12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/remedies-solve-problem-12-laknathar

ன்பம் எப்படியிருக்கும் என்பதை நுகரும் முன்பே, வலி எப்படியிருக்கும் என்பதை உணர்த்திவிடுகிறது வாழ்க்கை. பலரின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

வாழ்நாள் லட்சியத்தை எட்டிப் பிடித்துவிட்டோமென பெருமூச்சு விடுவதற்குள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வலியை வாழ்க்கை பரிசாகத் தருகிறது. சிலருக்கு வாழ்க்கை ஓட்டத்தில் வலிக்கு நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு வலியே வாழ்கையாகிவிடுகிறது.

வாழ்வியலில் ஏற்படும் வலி அனுபவப்பாடமா? அல்லது வாழ்நாள் முழுவதும் ஆறாத ரணமா என்பது அவரவரின் சுய ஜாதகத்தைப் பொருத்தது.ஒருவரின் ஜாதகத்தில் பாதகாதிபதி அமர்ந்த நிலையே பல பிரச்சினைகளுக்கும் காரணமாகவும் அமைகிறது.

ஜாதகத்திலும், பிரசன்னத்திலும் ஒருவருக்கு பலன் சொல்லும் முன்பு, பாதகாதிபதிக்கும், அஷ்டமாதிபதிக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பலன் சொல்லவேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் பாதகாதிபதி வலுப்பெறக் கூடாது. பாதகாதிபதி சுபருடன் சேர்ந்தால் சுபத்தைக் கட்டுப்படுத்துவார்.

அசுபர்களுடன் சேர்ந்தால் அசுபத்தை மிகுதிப்படுத்துவார்.

பாதகாதிபதிகள் அசுப வலிமை பெற்று எந்த பாவகத்தில் நின்றாலும் சுபப் பலன் கிட்டாது. பாதகாதிபதி சுபவலிமை பெற்றால் தசையின் ஆரம்பத்தில் அனைத்து சுபப்பலன்களையும் நடத்தி, தசையின் முடிவில் பெரும் பாதகத்தைச் செய்வார். பாதகாதிபதி அல்லது பாதகத்தில் நின்ற கிரகத்தின் தசை நடந்து, கோட்சார ராகு- கேது சம்பந்தம் பெற்றால், பாதகாதிபதிகள் ஜாதகரை உருத்தெரியாமல் ஆக்கிவிடும். பாதகாதிபதிகள் மற்றும் பாதக ஸ்தானத் தில் நின்ற கிரகங்கள்- அதாவது மரணம் அல்லது மரணத்துக்கு நிகரான துன்பம் இரண்டிலொன்றை வலுப்பெற்ற பாதகாதிபதி நிச்சயம் தனது தசை, புக்திகளில் செய்யாமல் போகாது.

கிரகங்களின் நகர்வின் அடிப்படையில் பன்னிரு லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக நமது ஜோதிட முன்னோடிகள் பிரித்திருக்கி றார்கள்.

சரம்

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு லக்னங்களும் சரத்தில் அடங்கும். சரம் என்பதற்கு வெகு சலனமுடையது எனப் பொருள். சர லக்னத்திற்கு சுபமோ அசுபமோ எளிதில் வந்தடையும்.

ஒருவரின் வாழ்நாளில் சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழிநடத்தும்.வந்த தடமும் இருக்காது; போன சுவடும் தெரியாது. சர லக்னங்களுக்கு 11-ஆம் அதிபதி பாதகத்தைச் செய்வார்.

fff

அதன்படி, மேஷத்திற்கு சனியும், கடகத்திற்கு சுக்கிரனும், துலாத்திற்கு சூரியனும், மகரத்திற்கு செவ்வாயும் பாதகாதிபதிகள்.

சர லக்னத்திற்கு 11-ஆம் அதிபதியான லாபாதிபதியே பாதகாதிபதியாக வருவதால் தொழில், வேலை ஆகியவற்றில் இயல்பாக வரக்கூடிய லாபம் வெகுவாக அடிபடும். நூறு ரூபாய் சம்பாதிக்க ஆயிரம் ரூபாய் செலவுசெய்யும் சூழ்நிலை அல்லது அடிக்கடி பொருளாதார இழப்பு போன்றவை இயற்கையாக அமைந்துவிடும். எனவே, சர லக்னத்தினர் சுய ஜாதக வலிமைக்கேற்ப சுய தொழிலை நடத்த

ன்பம் எப்படியிருக்கும் என்பதை நுகரும் முன்பே, வலி எப்படியிருக்கும் என்பதை உணர்த்திவிடுகிறது வாழ்க்கை. பலரின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

வாழ்நாள் லட்சியத்தை எட்டிப் பிடித்துவிட்டோமென பெருமூச்சு விடுவதற்குள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வலியை வாழ்க்கை பரிசாகத் தருகிறது. சிலருக்கு வாழ்க்கை ஓட்டத்தில் வலிக்கு நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு வலியே வாழ்கையாகிவிடுகிறது.

வாழ்வியலில் ஏற்படும் வலி அனுபவப்பாடமா? அல்லது வாழ்நாள் முழுவதும் ஆறாத ரணமா என்பது அவரவரின் சுய ஜாதகத்தைப் பொருத்தது.ஒருவரின் ஜாதகத்தில் பாதகாதிபதி அமர்ந்த நிலையே பல பிரச்சினைகளுக்கும் காரணமாகவும் அமைகிறது.

ஜாதகத்திலும், பிரசன்னத்திலும் ஒருவருக்கு பலன் சொல்லும் முன்பு, பாதகாதிபதிக்கும், அஷ்டமாதிபதிக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பலன் சொல்லவேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் பாதகாதிபதி வலுப்பெறக் கூடாது. பாதகாதிபதி சுபருடன் சேர்ந்தால் சுபத்தைக் கட்டுப்படுத்துவார்.

அசுபர்களுடன் சேர்ந்தால் அசுபத்தை மிகுதிப்படுத்துவார்.

பாதகாதிபதிகள் அசுப வலிமை பெற்று எந்த பாவகத்தில் நின்றாலும் சுபப் பலன் கிட்டாது. பாதகாதிபதி சுபவலிமை பெற்றால் தசையின் ஆரம்பத்தில் அனைத்து சுபப்பலன்களையும் நடத்தி, தசையின் முடிவில் பெரும் பாதகத்தைச் செய்வார். பாதகாதிபதி அல்லது பாதகத்தில் நின்ற கிரகத்தின் தசை நடந்து, கோட்சார ராகு- கேது சம்பந்தம் பெற்றால், பாதகாதிபதிகள் ஜாதகரை உருத்தெரியாமல் ஆக்கிவிடும். பாதகாதிபதிகள் மற்றும் பாதக ஸ்தானத் தில் நின்ற கிரகங்கள்- அதாவது மரணம் அல்லது மரணத்துக்கு நிகரான துன்பம் இரண்டிலொன்றை வலுப்பெற்ற பாதகாதிபதி நிச்சயம் தனது தசை, புக்திகளில் செய்யாமல் போகாது.

கிரகங்களின் நகர்வின் அடிப்படையில் பன்னிரு லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக நமது ஜோதிட முன்னோடிகள் பிரித்திருக்கி றார்கள்.

சரம்

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு லக்னங்களும் சரத்தில் அடங்கும். சரம் என்பதற்கு வெகு சலனமுடையது எனப் பொருள். சர லக்னத்திற்கு சுபமோ அசுபமோ எளிதில் வந்தடையும்.

ஒருவரின் வாழ்நாளில் சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழிநடத்தும்.வந்த தடமும் இருக்காது; போன சுவடும் தெரியாது. சர லக்னங்களுக்கு 11-ஆம் அதிபதி பாதகத்தைச் செய்வார்.

fff

அதன்படி, மேஷத்திற்கு சனியும், கடகத்திற்கு சுக்கிரனும், துலாத்திற்கு சூரியனும், மகரத்திற்கு செவ்வாயும் பாதகாதிபதிகள்.

சர லக்னத்திற்கு 11-ஆம் அதிபதியான லாபாதிபதியே பாதகாதிபதியாக வருவதால் தொழில், வேலை ஆகியவற்றில் இயல்பாக வரக்கூடிய லாபம் வெகுவாக அடிபடும். நூறு ரூபாய் சம்பாதிக்க ஆயிரம் ரூபாய் செலவுசெய்யும் சூழ்நிலை அல்லது அடிக்கடி பொருளாதார இழப்பு போன்றவை இயற்கையாக அமைந்துவிடும். எனவே, சர லக்னத்தினர் சுய ஜாதக வலிமைக்கேற்ப சுய தொழிலை நடத்துவது நல்லது. சர லக்னங்களுக்கு பாதகாதிபதி வலுத்தால் லாபத்தைக் கொடுத்து, வருமான வரி, விற்பனை வரி சிக்கலில் மாட்டிவிடும்.

ஸ்திரம்

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கும் ஸ்திர லக்னத்தில் அடங்கும். ஸ்திரம் என்பதற்கு சலனமற்றது எனக் கூறலாம். சுபமோ, அசுபமோ எதிர்பாராத விதத்தில் வந்தடையும். வந்தால் நீண்டகாலத்திற்கு நிலையாக இருக்கும். ஏன், வாழ்நாள் முழுவதும்கூட வழிநடத்தும்.

ஸ்திர லக்னங்களுக்கு 9-ஆம் அதிபதி பாதகத்தைச் செய்வார். அதன்படி ரிஷபத்திற்கு சனியும், சிம்மத்திற்கு செவ்வாயும், விருச்சிகத்திற்கு சந்திரனும், கும்பத்திற்கு சுக்கிரனும் பாதகத்தைச் செய்பவர்கள்.

ஸ்திர லக்னங்களுக்கு பாக்கியாதிபதியே பாதகாதிபதியாக இருப்பதால்- பாதகாதிபதி பலமிழந்தால் பாக்கியம் மிகைப்படுத்தலான நன்மைகளை தன் தசாபுக்திக் காலங்களில் வாரிவழங்கும். பாதகாதிபதி பலம்பெற்றால் மிகுதியான அசுபத் தையும், மீளமுடியாத கண்டத் தையும் தருவார்.

ஸ்திர லக்னங்களுக்கு பாதகாதிபதி பலமிழந்தால், தந்தை சமுதாய அங்கீகாரம் பெற்றும், செல்வாக்கு மிகுந்தவராகவும், அதிகாரப் பதவியில் இருப்பவரா கவும் இருப்பார். ஜாதகருக்கு தந்தையின் அன்பும் ஆசியும் நிறைவாக இருக்கும். ஆனால், அதீத சுதந்திரத்தால் ஜாதகர் கெடுவதற்கு தந்தையே காரணமாக இருப்பார். இதிலிருந்து பாதகம் கலந்த பாக்கியத்தையே கொடுப்பார் எனப் புரிந்திருக்கும்.

ஸ்திர லக்னத்திற்கு பாதகாதிபதி வலிமை பெற்றால், தந்தைவழி செல்வம், செல்வாக்கு மிகவும் மோசமான நிலையிலிருக்கும். தந்தையால் பயனற்ற நிலையிருக்கும். ஜாதகர் பிறந்தபிறகு பலபடிகள் கீழே இறங்கிவிடுவார்கள். இளமையில் வறுமை, கல்வித் தடை என சோதனைகள் மாறிமாறி வரும்.பூர்வீகத்தைவிட்டு வெளியேறி வெளியூரில், வெளிநாட்டில் வசிக்கும் நிலை ஏற்படும்.

உபயம்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கும் உபய லக்னத்தில் அடங்கும்.உபய லக்னம் சர, ஸ்திர லக்னங்களின் தன்மைகளை உள்ளடக்கியது.

உபய லக்னத்திற்கு 7-ஆமிடமே பாதக, மாரக, கேந்திர ஸ்தானமாக இருப்பதால், சுபத்தைவிட அசுபமே மிகுதியாக இருக்கும். சுபமோ, அசுபமோ விருந்தினர்போல வரும்; போகும். மீண்டும் வரும்; மீண்டும் போகும். அதன்படி, மிதுனம் மற்றும் கன்னி லக்னங்களுக்கு குரு பாதகத்தைச் செய்வார். தனுசு மற்றும் மீன லக்னங் களுக்கு புதன் பாதகத்தைச் செய்வார்.

உபய லக்னத்திற்கு களத்திராதிபதியே பாதகாதிபதியாக வருவதால், வாழ்க்கைத் துணையால்- வாழ்க்கைத்துணையின் உறவினர் களால் பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு காலம் தாழ்த்தி திருமணம் நடக்கும். சிலருக்கு திருமணமே நடக்காது. நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களால் அதிருப்தியே நிலவும்.

ஆக, மேஷம், ரிஷபத்திற்கு சனியும்; மிதுனம், கன்னிக்கு குருவும்; கடகம், கும்பத்திற்கு சுக்கிரனும்; சிம்மம், மகரத்திற்கு செவ்வாயும்; தனுசு, மீனத்திற்கு புதனும்; துலாமிற்கு சூரியனும்; விருச்சிகத்திற்கு சந்திரனும் பாதகாதிபதியாவார்கள்.

பாதகாதிபதி என்னும் பெயரே, பாதக ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் நடத்தும் பாதகம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்தும். கீழே பன்னிரண்டு பாவகங்களில் பாதகாதிபதிகள் நிற்பதால் ஏற்படும் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் பொதுப் பலன்கள். அதேபோல் , பாதகாதிபதிகள் வாழ்நாள் முழுவதும் பாதகத்தைத் தந்துகொண்டே இருக்க மாட்டார்கள்.

அன்றாடம் சந்திக்கும்- அனுபவித்து வரும் பிரச்சினைகளின் தொகுப்பு.இது. இதுபோன்ற பாதிப்பை சந்திப்பவர்கள் இங்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பரிகாரத்தைக் கடைப்பிடித்து வர, பாதகம் நீங்கி சாதகமாகும்.

பாதகம் வேலை செய்யும் கால கட்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

பாதகாதிபதியால் நன்மை நடைபெற வேண்டுமெனில், பாதகாதிபதி நீசம், அஸ்தங்கம் பெற்று பலம் குறையவேண்டும்.

ஜாதகத்தில் லக்னம், ஐந்து, ஒன்பதாமிடங்கள் வலிமை பெற்றவர் களை பாதக தோஷம் பாதிக்காது.

பாதகாதிபதிக்கு, பாதக ஸ்தானத் திற்கு அல்லது பாதகத்தில் நின்று தசை நடத்தும் கிரகத்திற்கு குரு பார்வை அல்லது லக்ன சுபரின் பார்வை இருந்தால், ஜாதகரை பாதக தோஷம் பாதிப்பதில்லை.

பெரும்பான்மையாக, பாதகாதிபதி, பாதகாதிபதியின் நட்சத்திர சாரம் மற்றும் பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகத்தின் தசை, புக்திக் காலங்களில் மட்டுமே பாதிப்பிருக்கும். மற்ற காலங்களில் பாதிப்பிருக்காது.

பாதகாதிபதிகள் தனது தசாபுக்திக் காலங்களில் நன்மை செய்யும் வாய்ப்பு குறைவு. முதலில் சாதகமாக இருந்தால் முடிவில் பாதகத்தையே தரும் அல்லது பாதகமும் சாதகமும் கலந்தே இருக்கும்.

ஜனன ஜாதகத்தில் பாதகாதிபதி மற்றும் பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகங்களுக்கு ஜனன மற்றும் கோட்சார சனி, ராகு- கேதுக்களின் சம்பந்தம் ஏற்படும்போது அசுப விளைவுகள் ஜாதகரை நிதானமிழக்கச் செய்யும்.

பாதகாதிபதி உச்சம் பெறக்கூடாது. பாதகாதிபதி அல்லது பாதக ஸ்தானத்தில் நிற்கும் கிரகம் சுயசாரம் பெறக்கூடாது.

ஜனன, கோட்சாரரீதியாக அஷ்டமாதிபதி, பாதகாதிபதி இணைவு ஏற்படும் காலங்களில் பாதிப்பிருக்கும்.

குரு பார்வைக்கு பாதகத்தை மட்டுப் படுத்தும் சக்தியுண்டு.

பாதகாதிபதி நின்ற பாவகப் பலன்கள்

லக்னத்தில் பாதகாதிபதி பாதகாதிபதி லக்னத்தில் நின்றால் தோற்றப் பொலிவு குறையும். அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும். புகழ், அந்தஸ்து மற்றும் கௌரவம் மட்டுப்படும். இனம் புரியாத பயவுணர்வு இருந்துகொண்டே இருக்கும். முன்கோபம் மிகுதியாக இருக்கும்.

உள்ளுணர்வின் தூண்டுதல் இருக்காது. தன் நடவடிக்கையால் தனக்குத்தானே பாதகம் செய்துகொள்வார்கள். அவ நம்பிக்கையும், தாழ்வு மனப்பான்மையும் இருக்கும். எல்லாரையும் சந்தேகப்படுவார்கள். கடின முயற்சிக்குப் பிறகே வெற்றி கிட்டும். சோம்பல் மிகுதியாக இருக்கும். சிற்றின்ப நாட்டம் மனதை தீய எண்ணங்களில் வழிநடத்தும். செய்வினை மற்றும் திருஷ்டி தோஷம் எளிதில் தாக்கும்.

எதிர்மறை எண்ணம் அதிகமாக இருக்கும். பூர்வீகத்தில் வாழும் பாக்கியம் குறைவு படும். சிலருக்கு இளம்பருவத்திலேயே தாய்- தந்தையைப் பிரிந்து அல்லது இழந்து வாழும் நிலை ஏற்படும்.

திருமணத்தடை மிகுதியாக இருக்கும் அல்லது தம்பதிகளிடையே ஒற்றுமைக்குறைவு இருக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணையால் வாழ்நாள் முழுவதும் அவமானம் இருக்கும்.

கூட்டுத்தொழில், வாடிக்கையாளர்கள், நண்பர்களால் பயன் இருக்காது. உடலால் அதிகம் உழைக்கநேரும். இவர்களின் இயலாமையை மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவார்கள். மொத்தத்தில் வாழ்க்கை "ஸ்பீடு பிரேக்' இல்லாத வண்டியாக இருக்கும்.

ஜாதகத்தில் லக்னம் வலிமையாக இருந்தால் மட்டுமே, எத்தகைய பாதகமான பிரச்சினையாக இருந்தாலும் எளிதில் மீண்டுவரமுடியும். லக்னத்தில் பாதகாதி இருப்பது சுபித்துச்சொல்லும் பலனல்ல.

பரிகாரம்

அனுபவ அறிவு, தன்னைத்தானே உணரும் சக்தியை அதிகரிக்க யோகாசனம் மிக அவசியம்.

கல்லுப்பு இட்ட நீரில் குளித்துவர எதிர்மறை ஆற்றல் மட்டுப்படும்.

பாதக தோஷத்தால் மிகுதியான

அசுபப் பலனை அனுபவிப்பவர்கள் தினமும் ஆஞ்சனேயர் கோவில் செந்தூரத்தை நெற்றியிலிட்டுவர சுபப் பலன் கிடைக்கும்.

வெள்ளியிலான ஆபரணத்தை உடலில் அணிய, எதிர்மறை சிந்தனை குறைந்து, சிந்தித்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்.

ஜென்ம நட்சத்திர நாளில் துர்க்கை, காளி மற்றும் பிரத்தியங்கரா தேவி போன்ற உக்ர தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடவும்.

இரண்டில் பாதகாதிபதி

இரண்டாமிடமான தன ஸ்தானத் தில் பாதகாதிபதி நின்றால், சிலருக்கு குறுக்குவழியில் பொருள் வரவு இருக்கும். அதிர்ஷ்டக்குறைவு அதிகம் இருக்கும். சிலருக்கு அடிப்படைத் தேவையை நிறைவு செய்யமுடியாத சூழ்நிலையும் ஏற்படும்.

பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை குறைவுபடும். உற்றார்- உறவினர், குடும்ப உறவினர்கள், அண்டை அயலார் மத்தியில் வாக்கால் நிதானமற்ற நிலையும், வம்புவழக்கும் தேடிவரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாது.

குழந்தைகள் காலதாமதமாகப் பேசத் தொடங்குவார்கள் அல்லது சிலருக்கு திக்குவாய் குறைபாடிருக்கும். குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியில் தடை, தாமதமிருக்கும். எடுத்ததற்கெல்லாம் சத்தியம்செய்து சத்திய தோஷத்தை அதிகப்படுத்திக்கொள்வார்கள்.

பார்வைக் குறைபாடிருக்கும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் கண், பல் தொடர்பான பிரச்சினைக்கு வைத்தியம் செய்யநேரும்.

சுபகாரியத் தடையிருக்கும். வாழ்நாளில் பாதியை விரதமிருந்து கழிப்பார்கள். சிலருக்கு நேரத்திற்கு உண்ணமுடியாது.

பெண் ஜாதகத்தில் இரண்டாமிடத்தில் நிற்கும் பாதகாதிபதி எட்டாமிடத்தைப் பார்ப்பதால் கால தாமதத் திருமணம் நடக்கும். ஆண்களுக்கு எட்டாமிடத்திற்கு பாதகாதிபதி சம்பந்தமிருந்தால் அடிக்கடி அறுவை சிகிச்சை நடைபெறும் அல்லது ஆயுளை அச்சுறுத்தும் நோய் தொந்தரவிருக்கும். விரயச் செலவு மிகுதியாக இருக்கும். வாராக்கடன் மற்றும் ஜாமின் கடன் இருக்கும். அடிமைத் தொழிலே சிறப்பு.

பரிகாரம்

மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்திற்கு தனமே ஆதாரம். இரண்டாமிடத்தோடு சம்பந்தம் பெறும் பாதகாதிபதியால் அடிப்படைத் தேவையை நிறைவு செய்வதில் சிரமமிருப்பவர்கள் பச்சைக் கற்பூரம், லவங்கம், ஏலக்காய் மூன்றையும் பச்சைத் துணியில் மடித்து பர்ஸ் அல்லது பீரோவில் வைக்க, பணவரவு அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமை விரதமிருந்து மகாலட்சுமியை வழிபட, தனதானிய விருத்தி ஏற்படும். மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும்.

வாயில்லா ஜீவன்களுக்கு உணவு தானம் வழங்க, சத்திய தோஷம், வாக்கு தோஷம் தீரும்.

ஆயுள் பயமுள்ளவர்கள் சிவ வழி பாட்டைக் கடைப்பிடிக்கவேண்டும்.

மூன்றில் பாதகாதிபதி

நிலையாக ஓரிடத்தில் வசிக்கமுடியாது. அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்யநேரும் அல்லது அலைச்சல் மிகுந்த பயணத்தைத் தரும் வேலை அல்லது தொழில் செய்யநேரும்.

முடிவெடுக்கும் தன்மை குறையும். முறையாக திட்டமிட்டு செயல்படும் தன்மை குறைவுபடும்.

உடன்பிறந்தவர்களால் பாதகம் மிகுதியாக இருக்கும். உடலாலும், மனதாலும் பலவீன உணர்வு மிகுதியாக இருக்கும். தைரியம், வீரம் குறைவுபடும். நினைப்பது ஒன்று, நடப்பது வேறொன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்காது.

சிற்றின்பக் குறைபாடிருக்கும். செவித்திறன் குறைபாடு மற்றும் ஞாபக சக்தி குறையும். காது, மூக்கு, தொண்டைப் பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்வார்கள். இடதுகைப் பழக்கம் அதிகரிக்கும்.

போனில் நெட்வொர்க் பிரச்சினை இருக்கும். அடிக்கடி நெட்வொர்க்கை மாற்றுவார்கள். கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஏடிஎம் கார்டால் பிரச்சினை இருக்கும்.

கமிஷன் அடிப்படையான தொழில், தகவல் தொடர்பு, ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு தொழில்ரீதியான நெருக்கடி இருக்கும் அல்லது அவப்பெயர் மிஞ்சும். உழைப்பவர் இவர்களாக இருந்தால் ஊதியம் பெறுபவர் வேறொருவராக இருப்பார்கள். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். நவீன தகவல் தொடர்பு சாதனங்களான வாட்ஸ் அப், பேஸ் ஃபுக் போன்றவற்றால் வம்பு, வழக்கு வரும்.

தங்க ஆபரணங்களைக் கவனக்குறைவாகக் கையாளுவார்கள். அடிக்கடி கைமறதியாக எங்கேயாவது நகைகளை வைப்பது, தொலைப்பது, திருடப்படுவது போன்றவை இருக்கும். மத நம்பிக்கை குறைவு படும்.பூர்வீகத்தைவிட்டு வெகு தொலைவில் சென்று குடியேறும் நிலையிருக்கும்.

பரிகாரம்

வயது முதிர்ந்த பெரியோர்களுக்கு உணவு, உடை தானம் தந்து, நல்லாசி பெறவேண்டும்.

புரோகிதர்கள், அந்தணர்களுக்கு சனிக்கிழமைகளில் கறுப்பு முழு உளுந்து தானம்தர, உடனடிப் பலன் கிடைக்கும்.

சனிக்கிழமை வன்னிமரத்தை வலம் வரவேண்டும்.

தினமும் சிவபுராணம் படிக்க வேண்டும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406

bala061120
இதையும் படியுங்கள்
Subscribe