ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 பாதங்களும்; ரோகிணி, மிருகசீரிடம் 1, 2 பாதங்களும் வருகின்றன.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றமும், எதிலும் வெற்றிச் செய்தியைக் கொண்டுவருபவர்களாகவும் இருப்பார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் மந்தமான குணத்துடனும், கணிதம், சாஸ்திரங்களை ஓரளவு கற்றும், தெய்வாலய வழிபாடுகளுடனும் வாழ்வார்கள். இவர்கள் வேடிக்கையாகப் பேசும் குணத்துடன், மற்றவர்களிடம் பிரியமாகப் பழகுவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வீடு சிறக்கும்.
தாய்மாமன் வழிகளை மட்டும் நசுக்கும். (தாய் மாமன் வீடு நசிந்துபோவதைப் பரிகாரம்மூலம் சரிசெய்யலாம்.) மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் தெய்வீக வழிபாடுகளுடன், ஆடை, ஆபரணம், செல்வச் சேர்க்கை பெற்றிருப்பார்கள். தாராள குணத்துடன் செலவு செய்யாமல், பிறர் செலவில் வரும் பலன்களைத் தாங்கள் பெறுவார்கள்.
பொதுவாக ரிஷப ராசிக்காரர்கள் பருத்த உடலும், கம்பீரமான தோற் றத்துடனும் காட்சியளிப்பார்கள். இவர்கள் பிற்காலத்தில் வாகனங்கள், செல்வம், செல்வாக்கு, சரீர சுகங் களுடன் வாழ்வார்கள்.
கார்த்திகை நட்சத்திரத்திற்கு சூரிய தசையும். ரோகிணி நட்சத்திரத்திற்கு சந்திர தசையும், மிருகசீரிட நட்சத் திரத்திற்கு செவ்வாய் தசையும் வரும். எனவேதான் ரிஷப ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரத்தினருக்கும் வேறுபாடுகள் உள்ளன.
பரிகாரம்
கார்த்திகை நட்சத்திரக்காரர் களுக்கு: இவர்கள் ஆதிசேஷனை வணங்கி வரவேண்டும். ஆதிசேஷன் கோவிலுள்ள இடங்களிலெல்லாம் வணங்கலாம். வாழ்வில் ஒருமுறையாவது திருநாகை சென்று அங்குள்ள ஆதிசேஷனை வணங்கிட வேண்டும்.
ரோகிணி நட்சத்திரக்காரர் களுக்கு: நாகநாதசுவாமி கோவில் எங்கெல்லாம் அமைந்திருக்கிறதோ அங்கெல்லாம் சென்று வாழ்க்கை முழுவதும் வணங்கிவரலாம். திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளி யுள்ள நாகநாதசுவாமி கோவிலுக்கு ஒருமுறையாவது சென்றுவர வேண்டும். "தென்றல் புகுந்துலாவும் திருநாகேஸ்வரம்' தலத்தில் எழுந்தருளியுள்ள செண்ப காரண்யேஸ்வரரும் கிரிகுஜாம்பிகை அம்பாளும் நாடிவந்தோருக்கு நல்வழி காட்டுகின்றனர். இத்திருக் கோவிலின் தென்மேற்கு திசையில் எழுந்தருளிருக்கும் ராகுபகவான் தன்னை நாடிவருபவர்களுக்கு அருள்பாலிலித்து தோஷநிவர்த்தி வழங்குவதும் கண்கூடான காட்சியாகும். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்றதும், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரால் கீர்த்தனை இயற்றப்பட்டதும், சோழ மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட பழமைவாய்ந்ததும், பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் பெருமானால் புனருத் தாரணம் செய்யப்பட்டதுமான இத்திருக் கோவிலை தற்போது இந்து சமய அறநி லைய ஆட்சித்துறை நிர்வாகம் செய்துவருகிறது.
ரோகிணி நட்சத்திரக் காரர்கள் பெருமாள் கோவிலுக்குச் சென்று தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து, கோவிலுக்குள் ஓரீடத்தில் தன்னால் இயன்ற வெள்ளியை தாய்மாமன் வீட்டு சீதனமாகக் கொடுத்து, அந்த வெள்ளியை கோவில் உண்டியலில் போட்டுவிட்டு வரவேண்டும். அன்றுமுதல் தாய்மாமன் வீடு சிறப்படையும்.
மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்க்காதேவிக்கு ராகு காலத்தில் எலுமிச் சம்பழ விளக்கேற்றி வணங்குவது சிறப்பு.
துர்க்கை கோவில் எல்லா இடங்களிலும் இருக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழ மையும் அங்குசென்று வணங்கிவரலாம். வாழ்வில் ஒருமுறையாவது கதிராமங்கலம் துர்க்கா தேவியை வணங்கிவர சிறப்பாக வாழலாம்.
செல்: 94871 68174
பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு புஷ்பாஞ்சலி!
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மாதத்தின் முதல் சனிக்கிழமையில் சனி சாந்தி ஹோமம் நடைபெற்று, காலச்சக்கரத்தில் அமைந்துள்ள வன்னி விருட்சத்திற்கு சிறப்புப் பூஜை நடைபெற்றுவருகிறது. இத்தகைய பீடத்தில் சுகப்பிரம்ம ரிஷியின் ஓலைச்சுவடியில் தெரிவித்தவண்ணம் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், ஸ்ரீஜெயமங்கள சனீஸ்வரருக்கும் ஆலயம் அமைத்து விசேஷ பூஜைகள் நடந்துவருகின்றன.
சனி கொடுத்தாலும் சரி; கெடுத்தாலும் சரி... அதை யாராலும் தடுக்க முடியாது. தவறு செய்பவர்களை தண்டிப்பதும், தர்மம் செய்பவர்களைக் காப்பதும் இவருடைய முக்கிய பணியாகும். ராஜாங்கப் பதவிகளில் அமரவைப்பவரும், மரணத்தை மாற்றுபவரும் இவரே. ஆயுள் தோஷத்தை நீக்கி ஆரோக்கியத்தை அளிப்பவரும் சனிபகவானே.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள்வாய்ந்த சனீஸ்வரருக்கு உலகில் எங்கும் இல்லாதவாறு முதன்முறையாக தங்கத்தில் விக்ரகம் அமைத்து, 20 ஷ் 27 என்ற நீள அகலத்தில், 13 படிகள் கொண்டு பாதாளத்தில் பிரத்யேக மண்டபம் பக்தர்கள் வலம்வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி போன்ற சனிகிரக தோஷங்கள் அகலவும், சனி பகவானால் மக்களுக்கு ஏற்படும் பயங்கள் நீங்கி சுபிட்சங்கள் பெருகவும் மேற்கண்ட பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு 19-10-2019 சனிக்கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை விசேஷ பூஜைகளும் புஷ்பாஞ்சலியும் நடைபெறுகின்றன. பக்தர்கள் இதில் பங்கேற்று இறையருள் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு:
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை- 632 513.
வேலூர் மாவட்டம், தொலைபேசி: 04172- 230033, 230274.அலைபேசி: 94433 30203.
Email : [email protected]