இந்துக்களின் சமுதாயக் கட்டமைப்பே கூட்டுக் குடும்பமாக வாழ்வதுதான். 30 ஆண்டுகளுக்கு முன்புவரை பொருளீட்டுவது ஆண்களின் கடமை யாகவும், வீட்டை நிர்வாகம் செய்வது பெண்களின் கடமையாகவும் இருந்தது. அவசரகதியான உலகில், பல்வேறு குடும்பத் தேவைகளுக்காகப் பெண்களும் சம்பாதிக்கவேண்டிய காலச்சூழல் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால், குடும்பப் பொறுப்பைச் சுமப்பது யாரென்ற பிரச்சினை நிலவிவருகிறது.
குடும்பத்தை யார் நிர்வகிப்பதென்ற கருத்து வேறுபாடு காரணமாகவும், யார் சொல்வதை யார் கேட்பதென்ற ஈகோ காரணமாகவும், சகிப்புத்தன்மையுடன் குடும்பத்தை வழிநடத்தும் திறனில்லாமல் பிரிந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
"குடும்பப் பொறுப்பை சுமப்பவர் ஆண்களா? பெண்களா' என பல பட்டிமன்றம் நடத்தியும், தீர்க்கமான முடிவு கிடைக்காத சர்ச்சைக்குரிய ஒரு தலைப்பு. ஜோதிடரீதியாக குடும்பப் பொறுப்பை சுமப்பவர் யார் என்பதன் ஆய்வே இந்தக் கட்டுரை.
மனித வாழ்க்கையில் யோகம் என்பது நீண்ட ஆயுள், ஆரோக்கியம், நிலையான தொழில், அதன்மூலம் போதிய வருமானம் மற்றும் மனநிறைவான திருமண வாழ்க்கை போன்றவை யாகும். ஜோதிடத்தில் மனநிறைவான திருமண வாழ்க்கையைத் தருபவை 1, 2, 6, 7, 10-ஆம் பாவகங்கள்.
1 என்பது லக்னம்- ஜாதகர்.
2 என்பது பொருள் வரவு.
6 என்பது ஆரோக்கியம்.
7 என்பது களத்திரம்; திருமண வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் இணைபவர்.
10 என்பது தொழில்.
இந்த பாவகங்களின் செயல்கள் மனிதர்களின் தினசரி வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளன. இதில் 2, 6, 10-ஆம் பாவகங்கள் பொருட்பற்றான வாழ்க்கைமுறையையும்; 1, 7-ஆம் பாவகங்கள் உயிர்ப் பற்றான வாழ்க்கை முறையையும் குறிக்கின்றன.
ஜோதிடரீதியாக லக்னம் மற்றும் லக்னாதிபதி வலிமை பெற்றவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பைவிட்டு விலகு வதே இல்லை. லக்னம் வலிமைபெற ஜோதிடரீதியான விதிகளைக் காணலாம்.
ஜாதகரைக் குறிக்கும் லக்னம், லக்னா திபதி வலுவாக இருந்தால், ஜாதகரின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். எந்தவொரு யோகமும் லக்னம், லக்னா திபதியோடு சம்பந்தப்படும்போது மட்டுமே முழுயோகத்தைத் தரும். லக்னம் எந்தளவுக்கு வலுத்திருக்கிறதோ அந்தளவுக்கு ஜாதகரது உயர்விருக்கும்.
லக்னத்திற்கான காரக கிரகம் சூரியன். சூரியன் ஆத்மகாரகன். எனவே, ஜாதகத்தில் சூரியன் பலம்பெறவேண்டும். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் பலம்பெற்றிருந்தால், அந்த ஜாதகர் சுயசிந்தனையுடன்- சுயமாக முடிவெடுக்கக் கூடிய நபராக இருப்பார். வாழ்க்கை ஒளிமய மாகும். இவருக்கு எப்படியும் உணவு, உடை, இருப்பிடம், திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற அடிப்படைத் தேவைகள் குறித்த காலத்தில் கிடைத்துவிடும். அதேபோன்று, லக்னம் பலமாக அமைந்தால்தான் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கிடைக்கும்.
அதேநேரத்தில், சூரியன் பலவீனமாக இருந்தால், அந்த ஜாதகருக்கு ஆத்ம பலம் இருக்காது. தடுமாற்றம் இருக்கும். சரியான முடிவுகள் எடுக்கமாட்டார். தலைசார்ந்த உபாதைகள் எப்போதும் இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். வாழ்க்கை பெரிய போராட்டமாக இருக்கும். சாண் ஏறினால் முழம் சறுக்கும். எதுவுமே எளிதாகக் கிடைக்காது. போராடிப் போராடி தான் எதையுமே அடையமுடியும். வெற்றி என்பது கானல் நீராக இருக்கும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, உணவு போன்ற அடிப்படைத் தேவைகளுக்குக்கூட இவர்கள் போராடவேண்டியதுவரும். எல்லாமே தாமத மாகத்தான் கிடைக்கும். எனவே, ஒரு ஜாதகத் தில் சூரியன் பலம்பெற்றிருக்க வேண்டும்.
லக்னத்தில் சூரியன் இருந்தால் அல்லது குரு பார்வை இருப்பின் எந்தச் சூழ்நிலையிலும் ஜாதகருக்கு கௌரவக்குறைவு ஏற்படாது.
லக்னத்தில் சூரியன், வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன், புதன் போன்ற சுபகிரகங்கள் நின்றாலும் பார்த்தாலும் லக்னம் வலிமை பெறும்.
லக்னத்தில் ஆட்சி, உச்சம், நட்பு பெற்ற கிரகங்கள் நின்றாலும், லக்னாதிபதி கேந்திரம், திரிகோணங்களில் இருந்தாலும் லக்னத்தின் வலிமை அதிகரிக்கும்.
லக்னாதிபதி திரிகோணதிபதிகளின் சாரம் பெறவேண்டும்.
லக்னத்திற்கு இருபுறமும் சுபர்கள் இருப்பது சுபகர்த்தரி யோகம். இதன்மூலம் லக்னம் பலம்பெறும்.
லக்னாதிபதி சுபத்தன்மையுடன் தன்னுடைய வீட்டைத் தானே பார்த்தாலும் லக்னம் பலம்பெறும்.
எவ்விதப் பிரச்சினையாக இருந்தாலும், ஜோதிடரீதியான காரணங்கள் பல இருந் தாலும் உளவியல்ரீதியாகத் தீர்வுகாண முயல வேண்டும்.
இந்தத் தலைப்பை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.
தம்பதிகள் இணைந்து பொறுப்பாகக் குடும்பம் நடத்துவது கணவன்- மனைவி இருவரும் பொருளீட்டும் குடும்பமாக இருக்கும். எந்த விஷயமாக இருந்தாலும் இருவரும் கலந்தாலோசித்து, முறையாக திட்டமிட்டு முடிவுசெய்வார்கள். இருவருடைய ஜாதகத்திலும் லக்னம் வலிமையாக இருக்கும். 7-ஆமிடம், 7-ஆமதிப திக்கு நட்பு கிரக சம்பந்தமிருக்கும். தர்மகர்மா திபதி யோகம் வலிமையான வரமாக இயங்கும். குடும்பம், குழந்தைகள் என கர்மபந்தமான குடும்ப வாழ்க்கை இருக்கும்.
ஆண்கள் குடும்பப் பொறுப்பேற்று நடத்துவது பெண்கள் குடும்பத் தலைவியாகவும், ஆண்கள் சம்பாதிக்கும் குடும்பமாகவும் இருக்கும். இந்தக் குடும்பத்தின் பெண்கள் ஆணுக்குக் கட்டுப்பட்டிருப்பார்கள். கணவனே கண்கண்ட தெய்வம் என பெண்கள் வாழ்வார்கள். இந்த ஆண்களுடைய ஜாதகத்தில் ஏழுக்குடையவனைவிட லக்னம் பலம்பெற்றிருந்தால், ஆண் நிர்வாகம்செய்யும் குடும்பமாக இருக்கும். இவர்களுடைய ஜாதகத் தில் வம்சாவளியாக தர்மகர்மாதிபதி யோக மிருக்கும். குடும்பத் தலைவரின் விருப்பப் படியே குடும்ப உறுப்பினர்கள் நடப்பார்கள். குழந்தைகள் தந்தைசொல் மிக்க மந்திரமில்லை என்ற தாரக மந்திரத்துடன் வாழ்வார்கள். அதே நேரத்தில், சம்பாதிக்கும் தைரியத்தில் குடும் பத்தை கவனிக்காத பெண்களும் இருக்கி றார்கள்.
பெண்கள் குடும்பப் பொறுப்பேற்று நடத்துவது இந்த நிலையில், போதிய வருமானமின்றி ஆண்கள் பொறுப்பற்று குடும்பத் தேவைகளை நிறைவுசெய்யத் தவறுகிறார்கள். பல குடும் பங்களில் போதிய வருமானம் இருந்தாலும், குடும்பத்தை சிறப்பாக வழிநடத்தும் ஆர்வ மில்லாமல் இருப்பார்கள். சில குடும்பங்களில் ஆண்கள் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் காரணத்தினால் பெண்கள் நிர்வகிப்பார்கள். பல ஆண்கள் பொருளீட்டும் பொறுப்பை வைத்துக்கொண்டு, குடும்பப் பொறுப்பை மனைவியிடம் ஒப்படைத்துவிடுவார்கள். இந்தவகை ஆணின் ஜாதகத்தில், லக்னாதி பதியைவிட ஏழுக்குடையவன் பலம்பெற்றால் மனைவிக்குக் கட்டுப்பட்டவராகவும், பெண் நிர்வாகம் செய்யும் குடும்பமாகவும் இருக்கும்.
மேலேகூறிய மூன்றுநிலைகளிலும் லக்னம், லக்னாதிபதி, சூரியன் பலம்பெற்றவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் குடும்பத்தை வழிநடத்த முழுமுயற்சியுடன் ஈடுபடுவார்கள் என்பது புலனாகிறது. லக்னம், சூரியன் வலிமையிழந் தவர்கள் கீழ்க்காணும் பரிகாரத்தைக் கடைப் பிடித்தால், மாற்றமும் ஏற்றமும் எளிதில் கிட்டும்.
பரிகாரம்
குடும்பத்தினரிடமும் தம்பதியினரிடமும் பொறுப்புணர்வு அதிகரிக்க, அமர்ந்த கோலத் திலுள்ள அம்பிகையை ஞாயிறு (காலை 6.00-7.00), செவ்வாய் (காலை 8.00-9.00), வெள்ளிக் கிழமை (பகல் 12.00- 1.00) தோறும் முழுத்தா மரை மலர்களால் சூரிய ஹோரை நேரத்தில் அர்ச்சித்து, கோதுமை உணவு தானமளித்து வந்தால், கணவன்- மனைவியிடையே அன்புப் பிணைப்பு உண்டாகும்.
ஞாயிறுதோறும் ஈஸ்வரனையும் அம்பிகை யையும் அடிப்பிரதட்சணம் செய்து வழிபட்டு, எறும்புகளுக்கு கோதுமை ரவையும், சர்க் கரையும் கலந்திட்டுவந்தால் குடும்பம் அன்புச் சோலையாக விளங்கும்.
செல்: 98652 20406