ஆயுள் தோஷம் நீக்கி சுகவாழ்வு தரும் பரிகாரம் - க காந்தி முருகேஷ்வரர்

/idhalgal/balajothidam/remedy-remove-evils-life-and-well-being-gandhi-murugeshwarar

னித வாழ்க்கையில் யாருக்கு, எப்போது, எப்படி உயிர்போகுமென்றே தெரியாது. அன் றாடம் நம் கண் முன்னாலேயே உயிர்கள் போய்க்கொண்டிருப்பது தெரிந்தும், தனக்கு மட்டும் மரணமில்லா வாழ்வு இருப்பதாக எண்ணி வாழும் மனிதர்கள் பெருகிவிட்டனர்.

கடந்த சில நூற்றாண்டுகளில் மனிதர்கள் கொத்துக் கொத்தாக திடீர்திடீரென்று இறப்பது அதிகமாக இல்லாமலிருந்தது. அதனால் இறப் பின்மீதான பயம் பெரிய அளவில் இல்லாமல் மனிதனுக்குத் தீயகுணங்கள் அதிகரித்துவிட்டன. தற்போது கொரோனாவால் பலரும் கண்ணெதிரே திடீரென்று மரணமடைவதைக் காணும்போது, பலரும் நியாய தர்மத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டனர். மனிதன் இயற்கையை அழித்தால், இயற்கை தன்னைப் புனரமைப்பு செய்துகொள்ளும். ஆனால் மனித வாழ்வென்பது அப்படியல்ல.

மனிதர்களின் ஆயுள்பலம் என்பது அற்பாயுள், மத்திம ஆயுள், தீர்க்காயுள் என பிரிவுகளாய் உள்ளது. ஒருவரின் ஜாதக அடிப்படையில் அவருக்கு விதித்த விதிப்படிதான் ஆயுட்காலம் இருக்கும். எட்டாமிடத்தைக்கொண்டு ஒருவரின் ஆயுளையும், எப்படிபட்ட மரணமாக இருக்கும் என்பதையும் அறியலாம்.

பாலாரிஷ்டம்

சிறு வயதில் ஏற்படும் கண்டத்தை- அதாவது பிறந்து சில தினம், மாதம், வருடத்திற்குள் இறப் பதைக் குறிப்பதுதான் பாலாரிஷ்ட தோஷம். ஜாதகரின் தாயின் பூர்வகர்மாவின்படி முதல் நான்கு வயதுவரையும், தந்தையின் கர்மா வின்படி நான்கு வயதுமுதல் எட்டு வயதுவரை யும், எட்டுமுதல் பன்னிரண்டு வயதுவரை சுயகர்மாவின்படியும் பாலாரிஷ்ட தோஷம் நடைபெறும். இந்த தோஷமுள்ள குழந்தைகளின் ஜாதகத்தைக் கணக்கிட்டுக் கண்டறியும் ஜோதிடர்கள், சில குழந்தைகளுக்கு "இன்னும் கொஞ்சம் வயது போகட்டும்; ஜாதக நோட்டு எழுதலாம்' என தள்ளிப்போடுவார்கள்.

murugu

அதற்குள் சில குழந்தைகளுக்கு பெருங் கண்டம் ஏற்பட்டுவிடும்.

அடுத்து பன்னிரண்டு வயதுமுதல் இருபது வயதுவரை கண்டம் ஏற்படுவதை யௌவன அரிஷ்ட தோஷம் எனக் கூறுவர். அதனால் தான் விவரமறியா சில பிள்ளைகளை, அந்த வயதுவரை தன் கட்டுப்பாட்டிலே இருக்க பெற்றோர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். குறிப்பாக ஏழரைச்சனி, கண்டச்சனி, அஷ்ட மச்சனிக்காலத்திலேயே பாலாரிஷ்ட தோஷம் நடக்கிறது.

அற்பாயுள்

இருபது வயதுமுதல் முப்பத்திரண்டு வயதுவரைக்குள் ஆயுள் பாதித்தால் அற்பாயுள். குழந்தைப் பருவம் மறைந்து இளமைக் காலம் தொடங்குகிற காலம். எதையும் உடனே செய்யவும், விரைவில் முன்னேற்றமடையவும்

னித வாழ்க்கையில் யாருக்கு, எப்போது, எப்படி உயிர்போகுமென்றே தெரியாது. அன் றாடம் நம் கண் முன்னாலேயே உயிர்கள் போய்க்கொண்டிருப்பது தெரிந்தும், தனக்கு மட்டும் மரணமில்லா வாழ்வு இருப்பதாக எண்ணி வாழும் மனிதர்கள் பெருகிவிட்டனர்.

கடந்த சில நூற்றாண்டுகளில் மனிதர்கள் கொத்துக் கொத்தாக திடீர்திடீரென்று இறப்பது அதிகமாக இல்லாமலிருந்தது. அதனால் இறப் பின்மீதான பயம் பெரிய அளவில் இல்லாமல் மனிதனுக்குத் தீயகுணங்கள் அதிகரித்துவிட்டன. தற்போது கொரோனாவால் பலரும் கண்ணெதிரே திடீரென்று மரணமடைவதைக் காணும்போது, பலரும் நியாய தர்மத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டனர். மனிதன் இயற்கையை அழித்தால், இயற்கை தன்னைப் புனரமைப்பு செய்துகொள்ளும். ஆனால் மனித வாழ்வென்பது அப்படியல்ல.

மனிதர்களின் ஆயுள்பலம் என்பது அற்பாயுள், மத்திம ஆயுள், தீர்க்காயுள் என பிரிவுகளாய் உள்ளது. ஒருவரின் ஜாதக அடிப்படையில் அவருக்கு விதித்த விதிப்படிதான் ஆயுட்காலம் இருக்கும். எட்டாமிடத்தைக்கொண்டு ஒருவரின் ஆயுளையும், எப்படிபட்ட மரணமாக இருக்கும் என்பதையும் அறியலாம்.

பாலாரிஷ்டம்

சிறு வயதில் ஏற்படும் கண்டத்தை- அதாவது பிறந்து சில தினம், மாதம், வருடத்திற்குள் இறப் பதைக் குறிப்பதுதான் பாலாரிஷ்ட தோஷம். ஜாதகரின் தாயின் பூர்வகர்மாவின்படி முதல் நான்கு வயதுவரையும், தந்தையின் கர்மா வின்படி நான்கு வயதுமுதல் எட்டு வயதுவரை யும், எட்டுமுதல் பன்னிரண்டு வயதுவரை சுயகர்மாவின்படியும் பாலாரிஷ்ட தோஷம் நடைபெறும். இந்த தோஷமுள்ள குழந்தைகளின் ஜாதகத்தைக் கணக்கிட்டுக் கண்டறியும் ஜோதிடர்கள், சில குழந்தைகளுக்கு "இன்னும் கொஞ்சம் வயது போகட்டும்; ஜாதக நோட்டு எழுதலாம்' என தள்ளிப்போடுவார்கள்.

murugu

அதற்குள் சில குழந்தைகளுக்கு பெருங் கண்டம் ஏற்பட்டுவிடும்.

அடுத்து பன்னிரண்டு வயதுமுதல் இருபது வயதுவரை கண்டம் ஏற்படுவதை யௌவன அரிஷ்ட தோஷம் எனக் கூறுவர். அதனால் தான் விவரமறியா சில பிள்ளைகளை, அந்த வயதுவரை தன் கட்டுப்பாட்டிலே இருக்க பெற்றோர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். குறிப்பாக ஏழரைச்சனி, கண்டச்சனி, அஷ்ட மச்சனிக்காலத்திலேயே பாலாரிஷ்ட தோஷம் நடக்கிறது.

அற்பாயுள்

இருபது வயதுமுதல் முப்பத்திரண்டு வயதுவரைக்குள் ஆயுள் பாதித்தால் அற்பாயுள். குழந்தைப் பருவம் மறைந்து இளமைக் காலம் தொடங்குகிற காலம். எதையும் உடனே செய்யவும், விரைவில் முன்னேற்றமடையவும் ஆவல் பிறக் கும். இளங்கன்று பயமறியாததுபோல் செயல்படுவார்கள். சிலர் வாகனத்திலும், வாழ்க்கையிலும் அவசர முடிவெடுத்து தோல்வி, நஷ்டம், விரக்தியடைவர். இந்த வயதுக்காலத்தில் திடீர் ஆபத்து, விபத்து, விரக்தியில் தற்கொலை எண்ணங்கள் வந்துபோகும். சுய ஜாதகத்தில் சனி நீசம் பெற்று,எட்டாமதிபதி பலம் குறைந்திருந் தால் அற்பாயுள் ஏற்படும். எட்டாமதிபதி கேந்திர ஸ்தானங்களில் இருந்து, லக்னாதி பதி பலமிழந்திருந்தாலும் அற்பாயுள் உண்டாகும். எட்டாமதியுடன் ராகு- கேதுக்கள் பாவத் தன்மையுடன் சேர்ந்தால் எதிர்பாரத விபத்து, கண்டத்தால் உயிர் போகும். ஆயுள் தோஷமுள்ள சிலருக்குத் திருமணமானபின்பு அல்லது குழந்தை பிறந்தபின்பு இறப்பு நேர்ந்துவிடுகிறது. அதனால்வரன் பார்க்கும்போதே ரஜ்ஜுப் பொருத்தம், மாங்கல்ய தோஷத்தை கவனமாகப் பார்க்கவேண்டும்.

மத்திம ஆயுள்

முப்பத்திரண்டு முதல் ஐம்பது வயதுக்குள் ஆயுள்கண்டம் ஏற்படுவதுதான் மத்திம ஆயுள். யாராக இருந்தாலும் பருவத்தே திருமணம் செய்துவிட வேண்டும். தாமதமாகத் திருமணம் செய்பவர்கள் நிச்சயம் ஆயுள் ஸ்தானத்தைப் பார்க்கவேண்டும். இல்லையெனில் தனது இறப்பால் மனைவி, சிறு குழந்தைகளைத் தவிக்கவிட்டு மரணமடைவார்கள். அந்த குடும்பம் படும் வேதனை சொல்லிமாளாது. மத்திம ஆயுள் கொண்டவர்கள் திருமணம் செய்யாமல் இருப்பதுதான் நல்லது. தான் வாழவில்லையென்றாலும் இன்னொரு பெண் வாழ்க்கையைக் கெடுக்கக்கூடாது. மத்திம ஆயுள் கொண்டவர்கள் தாமத மாகத் திருமணம் செய்யநேர்ந்தால், வாழ்க்கை யில் தடுமாறியவர்கள், வாழ்க்கையை இழந்தவர்களைத் திருமணம் செய்து கொள்வதே உத்தமம். எட்டாமதிபதி நட்பு நிலையில் இருப்பது; ஆறு, எட்டு, பன்னிரண்டாம் வீட்டு அதிபதிகள் சுபகிரக பலமின்றி, இரண்டு ஆதிபத்திய தசைகள் நடைபெறுவது; கிரகங்கள் ஒன்றுக்கொன்று சுபத்தன்மை குறைந் திருப்பது போன்றவைதான் மத்திம ஆயுளைக் கொடுக்கிறது. மத்திம ஆயுள் கொண்டவர்கள் நல்ல உணவுப் பழக்க வழக்கத்தை வைத்துக்கொண்டால்தான் ஆயுள் விருத்தி தந்து குடும்பத்தைக் காக்கும்.

தீர்க்காயுள்

பொதுவாகவே எட்டாமதிபதியும், சனியும் வலுப்பெற்றால் நீண்ட ஆயுளைத் தரும். ஐம்பது வயதுக்குமேல் எண்பது வயதையொட்டி ஒருவருக்குஆயுள்கண்டம் ஏற்பட்டால் தீர்க்காயுள். லக்னாதிபதி, ராசியாதிபதி, எட்டாமதிபதி, சனி ஆகிய கிரகங்கள் பலம்பெற்று, சுபகிரக வலுப் பெற்றால் தீர்க்காயுள் உண்டாகும். இது பலருக்கு உண்டாகிறது. நல்ல தசாபுக்திகள் அமைந்தால் எந்த பாதிப்புமின்றி நோய்களற்று வாழ்வர். எட்டாமதிபதி கெட்டால் நோய், எதிரி, கடன் உண்டாகும்.தீர்க்காயுள் கொண்டவர்கள் நோயால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டுமானால், தான் வாழ பிறரைக் கெடுக்காமல் இருக்கவேண்டும். பொறாமை, வயிற்றெரிச்சலால் நோய் வாய்ப்பட்டவர்கள்தான் அதிகம். நோய் களின்றிவெகுசிலருக்குதான் எண்பது வயதிற்குமேல் ஆயுள் கண்டம் ஏற்படும்.

அப்படிப்பட்ட அதி தீர்க்காயுள் கொண்ட வர்களுக்கு எட்டாமதிபதி சுபகிரகமாக இருந்து, ஆட்சி, உச்சம்பெறும். ஜாதகத் தில்பாவகிரகப் பார்வை, சேர்க்கை பெறா மலிருந்தால், நோய் பாதிப்பு ஏற்படாமல் இயற்கை மரணம் ஏற்படும்.நல்ல எண்ணம், நல்ல பழக்கவழக்கம் இருப்பவர்களுக்கு அதி தீர்க்காயுள் யோகம் நல்லது செய்யும். எட்டாமிடத்திலிருக்கும் கிரகங்கள் தரும் நோய்கள் ஆறாமிடத்தைப்போல எட்டாமிடத்திலிருக்கும் கிரகங்களைப் பொருத்தும் நோய், கண்டங்கள் ஏற்படும். எட்டாமிடத்திலுள்ள சூரியன் உஷ்ணநோய் கொடுக்கும். சந்திரன் சர்க்கரை நோய், கடைசிக் காலத்தில் மறதிநோய் தரும். செவ்வாய் ரத்த கொதிப்பு உண்டாக்கும். புதன் குடல் நோயும், குரு மூல நோயும், சுக்கிரன் வயிறு, பிறப்புறுப்பில் நோயும், சனி கண் நோயும் தந்துவிடும். ராகு- கேது விஷ கண்டத்தைத் தரும்.

ஆயுள் பாதிப்பைத் தரும் இடங்கள்

எட்டாமிடத்திலிருக்கும் கிரகம், எட்டா மிடத்ததிபதியின் கிரகம் ஆகியவற்றைப் பொருத்து எந்த இடத்தில் மரணம் நிகழும் என்பதைக் கூறலாம். சூரியன், செவ்வாய் எட்டாமிடத்தைப் பார்த்தாலோ, எட்டா மிடத்தில் இருந்தாலோ, எட்டாமதிபதியுடன் இணைந்தலோ மலைமீது ஆயுள் கண்டத் தைத் தருகிறது. எட்டாமிடம் சர ராசியாகி, சனி, எட்டாமதிபதி இணைந்து உபய ராசியில் இருந்தால் பொது இடங்களில் மரணமேற்படும். எட்டாமிடத்ததிபதி ஸ்திர ராசியில் இருந்தால் ஜாதகர் வீட்டிலேயே இறப்பார். எட்டாமிடத்தில் செவ்வாய், சனி, சூரியன், சந்திரன் போன்ற கிரகங்கள் ஒன்றா கவோ, கூட்டாகவோ நின்றாலும், லக்னத் தில் இருந்தாலும் நீர்நிலைகளில் உயிர்போ கும்.

நெருப்புக் கோளான சூரியன்- சந்திரன், சனியுடன் சேர்ந்து எட்டாமிடத்தில் இருந் தால் நெருப்பால் கண்டத்தை உருவாக்கும். செவ்வாய், சனி இணைவு, பார்வை, சந்திரனை சனி பார்த்தல் போன்ற கிரக அமைப்புகள் எட்டாமிடத்துடன் தொடர்புகொண்டால் மனக் குழப்பத்தையும் தற்கொலை முயற்சியையும் ஏற்படுத்தும். பாதக, மாரக தசையில் தற்கொலை செய்யநேரும். பாவ கிரகங்கள் வலுப்பெற்றால் தற்கொலையைத் தடுக்கமுடியாது. குரு பார்வை இருந்தால் கண்டம் தந்து விலக்கிவிடும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு கொண்டவர்கள் எதிலும் பொறுமை, நிதானத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டும்.

ஆயுள் பாதிக்கும் காலங்கள்

பொதுவாக எட்டாமதிபதியின் தசா புக்திகளில் ஆயுள்பாதிப்பைத் தந்துவிடுகிறது. சுபகிரகப் பார்வைபட்டால் நோய் ஏற்பட்டு சரியாகிவிடும். பூரண ஆயுள் உள்ளவர்களுக்கு எட்டாமதிபதி தசை கண்டத்தைக் கொடுத்து விலகும். சனி தசை- செவ்வாய் புக்தி, எட்டாமதிபதி புக்தி, செவ்வாய் தசாபுக்தி அல்லது இரண்டு, மூன்று, ஏழு, பதினொன் றாம் அதிபதிகளின் தசாபுக்தியிலும் கண்டத்தை ஏற்படுத்தும். மிதுன லக்னத் திற்கு பாதகாதிபதிதசையிலும்கூட மாரகம் ஏற்பட்டுவிடுகிறது. லக்னத்திற்கு 6, 8, 12-ஆம் அதிபதியுடன், ராசிக்கு ஐந்து, ஒன்பதில் சனி இருந்தால் அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படும். அற்பாயுள் உள்ளவர்க்கு மூன்றாவது தசையிலும், மத்திம ஆயுள் உடையவர்களுக்கு ஐந்தாவது தசையிலும், தீர்க்காயுள் உள்ளவர்களுக்கு ஏழாவது தசையிலும் ஆயுள் முடியும். கோட்சார சனியின் பாதிப்புக் காலங்களில்கூட மரணத் தையும், மரணத்திற்கு ஒப்பான கண்டத்தை யும் சிலருக்குத் தருகிறது. கால நேரமறிந்து நடந்துகொண்டால், ஆயுள் பாதிக்கும் காலங்களிலிருந்து தப்பலாம்.

எட்டாமதிபதி தசை

மேஷ லக்னத்திற்கு, லக்னாதிபதி மற்றும் எட்டாமதிபதியாக செவ்வாய் வருவதால் கெடுதல் குறைவாகவே செய்வார். சுபர் பார்வை இருந்தால் பாதிப்பு தராது. ரிஷபம், சிம்ம லக்னத்திற்கு குரு எட்டாமதிபதி தசை யாகவும், மிதுனம், கடக லக்னத்திற்கு சனி அஷ்டமாதிபதியாகவும், கன்னி லக்னத்திற்கு செவ்வாய் எட்டாமதிபதியாகி கண்டத்தையும் தீமையையும் தருவார். துலாம், மீன லக்னத் திற்கு சுக்கிரன் எட்டாமதிபதி, விருச்சிகம், கும்ப லக்னதிற்கு புதன் எட்டாமதிபதி, மகரத்திற்கு சூரியன்,தனுசுக்கு சந்திரன் எட்டாமதிபதியாக வருவார்கள். விபரீத ராஜயோகத்தால் திடீர் அதிர்ஷ்டம், முன்னேற் றம் தந்தாலும், எட்டாமதிபதி தசாபுக்திக் காலங்களில் கண்டம் கண்டிப்பாக ஏற்படுத்து வார். எட்டாமதிபதி 3, 6, 12-ல் இருப்பது ஆயுள் தோஷத்தை பலவீனப்படுத்தும். எட்டா மதிபதி பாவகிரகமாகி கெட்டுப்போயிருந் தால் நன்மை தந்து, ஆயுள்கண்டத்தைச் செய்யமாட்டார். சிலருக்கு எட்டாமதிபதியின் ஆயுள் பாதிப்பு, தன்மான இழப்பு, சிறைவாசம், குடும்பப் பிரிவு, கடன்தொல்லை என கெடுபலன் ஏதுமின்றி, விபரீத ராஜ யோகத்தால் வெளிநாட்டு சொகுசு வாழ்க்கை, லாட்டரி, புதையல் யோகத்தை சுபகிரகம் வலுத்தவர்களுக்குக் கொடுக்கும். எட்டாமதிபதி மற்ற இடங்களிலிருந்து தசை நடப்பது உகந்ததல்ல. பாவகிரகப் பார்வை- அதாவது சனி, சூரியன், செவ்வாய், ராகு- கேது பார்ப்பது தசையின் பலனை மாற்றும். சுபகிரகத் தொடர்பு, பார்வை மட்டுமே கெடுபலனைக் குறைக்கும். எட்டாமதிபதி சாரம்பெற்ற தசாபுக்தி திடீர் நஷ்டம், கண்டத்தைத் தந்துவிடும்.

பரிகாரம்

சராசரியாக பூமியில் பிறந்த எந்த மனிதராக இருந்தாலும் அதிகபட்சம் அறுபது வயதுமுதல் எண்பது வயதுவரை மட்டுமே வாழமுடியும். "நான் பட்ட கஷ்டம் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைத்து பிறரை ஏமாற்றி சொத்து சேர்த்தால், பரம்பரையே நோய்வந்து துன்பப்பட்டு, தன் முன்னே தன் பரம்பரை அழிவதைக் காணநேரும். மேலும் எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாதவர்களாய்த் தவித்து நொந்து இறப் பர். "ஊருக்கே நல்லது செய்யணும்னு நினைச் சேன்' என்று பேசுபவர்கள், முதலில் உடன் பிறந்தவர்கள், சொந்தபந்தங்களில் நலிந்த வருக்கு உதவிசெய்யவேண்டும். முடிந்தவரை கெடுதல் செய்யாமல் இருந்தாலே நன்மை உண்டாகும். ஆயுள் தோஷம் நீங்கும்.

எட்டாமதிபதி சூரியனாக இருந்து தசை நடந்தால், தினம் சூரியபகவானை வழிபட தீமை குறையும். சந்திரனாக இருந்தால் மூன்றாம்பிறை வழிபாடு நன்று.

செவ்வாயாக இருந்தால் முருகனை வழிபட வும். குருவாக இருந்தால் குருஹோரையில் தட்சிணாமூர்த்தியையும், சனி தசையாக இருந்தால் ஆஞ்சனேயரைம், புதன் தசையாக இருந்தால் மீனாட்சி சொக்கநாதரையும், சுக்கிரனாக இருந்தால் வெள்ளிக்கிழமை மகாலட்சுமித் தாயாரையும், எட்டில் ராகு அல்லது கேது இருந்து தசை நடந்தால், ராகு காலத்தில் அம்மனுக்கு ஏழு வாரம் விளக்கும், விநாயகர் வழிபாடும் மேற்கொள்ளுதல் சிறப்பு. இவ்வாறு செய்தால் தீமைகளைத் தவிர்த்து, கண்டங்கள் ஏற்படாமல் பாது காப்பு ஏற்படுத்தும். எட்டில் நவகிரகங்களில் எந்த கிரகம் இருந்தாலும், அதிகாலையில் குளித்து முடித்தபின் சூரிய நமஸ்காரம் செய்து நவகிரக மந்திரத்தை ஒன்பதுமுறை மனதிற்குள் சொல்லி வணங்க தோஷ நிவர்த்தி கிட்டும். கண்ட பாதிப்பையும், தீமையான கெடுபலனையும் தவிர்க்கலாம்.

செல்: 96003 53748

bala060821
இதையும் படியுங்கள்
Subscribe