வ்வொருவர் வாழ்விலும் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தும். அதை தசை என்பர். அந்த தசைக்காலத்தில் ஒன்பது கிரகங்களும் ஆதிக்கம் செலுத்தும் காலத்தை புக்தி என்பர். நவகிரகங்களில் முதல் கிரகமான சூரியனின் தசை ஆறு ஆண்டுகள் நடக்கும். அதில் நடக்கும் புக்தி களின் பலனை இங்கு காண்போம்.

1. சூரிய தசையில் சூரிய புக்தி

Advertisment

சூரிய புக்தி நடக்கும் காலத்தில் மனைவி கர்ப்பம் தரிக்கக்கூடாது. காரணம், சூரிய புக்தியில் கர்ப்பத்திற்குத் தீங்கும், உறவுகளுக்குக் கேடும், கலகமும், பிராமணரால் பீடையும் மனவருத்தமும், தலைநோயும், வலது காலிலில் வலிலியும், நீரிழிவு நோயும், சித்திரை மாதத்தில் பீடையும் உண்டாகும். அலைச்சலும் தரும். எனவே இதற்குத் தகுந்தாற்போல நடந்துகொள்ள வேண்டும்.

sun

2. சூரிய தசையில் சந்திர புக்தி

அரசாங்கத்தால் மகிழ்ச்சியும், அதிக லாபமும், வாகனமும் கிட்டும். திருமண மாகாதவர்களுக்கு விரைவாகத் திருமணம் நடைபெறும். இந்த காலத்தில் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனென்றால் பெண்களிடம் பகையும், இடது கண்ணில் நோயும், ஆடி மாதத்தில் கொடிய தீங்கும் உண்டாகும். எதிலும் எச்சரிக்கை யாக இருக்கவேண்டும்.

3. சூரிய தசையில் செவ்வாய் புக்தி

Advertisment

மிகுந்த வருத்தத்தைத் தரும் நோயும், சண்டையும், நெருப்பு, பித்தம் ஆகியவற்றால் பீடையும், வறட்சியும், உறவினர்களுக்குக் கேடும், பொருள் சேதமும், தான் தேடிய பொருளுக்கு நாசமும், பூமியிலிலிருந்து கிடைக்கவேண்டிய பலன்கள் கிட்டாமையும் உண்டாகும்.

4. சூரிய தசையில் ராகு புக்தி

சூரிய தசையில் ராகு புக்தி வரும் பொழுது, ராகு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து வீடுகளில் இருந்தால் மட்டும் நல்ல பலன்களாக நடக்கும். மற்ற வீடுகளில் ராகு புக்தி அமைந்தால் சுபப்பலன்கள் இல்லாமல் போகும். கணவனைத் தன் வசமாக்க மனைவி கொடுக்கும் விஷ மருந்தினாலும், ஆயுதத்தால் பயமும், புத்திர நாசமும் அல்லது உடன்பிறந்த சகோதரர்களுக்கு சேதமும் அல்லது பாகப்பிரிவினையும் உண்டாகும். மகன் வெளியேறிச் செல்லவும் நேரும்.

5. சூரிய தசையில் குரு புக்தி

நண்பர்களாலும் கல்வியினாலும் லாபம் கிட்டும். பிள்ளைகளுக்கு அரசாங்கத்தால் நன்மை விளையும். பகையை வெல்வார்கள். பல அதிசயங்களும் நடக்கும்.

6. சூரிய தசையில் சனி புக்தி

Advertisment

பயமும், தந்தை- மகன் சச்சரவும், மனதில் துக்கமும், எதிரித் தொல்லையும், சொந்தமான பொருள் நாசமும், தொப்புளுக்குக் கீழ்ப்பகுதி யில் நோயும், இன்பம் இல்லாமையும், எவரும் எதிரியாதலும் நடைபெறும்.

7. சூரிய தசையில் புதன் புக்தி

சுற்றத்தாரால் பகையும், மனதிலும் உடலிலும் பிணியும், கல்லைப்போன்ற கற்பும் அழிந்து போதலும், தொப்புளில் வலியும், பேசும் திறமைக்கு அரசாங்கத்தால் நாசமும், அதிக துக்கமும் உண்டாகும்.

8. சூரிய தசையில் கேது புக்தி

குற்றமற்ற நினைவு குன்றுதலும், தூரதேசம் செல்லுதலும், கேட்டை விளைவிக்கும் விஷ பீடையும், வேறு வீடு மாறுதலும், தன்னால் பிரிக் கப்படும் உற்றார்மூலம் கேடும் உண்டாகும்.

9. சூரிய தசையில் சுக்கிர புக்தி

திருமணமாகும். செல்வமும், செம் பொன்னும் சேரும். மனவருத்தம் உண்டாகும். உடலிலில் நோயும், கண்களில் நோயும் வரும். சரீரத்தை உருக்கிய முன்பிருந்த வியாதி நீங்கும். சுபகாரியம் நடைபெறும். கெடுபலன்களுக்குத் தகுந்தாற்போல் பரிகாரங்கள் செய்துகொண்டால் சூரிய தசையில் சம்பந்தப்பட்ட புக்திகளில் வரும் தாக்கங்களிலிலிருந்து விடுபடலாம்.

பரிகாரம்-1

ஒவ்வொரு ஞாயிறன்றும் கீழுள்ள துதியைச் சொல்லிலி சூரியனை வணங்கிவந்தால் கெடுதல்கள் அணுகாது.

"சீலமாய் வாழ சீரருள் புரியும்

ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி

சூரியா போற்றி சுதந்திரா போற்றி

வீரியா போற்றி வினைகள் களைவாய்.'

பரிகாரம்-2

"ஓம் ஹ்ரீம் ஆதித்யாய சோமாய மங்களாய புதயாச குரு சுக்கிர சனிப்பயச்ச ராகவே கேதவே நமஹ' எனும் மகாமந்திரத்தை ஒரே நேரத்தில் 16 முறை சொல்லிலி வணங்கிவந்தால் வாழ்வில், வறுமை, பிணி, பகை நீங்கி மேன்மை பெறலாம்.

செல்: 94871 68174