Advertisment

பாதியில் நிற்கும் கட்டிடங்களுக்கான பரிகாரம்!

/idhalgal/balajothidam/remedy-buildings-standing-halfway

ஞ்சபூத ஆற்றல் களை வீட்டிற்குக் கொண்டுவருவதே வாஸ்துவம். வஸ் என்பது வடமொழி சொல். வஸ் என்பது நாம் வஸிக்கும் இடத்தைக் குறிப்பிடுவதாகும்.

Advertisment

மரம், கல், மண், அசையாத பொருள்கொண்டு கட்டடம் கட்டுபவர் ஸ்தபதி ஆவார். பஞ்சபூத ஆற்றலான நீருக்கு வீடு அல்லது கோவிலில் கிணறு, போர், சம்ப் அமைப்போடு தொடர்புள்ளது. நெருப்புக்கு வீட்டின் அடுப்பறை, கோவிலின் மடப்பள்ளியோடு தொடர்புள்ளது. காற்றுக்கு வாயிலின் அமைப்போடும், நிலம், வீடு, கோவிலின் தரை அமைப்போடும் தொடர்புள் ளது. ஆகாயதுக்கும் வீட்டின் மையப் பகுதியோடும்

ஞ்சபூத ஆற்றல் களை வீட்டிற்குக் கொண்டுவருவதே வாஸ்துவம். வஸ் என்பது வடமொழி சொல். வஸ் என்பது நாம் வஸிக்கும் இடத்தைக் குறிப்பிடுவதாகும்.

Advertisment

மரம், கல், மண், அசையாத பொருள்கொண்டு கட்டடம் கட்டுபவர் ஸ்தபதி ஆவார். பஞ்சபூத ஆற்றலான நீருக்கு வீடு அல்லது கோவிலில் கிணறு, போர், சம்ப் அமைப்போடு தொடர்புள்ளது. நெருப்புக்கு வீட்டின் அடுப்பறை, கோவிலின் மடப்பள்ளியோடு தொடர்புள்ளது. காற்றுக்கு வாயிலின் அமைப்போடும், நிலம், வீடு, கோவிலின் தரை அமைப்போடும் தொடர்புள் ளது. ஆகாயதுக்கும் வீட்டின் மையப் பகுதியோடும், கோவிலின் பிரம்ம ஸ்தானத்தோடும் தொடர்புள்ளது.

ss

ஒருசில வீடுகள், நிறுவனங்கள் கட்டிக்கொண்டி ருக்கும்போது பாதியில் நின்றுவிடுவதுண்டு. கட்டடங்கள் கட்டும்போது, கட்டடத்திற்கு மேற்கிலோ தெற்கிலோ மிகப்பெரிய பள்ளங்கள் இருந்தால் பணி பாதியில் நிற்க வாய்ப்புள்ளது. மனையின் பாதுகாப்பிற்காக சுற்றுச்சுவர் எழுப்பி, வருட கணக்கில் கட்டாமல்விட்டு, காலதாமதமாக கட்டடப்பணி ஆரம்பித்தாலும் பணி பாதியில் நிற்கும். மூலைக் குத்தில்லாமல் ஈசான்ய பாகத்தைத் தவிர இதர தவறான இடங்களில் போர், கிணறு அமைத்தாலும் கட்டடங்கள் பாதியில் நிற்கும்.

பாதியில் நின்ற கட்டடங்களுக்கு தெற்கு, மேற்கில், மிகக்குறைந்த அளவில் இடம்விட்டு சுற்றுச்சுவர் எழுப்பி, வீட்டின் அஸ்திவாரம்வரை மண் தரையை உயரப்படுத்தவேண்டும். ஈசான்ய திசையில் பள்ளம் தோண்டி தண்ணீர்விட்டு அதை பயன்படுத்தி மீண்டும் கட்டடம் கட்ட ஆரம்பிக்கவேண்டும். வீட்டிற்கு வடக்கும், கிழக்கும் அதிக காலியிடம்விட்டு சுற்றுச்சுவர் அமைத்தால் நற்பலன் அளிக்கும்.

தவறுதலாக வாயில் அமைத்து, அதனாலும் கட்டடங்கள் பாதியில் நிற்கக் காரணமாக உள்ளது. எனவே வாயிலை மாற்றியமைத்தும் பலன்பெறலாம். இவை மட்டுமல்லாமல் பரிகார பூஜை செய்தும் பாதியில் நின்ற கட்டடத்தை மீண்டும் கட்டத் தொடங்கலாம். திருச்சி மண்ணச்ச நல்லூரிலுள்ள பூமிநாதேஸ்வரரை வணங்கினால் மனையில் உள்ள தோஷம் நீங்கும். செங்கல்பட்டு- பொன்னேரி அருகே சிறுவாபுரியில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமையில் அபிஷேகம் செய்துவழிபட்டால் வீடுகட்டும் யோகம் உண்டாகும். புதுக்கோட்டை குழிப்பிறை- செவலூர் கிராமத்திலுள்ள பூமீஸ்வரரை வணங்கினால் பூமிதோஷம் நீங்கி வீடு கட்டலாம். நன்னிலம் அருகே திருப்புகலூரில் அக்னீஸ்வரரை வழிபட்டு காணிக்கை செலுத்தினால் கோவில் சார்பாக பூஜிக்கப்பட்ட மூன்று செங்கற்கல்லை பிரசாதமாக வழங்குவர். ஆதனை முதல் கல்லாகக்கொண்டு கட்டடம் கட்டினால் வேலை விரைவில் முடியும். நாகர்கோவில்- சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தின் நவகிரகங்களை வழிபட, கட்டி முடிக்க முடியாத வீடுகள் விரைவில் கட்டிமுடிக்கலாம். திருவையாறு- கடுவெளியிலுள்ள ஆகாச புரீஸ்வரர் திருக்கோவிலுக்கு வாஸ்துநாளில் அல்லது செவ்வாய்க்கிழமையில் வெட்டிவேர் தைலத்தில், அத்தர், புனுகு கலந்து தைலக் காப்பிட்டு வழிபட வேண்டும். வானுயர கட்டடங் கள் கட்டுபவருக்கான பரிகாரக் கோவிலாகும்.

செல்: 94434 80585

bala150923
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe