12-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத் தில் இருந்தால், ஜாதகர் இனிமையாக பேசுவார். அழகான தோற்றம் இருக்கும். அதிகமாக பயணங்கள் செய்வார். சிலர் வெளிநாடுகளில் வாழ்வார்கள். சிலருக்கு திருமணத்தடை இருக்கும். இளம் வயதில் அதிகமான செலவுகள் இருக்கும். பாவ கிரகம் இருந்தால், உறவினர்கள் இவரிடமிருந்து சொத்துகளை அபகரிக்க நினைப்பார்கள்.
12-ஆம் பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கடுமையாக பேசுவார். அதிகமாக சண்டை போடுவார். பணத்திற்கு சிரமப்படுவார். நெருப்பு பயம் இருக்கும். திருட்டு பழக்கம் இருக்கும். அடிக்கடி அவசியமற்றதைப் பேசி மாட்டிக் கொள்வார்.
12-ஆம் பாவத்திற்கு அதிபதி 3-ஆம் பாவத்தில் இருந்தால், அது பாவ கிரகமாக இருந்தால், ஜாதகருக்கு சகோதரர்கள் இருக்கமாட்டார்கள். சுபகிரகமாக இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். சகோதரர்களுடன் சேர்ந்துவாழாமல் தனியாக இருக்க விரும்புவார்.
12-ஆம் பாவத்திற்கு அதிபதி 4-ஆம் பாவத்தில் இருந்தால், நோய்கள் இருக்கும். அதிக செலவுகள் உண்டாகும். அதிக கோபம் வரும். சிரமங்கள் இருக்கும். நல்ல செயல்களுக்கு ஜாதகர் பணத்தைச் செலவழிப்பார். தர்ம காரியங்களில் ஈடுபடுவார். வாரிசுகள் சரியாக இருக்கமாட்டார்கள். வாரிசுகளால் ஜாதகருக்கு பாதிப்பு இருக்கும்.
12-ஆம் பாவத்திற்கு அதிபதி 5-ஆம் பாவத்தில் இருந்தால், அது பாவ கிரகமாக இருந்தால், வாரிசு இருக்காது. சுப கிரகமாக இருந்தால், ஜாதகர் தன் தந்தையின் சொத்துகளை வைத்து சந்தோஷமாக வாழ்வார். சிக்கனமாக இருப்பார்.
12-ஆம் பாவத்திற்கு அதிபதி 6-ஆம் பாவத்தில் இருந்தால், அது பாவ கிரகமாக இருந்தால், கண்ணில் நோய் இருக்கும். கோப குணம் இருக்கும். வெளியே செல்லும் தருணத்தில், உடல்நலம் பாதிக்கப்படும். பயணம் செய்யும்போது, கவனமாக இருக்கவேண்டும்.
12-ஆம் பாவத்திற்கு அதிபதி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கெட்ட குணங்கள் உள்ளவராக இருப்பார். சூது பழக்கம் இருக்கும். ஜாதகர் பேச்சை மூலதனமாக வைத்து பிழைப்பார். பாவ கிரகமாக இருந்தால், அவருக்கு மனைவியால் பாதிப்பு இருக்கும்.சுப கிரகமாக இருந்தால், பெண்களுடன் பழகும்போது ஜாதகர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்து இருக்கும்.
12-ஆம் பாவத்திற்கு அதிபதி 8-ஆம் பாவத்தில் இருந்தால், உடல்நலத் தில் பாதிப்பு இருக்கும். வீண் சண்டைகளில் ஜாதகர் ஈடுபடுவார்.
அவருக்கு சரியான வேலை இருக்காது. சுப கிரகமாக இருந்தால், பணத்தைச் சம்பாதிப்பார். நன்கு செலவழிப்பார். அதை வைத்து கேளிக்கைகளில் ஈடுபடுவார்.
12-ஆம் பாவத்திற்கு அதிபதி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வார். பணத்தை நன்கு செலவழிப்பார். சிலர் தங்களின் தந்தைக்கு சிரமத்தைக் தருவார்கள். பாவ கிரகமாக இருந் தால், சொத்துகளை இழந்து விடுவார்கள்.
12-ஆம் பாவத்திற்கு அதிபதி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல மனம் கொண்டவ ராக இருப்பார். நல்ல செயல்களைச் செய்வார். பெண்களிடமிருந்து விலகி இருப்பார். வீண்செலவு செய்யமாட்டார்.
12-ஆம் பாவத்திற்கு அதிபதி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். நீண்ட ஆயுள் இருக்கும். பெயர், புகழ் இருக்கும்.
ஜாதகர் நேர்மையானவராக இருப்பார்.
12-ஆம் பாவத்திற்கு அதிபதி 12-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கோப குணம் உள்ளவராக இருப்பார். பசுக்களை வளர்ப்பார். பாவ கிரகமாக இருந்தால், உடல் நலபாதிப்பு இருக்கும்.
செல்: 98401 11534