பொதுவாக அனைவரும் வீடு மற்றும் நிலம் வாங்கும்போது அதில் வில்லங்கம் அல்லது வாஸ்துக் குறைபாடு இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்து வாங்குவார்கள்.
அப்படிப் பார்த்தும் சிலர் கட்டிய அல்லது வாங்கிய சொந்த வீட்டில் குடிபுகமுடியாத நிலை அல்லது குடிபுகுந்தபிறகு தீராத வாழ்வியல் சங்கடங்கள், வாங்கிய நிலத்தில் வீடுகட்டிக் குடிபுகமுடியாத நிலை அல்லது கட்டுமானப் பணி முழுமையடையாமல் நிற்பது போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதைப் பார்த்திருக்கிறோம்.
பலர் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு பிரச்சினையில், விதியின் வசத்தால் மாட்டி வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவிக்கிறார்கள். எளிதில் உணரமுடியாத, கண்ணுக்குத் தெரியாத விதிப்பயனை முழுமையாக வெளிப்படுத்தும் ஒருவிதமான வாஸ்துப் பிரச்சினையே "சல்லிய தோஷம்'. ஒருசிலருக்கு இப்படி ஒரு தோஷம் இருப்பதே தெரியாது.
ஒரு நிலத்தைப் புதிதாக வாங்கியவுடன் நிவர்த்திசெய்ய வேண்டிய தோஷம் சல்லிய தோஷம். நிவர்த்தி செய்யாத சல்லிய தோஷத்தினால் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
சல்லிய தோஷம்
சல்லியம் என்ற சொல்லுக்கு வேண்டாத, துன்பம் தருகின்ற என்று பொருள். சல்லிய தோஷமென்பது குடியிருக்கும் வீடு, தோட்டம், பண்ணை நிலம், ஆலைகளின் பூமியிலுள்ள குற்றம் மற்றும் குறைகளாகும்.
ஒருவர் வாங்கும் வீடோ, நிலமோ பல வருடங்களுக்கு முன்பாக வேறு மனிதர்களாலோ, விலங்குகளாலோ பயன்படுத்தப்பட்டு இருந்திருக்கலாம். அந்த இடத்தில் இறந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல்கள், நகம், முடி, எலும்பு புதைத்திருக்கலாம். இதுபோன்று நிலத்திற்கடியில் உருவாகி, அந்த இடத்தின் அதிர்வலைகளைக் கட்டுப்படுத்தும் தோஷம்தான் சல்லிய தோஷமாகும்.
பல வருடங்களுக்கு முன்பாக மனிதர்கள் நகருக்குள் வீடுகட்டி வசித்தனர். விலங்குகள் காடுகளில் வாழ்ந்தன. தற்காலத்தில் மக்கள்தொகைப் பெருக்கத்தால் காடுகள், ஏரி, குளங்கள், குட்டைகள் என கிடைத்த இடத்தை வாங்கி வீடு கட்டுகின்றனர். அந்த இடங்களில் குப்பைமண், மக்கிய துர்நாற்றம் வீசுகின்ற மண், நாறுகின்ற மண், இறந்த உயிர்கள், எலும்புகள் என அனைத்தும் இருக்கத்தான் செய்யும். இது தெரியாமலிருக்க மேற்புறத்தில் சுத்தமான மண்ணைக் கொட்டி விற்பவர்களிடம் ஏமாந்து மனை வாங்குபவர்களே அதிகம். இதற்கும் ஒருபடி மேலேபோய் சிலர் மலிவுவிலை என பயன்படுத்தாத சுடுகாடு அல்லது சுடுகாடு இருந்த இடத்திற்கு அருகில் பிளாட் போடும் மனையை அறியாமையால் வாங்குகிறார்கள்.
அதுபோன்ற இடங்களில்

அதுபோன்ற இடங்களில் சடலங்களின் எலும்புகள் புதையுண்டு கிடக்கும். மேலும் பிணங்களை எரித்த சாம்பலும் பரவிக்கிடக்கும். அத்துடன் பலர் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுது புலம்பிய அழுகுரலின் அவல ஒலிகளின் அதிர்வலைகள் இருக்கும். இதை நம்பாதவர்கள்கூட, காலப்போக்கில் பாதகத்தை அனுபவிக்கும்போது சல்லிய தோஷத்தை நம்புகின்றனர். வாஸ்து சாஸ்திர நூல்கள் 16 வகையான பொருட்களை சல்லியம் என்று கூறுகின்றன. அவை: எலும்பு, மண்டை ஓடு, செங்கல், மண் ஓடு, அடுப்பு, சிலை, சாம்பல், கரி, பணம், தானியம், பொன், கல், தேரை, விலங்கின் கொம்பு, எலும்புகள், ஜாடி. மனிதர்களின் இன்ப- துன்பங்களுக்கு "சல்லிய தோஷம்' பிரதான காரணமென வாஸ்து சாஸ்திரங்கள் வலியுறுத்தினாலும், சல்லியத்தை இரண்டாக வகைப்படுத்தலாம்.
1. நன்மை தரும் சல்லியங்கள்
மனையைத் தோண்டும் போது அரணை, சிலந்தி, நண்டு, பல்லி, தவளை, பசுவின் கொம்பு போன்றவை தென்பாட்டால் அதிகமான தீமைகள் இல்லை. தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் உலோகத்தினால் செய்யப்பட்ட விக்ரகங்கள், மண் சிலைகள் கிடைத்த நிலத்தில் வீடுகட்டி வசிப்பவர்களுக்கு சிறப்பான தொழில், செல்வச் செழிப்பு, காரியசித்தி, புகழ், அந்தஸ்து, கௌரவம் கிடைக்கும். ஆனாலும் பூமியில் தென்படும் அனைத்து சல்லியத்தையும் வெளியேற்றியபிறகுதான் வீடுகட்டும் பணியைத் துவங்கவேண்டும்.
2. தீமை தரும் சல்லியங்கள்
மனையைத் தோண்டும்போது உடைந்த மண் ஓடுகள், சாம்பல், கரித்துண்டுகள், கரையான், எறும்புப் புற்றுகள், பல், மரத்தின் வேர், வண்டு, ஓணான், உடும்பு, பாம்பு, தேள், சூலம் மற்றும் ஆயுதங்கள், எலி, விறகு, எறும்புகள், தேன்கூடு, ஆமை, முட்டை, நகம், மயிர், பிணம் போன்றவை கிடந்தால், அதில் தீமைகள்தான் அதிகமாகும். ஆகவே இவற்றைத் தேடிப் பார்த்து முற்றிலும் அகற்றவேண்டும்.
நாட்டில் நிலம்வாங்கி வீடுகட்டுபவர்கள் பலர் இருந்தாலும், வெகுசிலரே இதுபோன்ற பிரச்சினைகளால் மன உளைச்சலை சந்திக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. ஜோதிடரீதியாக ஜனனகால ஜாதகத்தில் லக்னத்திற்கு 4-ஆம் பாவகத்துடன் வக்ர கிரகங்கள், நீச, அஸ்த மன, பகை கிரகங்கள் தொடர்பு, ராகு, கேது, மாந்தி தொடர்பு பெறும்போதும் சல்லிய தோஷத்தால் பாதிப்பு ஏற்படுகிறது. என் அனுபவத்தில் மேஷ, சிம்ம ராசி மற்றும் லக்னத்தினருக்கு சல்லியதோஷ பாதிப்பு சற்று மிகைப்படுத்தலாகவே இருக்கிறது. இத்தகையவர்களுக்கு வீடு, மனை யோகம் சிறப்பாக கிடைக்கப்பெற்றா லும் அதை அனுபவிக்கும்போது பல்வேறு சிக்கல்கள் தொடர்கதையாக இருக்கின்றன.
நாம் சல்லிய தோஷம் என்று குறிப்பிடுவதை வெளிநாட்டினர் காந்தசக்தி ஓட்டம் என்று கூறுகிறார்கள். இது உலகிலுள்ள அனைத்து பூமி ஆராய்ச்சி நிபுணர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. நிலத்துக்குக்கீழே புதைந்திருக்கும் சல்லியப் பொருட்களும் பூமியின் காந்தசக்தியும் இணைந்து நிலத்தில், கட்டடங்களில் வசிப்பவர்களை பாதிக்கும். விவசாய நிலமாக இருந்தால் நில உரிமையாளர் விளைச்சலின்மை, நிலத்தடி நீரின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். ரியல் எஸ்டேட் துறையில் கோடிகோடியாக சம்பாதித்து கரைகடந்தவர்கள்கூட ஒருசில மனையைத் தேர்வுசெய்யும்போது மீளமுடியாத துக்கத்தை சந்திக்கிறார்கள்.
சிலர் பத்து பங்களா வாங்கியபோது ஏற்படாத இழப்பு, ஒரு சல்லிய தோஷம் நிறைந்த வீட்டைப்போய்ப் பார்த்து வந்ததற்கே உருவாகும்.
மிகப்பெரிய ஆலைகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அடிக்கடி விபத்து, உற்பத்தி பாதிப்பு, இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதற்கு இந்த தோஷமே காரணம்.
சல்லிய தோஷம் இருக்கும் வீடுகளில் குடியிருப்பவர்களுக்குத் தீராத மன உளைச்சல், தீராத கடன், உழைப்பிற்கேற்ற ஊதியமின்மை, குடும்ப உறுப்பினர்களிடம் மனக்கசப்பு, பல தலைமுறையாக முன்னேற்றமின்மை, சொந்த பூமியை பல தலைமுறையாகப் பயன்படுத்தவும் விற்கவும் முடியாமை, வாங்கிய நிலத்தில் வீடு கட்ட முடியாமை, வீடுகட்டும்பொழுது தொடர் அசம்பாவிதம், பாதி கட்டிய நிலையில் வீட்டுவேலை நின்றுவிடுவது, பேய், பிசாசு, பில்லி, சூன்யம் இருப்பது போன்ற உணர்வு, வீட்டில் யாரோ நம்முடன் இருப்பதுபோன்ற உணர்வு, நீங்காத நோய், தலைமுறையாகத் தொடர்நோயால் அவதி, கலப்பு மற்றும் காதல் திருமணம், வாஸ்துக் குற்றமுள்ள வீட்டில் குடியிருக்கும் நிலை, பூமியில் நீராதாரமின்மை, கட்டிய வீடு தலைமுறையாக அடமானத்திலேயே இருப்பது போன்றவை நீடிக்கும்.
வெகுசில இடங்களில் பூமிக்குக்கீழ் மனித, மிருக உடல்கள் அல்லது எலும்புகள் இருந்தால், சல்லியதோஷ வலிமை மிகுதியால் தொடர் விபத்து, துர்மரணங்களை சந்திக்க நேரும். இதை ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம். பிறந்த தேதி: 8-1-1965. இரவு 9.00 மணி. சிம்ம லக்னத்தில் பிறந்த இந்த ஜாதகர் தொழிலதிபர்.
பல கோடிகளுக்கு அதிபதி. கணக்கிடலங்கா சொத்துகள் இருந்தாலும், வாங்கும் ஓவ்வொரு சொத்திலும் சட்டச்சிக்கல் அல்லது வாஸ்துப் பிரச்சினை, சொத்துகளால் பயனற்ற நிலை, பிள்ளைகளின் திருமணத்தடை என பல்வேறு மன உளைச்சலுடன் அணுகினார். நடப்பில் சுக்கிர தசை, செவ்வாய் புக்தி. அதாவது 3, 10-ஆம் அதிபதிகளின் தசை, 4, 9-ஆம் அதிபதிகளின் புக்தி. அவருடைய ஜாதகத்தில் பூமிகாரகன் மற்றும் நான்காம் அதிபதியான செவ்வாய் இரண்டில். நான்கில் கேது, மூன்றில் மாந்தி நின்றது. நான்கில் நின்ற கேது பின் னோக்கி மூன்றில் நிற்கும் மாந்தியை நோக்கி நகர்கிறது. இரண்டிலிருக்கும் செவ்வாய் மூன்றில் நிற்கும் மாந்தியை நோக்கி நகர்கிறது.
அதாவது நான்காம் அதிபதி செவ்வாய்க்கும், நான்கில் நிற்கும் கேதுவுக்கும் நடுவில் மாந்தி நிற்பதால், சொத்து தொடர்பான மன உளைச்சல் ஜாத கருக்கு இருந்துகொண்டே இருந்தது. மூன்றாம் அதிபதியின் தசை, நான்காம் அதிபதியின் புக்தி என்பதால், "சொத்து மற்றும் ஆவணங்கள் தொடர்பான கேள்வி இருக்கிறதா?'
என்று கேட்டேன். "ஆமாம்' 1998-ஆம் ஆண்டு, இரண்டு லட்சத்திற்கு ஒரு நிலத்தை கடை அல்லது குடியிருப்பு கட்டி வாடகைக்கு விடலாமென்று வாங்கினேன். இன்று அதன் மதிப்பு அறுபது லட்சம். 22 வருடமாக அந்த இடத்தை எதற்கும் பயன்படுத்த முடியவில்லை. இரண்டு வருடத்திற்குமுன்பு அந்த நிலத்தில் ஒரு பகுதியை பக்கத்து நிலத்துக்காரர் தன் நிலத்தோடு சேர்த்துப் பயன்படுத்துகிறார். நிலத்தைக் காப்பாற்றமுடியுமா? எனக்குப் பயன்படுமா?' என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
சிம்ம லக்னத்திற்கு நான்காமிடம் விருச்சிகம். காலபுருஷ எட்டாமிடம். சாக்கடை, குளம், குட்டை, சேறு, நாற்றம் மிகுந்த பகுதி, பிணவறை போன்றவற்றைக் குறிக்குமிடம் என்பதால், "நீங்கள் வாங்கிய இடம் ஓடை அல்லது குளம் இருந்த பகுதியா?' என்று கேட்டேன். "ஆமாம்; பல வருடங்களுக்குமுன்பு குளம் இருந்தது' என்று கூறினார். சல்லிய தோஷம் இருக்கலா மென்று முடிவு செய்யப்பட்டது. நிலத்தின் வரைபடத்தைப் பார்த்ததில் நிலம் சதுரமா, செவ்வகமா, முக்கோணமா, அறுங்கோணமா என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. நிலத்திற்கு சொந்தக்காரரிடம், "எப்படி இந்த இடத்தை வாங்க மனம் வந்தது?' என்று கேட்டேன். "வாடகைக்கு விடப்போகும் இடம்தானே' என்றார். வாடகை வீட்டிற்கும் வாஸ்து உண்டு. வாஸ்துக் குறைபாடு வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருப்பவர்களையும் சரிசமமாக பாதிக்கும்.
வாஸ்துக் குறைபாடில்லாத வீட்டில் குடியிருப்பவர்களுக்கு மிகுதியான சுபப் பலன்கள் கிடைக்கும். வாடகை வீட்டில் குடிபுகும்போது அன்றாடத் தேவைக்குக்கூட கஷ்டப்பட்டவர்கள், குடிபுகுந்தபிறகு மன நிம்மதி, தொழில் முன்னேற்றம், வீடு, வாகன யோகம் போன்ற மனமகிழ்வு நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும். வீட்டின் உரிமையாளரைத் தேடிவந்து வாடகை கொடுப்பார்கள். உரிமையாளருக்கும், வசிப்பவர்களுக்குமிடையே நட்பு ஏற்படும். உரிமையாளர்களுக்கு வசூலாகும் வாடகைப் பணம் சுபச் செலவுகளுக்குப் பயன்படும்.
நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கும் சிலர் வாடகை வீட்டை மாற்றியவுடன் தொடர் அசுபப் பலனைச் சந்திக்கநேரும். அதனால் மனம்நொந்து வாடகை தருவார்கள். வாடைதாரருக்கும் உரிமையாளருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். மன வேதனையுடன் தரும் வாடகைப் பணத்தால் வீட்டின் உரிமையாளருக்கு அசுபச் செலவுகளே அதிகரிக்கும்.
அவர்களுடைய அழுகை, புலம்பல் வீட்டின் அதிர்வலையுடன் இணைந்து வீட்டிற்கு மேலும் பாதிப்பை அதிகரிக்கும். வீட்டைவிட்டு வெளியேறும்போது உடம்பில் உயிர்மட்டும்தான் இருக்கும். வீட்டை காலிசெய்யக்கூட முடியாதநிலை ஏற்படும்.
எந்த செயலுக்கும் பின்விளைவுண்டு என்பதையுணர்ந்து, விதியின்மேல் பழி போட்டுத் தப்பிக்காமல் மதியுடன் செயல்படு வது சிறப்பு. பாதகம் என்ற ஒன்றைக் கொடுக்கும் பிரபஞ்சம் பாதகத்தை சாதகமாக மாற்றும் சூட்சுமத்தைத் தந்திருக்கிறது.
அந்த நிலத்தின் உரிமையாளருக்கு சல்லிய தோஷம் நீக்கும் முறைகள் பரிந்து ரைக்கப்பட்டுள்ளன. 4-ல் கேது நின்ற அவருடைய சர்வே எண்ணின் கூட்டுத் தொகையும், ராகுவின் ஆதிக்கத்தை பிரம்மாண்டப்படுத்தும் 4-ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் இருந்தது. அடுத்து ராகு புக்தி வரவிருப்பதால், இவரின் பெயரிலிருக்கும் இந்த நிலத்தால் சட்டச்சிக்கல் தொடரும் என்பதைக் கூறினேன். அவரது மனைவியின் ஜாதகத்தில் நான்காமிடம் சிறப்பாக இருந்தது. தசாபுக்தியும் சிறப் பாக செயல்பட்டதால், நிலத்தை மனைவி பெயரில் மாற்றியெழுத ஆலோசனை வழங்கப்பட்டது.
இவ்வாறு நிலத்தின் உரிமையை தசாபுக்தி சிறப்பாக உள்ளவர்க்கு மாற்றி யமைக்கும்போது, நிலத்தை ஆக்கிரமித்தவர் கள் தானாக காலிசெய்துவிடுவார்கள். சட்டச்சிக்கல் நீங்கும். மேலும் ஒழுங்கற்ற வடிவமைப்புள்ள நிலத்தினை சீர்செய்யும் முறையும் கூறப்பட்டது.
காலி நிலத்தில் சல்லியம் நீக்குவது எளிது. குடியிருக்கும் வீட்டில் சல்லியம் நீக்குவது சிறிது கடினம். அதனால் வீடு கட்டும்முன்பு சல்லியத்தை முழுமையாக வெளியேற்றினால் மட்டுமே வாழ்க்கை சுவைக்கும்.
பரிகாரம்
அனுபவத்தில் இதுபோன்ற நடைமுறைச் சிக்கலை சந்திக்கும் சொந்த மற்றும் வாடகை வீட்டினர் வாராஹி அம்மனின் ஆயுதமான கருங்காலிக் கோல் வைத்து வழிபட கெடுபலன்கள் குறையும்.
செல்: 98652 20406