"பூர்வஜந்ம க்ருதம் பாபம்
வ்யாதிரு பேண பாததே
தச்சாந்தி ஔஷதை தாநை
ஜபஹோமார்ச் சநா திபி'.
உலகில் எங்கும் பரவியுள்ள பரமாத்மா வின் படைப்பிலடங்கிய உயிர்களெல்லாம், தத்தமது முன்வினைகளையும் அதற்கேற்ப சுக- துக்கங்களையும் அனுபவிக்கவேண்டும் என்பது கண்கூடு. இத்தகைய முன்வினைகளின் தன்மைக்கேற்றபடி, இன்ப- துன்பங்களைப் பாரபட்சமின்றி அளிக்கும் தர்மகர்த்தா போன்றவனே இறைவன் என்பதையும் நாம் மனதிலிருத்த வேண்டும்.
இதுமட்டுமல்ல; அத்தகைய சுபாசுபங் களைத் தானே நேராக அளிக்காமல், ஆகர்ஷண சக்திகள்மூலம் பூமியுடன் தொடர்புகொண்டுள்ள கிரகங்களின்மூலமாக நமக்கு அளிக்கின்றான் என்பதை ஜோதிட சாஸ்திரம்மூலமாக உணரமுடியும்.
எனவே அவரவர் ஜனன காலத்தில் அமையும் லக்னம், நவகிரகங்களின் அமைப்பு போன்றவற்றைக்கொண்டே அவரவர்களின் கடந்தகால, நிகழ்காலத் தன்மைக்கேற்ப தீமை தரும் பலன்களையறிந்து உரிய பரிகாரங்களைக் கடைப்பிடிக்கும்போது, கஷ்டங்களை ஓரளவு சமநிலைப்படுத்தி நன்மைகளைப்பெற இறையருள் கிடைக்கப் பெறுவதை நாம் உணரலாம். நம் வசதிக்கேற்ப சுலபமான பரிகாரங்களை ஆய்வு செய்வோம்.
பொதுவில் எல்லாவிதமான கிரகநாதர் களும் தீமை மட்டுமே செய்வதில்லை. நல்லவற்றைதான் அதிகம் நமக்கு அள்ளித் தருவார்கள். எனினும், சில ஜாதக அமைப்பில் நம் பிறவிப் பயனாக, நல்ல பலனைத் தர இயலாமல் ஜாதகத்தில் அமர்ந்து விடுவார்கள். தீய நிலையிலிருந்து தப்பிக்கவும், வருமுன் காப்பதென்ற நிலையிலும் நாம் சில பரிகாரங்களைக் கடைப்பிடித்தால் ஓரளவு துணைபுரியும் என நம்பி செயல்படலாம்.
உதாரணமாக, ஒரு மரணம் ஏற்பட்டபின் விலக்கவேண்டியவை யாதெனில், தந்தை காலமானபின் ஓராண்டு காலமும், தாய் மரணமடைந்தால் ஆறுமாத காலமும
"பூர்வஜந்ம க்ருதம் பாபம்
வ்யாதிரு பேண பாததே
தச்சாந்தி ஔஷதை தாநை
ஜபஹோமார்ச் சநா திபி'.
உலகில் எங்கும் பரவியுள்ள பரமாத்மா வின் படைப்பிலடங்கிய உயிர்களெல்லாம், தத்தமது முன்வினைகளையும் அதற்கேற்ப சுக- துக்கங்களையும் அனுபவிக்கவேண்டும் என்பது கண்கூடு. இத்தகைய முன்வினைகளின் தன்மைக்கேற்றபடி, இன்ப- துன்பங்களைப் பாரபட்சமின்றி அளிக்கும் தர்மகர்த்தா போன்றவனே இறைவன் என்பதையும் நாம் மனதிலிருத்த வேண்டும்.
இதுமட்டுமல்ல; அத்தகைய சுபாசுபங் களைத் தானே நேராக அளிக்காமல், ஆகர்ஷண சக்திகள்மூலம் பூமியுடன் தொடர்புகொண்டுள்ள கிரகங்களின்மூலமாக நமக்கு அளிக்கின்றான் என்பதை ஜோதிட சாஸ்திரம்மூலமாக உணரமுடியும்.
எனவே அவரவர் ஜனன காலத்தில் அமையும் லக்னம், நவகிரகங்களின் அமைப்பு போன்றவற்றைக்கொண்டே அவரவர்களின் கடந்தகால, நிகழ்காலத் தன்மைக்கேற்ப தீமை தரும் பலன்களையறிந்து உரிய பரிகாரங்களைக் கடைப்பிடிக்கும்போது, கஷ்டங்களை ஓரளவு சமநிலைப்படுத்தி நன்மைகளைப்பெற இறையருள் கிடைக்கப் பெறுவதை நாம் உணரலாம். நம் வசதிக்கேற்ப சுலபமான பரிகாரங்களை ஆய்வு செய்வோம்.
பொதுவில் எல்லாவிதமான கிரகநாதர் களும் தீமை மட்டுமே செய்வதில்லை. நல்லவற்றைதான் அதிகம் நமக்கு அள்ளித் தருவார்கள். எனினும், சில ஜாதக அமைப்பில் நம் பிறவிப் பயனாக, நல்ல பலனைத் தர இயலாமல் ஜாதகத்தில் அமர்ந்து விடுவார்கள். தீய நிலையிலிருந்து தப்பிக்கவும், வருமுன் காப்பதென்ற நிலையிலும் நாம் சில பரிகாரங்களைக் கடைப்பிடித்தால் ஓரளவு துணைபுரியும் என நம்பி செயல்படலாம்.
உதாரணமாக, ஒரு மரணம் ஏற்பட்டபின் விலக்கவேண்டியவை யாதெனில், தந்தை காலமானபின் ஓராண்டு காலமும், தாய் மரணமடைந்தால் ஆறுமாத காலமும், மனைவி காலமானால் மூன்றுமாத காலமும், சகோதரர் காலமானால் ஒரு வருடமும், பெற்ற மகன் அல்லது மகள் இறந்தால் ஒரு வருடமும், பங்காளிகள் இறந்தால் ஒரு மாதமும் சுப காரியம் தவிர்த்தல் நன்று.
ஒரு மணப் பெண்ணின் ஜாதகத்தில், 3, 8, 9, 12 ஆகிய இடங்களில், லக்னத் திலிருந்து கணக்கிடும்போது புதனும் ராகுவும் இணைந்து காணப்பட்டால் பல இன்னல்களை அனுபவிக்க நேரிடும். மணப் பெண்ணுக்கு சகோதரி இருந்தால் அவர்களையும் கிரகநாதர்கள் பதம் பார்ப்பார்கள். மணவாழ்வில் பல இன்னல் கள் தொடர்கதையாகும்,
பரிகாரம்
வெள்ளிக்கிழமை 400 கிராம் கொத்துமல்லித் தழை, 400 கிராம் பாதாம் பருப்பு இரண்டையும் மேற்கு நோக்கி நின்று திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போட வேண்டும்.
சனிக்கிழமை ராகு காலத்தில் ஏழு களிமண் உருண்டைகளை சிறிதாக உருட்டி, மூன்று வெற்றிலையில் ஒவ்வொன்றாகப் பொதிந்து, கிழக்கு அல்லது தென்கிழக்கில் சுக்கிரனை வேண்டி, ஆலய கிணற்று நீரில் அல்லது ஓடும் நதியில் போடுவதால் தீமைகளின் வேகம் குறையும்.
ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் லக்னத்திலும், புதன் பன்னிரண்டிலும், பதினோராமிடம் சுத்தமாகவும் இருக்கப் பெற்றால், அவர்கள் 39 வயதுவரை எதிலும் அக்கறையும் ஆர்வமும் இல்லாமல் சந்நியாசி, துறவிபோல் வாழ்வார்கள். அதன்பின் இல்லற சுகம் அமோக ஆனந்தத்தைத் தரும்.
பரிகாரம்
ஏழு முக ருத்ராட்சம் வெள்ளி உலோகத் தில் அணிதல் நன்று. சுக்கிர பகவானை வணங்கவேண்டும். ஒரு சிறு மண் குடுவையில் மூன்று வெண்முத்துகளை வைத்து, கிழக்குநோக்கி நின்று திருஷ்டி சுற்றி ஓடும் நதியில் போடுதல் போதுமானது.
செவ்வாய் 1-லும் சூரியன், 12-லும், சந்திரன் 2-லும் அல்லது சந்திரன் 12-லும், சூரியன் 2-லும் இருந்தால், ஆரோக்கியமில்லா வாழ்க்கை, சிறு வயதிலேயே தாய்- தந்தையரின் பிரிவு, பலவித நெருக்கடிகளை சமாளிக்க நேரிடும்.
பரிகாரம்
பொய்சாட்சி கூறுதல் கூடாது. மாமன்- மைத்துனருடன் கூட்டுமுயற்சியைத் தவிர்க்கவேண்டும். கால பைரவர் சந்நிதியில் ஜனன ஜாதகத்தை வைத்து, அதன்மேல் ஒரு எலுமிச்சை பழம் சமர்ப்பித்து, அதன் ரசத்தைப் பருகவேண்டும்.
ஜாதகத்தில் புதனும் கேதுவும் இரண்டில் இருக்கப்பெற்றால், சந்தான பாக்கியம் தாமதமாகும். குழந்தை பிறந்தாலும் தந்தை- மகனுக்கிடையே உறவு சீராக இருக்காது. சொத்து சுகம் மெல்ல மெல்ல குறையும். லாட்டரி, ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் பெரிய நஷ்டத்தைதான் எதிர்பார்க்க இயலும். மகனுக்கு 16 வயதிலிருந்து 21 வயதுவரையும், 34 வயதுமுதல் 46 வயதுவரையும் கெடுபலனே தொடர்கதையாகும். அக்காள்- தங்கையுடனும் நெருக்கமான பாச உணர்வை எதிர்பார்க்க இயலாது.
பரிகாரம்
வீட்டில் கிளி, ஆடு போன்றவை வளர்ப்பது கூடாது. இயன்ற அளவு பச்சரிசியும் பாலும் ஆலயத்திற்கு தானம் தரவேண்டும். பாதாம் பருப்புப் பொடியில் பல் துலக்கல்வேண்டும். வயதுக்குவராத பெண் குழந்தைகளுக்கு பொருளுதவி செய்தல் வேண்டும். சதுர்த்தி யன்று விரதம் கடைப்பிடிக்க வேண்டும். வைடூரிய மோதிரம் அணிதல் மிக நன்று.
ஜாதகத்தில் லக்னத் திற்கு 1, 2, 3, 7, 9, 10-ல் சூரியனும் சுக்கிரனும் இணைந்து காணப்பட்டால், அதிக நற்பலனை அணுபவிக்க இயலாது. பொதுவில் மனைவியின் ஆரோக்கியம் கெடுதலைத் தரத்தான் செய்யும். குழந்தை உருவாக காலதாமதமாகும். பொருளாதாரத்திலும் தன்னிறைவு கேள்விக்குறியாகும். மனச்சோர்வு மிகையாகும். 4-ல் சந்திரன் இருக்கப்பெற்றால் ஓரளவு பலனில் நல்லவற்றை எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்
மனைவி தங்கத்தில் வளையல் அணிதல் வேண்டும். குழந்தைகள் பலன்பெறும். மனைவியின் எடைக்கு எடை கோதுமை அல்லது பார்லி அரிசி துலாபாரம் ஆலயத்தில் தருதல்வேண்டும். புதுமணத் தம்பதிகள் மணமேடையில் இனிப்பு சாப்பிட்டு நீர் அருந்தவேண்டும். மணமகள் திருமண மேடையில் நெற்றிச்சுட்டி அணிதல் சிறப்பு. வெள்ளிக்கிழமை தூய ஆடை அணிவது சிறப்பைத் தரும். ஆலயத்திற்கு பசு தானம் தருதல் நன்று. கெடுதல் தொடர்ந்தால் காலபைரவரை வணங்கவேண்டும். ஜாதகத்தில் சனிபகவான் 11-ல் இருந்தால் 48 வயதுக்குமேல் பணவரவு வரும்; செலவினமும் அதிகமாகும் என்கிறது சாஸ்திரம். புதன் மூன்றில் காணப்பட்டால் தனவரவும் தோல்சார்ந்த வியாதியும் வரும். சுக்கிரன் 7-ல் இருந்தால் கல்வித்தடை வரும். கலைத் துறையினர் குடும்ப வாழ்வைத் துறப்பார் களாம். இரும்பு, உருக்கு வியாபாரத்தில் கவனம் வேண்டும். தெற்கு தலை வாசலுள்ள வீட்டில் இருப்பது கூடாது.
பரிகாரம்
சனிக்கிழமை புலால் மறுக்கவேண்டும். 45, 55 ஆகிய வயதிற்கு முன்னர் சொந்த வீடு சுய சம்பாத்தியத்தில் கட்டுதல் கூடாது. ஆனால் குரு 11-ல் இருந்தால் தடையில்லை. வீட்டைவிட்டு நெடுநாள் பயணம் செல்லும்போது வாசலில் ஒரு குடம் நீரை நிரப்பி வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். நல்லெண்ணெய் யில் எள்ளைக் கலந்து வீட்டுத் தோட்டத்தில் மேற்கு திசை யில் தெளித்தல் நன்று. மூன்று காரட் டர்குயிஸ் மோதிரம் வெள்ளியில் "ஓப்பன் செட்டிங்'கில் அணிதல் நன்று. பொதுவில் எட்டாமிடம் செவ்வாய்க் குரியது. அங்கு கேது இருந்தால் பெற்ற குழந்தைகள் நோய்வாய்ப்படும். மனைவி யின் ஆரோக்கியம் கெடும். மூலநோய் வேதனை தரும். புதன் 1, 6-ல் இருந்தால் குழந்தைப் பேறு 34 வயதுவரை தாமதமாகுமாம். சனி 7-ல் இருந்தால் எல்லா முயற்சியும் தோல்வி யடையும். செவ்வாய் 12-லும், சனி 1-லும் இருந்தால் சகோதரர்களுக்கு வேதனை. அவர்களுடைய ஆதரவை எதிர்பார்க்க இயலாது.
பரிகாரம்
கருப்பு, வெள்ளை நிறம் கலந்த பிராணிகளுக்கு உணவளிக்கலாம். பழுப்புநிற கம்பளம் தானம் செய்யலாம். ஆலயங்களுக்கு மஞ்சள்நிறப் பூமாலை நல்லது. காதில் தங்க அணிகலன் நன்று. கையில் கேட்ஸ் ஐ மோதிரம் (வைடூரியம்) மூன்று காரட்டில் அணிதல் நன்று. ஐந்து சனிக்கிழமைகள் விநாயகப் பெருமானுக்கு செந்தாமரைப் பூவைவைத்து வணங்குதல் நல்ல பரிகாரம். ஒன்பது வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைக்கு ஆடை தானம் நன்று. 7-ல் சுக்கிரன் இருந்தால் வாழ்க்கைத் துணையால் செலவினத்தைப் பெருக்கு வார். கைகளில் ஆயுள் ரேகையும் சுக்கிர மேடும் வலுப்பெற்றால் 85 வயது முதல் 94 வயதுவரை வாழலாம். சுக்கிரனும் குருவும் இணைந்து 7-ல் காணப்பட் டால், முதல் குழந்தை ஜனனமான பின் வியாபாரம் பின்னடைவாகும். சந்திரன் அல்லது ராகு லக்னத்தி லும், மூன்றில் அசுப கிரகங்களும் இருக்கபெற்றால், அதிர்ஷ்டம்தர இயலாத வயதுகள் 4, 16, 28, 40, 52, 64, 76, 88 இவ்வாறாகக் காணப்படும். ராகு, 8-ல், சுக்கிரன் 7-ல் இருந்தால், மனைவி நீலநிற ஆடையைத் தவிர்க்கவேண்டும்.
பரிகாரம்
திருமணத்தின்போது வெண்கலப் பாத்தி ரம் வரதட்சணையாகப் பெறவேண்டும். வெள்ளைநிறப் பிராணிகளுக்கு உணவூட் டல் தவிர்க்கவேண்டும். சிவப்புநிறப் பசுவுக்கு புல், கீரை தருதல் நன்று. தாய்- தந்தையரை மனம்நோகச் செய்வது கூடாது. வெண்கலத் திலான மணியை அம்மன் கோவிலுக்கு தானமாகத் தருதல் நன்று. வசதிபடைத்தோர் வைரக்கல் அணிதல் போதுமானது.
செல்: 93801 73464