4-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் சந்தோஷமாக வாழ்வார். பூமி பாக்கியம் இருக்கும். அன்னையால் ஆனந்தம் கிடைக்கும். தந்தையுடன் நல்ல உறவு இருக்கும். தாய்மாமாவுடன் சரியான உறவு இருக்காது. தந்தை யின் பெயரை வைத்து ஜாதகருக்கு புகழ் கிடைக்கும். வாகன யோகம் இருக்கும்.
4-ஆம் பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. அதுவே சுபகிரகமாக இருந்தால், ஜாதகர் தன் தந்தையுடன் பாசத்துடன் பழகுவார். குடும்பத்திற்காக பணத்தை நன்கு செலவழிப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
4-ஆம் பாவத்திற்கு அதிபதி 3-ஆம் பாவத்தில் இருந்தால், பெற்றோருக்கு ஜாதகர் சிரமங்களைக் கொடுப்பார். அனை வரிடமும் வீண் சண்டை போடு வார். தந்தை யின் தம்பி களிடம்ஜாத கர் தகராறு பண்ணி பிரச் சினைகளை உண்டாக்குவார்.
4-ஆம் பாவத்திற்கு அதிபதி 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு வீடு, மனை கிடைக்கலாம். வாகனம் வாங்க லாம். அவரால் பெற்றோருக்கு சந்தோஷம் கிடைக்கும்.
ஜாதகர் தர்ம பிரபுவாக இருப்பார். சந்தோஷ மாக வாழ்வார். பெயர், புகழ் இருக்கும். பணக்காரராக இருப்பார்.
4-ஆம் பாவத்திற்கு அதிபதி 5-ஆம் பாவத்தில் இருந்தால், தந்தையால் சந்தோ ஷம் இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். ஜாதகர் சுபகாரியங்களைச் செய்வார். பெயர், புகழ் இருக்கும். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள். ஜாதகரால் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். வெளித் தொடர்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
4-ஆம் பாவத்திற்கு அதிபதி 6-ஆம் பாவத்தில் இருந்தால், அதுவே பாவ கிரகமாக இருந்தால், ஜாதகர் தன் அன்னைக்கு சிரமங் களைத் தருவார். அன்னையின் சொத்துகளை அழிப்பார். தந்தையுடன் விவாதம் செய்வார். அது சுப கிரகமாக இருந்தால், ஜாதகர் பணத் தைச் சேமிப்பார். பெயர், புகழுடன் இருப்பார்.
4-ஆம் பாவத்திற்கு அதிபதி 7-ஆம் பாவத்தில் இருந்தால், அது பாவ கிரகமாக இருந்தால், ஜாதகரின் மனைவி தன் மாமனாரை மதிக்கமாட்டாள். அதுவே சுப கிரகமாக இருந்தால், அவள் மாமனாரை மதிப்பாள்.
அவருக்கு சேவை செய்வாள். செவ்வாய் அல்லது சுக்கிரன் 4-ஆம் பாவத்திற்கு அதிபதியாக இருந்து, 7-ஆம் பாவத்தில் இருந்தால், அவள் பல கலைகள் தெரிந்த மனைவியாக இருப்பாள்.
4-ஆம் பாவத்திற்கு அதிபதி 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கோப குணம் கொண்டவராக இருப்பார். அவருக்கு நோய் இருக்கும். பண கஷ்டம் இருக்கும். பிறரிடம் சண்டை போடுவார். குரூர குணம் உள்ளவராக இருப்பார். சிலர் விரக்தியான மன நிலையுடன் இருப்பார்கள்.
4-ஆம் பாவத்திற்கு அதிபதி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார்.தர்மத்தைக் கடைப் பிடிப்பவராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். தந்தையிடமிருந்து ஜாதகருக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இருக்காது.
4-ஆம் பாவத்திற்கு அதிபதி 10-ஆம் பாவத்தில் இருந்தால், அது பாவ கிரக மாக இருந்தால், ஜாதகரின் தந்தை தன் மனைவியிட மிருந்து பிரிந்து, வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருப்பார். சுப கிரக மாக இருந்தால், ஜாதகர் பலருக் கும் பல நன்மைகள் செய்வார். சந்தோஷமாக வாழ்வார்.
4-ஆம் பாவத்திற்கு அதிபதி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் தந்தையை மதிப்பார். நல்ல செயல்களைச் செய்வார். தர்ம பிரபுவாக இருப்பார்.உடல்நலம் நன்றாக இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். நல்ல பணவரவு இருக்கும். ஜாதகர் குடும்பத்தை நன்கு காப்பாற்றுவார்.
4-ஆம் பாவத்திற்கு அதிபதி 12-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகரின் தந்தைக்கு உடல் நலத்தில் பாதிப்பு இருக்கும். சிலரின் தந்தைகள் தங்களின் குடும்பத்திலிருந்து பிரிந்து, வெளியே வாழ்வார்கள்.
செல்: 98401 11534