜாதகர் பல நண்பர்களின் சொத்துகளை அழிப்பார்.

saibaba

6-ஆம் பாவத்திற்கு அதிபதி 3-ஆம் பாவத்தில் இரு

6-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பலசாலியாக இருப்பார். வீரத்தனமாக செயல்படுவார். எதிரிகளை வெல்வார். தைரியமாக பேசுவார். பேச்சு அதிகமாக இருக்கும். ஆனால், குடும்பத்தில் தேவையற்றதைப் பேசி, வீண் பிரச்சினைகளை உண்டாக்குவார். மற்றவர்கள் தனக்கு உதவியாக இருக்கவேண்டுமென நினைப்பார். அதற்காக சண்டை போடுவார்.

6-ஆம் பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் சாதுரியமாக பேசுவார். சிறிய அளவில் நோய்கள் இருக்கும். பணத்தைச் சேமிப்பார். நல்லபெயர் இருக்கும். நல்ல வீட்டில் வசிப்பார். வீடு நல்ல பகுதியில் இருக்கும். ஆனால், மனதில் கெட்ட எண்ணங்கள் அதிகமாக இருக்கும். ஜாதகர் பல நண்பர்களின் சொத்துகளை அழிப்பார்.

saibaba

6-ஆம் பாவத்திற்கு அதிபதி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பலருக்கும் கஷ்டங்களைக் கொடுப்பார். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சண்டை போடுவார். வீண் பேச்சு பேசி, மாட்டிக்கொள்வார். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும்.

6-ஆம் பாவத்திற்கு அதிபதி 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. அவரை தன் விரோதியாக ஜாதகர் நினைப் பார். தந்தைக்கு நோய் இருக்கும்.

ஜாதகரிடம் பெரிய அளவில் சொத்து இருக்கும். மேலும் சொத்துகளைச் சேர்க்கவேண்டுமென அவர் ஆசைப்படுவார்.

6-ஆம் பாவத்திற்கு அதிபதி 5-ஆம் பாவத்தில் இருந்தால், அது பாவ கிரகமாக இருந்தால், ஜாதகருக்கும் அவருடைய மகனுக்கும் உறவு சரியாக இருக்காது. மகனால் அவருக்கு மிகப்பெரிய பாதிப்பு இருக்கும். அதுவே சுப கிரகமாக இருந்தால், தந்தை- மகன் உறவு நன்றாக இருக்கும். ஜாதகர் மற்றவர்களுடன் கபட எண்ணத்துடனே எப்போதும் பழகுவார்.

6-ஆம் பாவத்திற்கு அதிபதி 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகரின் உடல்நலம் நன்றாக இருக்கும். எதிரிகள் இருக்கமாட்டார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். தைரிய குணம் இருக்கும். கூர்மையான அறிவு இருக்கும்.

ஆனால், அவர் வசிக்கும் பகுதி சுமாராக இருக்கும்.

6-ஆம் பாவத்திற்கு அதிபதி 7-ஆம் பாவத்தில் இருந்தால், அது பாவ கிரகமாக இருந்தால், ஜாதகரின் மனைவி நல்லவளாக இருக்கமாட்டாள்.கணவருடன் சண்டை போடுவாள். அவருக்கு கஷ்டங்களைக் கொடுப்பாள்.

அதுவே சுப கிரகமாக இருந்தால், இவை எதுவுமே நடக்காது. ஆனால், மனைவிக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. அடிக்கடி கர்ப்பம் கலையும்.

6-ஆம் பாவத்திற்கு அதிபதி 8-ஆம் பாவத்தில் இருந்தால், வயிற்றில் நோய் இருக்கும்.

6-ஆம் பாவத்திற்கு அதிபதி செவ்வாயாக இருந்தால், பாம்புக் கடி உண்டாகும். புதனாக இருந்தால், விஷதோஷம் இருக் கும். சந்திரனாக இருந்தால், பாலா ரிஷ்ட தோஷம் உண்டாகும். சூரிய னாக இருந்தால், புலியைப் போன்ற பலம்படைத்த மிருகத்தால் பாதிப்பு இருக்கும். குருவாக இருந்தால், அறிவு குறைவாக இருக்கும். சுக்கிரனாக இருந்தால், கண்ணில் நோய் இருக்கும்.

6-ஆம் பாவத்திற்கு அதிபதி 9-ஆம் பாவத்தில் இருந்தால், அது பாவ கிரகமாக இருந்தால், காலில் நோய் இருக்கும். சகோதரர்களுடன் உறவு சரியாக இருக்காது. ஜாதகர் கொடூர குணம் கொண்டவராக இருப்பார். தர்மத்தை நம்பமாட்டார். பலரிடமும் கடன் வாங்குவார்.

6-ஆம் பாவத்திற்கு அதிபதி 10-ஆம் பாவத்தில் இருந்தால், அது பாவ கிரகமாக இருந் தால், ஜாதகருக்கு அவருடைய தாயாருடன் உறவு சரியாக இருக்காது. ஜாதகர் கெட்ட குணம் உள்ளவராக இருப்பார். சுப கிரகமாக இருந்தால், தந்தையுடன் உறவு நன்றாக இருக்கும். ஆனால், குடும்பத்தில் உள்ளவர்களுடன் உறவு சரியாக இருக்காது.

6-ஆம் பாவத்திற்கு அதிபதி 11-ஆம் பாவத்தில் இருந்தால், அது பாவ கிரகமாக இருந்தால், ஜாதகருக்கு எதிரிகளால் பாதிப்பு இருக்கும். சுப கிரகமாக இருந்தால், வீட்டில் திருட்டு சம்பவம் நடக்கும். ஜாதகர் பணம் சம்பாதிப்பார்.

6-ஆம் பாவத்திற்கு அதிபதி 12-ஆம் பாவத்தில் இருந்தால், பசு, ஆடு ஆகியவற்றால் பண இழப்பு ஏற்படும். ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாட்டிற்குச் சென்று பணத்தைச் சம்பாதிப் பார். அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.

ஜாதகர் கடுமையான உழைப்பாளி யாக இருப்பார்.

செல்: 98401 11534

bala010923
இதையும் படியுங்கள்
Subscribe