லர் நிறைய சம்பாதித்து, எதிர்பாராத வகையில் அவற்றையெல்லாம் இழந்து வறுமையில் வாடுகிறார்கள். மீண்டும் அவர்கள் நல்ல நிலைமை அடைவதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

ஒரு ஜாதகத்தில் சுகாதிபதி எனப்படும் 4-க்கு அதிபதி கெட்டுப்போனால், இல்வாழ்க்கை யில் சந்தோஷம் இருக் காது. 2-ஆம் பாவாதிபதி நீசமடைந்தால்- அஸ்தமனமா னால் செல்வம் வந்து சேராது. 11-க்கு அதிபதி நீசமாகவோ, பலவீனமாகவோ இருந்தால், அந்த மனிதருக்கு உரிய நேரத்தில் தேவைப்படும் பணம் வந்து சேராது.

ss

Advertisment

லக்னாதிபதி பலமாக இருந்து, 2-க்கு அதிபதி பலவீனமாக இருந்தால், அந்த ஜாதகர் கடுமையாக உழைத்து நிறைய பணம் சம்பாதிப்பார். ஆனால் குடும்பத்தில் உள்ளவர்கள் அவரை ஏமாற்றிவிடுவார்கள்.

ஜாதகத்தில் லக்னாதிபதி பலமாக இருந்து, 4-க்கு அதிபதி நீசமடைந்தால், அவர் வசதியான வாழ்க்கைக்கு வந்தபிறகு, நெருங்கிய உறவினர்கள் அவரை ஏமாற்றி விடுவார்கள்.

4-ல் சூரியன், 7-ல் சனி, 11-ல் சந்திரன் இருந்தால், ஜாதகர் நல்ல நிலையில் இருக்கும்போது, பொறாமை காரணமாக அவரின் நண்பர்களும், உறவினர்களும் அவருக்கு சூனியம் வைப்பார்கள். அதனால் அவருக்கு வாழ்க்கையில் வீழ்ச்சி உண்டாகும்.

Advertisment

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு 6, 8, 12-ல் இருந்தால், குரு தசை நடக்கும்போது தன் சொத்துகளை இழந்துவிடுவர்.

11-ல் சந்திரன், 12-ல் சனி, செவ்வாய், 8-ல் குரு இருந்து, குரு தசை நடந்தால், அந்த ஜாதகர் தன் சொத்துகளையும், குடியிருக்கும் வீட்டையும் இழக்கும் நிலை உண்டாகும்.

லக்னத்தில் சந்திரன், 4-ல் சனி, 10-ல் செவ்வாய் இருந்தால், அவர் வெளியே பெரிய பணக்காரராகக் காட்டிக் கொண்டிருப்பார். ஆனால், தசாகாலங்கள் சரியில்லாமல் இருக்கும்

போது, சாதாரண வாழ்க்கை வாழவேண்டிய திருக்கும்.

ஒருவர் ஜாதகத்தில் 4-ல் செவ்வாய், ராகு; 7-ல் சந்திரன்; 10-ல் சனி, கேது; 12-ல் குரு, சூரியன் அல்லது சூரியன் இருந்தால், தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு அவர் எதிர்பாராத வீழ்ச்சியை சந்திப்பார்.

லக்னத்தில் சுக்கிரன், சந்திரன்; 4-ல் சனி, கேது; 11-ல் செவ்வாய் இருந்தால், அந்த ஜாதகர் எல்லாரையும் ஏமாற்றக்கூடியவராக இருப்பார். ஆனால், தசாகாலங்கள் மாறும்போது, அந்த ஜாதகர் சாதாரண வாழ்க்கை வாழநேரும்.

லக்னத்தில் சந்திரன்; 2-ல் ராகு; 6-ல் குரு, சனி; 11-ல், சூரியன், சுக்கிரன் இருந்தால்,

அந்த ஜாதகருக்கு சந்திர தசை நடக்கும் போது ஓஹோ என்று இருப்பார். ஆனால், சந்திர தசையில் 8-ல் இருக்கும் கேதுவின் புக்தி நடக்கும்போது அவர் பெரிய சரிவைச் சந்தித்து, சாதாரண வாழ்க்கையே அமையும்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், 2-ல் சனி, 3-ல் குரு, 4-ல் சந்திரன், 5-ல் கேது, 11-ல் ராகு, 12-ல் சுக்கிரன் இருந்தால், அவர் தன் 28 வயதுவரை பலரிடமும் ஏமாறுவார். அவரின் சொத்துகளை அவர்கள் அபகரித்துக் கொள்வார்கள்.

லக்னத்தில் ராகு, 2-ல் நீச குரு, 10-ல் நீசச் சுக்கிரன் இருந்தால், அவர் எப்போதும் கடனா ளியாகவே இருப்பார். தன் சொத்துகளைப் பிறரிடம் இழத்துவிடுவார்.

4-ல் சந்திரன், 7-ல் சனி, 10-ல் சுக்கிரன் இருந்தால், அஷ்டமாதிபதி அல்லது விரய ஸ்தானாதிபதியின் தசை நடக்கும்போது பெரிய வீழ்ச்சியைச் சந்திப்பார்.

லக்னத்தில் சந்திரன், 4-ல் சூரியன், 6-ல் சனி, 8-ல் குரு இருந்தால், பாவகிரகத்தின் தசை நடக்கும்போது, கவனமாக இல்லையென்றால் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திப்பார்.

லக்னத்தில் பலவீனமான குரு, 7-ல் ராகு, 8-ல் சனி, 12-ல் சந்திரன் இருந்தால், அவர் அதிகமாகப் பேசுவார். சந்திர தசை நடக்கும்போது கோடீஸ்வரனாக இருந்த அவர் வாடகை வீட்டில் வாழும் சூழ்நிலை உண்டாகும்.

3-ல் சந்திரன்; 5-ல் சூரியன்;

6-ல் செவ்வாய், புதன், கேது, சுக்கிரன்;

7-ல் சனி; 12-ல் ராகு இருந்தால், அந்த ஜாதகர் பெண்கள்மீது கொண்ட மோகத்தில் தன் பூர்வீக சொத்துகளை இழந்துவிடுவார். அதற்குப் பிறகு சாதாரண வாழ்க்கையை வாழவேண்டிய திருக்கும்.

ஒரு வீட்டிற்குத் தென்மேற்கு திசையில் காலிலிலியான இடம் அதிகமாக இருந்து, அங்கு கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு இருந்தால், அவர் தன் சொத்துகளின் பெரும்பகுதியை இழந்து, சாதாரண வாழ்க்கையை வாழ்வார்.

பரிகாரங்கள்

தெற்கு அல்லது கிழக்கு திசையில் தலைவைத்துப் படுக்கவேண்டும்.

தினமும் காலையில் சூரியனை வழிபடவேண்டும். ஆதித்திய ஹிருதய ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்யலாம்.

ஆஞ்சனேயருக்கு பூந்தி, லட்டு ஆகியவற்றை படைத்து பூஜை செய்து அதை பிரசாதமாக பிறருக்குத் தரவேண்டும்.

கருப்புநிற ஆடையைத் தவிர்க்கவும்.

திங்கள்கிழமையிலிலிருந்து சனிக்கிழமை வரை அரச மரத்திற்கு நீர் ஊற்ற வேண்டும்.

வீட்டில் ஸ்ரீசூக்தம் படிப்பது சிறந்தது.

வெள்ளிக்கிழமை துர்க்கை ஆலயத்திற்குச் சென்று, சிவப்பு மலர்கள் வைத்துப் பூஜை செய்யவேண்டும்.

லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம். வீட்டில் வாஸ்து சரியாக இருக்கும்படி கவனித்துக்கொள்வது அவசியம்.

செல்: 98401 11534