சென்ற இதழ் தொடர்ச்சி...

திருமணப் பொருத்தத்தின்போது புத்திர தோஷ ஜாதகத்திற்கு புத்திர தோஷம் இல்லாத ஜாதகத்தைப் பொருத்தவேண்டும். ஆண் ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்து, பெண் ஜாதகத்தில் புத்திர தோஷம் இல்லாமல் இருந்தால் குழந்தைப்பேறு அமைவது கடினம். ஆண் ஜாதகத்தில் புத்திரதோஷம் இல்லாமல், பெண் ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்தால், காலம் தாழ்த்திய புத்திர பாக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியத்தைத் தீர்மானம் செய்யும் மகேந்திரப் பொருத்தமும், ரஜ்ஜுப் பொருத்தமும் மிகமிக முக்கியம்.

Advertisment

சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, ஹஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்களையும், ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை, சுவாதி, சதயத்தில் பிறந்தவர் களையும் இணைக்கக் கூடாது.

சூரியனின் நட்சத் திரமான கிருத்திகை, உத்திரம், உத்திராடத்தில் பிறந்தவர்களையும், குருவின் நட்சத்திரமான புனர்பூசம், விசாகம், பூரட்டாதியில் பிறந்தவர் களையும் இணைக்கக் கூடாது.

சுக்கிரனின் நட்சத் திரமான பரணி, பூரம், பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களையும், சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்தி ரட்டாதியில் பிறந்த வர்களையும் இணைக் கக்கூடாது.

Advertisment

கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி, மகம், மூலத்தில் பிறந்தவர்களை புதனின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை, ரேவதியில் பிறந்தவர்களுடன் இணைக்கக் கூடாது.

parigaramமேலே கூறியவையெல்லாம் ஒரே பகுப்புடைய நட்சத்திரங்கள். ஒரே பகுப்புடைய நட்சத்திரங்கள் இல்லற இன்பக் குறையையும், தம்பதிகளிடையே இணக் கத்தையும் குறைக்கும்.

அறிவியல் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் ஆண்- பெண் சேர்க்கை இல்லாமலே குழந்தைகளை உருவாக்க லாம். சோதனைக் குழாயில் கருமுட்டை, உயிரணுவை இணைத்து குழந்தையை உருவாக்குகிறார்கள். கருமுட்டை இல்லையென்றால் கருமுட்டை தானம் பெறலாம். உயிரணு தானம் பெறலாம். கருப்பையே இல்லை என்றாலும், தாயே இல்லை என்றாலும்கூட வாடகைத் தாயை அமர்த்தி குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இறந்தவர்க்கு உயிர்கொடுக்க முடியாததைத் தவிர, மனிதனால் முடியாதது, நடக்காதது என்று எதுவுமே தற்போது இல்லை. அதனால் குழந்தையில்லாமல் இருக்க வாய்ப்பில்லை என்றாலும், செயற்கைமுறையில் கருத்தரிக்க முயன்ற அனைவருக்கும் வெற்றி கிடைக்காது. ஐந்து பேர் முயன்றால் இரண்டு அல்லது மூன்று பேருக்குதான் வெற்றி கிடைக்கும். பெண்ணின் கருமுட்டையை சீர்செய்ய செயற்கை கருத்தரிப்பு மையங்கள் வழங்கும் ‘"மெட்மோர்மின்'’ என்னும் மாத்திரை இன்சுலின் சுரப்பைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை மாத்திரை, பெண்களை சர்க்கரை நோயாளியாக்கி விடுகிறது. அதனால் மன உளைச்சல், பணவிரயம் ஏற்படுவதுடன், சர்க்கரை நோயும் வந்துவிடும்.

Advertisment

இயற்கைமுறையோ, செயற்கைமுறையோ- பிரபஞ்ச சக்தி அனுமதிக்காமல் உயிரை உருவாக்கமுடியாது. பிரபஞ்ச சக்தியை மிஞ்சிய சக்தி மனிதனுக்கு இருந்தால், செயற்கைக் கருத்தரிப்பு மையத்தை நாடும் எல்லாருக்கும் குழந்தை கிடைக்க வேண்டுமே. அதனால், கொடுக்கும் சக்தி பிரபஞ்சம் எனும் காலபக வானால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில், குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கு பவர்களுக்கு குழந்தை பிறக்குமா? பிறக்காதா என்ற தீர்க்க மான முடிவை ஜோதிடத்தாலும், ஜோதிடர்களாலும் தரமுடியும். நமது மூலநூல்களில் ஆண், பெண்களின் குழந்தை உற்பத்தித் திறனை அறிய பீஜ ஸ்புடம், க்ஷேத்திர ஸ்புடம் என்னும் முறையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

பீஜ கணிதம்

ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன், குரு ஆகிய மூன்று கிரகங்களின் பாகை, கலை, விகலை ஆகியவற்றைக் கூட்டி, 360 டிகிரிக்குமேல் வந்தால், 360-ஆல் கழித்து மீதிவரும் பாகை, கலை, விகலை எந்த ராசியில் வருகிறதோ, அது பீஜ ராசி ஆகும். பீஜ ராசியானது ஆண்களுக்கு ஒற்றைப்படை ராசியாக- அதாவது ஆண் ராசியாக வரவேண்டும்.

அதேமாதிரி நவாம்சத்திலும் ஒற்றைப்படை ராசியாக வரவேண்டும். மேலும் இந்த ராசியை சுபகிரகங்கள் பார்தாலும், ஆண் கிரகங்கள் பார்த்தாலும், இக்கிரகங்கள் பீஜ ராசியில் இருந்தாலும், அந்த ஆணுக்கு குழந் தையை உருவாக்கும் உயிர்ப்பு சக்தி உள்ளது.

க்ஷேத்திர கணிதம்

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சந்திரன், செவ்வாய், குரு ஆகிய மூன்று கிரகங்களின் பாகை, கலை, விகலை ஆகியவற்றைக்கூட்டி, 360-ஆல் கழித்து மீதியுள்ள பாகை, கலை, விகலைகளுக்கு எந்த ராசி வருகிறதோ, அது க்ஷேத்திர ராசி ஆகும். பெண்ணின் ஜாதகத் தில் க்ஷேத்திரமானது இரட்டைப்படை ராசியாக- பெண் ராசியாக வரவேண்டும். அதனை சுபகிரகங்கள் பார்த்தாலும், அந்த பெண்ணின் கர்ப்பப்பை அதிக வலிமை மிக்கது.

குழந்தையை உருவாக்கும் சக்தி நிச்சயம் என அறியலாம்.

பீஜ, க்ஷேத்திர ராசிகளை அலிகிரகங் களாகிய புதனும், சனியும் பார்க்கக் கூடாது. அதேபோல் பீஜ, க்ஷேத்திர ராசிகளுக்கு 5-ல் அலிகிரகங்கள் அமரக்கூடாது.

பீஜம், க்ஷேத்திரம் வலுவிழந்து போனால் அந்த தம்பதிகளுக்கு குழந்தை உற்பத்தி ஆகாது. ஒன்று வலுவாகவும், ஒன்று வலுவில்லாமலும் இருந்தால் தாமதமாக குழந்தை உற்பத்தியாகும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும் காலம்

ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும், பலன்கள் சொல்லும் போதும் "பதவி பூர்வ புண்ணியானாம்' என்ற முக்கியமான சொற்றொடரைச் சொல் வார்கள். அதாவது நம்முடைய இந்தப் பிறவிப் பயன், யோகம், அதிர்ஷ்டம், பாக்கியம், அம்சம் எல்லாம் நம் பூர்வஜென்ம புண்ணி யத்தால் ஏற்பட்ட கர்ம வினைப்படியே அமையும் என்பதாகும். பூர்வ புண்ணியம் 5, 9-ஆம் அதிபதியின் தசாபுக்தியோடு சம்பந் தம்பெற்று, கோட்சார குரு "கிரீன் சிக்னல்' கொடுக்கும் காலமே குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதால், செயற்கைமுறையை நாடுபவர்கள் முறையான ஜோதிட ஆலோசனை பெறுவது உத்தமம்.

சிலருக்கு எந்த முறையிலும் குழந்தை பாக்கியம் கிடைக்காது. ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், குழந்தை பாக்கியம் கிடைப்பது மிகவும் கடினம்.

சுக்கிரனே உயிரணுவை உற்பத்தி செய்பவர். ஜாதகத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந் திருந்தால் அவர்களின் உயிரணுக்களில் உயிர்ப் புத் தன்மை குறைந்த நேரமே இருக்கும். சுக்கிரனும் சந்திரனும் இணைந்திருந்தால் உயிரணுக்கள் மெலிந்து குழந்தையை உருவாக்கும் சக்தியற்றிருக்கும். இதை சரிசெய்ய முடியுமா என்பதை ஆணின் 3-ஆம் பாவகத்தையும் சரிபார்க்க வேண்டும். சில குறிப்பட்ட அடிப்படை விதிகள் 30 சதவிகிதம் சரியாக இருந்தால் கோட்சார, தசாபுக்தி சாதகமாக இருக்கும்போது செயற்கை முறைக்கு முயற்சிக்கலாம்.

இதைப்போலவே பெண்ணின் கருமுட் டையைக் குறிக்கும் கிரகமும் சுக்கிரன்தான். பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இல்லாமல், சூரியன், சந்திரன் சம்பந்தம் பெற்றிருந்தால், கருமுட்டையில் பலம் இருக்காது. கருப்பைக்கு குழந்தையைத் தாங்கும் சக்தி இருக்காது.

சூரியன், சுக்கிரனால் ஏற்படும் பிரச்சினை சூரியன், சுக்கிரன் இணைவால் ஏற்படும் புத்திர பாக்கியக்குறை, தந்தை மற்றும் தந்தை யின் பாட்டன்வழி முன்னோர்களின் ஒன்றுக் குமேற்பட்ட திருமணம், இளம்பெண்களை நயவஞ்சகத்துடன் பழகி ஏமாற்றியது, கு ழந்தையின்மை காரணமாக வாழவந்த பெண்களை வாழவிடாமல் செய்ததால் வந்த தோஷமாகும். இதற்குப் பரிகாரமாக வீட்டில் தை, ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், வீட்டில் பிறந்து, வாழ்ந்து, மறைந்த சுமங்கலிப் பெண்களுக்கு பூஜைசெய்தால் நல்ல பலன் கூடிவரும். புத்திர பாக்கியக்குறையை நிவர்த்திசெய்யும் பரிகாரங்கள்

குல தெய்வ, இஷ்ட தெய்வ, உபாசனா தெய்வ வழிபாடு நற்பலன் தரும்.

காசி, கயா சென்று அங்கே பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்யவேண்டும்.

அந்தணர்களுக்கு உணவு தானம் செய்ய வேண்டும்.

திலஹோமத்தை ராமேஸ்வரம், தேவிபட்டி னத்தில் செய்யவேண்டும்.

கன்றுடன்கூடிய பசுவை தானம் செய்யவேண்டும்.

தஞ்சாவூர் அருகிலுள்ள திருக்கருகாவூர் சென்று முல்லைவனநாதருடன் அருள் பாலிக்கும் கர்ப்பரட்சாம்பிகையை வழிபாடு செய்யலாம்.

சந்தானகோபால ஹோமம் செய்ய குழந்தை பாக்கியம் உண்டாகும்.

சுக்கிரன் பலமிழந்தவர்கள்- சென்னையைச் சேர்ந்தவர்கள் மயிலாப்பூர் கற்பகாம் பாளை வெள்ளிக்கிழமை வழிபாடு செய்ய லாம். மற்ற ஊர்களில் சுக்கிரன் அம்சம் பொருந்திய அம்பிகையை வழிபாடு செய்ய லாம்.

சித்தர்கள் ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை, ஆடை, கல்வி கற்க உதவிசெய்ய வேணடும்.

செல்: 98652 20406