ராகு தசைக்கான பரிகாரம் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

/idhalgal/balajothidam/remedy-rahu-muscle

ராகு தசை 18 வருடங்கள் நடக்கும். அந்த காலகட்டத்தில் ராகு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து வீடுகளில் வந்தால் நற்பலனைத் தரும். அதேபோல ராகு- கேது வர்க்கோத்தமம் ஆகியிருந் தாலும் தசை முழுவதும் நற்பலன் தரும். ராகு தசை இளமைக்காலத்தில் வந்து, மேற்சொன்ன வீடுகளில் ராகு வந்தால் கல்வி நன்றாக இருக்கும்.

அதேபோல 23 வயதுக்குமேல் ராகு தசை வந்தால் தொழில் வளம் பெருகும். 50 வயதுக்குமேல் ராகு தசை வந்தால் பிடிவாத குணம் அதிகமாக இருக்கும். தவிர்த்துக் கொள்ள வேண்டும். ராகு தசையின் ஒன்பது புக்திகளிலும் ராகு மேற் சொன்ன வீடுகளில் இல்லாமலும், வர்க்கோத்தமம் ஆகாமலும் இருந்தால் ஏற்படும் பலன்களைக் காண்போம்.

1. ராகு தசையில் ராகு புக்தி

அரசாங்கத்தால் நாசமும், மனதில் துன்பமும், விஷத்தால் பீடையும், மனையாளுக்குத் துன்பம் அதிகமாகு தலும், இட மாறுதலும், கரிய நிறமுள்ளவரால் கலகமும் நடை பெறும்.

rr

2. ராகு தசையில் குரு புக்தி

இன்பமும், ஆரியரால் செல்வமும், அரசாங்கத்தால் மகிழ்ச்சியும், நினைத்த காரி

ராகு தசை 18 வருடங்கள் நடக்கும். அந்த காலகட்டத்தில் ராகு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து வீடுகளில் வந்தால் நற்பலனைத் தரும். அதேபோல ராகு- கேது வர்க்கோத்தமம் ஆகியிருந் தாலும் தசை முழுவதும் நற்பலன் தரும். ராகு தசை இளமைக்காலத்தில் வந்து, மேற்சொன்ன வீடுகளில் ராகு வந்தால் கல்வி நன்றாக இருக்கும்.

அதேபோல 23 வயதுக்குமேல் ராகு தசை வந்தால் தொழில் வளம் பெருகும். 50 வயதுக்குமேல் ராகு தசை வந்தால் பிடிவாத குணம் அதிகமாக இருக்கும். தவிர்த்துக் கொள்ள வேண்டும். ராகு தசையின் ஒன்பது புக்திகளிலும் ராகு மேற் சொன்ன வீடுகளில் இல்லாமலும், வர்க்கோத்தமம் ஆகாமலும் இருந்தால் ஏற்படும் பலன்களைக் காண்போம்.

1. ராகு தசையில் ராகு புக்தி

அரசாங்கத்தால் நாசமும், மனதில் துன்பமும், விஷத்தால் பீடையும், மனையாளுக்குத் துன்பம் அதிகமாகு தலும், இட மாறுதலும், கரிய நிறமுள்ளவரால் கலகமும் நடை பெறும்.

rr

2. ராகு தசையில் குரு புக்தி

இன்பமும், ஆரியரால் செல்வமும், அரசாங்கத்தால் மகிழ்ச்சியும், நினைத்த காரியங்கள் கைகூடுதலும், திருமணமும் நடை பெறும். ராகு தசை நடப் பவர்கள் குரு புக்தி ஆரம்பித்து முடியும் நேரத்தில் திருமணம் செய்வது உத்தமம்.

3. ராகு தசையில் சனி புக்தி

மனதில் துக்கம், நோய், ஒருபொழுதும் முடிவு பெறாத வழக்கு, சண்டை உண்டாகும். வாதம், பித்தம் சம்பந்தமான நோய் ஏற்படும். திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரங்களில் நோய் அதிகரிக்கும்.

4. ராகு தசையில் புதன் புக்தி

முயற்சிக்குத் தக்கபடி வாழ்வில் மேன்மை யுண்டாகும். தெய்வபக்தி இருக்கும். சில பொருள் வந்துசேரும். ஆச்சரியப்படும்படியான முறையில் குழந்தை பிறக்கும். (ஆண் குழந்தை ஜனிக்கும்). மேலான நிலையிலுள்ளவர்களுடன் விரோதம் உண்டாகும்.

5. ராகு தசையில் கேது புக்தி

விஷத்தால் பயமும், குழந்தைகளுக்குப் பீடையும், உடலில் வீக்கம் உண்டாகி அதனால் நோயும், பெண்களுக்குத் துன்பமும், அரசாங்கத் தால் பயமும் உண்டாகும். வாங்கும் மருந்து களில் காலாவதி தேதி பார்த்து உட்கொள்ள வேண்டும். மேலும் அரசாங்க வேலை யிலிருந்தால் கேது புக்தி முழுவதும் நாவடக்கம் தேவை. கையூட்டு பெறுதல் கூடாது.

6. ராகு தசையில் சுக்கிர புக்தி

பொன்னும் பொருளும் சேரும். அதிக ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வேறு பெண்ணின் சேர்க்கை உண்டாகும். அரசாங் கத்தால் மகிழ்ச்சியும், வஞ்சனையால் துன்பமும் வந்து, பின்பு விலகுதலும் நடைபெறும். மணமாகாதவர்களுக்கு இந்த புக்தியில் திருமணம் செய்வது சிறந்தது. திருமணமானவர்கள் இந்த புக்தியில் வேறு பெண்களின் சேர்க்கை கூடாது. அப்படி நிகழ்ந்தால் அவர்களுக்கு வஞ்சனையினால் துன்பமும் பீடையும் வந்து பின்பு விலகும்.

7. ராகு தசையில் சூரிய புக்தி

இந்த புக்தியில் வளையர் குலத்துடன் சண்டை ஏற்படும். அவ்வாறு ஏற்படாமலிருக்க அவர்களிடமிருந்து விலகிச் செல்லவேண்டும். அரசாங்கத்தின் ஆதரவு கிட்டும். உடலில் தழும்பு உண்டாகும். மனைவி, பிள்ளைகளுடன் சண்டை உண்டாகும் அல்லது அவர்கள்மூலம் பயமும், இருப்பிடம்விட்டு வேறிடம் போகு தலும் நடைபெறும்.

8. ராகு தசையில் சந்திர புக்தி

மதிக்கத்தகுந்த உற்றார் நாசமும், மனைவியால் பொருள் சேதமும் ஏற்படும். அஸ்தம், திருவோண நட்சத்திர தினங் களில் கால், கண்களில் நோய் உண்டாகும். தனக்கான இடத்தை விட்டுப் போகுதலும், விஷத்தால் துன்பமும் உண்டாகும். (அரசாங்கத்தில் வேலைபார்ப்பவர்கள் தங்களுக்கு வரும் மாறுதல் உத்தரவை அப்படியே செயல்படுத்த வேண்டும். அதே இடத்தில் பணிபுரிய முயற்சித்தால் மேற்கண்ட சிரமங்களை அடைய நேரிடும்).

9. ராகு தசையில் செவ்வாய் புக்தி

அக்னியால் பயமும், குழப்பமும், விஷத்தால் பீடையும், தகுதியற்றோரிடம் இன்பமும், களவும், சண்டையும், மனைவி யால் வேதனையும் உருவாகும். சுற்றியிருப் பவர்கள் கலகம் செய்வார்கள்.

பரிகாரம்

தேங்காய்- 9, வாழைப்பழம்- 18, கொட்டைப்பாக்கு- 18, வெற்றிலை- 50 கிராம், கதம்பப்பூ- 9 முழம் ஆகியவற்றை நவகிரக சந்நிதியில் சனிக்கிழமையன்று காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் (ராகு காலத்தில்) கொடுத்து அர்ச்சனை செய்து, அதனை அங்கேயே கொடுத்துவிட வேண்டும். அதற்கு முன்னர் காலை 8.00 மணிமுதல் 9.00 மணிக்குள் எந்தக் கோவிலுக்குச் சென்றுள்ளோமோ அங்குள்ள மூலவருக்கு அர்ச்சனை செய்துகொள்ள வேண்டும். அந்த பிரசாதத்தை மட்டும் வீட்டிற்குக் கொண்டுவரலாம். ராகு தசை நடப்பவர்கள் 27 முழு உளுந்து எடுத்து, அதனை வெள்ளைத் துணியில் முடிந்து பூஜையறையில் வைத்து வணங்க வேண்டும்.

ராகு தசையில் கேது புக்தி வரக் கூடாது. அவ்வாறு வரும்போது கெடு பலனிலிருந்து விடுபட்டு ஒரு வருடம், 18 நாட்கள் நன்மையைப் பெறுவதற்கு அனைத்து ராகு தசையினரும் செய்து கொள்ள வேண்டிய பரிகாரம்:

தேங்காய்- 9, வாழைப்பழம்- 18, கொட்டைப்பாக்கு- 18, வெற்றிலை- 50 கிராம், கதம்பப் பூ- 9 முழம் ஆகியவற்றை செவ்வாய்க்கிழமையன்று காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்குள் (எமகண்ட நேரத்தில்) நவகிரக சந்நிதியில் கொடுத்து அர்ச்சனை செய்து, அதனை அங்கேயே கொடுத்துவிடவேண்டும். அதற்கு முன்னர் காலை 8.00 மணிமுதல் 9.00 மணிக்குள் மூலவருக்கு அர்ச்சனை செய்து அந்த பிரசாதத்தை மட்டும் வீட்டிற்குக் கொண்டு வரலாம். கேது புக்தி ஆரம்பம்முதல் முடிவுவரை 27 கொள்ளுப் பயறு எடுத்து, அதனை வெள்ளைத் துணியில் முடிந்து பூஜையறையில் வைத்து வணங்கிவர வேண்டும்.

செல்: 94871 68174

bala190719
இதையும் படியுங்கள்
Subscribe