செவ்வாய் தசை சுமார் ஏழு ஆண்டுகள் நடைபெறும். "செவ்வாய் தசையில், கன்னி வீட்டில் செவ்வாய் வந்தால் கடலளவு பணம் இருந்தாலும் வற்றிப்போகும்' என்பது பழமொழி.
எனவே பிறப்பு ஜாதகத்தில் கன்னி வீட்டில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் தசை வரும் காலங்களில் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இனி, செவ்வாய் தசையில் வரும் ஒன்பது புக்திகளில் எத்தகைய பலன்கள் நடக்கும் என்பதைப் பார்ப்போம்.
1. செவ்வாய் தசையில் செவ்வாய் புக்தி
அற்பமான ஏவல் தொழில் செய்ய நேரும். பசுவால் துன்பம் வரும். நாய் கடித்திடும். சித்திரை மாதத்தில் அரசால் பயம், நோய், வியாதி, விஷ ஜந்து பயம் போன்றவை ஏற்படும். கார்த்திகை மாதத்தில் நீசரால் வெட்டும் குத்தும் நடைபெறும்.
2. செவ்வாய் தசையில் ராகு புக்தி
கார்த்திகை மாதத்தில் கொடிய விஷத் தால் உறவினர் இழப்பும், மேக நோயும், கட்டி சிரங்கும், இருக்குமிடம்விட்டு வேறிடம் போகுதலும், குஷ்ட ரோகமும் உண்டாகும். (செவ்வாய் நன்றாக அமையப்பெற்றவர்களுக்கு இவ்வாறு நடக்காது.)
3. செவ்வாய் தசையில் குரு புக்தி
குடும்ப சொத்துக்கு நாசமும், பலவித எதிரிகள் உண்டாகுதலும் நேரும்.
அதேசமயம் அரசரால் செல்வமும், அவர்களின் உறவும் கிடைக்கும்.
4. செவ்வாய் தசையில் சனி புக்தி
கலகம், வழக்கு, சண்டை, சரீரத்தில் தினவு உண்டாகுதல், பொருள் நாசம், சிலருக்கு குஷ்ட ரோகமுண்டாதல், தானிருக்கும் நிலை கெடுதல், மனதில் கிலேசம் போன்றவை உண்டாகும். (சனி புக்தியின்போது 10-ஆமிடத்தில் சனி வந்தால் இதுபோல நடக்காது. ஆட்சி, உச்சம் பெற்ற ஜாதகர்கள் பயப்பட வேண்டியதில்லை).
5. செவ்வாய் தசையில் புதன் புக்தி
அழகிய பெண் சேர்க்கையும், அதிக செல்வம் உண்டாகுதலும், வியாதி நீங்குதலும், புரட்டாசி மாதத்தில் ஏமாற்றம் அடைதலும், பாம்புக் கடியும் உண்டாகும். ஆனால் மேற்சொன்ன தோஷப் பலன்கள் வெகுகாலம் நீடித்திருக்காது.
6. செவ்வாய் தசையில் கேது புக்தி
பெண், மூலம் பகையும், வியாதி தோன்று தலும், அதிக விஷ பயமும், பெண்கள் சம்பந்த மாக அவமானம் அடைதலும், எதிரி தொல் லை யும் உண்டாகும். (கேது வர்க்கோத்தமம் ஆனவர்களும், கேது நட்பு, உச்சம் பெற்றவர்களும் பயம்கொள்ளத் தேவையில்லை.)
7. செவ்வாய் தசையில் சுக்கிர புக்தி
வெகுகாலமாக எதிர்பார்த்த பொருள் சேரும். அழகிய பெண்ணின் தொடர்பு கிட்டும். தெய்வ பூஜை செய்தலும், பெரியோர்களின் சேர்க்கையும், வாகன யோகமும் உண்டாகும். சிலருக்கு தோல் சார்ந்த நோய் வரலாம்.
8. செவ்வாய் தசையில் சூரிய புக்தி
குஷ்டம், கழுத்தில் வியாதி, மனதில் துக்கம், நெருப்பினால் பயம், பிராமணர் மூலம் துன்பம், குறிப்பறியும் குணமுள்ள மனையாளுக்கு நோய், எவரும் பகைவராதல் போன்றவை உண்டாகும்.
9. செவ்வாய் தசையில் சந்திர புக்தி
பூமி லாபம் கிட்டும். பசுக்கள் கர்ப்பந்தரிக்கும். பொன், முத்து, ஆடை சேரும். இன்பம் கிட்டும். அதேசமயம் தலம் மாறுதலும், தளர்ச்சியுண்டாகுதலும் நடை பெறும்.
மேற்சொன்ன சிரமங்கள் வராமலிருக்க கீழுள்ள பரிகாரங்களைச் செய்துகொள்ளவும்.
பரிகாரம்-1
"சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு'
என்னும் துதியை செவ்வாய் தசைக் காலத்தில் தினசரி 18 முறை ஒரே நேரத்தில் சொல்லி வணங்கிவர, வாழ்வில் பகை, பிணி, பயம் நீங்கும்.
பரிகாரம்-2
சுய ஜாதகத்தில் கன்னி வீட்டில் செவ்வாய் உள்ளவர்கள் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு, வலம்வரும்போது கொடி மரத் தடியில் "கன்னிச் செவ்வாயின் தன்மை மாற வேண்டும்' என்று மௌனமாக வேண்டிவர, கன்னிச் செவ்வாயின் தன்மை மாறும். கடலளவு பணம் வந்தாலும் வற்றிப்போகும் என்ற நிலையும் மாறும்.
செல்: 94871 68174