ஆறாமதிபதி தன ஸ்தானத் துடன் சம்பந்தம் பெறும்போது வரவுக்கு மீறிய செலவு வாட்டி வதைக்கும். வருமானம் குடும்பத் தேவையை நிறைவு செய்யமுடியா மல் இருக்கும். உறவுகளின் தேவையை நிறைவுசெய்ய கடன்வாங்கி வாழ்நாள் கடனாளியாகிறார்கள். வீட்டுச் செலவை சமாளிக்க- அதாவது அடிப்படைத் தேவை களான உணவு, உடை போன்றவற்றை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும். கடனுக்கு பயந்து நோயாளியாகிறார் கள். இவர்களின் வாழ்க்கை கொடூரமான நரகத்தில் வாழ்வதைப்போல் இருக்கும். ஒருவருக்கு ஏற்படும் கடன் பிரச்சினையை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்.
1. கௌரவக் கடன்
இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அல்லது ஒரு குறுகிய காலகட்டத்திற்கு கடன் பிரச்சினை இருக்கும். கடன்பணம் வீடுதேடி வரும். கேட்ட இடத்தில் கேட்டவுடன் கடன் கிடைக்கும். எவ்வளவு கடன் வாங்கினா லும்- எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் வெளியில் தெரியாது. கௌரவப் போர்வை யால் காக்கப்படுவார்கள். ஒருசிலருக்கு விபரீத ராஜயோக அடிப்படையில் கடன் தள்ளுபடியாகும் அல்லது கடன் தொகை யைக் கட்டாமல் தப்பித்துவிடுவார்கள் அல்லது எளிதில் அடைபட்டுவிடும். இவர்களுடைய ஜாதகத்தில் 6, 8, 12-ஆமதிபதிகள் நீசம், அஸ்தமனம் பெற்று வலிமையிழந்திருக்கும்.
2. அவமானக் கடன்
இந்த அமைப்பினருக்கு வாழ்நாள் முழுவதும் ஏதாவதொரு ரூபத்தில் கடன் இருந்துகொண்டே இருக்கும். கடனுக்காக வாழ்க்கையா அல்லது வாழ்வதற்குக் கடனா என்றரீதியில் வாழ்நாளைக் கழிப்பார்கள். 100 ரூபாய்க் கடனை 1000 ரூபாய்க் கடனாகத் திரும்பச் செலுத்துவார்கள். இவர்களின் கடன் வாழ்க்கை கௌரவத்தைக் குறைத்து அவமானத் தைத் தேடித்தரும். இவர்களுடைய ஜாதகத்தில் 6, 8, 12-ஆமதிபதிகள் ஆட்சி, உச்சம்பெற்று வலிமையாக இருக்கும்.
உதாரண ஜாதகம்- 1
இதை ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம். இந்த கட்டுரைக்கு பிள்ளையார்சுழி போட்ட அன்று என்னை அணுகிய ஜாதகம். 2-12-1975 அன்று இரவு 8.30 மணிக்குப் பிறந்த வர். மிதுன லக்னம். லக்னாதிபதி புதனும், ஆறாமதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை. 2-ஆமதிபதி சந்திரன் 6-ஆமிடத்தில் நீசம். 1, 2, 6-ஆமிடத்தின் சம்பந்தம் இருப்பதால் மீளமுடியாத கடன், நடப்பில் சுக்கிர தசை, சனி புக்தி. சுக்கிரன் 5-ஆமதிபதி என்பதால் கௌரவமான உத்தியோகத்தில் இருக்கிறார். அந்தஸ்தான வேலையில் இருந்தாலும் சுக்கிரன் 6-ஆமதிபதி செவ்வாயின் சாரம்பெற்றதால் கடனால் நிம்மதிக் குறைவு. மேலும் சுக்கிரனே விரயாதிபதி என்பதால் மிகைப்படுத்தலான விரயமும் இவரை வழிநடத்துகிறது. நடப்பில் சனி புத்தி. சுயசாரம் பெற்ற சனி மிதுன லக்னத் திற்கு 8, 9-ஆமதிபதியாக தன ஸ்தானத் தில் நின்றதால் கடனால் வம்பு, வழக்கு, குடும்பத்தைப் பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டது. இங்கே வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். 2, 6-ஆமிடத்திற்கு குரு பார்வை இருப்பதால் கடன்தொல்லை எப்படி அதிகரிக்கும் என்ற கேள்வி எழும். குரு பார்வைபட்ட இடம் பெருகும். 6-ஆமிடத்திற்
ஆறாமதிபதி தன ஸ்தானத் துடன் சம்பந்தம் பெறும்போது வரவுக்கு மீறிய செலவு வாட்டி வதைக்கும். வருமானம் குடும்பத் தேவையை நிறைவு செய்யமுடியா மல் இருக்கும். உறவுகளின் தேவையை நிறைவுசெய்ய கடன்வாங்கி வாழ்நாள் கடனாளியாகிறார்கள். வீட்டுச் செலவை சமாளிக்க- அதாவது அடிப்படைத் தேவை களான உணவு, உடை போன்றவற்றை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும். கடனுக்கு பயந்து நோயாளியாகிறார் கள். இவர்களின் வாழ்க்கை கொடூரமான நரகத்தில் வாழ்வதைப்போல் இருக்கும். ஒருவருக்கு ஏற்படும் கடன் பிரச்சினையை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்.
1. கௌரவக் கடன்
இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அல்லது ஒரு குறுகிய காலகட்டத்திற்கு கடன் பிரச்சினை இருக்கும். கடன்பணம் வீடுதேடி வரும். கேட்ட இடத்தில் கேட்டவுடன் கடன் கிடைக்கும். எவ்வளவு கடன் வாங்கினா லும்- எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் வெளியில் தெரியாது. கௌரவப் போர்வை யால் காக்கப்படுவார்கள். ஒருசிலருக்கு விபரீத ராஜயோக அடிப்படையில் கடன் தள்ளுபடியாகும் அல்லது கடன் தொகை யைக் கட்டாமல் தப்பித்துவிடுவார்கள் அல்லது எளிதில் அடைபட்டுவிடும். இவர்களுடைய ஜாதகத்தில் 6, 8, 12-ஆமதிபதிகள் நீசம், அஸ்தமனம் பெற்று வலிமையிழந்திருக்கும்.
2. அவமானக் கடன்
இந்த அமைப்பினருக்கு வாழ்நாள் முழுவதும் ஏதாவதொரு ரூபத்தில் கடன் இருந்துகொண்டே இருக்கும். கடனுக்காக வாழ்க்கையா அல்லது வாழ்வதற்குக் கடனா என்றரீதியில் வாழ்நாளைக் கழிப்பார்கள். 100 ரூபாய்க் கடனை 1000 ரூபாய்க் கடனாகத் திரும்பச் செலுத்துவார்கள். இவர்களின் கடன் வாழ்க்கை கௌரவத்தைக் குறைத்து அவமானத் தைத் தேடித்தரும். இவர்களுடைய ஜாதகத்தில் 6, 8, 12-ஆமதிபதிகள் ஆட்சி, உச்சம்பெற்று வலிமையாக இருக்கும்.
உதாரண ஜாதகம்- 1
இதை ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம். இந்த கட்டுரைக்கு பிள்ளையார்சுழி போட்ட அன்று என்னை அணுகிய ஜாதகம். 2-12-1975 அன்று இரவு 8.30 மணிக்குப் பிறந்த வர். மிதுன லக்னம். லக்னாதிபதி புதனும், ஆறாமதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை. 2-ஆமதிபதி சந்திரன் 6-ஆமிடத்தில் நீசம். 1, 2, 6-ஆமிடத்தின் சம்பந்தம் இருப்பதால் மீளமுடியாத கடன், நடப்பில் சுக்கிர தசை, சனி புக்தி. சுக்கிரன் 5-ஆமதிபதி என்பதால் கௌரவமான உத்தியோகத்தில் இருக்கிறார். அந்தஸ்தான வேலையில் இருந்தாலும் சுக்கிரன் 6-ஆமதிபதி செவ்வாயின் சாரம்பெற்றதால் கடனால் நிம்மதிக் குறைவு. மேலும் சுக்கிரனே விரயாதிபதி என்பதால் மிகைப்படுத்தலான விரயமும் இவரை வழிநடத்துகிறது. நடப்பில் சனி புத்தி. சுயசாரம் பெற்ற சனி மிதுன லக்னத் திற்கு 8, 9-ஆமதிபதியாக தன ஸ்தானத் தில் நின்றதால் கடனால் வம்பு, வழக்கு, குடும்பத்தைப் பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டது. இங்கே வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். 2, 6-ஆமிடத்திற்கு குரு பார்வை இருப்பதால் கடன்தொல்லை எப்படி அதிகரிக்கும் என்ற கேள்வி எழும். குரு பார்வைபட்ட இடம் பெருகும். 6-ஆமிடத்திற்கு குரு பார்வை பட்டால் கடன் பெருகும். 8-ஆமிடத்திற்கு குரு பார்வையிருந்தால் வம்பு, வழக்கு, அவமானம், தீராத- தீர்க்கமுடியாத பிரச்சினை. 12-ஆமிடத்திற்கு குருவின் பார்வையிருந்தால் கட்டுக்கடங்காத விரயம். மீளமுடியாத இழப்புண்டாகும்.
குருவின் பார்வை
பட்ட பாவகத்தின் பலன்கள் அதிகரிக் கும். 6-ஆமிடத்திற்கு குரு பார்வை இருந் தால் கடன் பெருகும் என்ற இந்த கருத்தை நமது "பாலஜோதிடம்' இதழின் முன்னாள் ஆசிரியர்- மறைந்த மதிப்பிற்குரிய திரு. சி. சுப்பிரமணியம் அய்யா அவர்கள் பல இடங்களில் வலியுறுத்தியிருக்கிறார். ஜனனகால ஜாதகத்தில் 6-ஆமதிபதி லக்னத் துடன் தொடர்புபெற்றவர்களின் வாழ்க்கை தினம் தினம் கடனால் கண்டத்தையும் பூரண ஆயுளையும் தருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. உளவியல்ரீதியாக கடன் பிரச்சினைக் குத் தீர்வுகாண முயன்றால்- அவசியம், ஆடம்பரம் இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாத வாழ்க்கை வாழ்வது; வாங்கிய நோக்கத்திற்குக் கடன் தொகையைப் பயன்படுத்தாமல் வேறுவகையில் செலவுசெய்வது திரும்பக் கட்டமுடியாமல் திணறச் செய்கிறது.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை காலை 11.00-12.00 மணிவரையிலான சனி ஓரையில் முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபட வேண்டும். சனிக்கிழமை காலை 8.00-9.00 மணிவரையிலான செவ்வாய் ஓரையில் சிவனுக்கு நல்லெண்ணெய்யில் சிவப்புத் திரியிட்டு, ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடவேண்டும்.
எட்டாம் பாவகம்
ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டுக்குரியவரே அஷ்டமாதிபதியாவார். அந்த அஷ்டமாதிபதியும் அஷ்டமத்தில் நின்ற கிரகங்களும் ஒருவருக்கு யோக- அவ யோகத்தைத் தருகின்றன. எட்டாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் காரகத்துவம் சார்ந்த பயம் இருந்துகொண்டே இருக்கும். ஒருவருக்கு பிறரின் கோபத்தால் ஏற்படும் சாபத்தைக் குறிக்குமிடம் 8-ஆம் பாவகமாகும். ஒருவருடைய ஜாதகத்தில் 8-ஆம் பாவகாதிபதி, 8-ல் நின்ற கிரகங்களே ஒருவருக்கு எதிர்பாராத துன்பம், அவதூறுகளைத் தருபவர்கள். ஒருசிலர் தான் உண்டு; தன் வேலையுண்டு என்றிருந்தாலும், பிரச்சினை தேடிவரும். வம்பு, பொய்வழக்கு, அவமானம், கண்டம், விபத்து தேடிவரும்.
8-ஆமதிபதி லக்னத்தில் நின்றால் உடல் நலக்குறைவு, தற்கொலை எண்ணம், தாழ்வு மனப்பான்மை, தொடரும் துரதிர்ஷ்டம், தனிமையுணர்வு, தொழிலை இழுத்து மூடவேண்டிய நிலை, தீராத கடன், விபத்து, வழக்குகள், தலைமறைவாக வாழவேண்டிய சூழல் வரும். தலை, முகம் தொடர்பான பாதிப்பும் வரலாம். எதிரிகள் மத்தியில் வாழும் சூழல் ஏற்படும். நாத்திகம் பேசுவர். கௌரவ அடிமைகளாக- எந்த சம்பளமும் வாங்காமல் பிடித்த நண்பர்கள் குடும்பத்திற்கு எடுபிடி வேலைகள் செய்வார்கள். 8-ஆமதிபதி இரண்டில் நின்றால் வறுமை, பேச்சால் பெரும் நஷ்டம், குடும்பத்தைப் பிரிதல், கண் பார்வைக் குறைவு ஏற்படலாம். இழந்த பொருள் திரும்பக் கிடைக்காது. குடும்ப உறுப்பினர்களால் வெறுத்து ஒதுக்கப்படுவார்கள். வழக்குகளில் தோல்வி வரலாம். எட்டாம் பாவகம் சிலருக்கு சில நன்மைகளையும் செய்யும். 2-ல் நின்ற கிரகத்திற்கு லக்ன சுபர் சம்பந்தம் மற்றும் சுப யோகம் பெற்றால் உயில் சாசனம்மூலமாக சொத்து சுகங்கள், மனைவிவழி சொத்துகள், சூது, ரேஸ், லாட்டரி, புதையல் போன்றவற்றாலும் திடீர் தனலாபம் கிடைக்கும்.
உதாரண ஜாதகம்- 2
இந்த ஜாதகர் 2-5-1991 இரவு 10.27 மணிக்கு தனுசு லக்னத்தில் பிறந்தவர். மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். லக்னத் தில் அஷ்டமாதிபதி சந்திரன். லக்னாதி பதி குருவும் அஷ்டமாதிபதி சந்திரனும் பரிவர்த்தனை. 6-ஆமதிபதி சுக்கிரன் 6-ல் ஆட்சி. லக்னத்தில் அஷ்டமாதி சந்திரன் இருப்பதால் முன்கோபம் மிகுந்தவர். நல்லதையும் கெட்டதையும் பகுத்தாயும் திறனின்றி அடிக்கடி வம்பை விலைகொடுத்து வாங்குபவர். இரண்டாமதிபதி சனி, அஷ்ட மாதிபதி சந்திரனின் சாரம்பெற்றதால் வாய் வார்த்தையால் பலரின் சாபங்களைத் தேடிக் கொண்டார். பெற்றவர்களையும் உடன்பிறந்தவர் களையும் உதாசீ னம் செய்தவர். காதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இவரைத் திருத்த முயன்ற பலர் இப்பொழுது இவரைக் கண்டுகொள்வதில்லை. தற்போது தன் நடத்தைக்காக அவமானப் படுகிறார். ஆனால் உறவுகள் இவருடன் ஒட்ட விரும்பவில்லை. நல்ல உறவுகளை இழந்து தனிமரமாக வாழ்கிறார்.
பரிகாரம்
லக்னம், இரண்டாமிடத்திற்கு அஷ்டமாதிபதி சம்பந்தம் இருப்பவர்கள் தினமும் மாலை 4.30 முதல் 6.00 மணிவரை சரபேஸ்வரர் வழிபாடு செய்யவேண்டும். சனிப் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு, உளுந்து தானம் செய்யவேண்டும். முறையான பித்ருக்கள் வழிபாடு தீராத பல பிரச்சினைகளுக்குத் தீர்வுதரும்.
பன்னிரண்டாம் பாவகம்
12-ஆம் பாவகம் என்பது ஒருவரின் சாபத்தால் ஏற்படும் துயரம். இது தலைமுறைக்கும் தொடர்ந்துகொண்டே இருக்கும். 12-ஆம் பாவகத்தைப் பற்றி ஒரேவரியில் சொல்லவேண்டும் என்றால், ஒருவர் செய்த பாவ- புண்ணியத்தின் பலன் என்ன என்பதே. இதையே விரிவாகச் சொன்னால் முக்தி அல்லது மோட்சம் என்ற பிறவிப்பயனை அடைவாரா? மறுபிறவி உண்டா? படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் கிடைக்குமா? வெளிநாட்டு வேலை, தொழில் அமையுமா போன்றவற்றை அறியமுடியும். அத்துடன் செலவினங்கள், நஷ்டங்கள், இல்லற இன்பம், இடது கண், தியாக சிந்தனை, தற்கொலை, ராஜ துரோகம், மதம்மாறுதல், பிரிவினை, தலைமறைவாகுதல், தனிமைப்படுதல், சிறைத் தண்டனை போன்றவற்றையும் அறியமுடியும். இதனை விரயஸ்தானம் அல்லது அயன, சயன போகஸ்தானம் என்றும் கூறலாம்.
12-ல் சுப கிரகம் இருந்தால் சுப விரயம் என்றும், அசுப கிரகம் இருந்தால் வீண் விரயம் ஏற்படும் என்றும் பொதுவான கருத்து நிலவிவருகிறது. அது தவறான கருத்து. 12-ல் லக்ன சுபர் அல்லது லக்ன சுபரின் சாரம்பெற்ற கிரகம் இருந்தால் 50 சதவிகிதப் பலனும், 12-ல் நிற்கும் கிரகம் லக்ன சுபர் அல்லது லக்ன சுபரின் சாரம்பெற்று குரு பார்வை பெற்றால் 100 சதவிகித சுப விரயமும் ஏற்பட வாய்புள்ளது. மற்றபடி 12-ல் நிற்கும் கிரகம் என்றுமே மதில்மேல் பூனைதான். 12-ல் சுப கிரகம் இருந்தால் நிம்மதியான தூக்கம் அல்லது படுத்தவுடன் தூக்கம் வரும். அசுப கிரகம் இருந்தால் கண் மட்டும் மூடியிருக்கும்; தூங்கமாட்டார்கள். ஏதாவது சம்பந்தமில்லாத சிந்தனைகள், எண்ண ஓட்டம் துக்கத்தை அதிகப்படுத்தி தூக்கத்தைக் கெடுக்கும்.
12-ஆமதிபதி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் வரவுக்குமீறி செலவுசெய்வார். கட்டுக்கடங்காத விரயம் இருந்துகொண்டே இருக்கும். கடன் பெற்றும் வீண்செலவு செய்யத் தயங்கமாட்டார். சோம்பேறியாக இருப்பதுடன் சொந்த ஊரைவிட்டு அடிக்கடி நீண்டதூரம் பயணம் செய்யும் தொழிலில் இருப்பார். வீண் வம்பு, வழக்கு, விரோதங்களைத் தானே உருவாக்குவார். கடன், வம்பு வழக்கிற்காக அடிக்கடி தலைமறைவாக வாழ்வார்.
12-ஆமதிபதி லக்னத்தில் இருந்தால் கடுமையான திருமணத் தடையைத் தருகிறது. திருமணம் நடந்தால் தொழில், உத்தியோகம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். சில பெண்கள் கொடுமைக்கார மாமனார், மாமியாரிடம் சிக்கி அடிமைத்தனமாக அவர்களுக்கு வீட்டுவேலை செய்கிறார்கள். சில ஆண்கள் மனைவியின் அனைத்து விருப்பத்தையும் நிறைவுசெய்யும் அடிமை மணாளனாக வாழ்கிறார்கள்.
இதுபோல் அடங்கி வாழ்பவர்களின் திருமண வாழ்க்கை பாதிப்பதில்லை. லக்னத்திலுள்ள 12-ஆம் அதிபதியை சுப கிரகங்கள் பார்த்தால் வெளிநாட்டு யோகம், வெளிநாட்டுத் தொழில், வெளிநாட்டுப் பணம் சேர்ப்பது, வெளிநாடுகளுக்குச் சென்றுகொண்டே இருப்பது, முழுமையான தாம்பத்திய சுகம், நிம்மதியான தூக்கம், தூக்கத்தில் தெய்வங்கள், மூதாதையர்கள் வந்து பேசுவது என்று நடக்கும். இதுவே அசுப கிரக பார்வை இருந்தால் சிறைவாசம் அல்லது தீராத நோய்கள் ஏற்படும்.
12-ஆமதிபதி 2-ல் இருந்தால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாத நிலை இருக்கும். சோறுகிடைத்த இடம் சொர்க்கம் என்று பிறவியின் நோக்கமே நல்ல உணவு சாப்பிடுவது என்று, குறிக்கோள், லட்சியமில்லாமல் இருப்பார். உழைப்பிற்கேற்ற ஊதியமில்லாமை, வருமானமே இல்லாத நிலை அல்லது வரும் சொற்ப வருமானமும் விரயம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமில்லாமல் வீணாக ஊர்சுற்றித் திரிவார். இவர்களுக்கும் கடுமையான திருமணத் தடை நீடிக்கிறது. உறவினர்களே பகையாவர்கள் அல்லது கருத்து வேறுபாடு இருக்கும். எப்பொழுதும் கோப உணர்வு, பழிதீர்க்கும் எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். விரோதிகளிடம் பொருளிழக்கும் நிலை ஏற்படலாம் அல்லது எதிரிகளை சமாளிக்க வீண்செலவு செய்துகொண்டே இருப்பார். சிலருக்கு காலம் முழுவதும் கடன், நோய்த்தாக்கம் இருந்துகொண்டே இருக்கும். வெளியூரில் வேலை பார்க்கும் நிலை இருக்கும் அல்லது வைத்தியத்திற்காக வாழ்நாளின் பெரும் பகுதியை மருத்துவமனையில் கழிக்கிறார்கள்.
உதாரண ஜாதகம்- 3
18-8-1959 அன்று அதிகாலை 4.15 மணிக்கு, கடக லக்னத்தில் பிறந்த இந்த ஜாதகருக்கு 3 , 12-ஆமதிபதி புதன் லக்னத்தில் உள்ளது. அரசு அதிகாரியான இவர் தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களுக்கு உத்தியோகரீதியானப் பயணம் சென்றுள்ளார். 25 வயதில் திருமணமான இவர் குடும்ப உறுப்பினர் களுடன் வாழ்ந்த நாட்கள் மிகக் குறைவு. வாடகை வருமானம் தரக்கூடிய பல சொத்துகளுக்கு சொந்தக்காரரான இவர், பணி ஓய்வுக்குப் பிறகும் குடும்ப உறவு களிடம் ஒட்டாமல் தனியறையில் வாழ்கிறார்.
12-ஆமதிபதி ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுவதும் படிப்பினையைக் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கும். இளம்வயதில் சில குறைபாடுகள் இருந்தா லும் வயது ஏற ஏற நிறைய அனுபவ முதிர்ச்சி ஏற்பட்டு, தனிமையில் வாழப் பழகுகிறார்கள். வாழ்க்கையின் அனுபவப் பாடத்தைக் கற்ற ஒருவருக்கு ஆசை இருக்காது. இவர்களுக்கு நித்திய கண்டம்; பூரண ஆயுள். பலமுறை ஆயுள் கண்டம் இருக்கும்; ஆனால் தீர்க்காயுள். அனுபவத்தால் பட்ட வேதனையால் மரணத்தை வென்றவர்கள்.
உளவியல்ரீதியாக குடும்ப ஒற்றுமைக்குத் தீர்வுகாண முயன்றால் மனிதர்களுக்கு உள்ளுணர்வு மிக முக்கியம். கோபம், குரோதம், காமம், வெறுப்பு, ஆத்திரம், அவசரம், படபடப்பு இவற்றை நீக்கி, மனம், வாக்கு, உடம்பு இம்மூன்றையும் சுத்தமாக வைத்தால் உள்ளுணர்வு சரியாக இயங்கும். மனஅமைதி, அடக்கம், இறை மற்றும் குருபக்தி வலுப்படுத்தும் போது தனம், வாக்கு, குடும்பம் மனிதர்களுக்கு வசப்படும். மிகச் சுருக்கமாக, பேச்சைக் குறைத்து விட்டுக்கொடுத்தாலே பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
6, 8, 12-ஆம் பாவங்கள் எதற்கு அவ்வளவு முக்கியத்துவமான பாவங்கள் என்றால், ஒரு மனிதன் தான் பிறக் கும்பொழுது அவனுடைய முன்ஜென் மத்தில் செய்த தவறுக்கு, இந்த ஜென் மத்தில் இந்தப் பிரபஞ்சம் 6, 8, 12 ஆகிய பாவங்கள்மூலமாகத்தான் பழிதீர்க்கும் என்பது பல அனுபவஸ்தர்களின் கருத்து.
ஒரு மனிதன் சாதாரணமாக இந்த மூன்று பாவங்களையும் கடப்பதென்பது கடினமாகும். ஏனென்றால் நாம் முன்ஜென்மத்தில் செய்த தவறை இந்த ஜென்மத்தில் இந்த மூன்று பாவங்களைப் பயன்படுத்திதான் இந்த பிரபஞ்சம் நம்மை சோதனைக்கு உள்ளாக்கும் அல்லது நம்மைக் கஷ்டப் படுத்தும்.
ஜோதிடரீதியாக மறைவு ஸ்தானங்களில் இருக்கும் கிரகங்கள், ஒருவர் சென்ற ஜென்மத்தில் பெற்ற கோப- சாபங்களே தோஷமாக மாறி இந்த ஜென்மத்தில் வாழ்வை வெறுக்கும் வகையில் பிரச்சினையைத் தருகின்றன. மறைவு ஸ்தானமென்பது 3, 6, 8, 12-ஆமிடங்கள். 3-ஆமிடம் 8-க்கு 8-க்கு வருவதால் 3, 8-ம் ஒரே விளைவையே தரும்.
8-ஆமிடமென்பது, ஒருவரின் கோபத்திற்கு ஆளானதால் ஏற்படும் பிரச்சினை. 12-ஆமிடமென்பது ஒருவரின் சாபத்தால் உருவாகும் தோஷம். இங்கே கோபத்திற்கும் சாபத்திற்குமுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். கோபம் காலப்போக்கில் மறைந்துவிடும். சாபம் தலைமுறையினரைத் துரத்தும். மறைவு ஸ்தானங்களான 3 , 8, 12-ஆமிடங்கள் மாரகஸ்தானங்கள். 6-ஆம் பாவக கிரகத்தால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முறையான குலதெய்வ, பித்ருக்கள் பூஜையால் விடுதலை கிடைக்கும். 12-ஆம் பாவகப் பிரச்சினை வாரிசுகள்மேல் கைவைக்கும் என்பதால், பிரதோஷ வழிபாட்டை செய்துவர சிறிது சிறிதாகக் குறையும்.
செல்: 98652 20406