12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்! (சென்ற இதழ் தொடர்ச்சி..

/idhalgal/balajothidam/remedies-solve-problem-12-laknathar-continuation-last-issue-0

பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

தனுசு

உபய லக்னம். லக்னாதிபதி குரு. தனுசுக்கு புதனே பாதகாதி பதி, மாரகாதிபதி மற்றும் கேந்திராதிபதி.

இந்த லக்னத்தவரின் ஜாதகத் தில் புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் பாதகத்தைச் செய்வார். குரு வுக்கு புதன் சம கிரகம். ஆனால், புதனுக்கு குரு பகை கிரகம் என்பதால்- குருவின் 5, 9-ஆம் சிறப்புப் பார்வை புதனுக்கு இருந்தால் பாதிக்காது. குரு, புதன் சமசப்தமப் பார்வை இருந் தாலும், புதனுக்கு அஷ்டமாதிபதி சந்திரனின் சம்பந்தமிருந்தாலும், புதனுக்கு ராகு- கேதுக்கள் சம்பந்தமிருந்தாலும் புதன் தசைக் காலத்தில் பாதகம் ஜாதகரை பதம்பார்க்கும். புதன் ஆட்சி, உச்சம்பெற்றால், ஏழாம் அதிபதி ஆட்சி, உச்சம் சுபப் பலன் என்றே பலர் பலன் கூறுகிறார்கள். பாதகாதிபதி ஆட்சி, உச்சம் எனப் பலனு ரைத்து, அதற்குரிய வழிபாட்டு முறைகளைப் பரிந்துரைக் கும்போது பாதகத்தை சாதகமாக்க முடியும்.

ddad

உபய லக்னத்தினருக்கு பாதகாதிபதிகள் வலுப்பெறக் கூடாது. புதன் ஆட்சி, உச்சம் பெற்ற மிதுன லக்னத்தினர் திருமணத்திற்கு பெரிய எதிர்பார்ப்பின்றி வரன் பார்த்தால், திருமணம் சுலபமாக நடைபெறும். திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் அனுசரித்து, விட்டுக்கொடுத்துச் சென்றால் வாழ்நாள் இனிமையாகும்.

புதன், சந்திரன் சம்பந்தமிருக்கும் பல தனுசு லக்னத்தினர் நரம்பு சம்பந்தப்பட்ட நோய், மனநோய் மற்றும் சரும நோயை சந்திக்கிறார்கள். புதன் நீசம், அஸ்தமனம் பெற்ற மிதுன லக்னத்தினர் கமிஷன் அடிப்படையிலான சொந்தத் தொழில் செய்வது சிறப்பான பலன் தரும்.

பரிகாரம்

மதுரை மீனாட்சியம்மனை புதன்கிழமை களில் வழிபடுவது சிறப்பு. குரு, புதனின் சமசப்தமப் பார்வைய

பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

தனுசு

உபய லக்னம். லக்னாதிபதி குரு. தனுசுக்கு புதனே பாதகாதி பதி, மாரகாதிபதி மற்றும் கேந்திராதிபதி.

இந்த லக்னத்தவரின் ஜாதகத் தில் புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் பாதகத்தைச் செய்வார். குரு வுக்கு புதன் சம கிரகம். ஆனால், புதனுக்கு குரு பகை கிரகம் என்பதால்- குருவின் 5, 9-ஆம் சிறப்புப் பார்வை புதனுக்கு இருந்தால் பாதிக்காது. குரு, புதன் சமசப்தமப் பார்வை இருந் தாலும், புதனுக்கு அஷ்டமாதிபதி சந்திரனின் சம்பந்தமிருந்தாலும், புதனுக்கு ராகு- கேதுக்கள் சம்பந்தமிருந்தாலும் புதன் தசைக் காலத்தில் பாதகம் ஜாதகரை பதம்பார்க்கும். புதன் ஆட்சி, உச்சம்பெற்றால், ஏழாம் அதிபதி ஆட்சி, உச்சம் சுபப் பலன் என்றே பலர் பலன் கூறுகிறார்கள். பாதகாதிபதி ஆட்சி, உச்சம் எனப் பலனு ரைத்து, அதற்குரிய வழிபாட்டு முறைகளைப் பரிந்துரைக் கும்போது பாதகத்தை சாதகமாக்க முடியும்.

ddad

உபய லக்னத்தினருக்கு பாதகாதிபதிகள் வலுப்பெறக் கூடாது. புதன் ஆட்சி, உச்சம் பெற்ற மிதுன லக்னத்தினர் திருமணத்திற்கு பெரிய எதிர்பார்ப்பின்றி வரன் பார்த்தால், திருமணம் சுலபமாக நடைபெறும். திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் அனுசரித்து, விட்டுக்கொடுத்துச் சென்றால் வாழ்நாள் இனிமையாகும்.

புதன், சந்திரன் சம்பந்தமிருக்கும் பல தனுசு லக்னத்தினர் நரம்பு சம்பந்தப்பட்ட நோய், மனநோய் மற்றும் சரும நோயை சந்திக்கிறார்கள். புதன் நீசம், அஸ்தமனம் பெற்ற மிதுன லக்னத்தினர் கமிஷன் அடிப்படையிலான சொந்தத் தொழில் செய்வது சிறப்பான பலன் தரும்.

பரிகாரம்

மதுரை மீனாட்சியம்மனை புதன்கிழமை களில் வழிபடுவது சிறப்பு. குரு, புதனின் சமசப்தமப் பார்வையால் திருமணத்தடையை சந்திக்கும் தனுசு லக்னத்தினர் வியாழக்கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரையான குரு ஓரையில் ஆலமரத்தடியில் அமர்ந்து பிரார்த்தனை செய்தால் காரிய சித்தி கிட்டும்.

மகரம்

லக்னாதிபதி சனி. சர லக்னம். பதினொன் றாமிடம் பாதக ஸ்தானம். பாதகாதிபதி செவ்வாய். அஷ்டமாதிபதி சூரியனுக்கு பாதகாதிபதி செவ்வாயின் சம்பந்தம் எவ்வகையில் இருந்தாலும், சூரியன், செவ்வாய் தசைக் காலங்களில் பாதிப்பு உறுதி. உத்தியோகத் தடை, உத்தியோக உயர்வில் தடை, தொழில் முடக்கம், கடன்தொல்லைகளால் பாதிப்பு ஏற்படும். செவ்வாய்க்கு சனி, ராகு- கேது சம்பந்தமிருந்தால் பாதிப்பு இரட்டிப்பாகும். லக்னாதிபதி சனிக்கு சூரியன் சம்பந்தமிருந்தாலும் பாதிப்பிருக்கும். மேலும், மகரம் சர லக்னம் என்பதால், பாதிப்பு ஏற்பட்டாலும் நிலைமை வெகு விரைவில் சீராகும்.

பரிகாரம்

முருகனே குருவாக இருந்து தந்தைக்கு பிரணவ மந்திரம் உபதேசம் செய்த சுவாமிமலை முருகனை வணங்குங்கள். சிவப்பு நிற ஸ்வஸ்திக் சின்னத்தை சட்டைப் பை அல்லது பர்ஸில் வைத்துக் கொண்டால் துன்பங்கள் விலகும். தொட்டது துலங்கும்.

கும்பம்

கும்பம் ஸ்திர லக்னம். ராசி அதிபதி சனி. பாதகாதிபதி சுக்கிரன். சனியும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்பதால் கும்பத்திற்கு பாதக தோஷம் பாதிப்பைத் தராது கும்பம் காலபுருஷ பாதக ஸ்தானம் என்பதால், மீனத் தில் சுக்கிரன் உச்சம் பெறும் கோட்சார காலங்களில் பாதகம் பாதிப்பைத் தரும். பாதகாதிபதி சுக்கிரனுக்கும் அஷ்டமாதி பதி புதனுக்கும் சம்பந்தமி இருந்தாலும், ராகு- கேதுக்கள் சம்பந்தமிருந்தாலும் சுக்கிர தசை மற்றும் புக்திக் காலங்களில் பாதகம் பாதிப்பைத் தரும். மிகக்குறிப்பாக, தந்தைக்கு உடல்நலக் குறைவு, தந்தையுடன் கருத்து வேறுபாடு, சுபப் பலன்கள் நடப்பதில் தடை, விரும்பமில்லாத இடப்பெயர்ச்சி ஏற்படும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். மேலும், கும்பம் ஸ்திர லக்னம் என்பதால் சாதகமும் பாதகமும் கலந்தே நடக்கும்.

பரிகாரம்

சென்னை, மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலில் விற்றிருக்கும் கற்பகாம்பாளை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டுவர சுபப் பலன் தேடிவரும். வெள்ளிக்கிழமை நெய் தீபமேற்றி மகாலட்சுமி அஷ்டோத்திரம் படித்துவர பாதக தோஷம் விலகும்.

மீனம்

காலபுருஷ பன்னிரண்டாமிடம். இதன் அதிபதி குரு. மீனம் உபய லக்னம். பாதகாதிபதி புதன். இவரே கேந்திராதிபதி பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதியாவார். மீனத்தில் உச்சம் பெறும் கிரகம் சுக்கிரன். நீசம் பெறும் கிரகம் புதன். பாதக ஸ்தானமான கன்னியில் புதன் உச்சம் பெறுகி றார். சுக்கிரன் நீசம் பெறுகிறார். புதன் புத்தி அறிவுக்கு காரககிரகமாகும். சுக்கிரன் ஆசைக்கு காரக கிரகமாகும் புத்தி தெளிந்த இடத்தில் காமத்திற்கு இடமில்லை. அளவில்லாத ஆசையே மனிதர்களின் துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்த்துகிறது. லக்னம் மற்றும் பாதக ஸ்தானம் இரண்டுமே உபய லக்னம் என்பதால் தம்பதிகளிடையே புரிதலின்மை மிகுதியாக இருக்கும். லக்னத்தில் சுக்கிரன் உச்சம் பெறுவதால் கணவனுக்கு அழகு, ஆடம்பரம் மற்றும் இல்வாழ்க்கை நாட்டம் மிகுதியாக இருக்கும். ஏழாமிடத்தில் சுக்கிரன் நீசம் பெறுவதால் மனைவி எளிமையாகவும் கணவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை குறைந்தவராகவும் இருப்பார். லக்னத் தில் புதன் நீசம் பெறுவதால் கணவனுக்கு முடிவெடுக்கும் திறன், திட்டமிட்டு செயல் படும் தன்மை, புத்திக் கூர்மை, கல்வி அறிவின்மை போன்ற குறைபாடுகள் இருக்கும். ஏழில் புதன் உச்சம் பெறுவதால் மனைவிக்கு கல்வி அறிவு, எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை, திட்டமிட்டு செயல்படும் புத்திக் கூர்மை, சிறப்பான முடிவெடுக்கும் திறன் இருக்கும்.தம்பதிகளுக்கு வாழ்க்கைத் துணையைப் பற்றிய எதிர்பார்ப்பு, மனக் கற்பனை அதிகம் இருக்கும். ஒருவரின் எதிர்பார்ப்பை மற்றவர் புரிந்து கொள்ளாமல் இருப்பது தம்பதிகளுக்குள் இணக்கமற்ற மனநிலையை உருவாக்கும்.லக்னத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றவர்களுக்கும், புதன் நீசம் பெற்றவர்களுக்கு கால தாமத திருமணம் அல்லது திருமண மற்ற நிலை இருக்கும். அதேபோல் மீன லக்னம் கால புருஷ பன்னிரன்டாமிடம் என்பதால் அடிக்கடி கால், பாதம் தொடர்பான உடல் உபாதைகள் இருக்கும். மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பல விதமான கஷ்டங்களும் பிரச்சினைகளும் இருக்கும். ஒருவருக்கு இருக்கும் பிரச்சனை கஷ்டம் மற்றொருவருக்கு இருப்பதில்லை. ஏதோ உலகத்தில் நாம் தான் கஷ்டப்படுகிறோம் மற்றவர்கள் எல்லாம் நன்றாக தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள் மனிதனாய் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் கஷ்டம், பிரச்சனை இருக்கும். அது மற்றவர் களுக்கு தெரிய வாய்ப்பில்லை அவ்வளவு தான். மனிதர்களுக்கு கஷ்டம், பிரச்சனை வருவதற்கு காரணம் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிட பாதிப்பும் முன் ஜென்ம முன்னோர்கள் வழி சாபம் மற்றும் கோபத்திற்கு காரணமான ஒன்பதாமிட பாதிப்புமே காரணம். வாழ்வில் தடை, போட்டி, பொறாமை தீராத கஷ்டம், குடும்பத்தில் சண்டை, வருமானம் இல்லாமை போன்ற பல்வேறு விதமான பிரச்சனையை மட்டுமே எதிர்கொண்டு வாழும் சூழ்நிலை போன்றவைகளுக்கு கர்ம வினைகள் தான் காரணம். வினைப் பதிவுகளே தோஷங்களாக மாறி ஒருவரின் ஜனன ஜாதகத்தில் கிரகங்களாக அமர்கின்றன. மனிதர்கள் வாழ்க்கையில் நிம்மதி இழக்கும் போது இறைவனை நாடுகிறார் கள். மனம் அமைதியை தேடும் போது ஆன்மீகத்தை நாடுகின்றனர். தன்னுள் இருக்கும் ஆன்மாவே இறைவன், ஆன்மீகம் என்பதை உணராமல் எதிர்மறையான எண்ணங்களை தனது ஆன்மாவில் புகுத்தி விடுகிறார்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் நம்மால் மீண்டு வர முடியும் என்ற நேர்மறையான எண்ணம் வலுப்பெரும்போது எதிர்மறை எண்ணங்கள் வலுவிலக்கும். சொல், செயல் அத்தனையும் நேர்மறையாக இருக்க வேண்டும். நான் நன்றாக உள்ளேன், நான் நலமாக உள்ளேன், நான் செல்வ செழிப்பாக உள்ளேன் எனது உழைப்பு உயர்வான நிலையை எனக்கு தந்து கொண்டு இருக்கின்றது என்ற நேர்மறை எண்ணத்தை ஆன்மாவிடம் புகுத்தும் போது எந்த கிரக தோஷமும் எளிதில் அண்டாது. உங்கள் தேவைகளை, ஆசைகளை பிரபஞ்சத்திடம் ஆத்மார்த்தமாக பதிவிடும் போது அனைத்து விருப்பங்களும் பிரபஞ்சத்தால் நிச்சயம் நிறைவேற்றப் படும். உங்கள் தேவைகள் நடந்ததும் பிரபஞ்ச சக்திக்கு நன்றி சொல்ல வேண்டும். தினமும் அன்றைய நல்ல நிகழ்வுகளுக்கு பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். அசுப நிகழ்வுகளை உடனே மறக்க வேண்டும்.இவ்வாறு ஆத்மார்த்தமாக பிரபஞ்சத்துடன் ஒன்றும் போது மனிதர்களால் அடைய முடியாத வெற்றியே கிடையாது. பல வெற்றியாளர்கள் மற்றும் சாதனை மனிதர்கள் வாழ்வில் கடைபிடித்து வரும் அனுபவ உண்மை. உங்கள் வாழ்க்கையில் இதை செயல் படுத்தி வெற்றி மேல் வெற்றி பெற பிரபஞ்சத்திடம் மண்டியிடுகிறேன்.

செல்: 98652 20406

bala041220
இதையும் படியுங்கள்
Subscribe