Advertisment

10-ஆம் பாவாதிபதி நின்ற பலன்! மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/result-10th-ruler-standing-mahesh-verma

10-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகருக்கு தன் அன்னையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். அதே நேரத்தில் தந்தையின் பக்தராக அவர் இருப்பார். சுய முயற்சியால் பெயர், புகழ் பெறுவார். பெரிய மனிதராக இருப்பார். 10-ஆம் பாவத்திற்கு அதிபதி பாவ கிரகமாக இருந்தால், ஜாதகரின் தாய் அவருடைய கணவர் இறந்தபிறகு, இன்னொரு திருமணம் செய்துகொள்வார்.

Advertisment

10-ஆம் பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் அன்னையின் மீது அளவற்ற பாசம் வைத்திருப்பார். குறைவான அளவிலேயே உணவு உட்கொள்ளுவார். தர்மத் தைக் கடைப்பிடிப்பவராக இருப்பார். சாஸ்திரங்கள் கூறியபடி நடப்பார். அதர்ம செயல்களைச் செய்யமாட்டார். பணக் காரராக இருப்பார்.

10

10-ஆம்

10-ஆம் பாவத்திற்கு அதிபதி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் குருநாதர், நண்பர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள். அனைவரிடமும் நன்கு பழகுவார். சேவை செய்யும் குணம் இருக்கும். நல்ல மனிதராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார்.

எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு முழுமையாக முடிப்பார்.

10-ஆம் பாவத்திற்கு அதிபதி 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்லவராக இருப்பார். பெற்றோரை மதிப்பார். பெரிய பதவிகளில் இருப்பார். அரசாங்கத்தின் விருதுகள் கிடைக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். குடும்பத்திலுள்ள அனைவருக்கும் நல்லவை நடக்க வேண்டுமென ஜாதகர் நினைப்பார்.

10-ஆம் பாவத்திற்கு அதிபதி 5-ஆம் பாவத்திலிருந்தால், ஜாதகர் நல்ல செயல்களைச் செய்வார். அரசாங்க விஷயங்களில் பெயர், புகழ் கிடைக்கும். பல நேரங்களில் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் சூழலும் உண்டாகும். எனினும், அவற்றிலிருந்து ஜாதகர் வெளியே வந்துவிடுவார்.

10-ஆம் பாவத்திற்கு அதிபதி 6-ஆம் பாவத் தில் இருந்தால், ஜாதகர் பயந்த குணம் உள்ள வராக இருப்பார். பகைவர்களைப் பார்த்து அவர் அஞ்சுவார். இரக்க குணம் அவருக்கு இருக்காது. சண்டை போடும் குணம் இருக்கும். உடலில் சில நோய்கள் இருக்கும். பல நேரங்களில் அவசியமற்றதைப் பேசி, ஜாதகர் மாட்டிக்கொள் வார்.

10-ஆம் பாவத்திற்கு அதிபதி 7-ஆம் பாவத்தில் இருந்தால், மனைவி அழகாக இருப்பாள். வாரிசு இருக்கும். மனைவி அருமையான குணத்தைக் கொண்டிருப்பாள். கணவரை எப்போதும் நினைப்பவளாக இருப் பாள். தொழிலில் பெயர், புகழ் இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் இருக்கும்.

10-ஆம் பாவத்திற்கு அதிபதி 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய சாலியாக இருப்பார். குரூர குணம் உள்ளவராக இருப் பார். கெட்ட குணங்கள் இருக்கும். மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனே எப்போதும் இருப்பார்.

10-ஆம் பாவத்திற்கு அதிபதி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல மனிதராக இருப் பார். நல்ல குணங்கள் படைத்த வராக இருப்பார். நல்ல நண்பர் கள் இருப்பார்கள். ஜாதகர் நல்ல குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். சுய மரியாதையுடன் இருப்பார்.

10-ஆம் பாவத்திற்கு அதிபதி 10-ஆம் பாவத்தில்.... அதாவது... சுய வீட்டில் இருந்தால், ஜாத கருக்கு தாயால் சந்தோஷம் கிடைக்கும். தாய்க்கு ஜாதக ரால் சந்தோஷம்... தாய் மாமன் வீட்டில் ஜாதகருக்கு பெயர், புகழ் இருக்கும். சுய முயற்சியால் ஜாதகர் பணத்தைச் சம்பாதிப் பார். தந்தை நல்லவராக இருப்பார். ஜாதகர் கடுமை யான உழைப்பாளியாக இருப்பார்.

10-ஆம் பாவத்திற்கு அதிபதி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப் பார். நீண்ட ஆயுள் இருக்கும். பெற்றோர் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.

10-ஆம் பாவத்திற்கு அதிபதி 12-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் பெற்றோரிடமிருந்து பிரிந்து சென்றுவிடுவார் கள். தைரியசாலியாக இருப் பார்கள். அரசாங்க பணியில் இருப்பார்கள். அடிக்கடி பயணம் செய்வார்கள். அதன் மூலம் பணத்தைச் சம்பாதிப் பார்கள். வெளித்தொடர்பு களில் பணம் வரும்.

செல்: 98401 11534

bala290923
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe