புதன் தசை 17 வருடங்கள் நடக்கும்.புதன் தசையில் நல்ல பலன்களை யடைய, ஜாதகத்தில் புதன் கெடாமல் இருக்கவேண்டும். மீனத்தில் புதன் நீசம டையக் கூடாது; லக்னத்துக்கு 6, 8, 12-ல் வரக்கூடாது. அவ்வாறு ஜாதகம் அமைந்தவர்களுக்குப் பரிகாரம் கடைசியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
1. புதன் தசையில் புதன் புக்தி
சுற்றம் துணையிருப்பர். பொருள் லாபம், அதிக பாக்கியம், நன்மை பயக்கும் ஞானம், எதிர்பார்த்த காரியம் முடிவு பெறுதல், பொன் சேர்க்கை இவை யனைத்தும் உண்டாகும்.
2. புதன் தசையில் கேது புக்தி
பெரிய இடம்விட்டு மாறுதல், நோயால் துன்பம், பொருட்சேதம், உற்றார் கேடு, மருந்திடுவதால் துன்பம், அதிகமான மனக்கிலேசம் உண்டாகும். (இதனைத் தவிர்க்க கேது புக்திக்குள்ள பரிகாரத்தைச் செய்துகொள்ளவு
புதன் தசை 17 வருடங்கள் நடக்கும்.புதன் தசையில் நல்ல பலன்களை யடைய, ஜாதகத்தில் புதன் கெடாமல் இருக்கவேண்டும். மீனத்தில் புதன் நீசம டையக் கூடாது; லக்னத்துக்கு 6, 8, 12-ல் வரக்கூடாது. அவ்வாறு ஜாதகம் அமைந்தவர்களுக்குப் பரிகாரம் கடைசியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
1. புதன் தசையில் புதன் புக்தி
சுற்றம் துணையிருப்பர். பொருள் லாபம், அதிக பாக்கியம், நன்மை பயக்கும் ஞானம், எதிர்பார்த்த காரியம் முடிவு பெறுதல், பொன் சேர்க்கை இவை யனைத்தும் உண்டாகும்.
2. புதன் தசையில் கேது புக்தி
பெரிய இடம்விட்டு மாறுதல், நோயால் துன்பம், பொருட்சேதம், உற்றார் கேடு, மருந்திடுவதால் துன்பம், அதிகமான மனக்கிலேசம் உண்டாகும். (இதனைத் தவிர்க்க கேது புக்திக்குள்ள பரிகாரத்தைச் செய்துகொள்ளவும்.)
3. புதன் தசையில் சுக்கிர புக்தி
புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு மக்கட் பேறு, பெண்ணுடன் போகம், உறவினர் சிநேகம், வித்தை, ஆபரணச் சேர்க்கை, வேறு நாடு சென்றவர் திரும்ப வந்து சேர்தல், விவாகம் போன்றவை நிகழும். சுக்கிர காலத்தில் அனைவரும் நல்ல பலன்களை அடையலாம்.
4. புதன் தசையில் சூரிய புக்தி
இந்த காலகட்டத்தில் அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டும். பொறுமையைக் கடைப் பிடிப்போர் நற்பலன்களை அடையலாம். இல்லை யேல் அக்னி பயம், மனக்கிலேசம், மனையாளுக்குப் பீடை, விரோதம், இடையூறு, அரசாங்கத்தால் துன்பம் ஆகியவை வர வாய்ப்புண்டு.
5. புதன் தசையில் சந்திர புக்தி
சந்திர புக்திக் காலமானது நோயைத் தரும். வரும் காலம் சோகை என்னும் வியாதியால் புறங்கால் வீக்கம், பெண் காரணமாக கலகம், அதிகமான பீடை, துன்பம், பார்க்கும் மனிதரோடெல்லாம் பகை போன்ற பலன்கள் நடைபெறும். எனவே சந்திரபுக்திக் காலத்தில் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.
6. புதன் தசையில் செவ்வாய் புக்தி
பித்த நோய், காமாலை, தலைவலி, அன்னியர் விரோதம், ஆயுதத்தால் பீடை, முன்னோர் பகை ஏற்படும். புக்தி முடியும்வரை சுற்றியிருப் பவர்கள் கலகம் செய்வர். இதைத் தவிர்க்க செவ்வாய் புத்திக் காலத்தில் திருச்செந்தூர் முருகனை தரிசித்துவர செவ்வாயின் தாக்கம் மாறும்.
7. புதன் தசையில் ராகு புக்தி
இந்த காலகட்டத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் ராகு இருந்தால் கெடுக்காது; நல்லது செய்யும். மற்ற ராசிகளில் ராகு இருந்தால் இருக்கும் இடம்விட்டுப் போதல், நீசராலும் விஷத்தாலும் பயம், சண்டை, மனத்துன்பம், தீய கனவு, தலைவலி, பித்தம், உணவுக்குறைவு ஆகியவை நடைபெறும். எனவே ராகு புக்தி முழுவதும் பயன்பெற அருகிலுள்ள ராகு கோவிலுக்குச் சென்று வரவும்.
8. புதன் தசையில் குரு புக்தி
இந்த காலகட்டத்தில் இன்பமும், ராஜமரியாதையும், மனதில் சந்தோஷமும், புத்திரப் பிராப்தியும், உறவினர் சேர்க்கையும், குணமுள்ள பெண் மனைவியாதலும், அதிக பாக்கியம் உண்டாதலும் நடைபெறும்.
9. புதன் தசையில் சனி புக்தி
இந்த காலகட்டத்தில் தினமும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரும். பகையுண்டாகும். வலது காலில் நோய் உண்டாகும். உத்திராட நட்சத்திரத்தில் துன்பமும், உற்றார் கேடும், மனதில் கிலேசமும் நடைபெறும் காலம். (சனி ஆட்சியாக இருந்தாலும், 10-ல் இருந்தாலும் மேற்கண்டவாறு எதுவும் நடைபெறாது).
பரிகாரம்-1 (புதன் நீசம்)
புதன் நீசமாகியுள்ளவர்கள் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பிவிடுவார்கள். இதற்குப் பரிகாரமாக அரை ஸ்பூன் வெந்தயம் எடுத்து வெள்ளைத்துணியில் முடிந்து தலையணையில் வைத்துத் தைக்கவேண்டும். அதில் படுத்துறங்க வேண்டும். விரதம் தேவையில்லை. நிரந்தரமாக வைத்துக் கொள்வது நன்மை பயக்கும்.
பரிகாரம்-2
லக்னத்துக்கு 6, 8, 12-ல் புதன் இருந் தால் பணம் சேராது. இதனைத் தவிர்க்க அரை ஸ்பூன் வெந்தயம் எடுத்து வெள்ளைத் துணியில் முடிந்து பீரோ லாக்கரில் வைத்துக் கொள்ளவேண்டும். வெளிநாடு, வெளி மாநிலம் செல்பவராக இருந்தால் அரை ஸ்பூன் வெந்தயம் எடுத்து வெள்ளைத்துணியில் முடிந்து சூட்கேஸ் மற்றும் கைப்பையில் வைத்துக்கொள்ளலாம்.
செல்: 94871 68174