கர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள்! - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/remedies-solve-karma-and-make-things-successful

பூமியில் ஜனனமாகும் அனைத்து உயிர்களும் பிறக்கும்போது கர்மபந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்துவருகின்றன. அதேபோல், பூமியைவிட்டுச் செல்லும்போதும் கர்மபந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்துச்செல்ல முடியும். பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவிலுள்ள இடைப்பட்ட காலத்தில் மட்டுமே கர்மவினையைக் களைந்து கர்மபந்தத்தை அதிகரிக்கச்செய்ய முடியும்.

ஒரு மனிதனுக்கு வினை அதிகரித்தாலும் குறைந்தாலும், தன்னுடைய கர்மப் பதிவில் தொடர்புடைய உயிர், பொருள் காரகத்துவங்களிடம் மட்டுமே வாழ்நாள் இருக்கும். பூமியில் கோடிக்கணக்கானவர்கள் வாழ்ந்தாலும் ஒருவருடைய கர்மப் பதிவில் சில குறிப்பிட்ட உறவு கள், நட்புகள் பழக்கத்தில் இருக்கும். மனிதர்களைச் சுற்றியுள்ள பொருள் காரகத்துவங்களைத் தேர்ந்தெடுத்து அனுபவிக்கும் உரிமையைத் தந்த பிரபஞ்சம், ஏன் உயிர் காரகத்துவங்களான தாய்- தந்தை, சகோதரர்- சகோதரி, மனைவி- கணவன், பிள்ளைகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை யாருக்கும் வழங்கவில்லை?

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் கர்மாவோடு தொடர்புடைய உறவுகளால் ஒன்றை நாம் பெற்றுக்கொள்கிறோம் அல்லது இழக்கிறோம். இந்த கர்மாவின் தொடர்ச்சியில் சில உறவுகள் கர்மபந்தமாகின் றன. பல உறவுகள் கர்மவினையாகின்றன. அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். சிலசமயங்களில் ஏமாற்றப் படுகிறோம். பலசமயங்களில் ஏமாற்றுகி றோம். சிலருக்கு நல்லது செய்கிறோம்.

பலரிடமிருந்து அளவுக்கதிகமாக நன்மை களைப் பெற்றுக்கொள்கிறோம். இந்த கொடுக்கல்- வாங்கலே "ருணபந்தம்' எனப் படுகிறது. ருணம் என்றால் கடன். பொருள் கடன் மட்டுமல்ல; ஒருவரிடமிருந்து பெற்ற அன்பும் உதவியும்கூட கடன்தான்.

ஒருவரிடம் பெற்ற உதவி மற்றும் அன்புக்கு பிரதி உபகாரம் செய்யாமல் இருந்தால், ருணபந்தம் கர்மவினையாக மாறி ஜனனகால ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாமிடம் பலமிழக்கும். ஒருவரிடம் பெற்ற உதவிக்கு பிரதி உபகாரம் செய்தவர்களுக்கு பிறவிக்கடன் நீங்கி, ருணபந்தம் கர்ம பந்தமாகி ஜனனகால ஜாதகத்தில் ஐந்தாமிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம் சுப வலிமை பெறும்.

கர்மாவுக்கான காரக கிரகம் சனி பகவான். ஒருவருடைய வாழ்நாள் கர்மபந்தமா? கர்மவினையா என்பதை ஜனன ஜாதகத்தில் சனி பகவான் நின்ற நிலையை வைத்தே உணரமுடியும். சனி பகவான் பெயரைக் கேட்டாலே தொட்டிலில் தூங்கும் குழந்தைமுதல் வாழ்நாளை எண்ணும் முதியவர்வரை பயம்தான். நியாயவாதியான அவர்- படித்தவர்- படிக்காதவர், ஏழை- பணக்காரர் என்ற எந்தப் பாகுபாடுமின்றி, பூர்வஜென்ம புண்ணியத்திற்கேற்ப சுப- அசுபப் பலனை வழங்குவார் என்பது நாம் அறிந்

பூமியில் ஜனனமாகும் அனைத்து உயிர்களும் பிறக்கும்போது கர்மபந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்துவருகின்றன. அதேபோல், பூமியைவிட்டுச் செல்லும்போதும் கர்மபந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்துச்செல்ல முடியும். பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவிலுள்ள இடைப்பட்ட காலத்தில் மட்டுமே கர்மவினையைக் களைந்து கர்மபந்தத்தை அதிகரிக்கச்செய்ய முடியும்.

ஒரு மனிதனுக்கு வினை அதிகரித்தாலும் குறைந்தாலும், தன்னுடைய கர்மப் பதிவில் தொடர்புடைய உயிர், பொருள் காரகத்துவங்களிடம் மட்டுமே வாழ்நாள் இருக்கும். பூமியில் கோடிக்கணக்கானவர்கள் வாழ்ந்தாலும் ஒருவருடைய கர்மப் பதிவில் சில குறிப்பிட்ட உறவு கள், நட்புகள் பழக்கத்தில் இருக்கும். மனிதர்களைச் சுற்றியுள்ள பொருள் காரகத்துவங்களைத் தேர்ந்தெடுத்து அனுபவிக்கும் உரிமையைத் தந்த பிரபஞ்சம், ஏன் உயிர் காரகத்துவங்களான தாய்- தந்தை, சகோதரர்- சகோதரி, மனைவி- கணவன், பிள்ளைகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை யாருக்கும் வழங்கவில்லை?

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் கர்மாவோடு தொடர்புடைய உறவுகளால் ஒன்றை நாம் பெற்றுக்கொள்கிறோம் அல்லது இழக்கிறோம். இந்த கர்மாவின் தொடர்ச்சியில் சில உறவுகள் கர்மபந்தமாகின் றன. பல உறவுகள் கர்மவினையாகின்றன. அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். சிலசமயங்களில் ஏமாற்றப் படுகிறோம். பலசமயங்களில் ஏமாற்றுகி றோம். சிலருக்கு நல்லது செய்கிறோம்.

பலரிடமிருந்து அளவுக்கதிகமாக நன்மை களைப் பெற்றுக்கொள்கிறோம். இந்த கொடுக்கல்- வாங்கலே "ருணபந்தம்' எனப் படுகிறது. ருணம் என்றால் கடன். பொருள் கடன் மட்டுமல்ல; ஒருவரிடமிருந்து பெற்ற அன்பும் உதவியும்கூட கடன்தான்.

ஒருவரிடம் பெற்ற உதவி மற்றும் அன்புக்கு பிரதி உபகாரம் செய்யாமல் இருந்தால், ருணபந்தம் கர்மவினையாக மாறி ஜனனகால ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாமிடம் பலமிழக்கும். ஒருவரிடம் பெற்ற உதவிக்கு பிரதி உபகாரம் செய்தவர்களுக்கு பிறவிக்கடன் நீங்கி, ருணபந்தம் கர்ம பந்தமாகி ஜனனகால ஜாதகத்தில் ஐந்தாமிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம் சுப வலிமை பெறும்.

கர்மாவுக்கான காரக கிரகம் சனி பகவான். ஒருவருடைய வாழ்நாள் கர்மபந்தமா? கர்மவினையா என்பதை ஜனன ஜாதகத்தில் சனி பகவான் நின்ற நிலையை வைத்தே உணரமுடியும். சனி பகவான் பெயரைக் கேட்டாலே தொட்டிலில் தூங்கும் குழந்தைமுதல் வாழ்நாளை எண்ணும் முதியவர்வரை பயம்தான். நியாயவாதியான அவர்- படித்தவர்- படிக்காதவர், ஏழை- பணக்காரர் என்ற எந்தப் பாகுபாடுமின்றி, பூர்வஜென்ம புண்ணியத்திற்கேற்ப சுப- அசுபப் பலனை வழங்குவார் என்பது நாம் அறிந்ததே.

ஜனன ஜாதகத்தில் சனி பகவான் தான் நின்ற பாவகத்திற்கேற்ப சுப- அசுபப் பலன்களை ஜாதகருக்குத் தந்து, வாழ்க்கைத் தத்துவத்தைப் புரியவைப்பார். ஜனன ஜாதகத்தில் சனி பகவான் நின்ற, பார்த்த பாவகத்தின்மூலமே கர்மபந்தம் அல்லது கர்மவினை அதிகரிக்கும் அல்லது குறையும். ஒருவர், தான் அடையும் நற்பலன்களை பயபக்தியுடன், அதீத எதிர்பார்ப்பின்றி , நன்றியுணர்வுடன் அமைதியாகவும், எளிமையாகவும் பயன்படுத்தினால், அந்த பாவகப் பலனால் கர்மபந்தத்தை அனுபவிக்கச் செய்வார். சனி நின்ற பாவகப் பலனை ஆர்ப்பாட்டத்துடன் பயன்படுத்தி, பெருமை பாராட்டி, அதன்மூலம் அடுத்தவரின் பொறாமையையும், ஏக்கத்தையும் தூண்டினால், அந்த பாவகப் பலனைப் பறித்து கர்மவினையை அதிகப்படுத்துவார். இதன்மூலம் சனி நின்ற பாவகப் பலனை (உயிர், பொருள்) எளிமையாகவும், ரகசியமாகவும், அமைதியாகவும், நன்றியுடனும் ஆர்ப்பாட்டமில்லாமல், எந்தளவுக்கு அமைதியாகப் பயன்படுத்துகிறோமோ அந்தளவுக்கு நன்மை தருவார். துன்பமற்ற வாழ்வு தருவார். வாழ்நாள் முழுவதும் கர்மபந்தத்தை அனுபவிக்கமுடியும்.

ஒருவர் வாழ்வதற்கும், வீழ்வதற்கும் சனி பகவானே காரணம். இதை நாம் அனுபவத்தில் உணர்ந்தும் இருப்போம். பரம்பரைப் பணக்காரர்கள் பலர் எளிமையான ஆடை யணிந்து, சிவபக்தியுடன் தானதர்மம் செய்து, நன்றியுணர்வுடன் கர்மபந்தத்தை அனுபவிப்பதைப் பார்த்திருக்கிறோம்.

அதேசமயத்தில் நேற்றுபெய்த மழையில் இன்று முளைத்த காளானான புதிய பணக்காரர்கள் பலர் ஆடம்பரமான, பகட்டான உடையுடுத்தி, லௌகீகத்திலுள்ள அனைத்து தவறான செயல்களுக்கும் அடிமையாகி, குறுகிய காலத்தில், இருந்த இடம் தெரியாமல் கர்மவினையை அனுபவித்து அழிந்துபோவதையும் பார்த்திருக்கிறோம்.

சனி நின்ற பாவகப் பலனை எவ்வாறு எளிமையாகப் பயன்படுத்தி, ருணபந்தம் நீங்கி, கர்மபந்தத்தை அதிகரிப்பதெனக் காணலாம்.

லக்னத்தில் சனி

ஜென்ம லக்னத் தில் சனி இருப்ப வர்கள் பிறர் உதவியை எதிர்பார்க்கக் கூடாது. கோப உணர் வைக் கட்டுப்படுத்த வேண்டும். அதிகாரத்தைத் தவறா கப் பயன்படுத்தி பிறரின் மனதை நோகடிக்கக்கூடாது. தான் சொல்வதைத் தான் அனைவரும் கேட்கவேண்டும் என்னும் எண்ணத்தை நீக்கவேண்டும்.

தன் நடவடிக்கையால் ஆணவமில்லாமல், ஆடம்பர ஆடையணியாமல் எளிமையாக இருந்தால், சமுதாயத்தில் உயர்ந்த பதவியில் உட்காரவைத்து அழகு பார்ப்பார். உலக அரங்கில் அங்கீகாரம் கிடைக்கச் செய்வார். பட்டங்களும் பதக்கங்களும் பாராட்டும் கிடைக்கச் செய்வார். உற்றார்- உறவினர் களின் உறவு கர்மபந்தமாக வாழ்நாள் முழுவதும் தித்திக்கும்.

இரண்டில் சனி

நீதி, நியாயம் பற்றிய சிந்தனையில்லாமல், தகாத வார்த்தைகள் பேசி குடும்ப உறுப்பினர் களின் மனதை நோகடிக்கக்கூடாது. பொய்களை உண்மைபோல் பேசக்கூடாது. தேவையில்லாமல் சத்தியம் செய்யக்கூடாது. தனது பொருளாதாரத்தை அடுத்தவர் கண்டு ஏங்குமளவுக்கு ஆடம்பரமாக பகட்டுடன் நடந்து, வினைப்பதிவை மிகுதியாக்கக்கூடாது. குடும்ப உறுப்பினர் களிடம் பொய்பேசாமல், அன்பான வார்த்தைகளைப் பேசி தானதர்மத்தில் ஈடுபட, குடும்ப வாழ்க்கை கர்மபந்தமாகும்.

மூன்றில் சனி

மூன்றாமிடத்தில் சனி இருப்பவர்கள், இளைய சகோதரத் தின் மந்தத் தன்மை யைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தக்கூடாது. தனது இளைய சகோதர- சகோதரி களிடம் எவ்வித எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாது.

அவர்களுக்குச் செய்த உதவியைப் பிரதானப் படுத்தாமலிருந்தால் கர்மபந்தம் நீடிக்கும். தனது வீரதீரச் செயல்களையும், தனது முயற்சியால் அடைந்த வெற்றி யையும் யாருக்கும் தெரியாமல் எளிமையாக, அமைதியாகப் பயன்படுத்தினால் தொடர் வெற்றியால் உயர்வுண்டு.

நான்கில் சனி

பொதுவாக, நான்கில் சனி இருப்பவர் களுக்கு வீடு, பூமி, சொத்து போன்றவற் றால் மட்டுமே கர்மவினை அதிகரிக்கும். தாய்வழிச் சொத்தைப் பாரபட்சமின்றிப் பிரித்துப் பயன்படுத்தவேண்டும். தாய் மற்றும் தாய்வழி உறவினர்களின் உணர்வு களைப் புரிந்துகொள்ள வேண்டும். தனது வீடு, வாகனம், நிலம், தோப்பு மற்றும் சொத்துசுகப் பட்டியலை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். பழைய வீடு, வாகனத்தை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

புதிய சொத்துசுகத்தால் பயனற்ற நிலை யுண்டாகும். தனது சொத்துகளை மனைவி அல்லது குழந்தைகளின்மேல் பதிவுசெய்ய வேண்டும். செய்யவேண்டிய கடமைகளை எந்த எதிர்பார்ப்புமின்றி ஆத்மார்த்தமாகச் செய்பவர்களுக்கு, நான்காமிட சனியால் ஏற்படும் கர்மவினை குறைந்து சுபப் பலன் கிட்டும். கறவை நின்ற மாடுகளை விற்கக்கூடாது. தேவைக்கு நண்பர்களைப் பயன்படுத்தி காரியம் முடிந்தவுடன் நண்பர்களைக் கைகழுவக் கூடாது.

ff

ஐந்தில் சனி

லக்னத்திற்கு ஐந்தில் சனி இருப்பவர்கள், பூர்வீக சொத்து மற்றும் தன் வாரிசுகளுக்காக ஏதாவது திட்டமிட்டு, தொடர்ந்து தீராத மனவுளைச்சலை அனுபவிப்பார்கள். வாரிசுகளால் அவமானப்படுவார்கள். பூர்வீகச் சொத்தைப் பயன்படுத்தி முன்னேறத் தீட்டிய திட்டத்தாலும் வாரிசுகளாலும் கர்மவினையை அனுபவிப்பார்கள். இவர்கள் தன் பெயரில் இருக்கும் தாத்தாவின் சொத்தை, தன் வாரிசுகளின் பெயருக்கு மாற்றம்செய்து பயன்படுத்தினால், கர்மவினை நீங்கி குழந்தைகள் மற்றும் பூர்வீக சொத்துகளால் ஏற்பட்ட போராட்டமான வாழ்க்கை நீங்கி கர்மபந்தம் உருவாகும்.

ஆறில் சனி

லக்னத்திற்கு ஆறில் சனி இருப்பவர்கள், பூர்வ புண்ணிய ஸ்தான வலிமைக் குறைவால் வாயுத்தொல்லை, வாதம், எலும்பு, நரம்பு சம்பந்தமான தீராத நோய், பெயர் தெரியாத நோய், முன்னோர்களின் பரம்பரை நோயால் கர்மவினையை அனுபவிப்பார்கள். கர்மவினைத் தாக்க மிகுதியால் வறுமை, கவலை, வழக்கு, சிக்கல், சண்டை, சச்சரவு, எதிரித்தொல்லை இருந்துகொண்டே இருக்கும். வேலையாட்களால் வஞ்சிக்கப் படுதல் மற்றும் மதிப்பு, மரியாதைக் குறைவால் கர்மவினையை அனுபவிக்கநேரும். ஜென்ம நட்சத்திர நாளில் தாய்மாமனிடம் ஆசிபெற, மேற்கூறிய பிரச்சினைகள் குறைந்து சுபப் பலன் மிகுதியாகும்.

ஏழில் சனி

லக்னத்திற்கு ஏழில் சனி இருப்பவர்கள் களத்திரத்தின்மேல் அதீத எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். ஆணாக இருந்தால், தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்கவேண்டுமென நூறு "மணல்கயிறு' கண்டிஷன் போடுவார். பெண்ணாக இருந்தால், வரப்போகும் மாப்பிள்ளைக்கு இன்டர்வியூ வைப்பார். வாழ்நாளில் பாதியைக் கடந்தபிறகு, விதிமேல் பழிபோட்டு, கிடைத்த வாழ்க்கையை மனக் குறையுடன் வாழ்வார்கள் அல்லது தனது குலத்திற்கு விரோதமான திருமண பந்தத்தை ஏற்படுத்தி கர்மவினையை அனுபவிப்பார்கள். இவர்களுக்கு நண்பர்கள், கூட்டுத்தொழிலால் பிரச்சினை இருக்கும்.

எவ்வித எதிர்பார்ப்புமின்றி, கிடைத்த மண வாழ்க்கையைப் பெற்றோரின் நல்லாசியுடன் நடத்தும்போது கர்மபந்தம் வந்துசேரும்.

எட்டில் சனி

லக்னத்திற்கு எட்டாமிடத்தில் சனி பகவான் இருப்பவர்களுக்கு "நித்திய கண்டம் பூரண ஆயுள்'. வறட்டு கௌரவம், பிடிவாதத்தால் உறவினர்களிடமிருந்து விலகியிருப்பார். பந்துக்களின் ஆதரவிருக்காது. தீய பழக்கவழக்கத்தால் வாழ்நாள் முழுவதும் மருந்து உட்கொள்ளவேண்டிய நோய் அல்லது எளிதில் குணமாகாத நோய் இருக்கும். கர்மவினையின் தாக்கம் மிகுதியாக இருக்கும்.

முன்னோர்கள் வழிபாட்டை முறைப் படுத்தினால் விதிப்பயன் நீங்கும்.

ஒன்பதில் சனி

லக்னத்திற்கு ஒன்பதில் சனி பகவான் இருப்பவர்கள், நிறைந்த கல்வி, சமுதாய ஒழுக்கம், நிர்வாகத்திறன், பிறரை அனுசரித்துச் செல்லுதல் போன்ற உயர்ந்த பண்புகள் நிறைந்திருந்தாலும், பொன், பொருளை பிறருக்குக் கொடுத்து, வாழ்க்கையை இழந்து கர்மவினையை அனுபவிப்பார்கள். இல்லறத் துறவி. .ஆசை, பாசம் போன்ற உணர்வுக்குறைவால் இனத் தாரை வெறுத்து ஒதுக்கி கர்மவினையை அதிகரிப்பார்கள்.

அதீத நற்பலன் கிடைக்க, பிறருக்குப் பயன்தரும் தர்மதானம் செய்ய கர்மபந்தம் ஏற்படும்.

பத்தில் சனி

லக்னத்திற்கு பத்தில் சனி இருப்பவர்கள் முன்னோர்களின் பரம்பரைத் தொழில் ஆர்வம் மிகுந்தவர்கள். தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர்களின் நல்லாசியால் கர்மபந்தத்தை அனுபவிப்பவர்கள். கடின உழைப்பு, சிக்கன நடவடிக்கை, தவறாத நீதிநெறி, தன்மானம் காத்தல் போன்ற நற்குணங்களால் தன் வாரிசுகளுக்கு புண்ணியப் பலன்களை மிகுதிப்படுத்தி கர்மபந்தத்தை அனுபவிப்பவர்கள்.

பதினொன்றில் சனி

அரசுப் பதவி, அரசு வெகுமதி, வீடு, வாகன யோகம், குலத்தொழில், உயர்ந்த அந்தஸ்து, தீர்க்காயுள், சலிக்காத உழைப்பு, தைரியம் போன்றவற்றால் முழுமையான கர்மபந்தம் நீடிக்கும். மூத்த சகோதரம், பங்காளிகள் பூர்வீக சொத்துப் பிரச்சினையால் கர்மவினையை அதிகரித்துக் கொள்வார்கள்.

முறையான சொத்துப் பங்கீடு, மூத்த சகோதரத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதன்மூலம் கர்மபந்தத்தை அதிகரிக்கமுடியும்.

பன்னிரண்டில் சனி

பன்னிரண்டில் சனி இருப்பவர்களுக்குக் குறைந்த செயல்திறன், தயக்கம், சோம்பல், தன்னம்பிக்கைக் குறைவு, மறதி, பணப்பற்றாக்குறை போன்றவற்றால் அதிக நட்டங்களையும், இழப்புகளையும் சந்திப்பதன்மூலம் கர்மவினை மிகுதியாக இருக்கும். சிறைத் தண்டனை அல்லது வெளிநாட்டு வாழ்க்கையால் குடும்ப உறவைப் பிரிந்து கர்மவினையை சந்திக்கநேரும். வீட்டில் வேலை பார்க்கும் வேலையாட்கள், முகம்தெரியாத மூன்றாம் நபர்கள், முன்பின் அறியாதவர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் என ஏதாவதொரு ரூபத்தில் மன உளைச்சல் இருந்துகொண்டே இருக்கும். நிம்மதியான தூக்கம் இருக்காது.

உடல் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற தானம், தர்மம்செய்ய கர்மவினைத் தாக்கம் குறைந்து கர்மபந்தம் அதிகரிக்கும்.

பரிகாரம்

பொதுவாக, சனி நின்ற பாவகத்தின்மூலம் கர்மவினையே மிகுதியாக இருக்கும். நியாயம், தர்மம், பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனை தோன்ற ஆரம்பித்தவுடனே கர்மபந்தம் செயல்படத் துவங்கிவிடும். மிகுதியான கர்மவினைத் தாக்கத்தைக் குறைக்க உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்க்க வேண்டும்.

கறுப்பு உளுந்து தானம் தரவேண்டும்.

தினமும் திருக்கோளறு பதிகம் பாராயணம் செய்யவேண்டும் அல்லது ஒலிக்கச்செய்து கேட்கவேண்டும்.

அரசு மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு உணவு தானம்செய்ய வேண்டும்.

எத்தகைய கிரக தோஷமானாலும், தினமும் சுந்தர காண்டத்தில் ஓர் அத்தியாயம் பாராயணம் செய்வது மிகமிக நன்மை தரும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளையில் காலபைரவரை வணங்கிவரவும்.

சனிப் பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.

அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.

சித்தர்களின் பீடங்கள், ஜீவசமாதிப் பீடங்களுக்குச் சென்று வழிபடலாம்.

உடல் ஊனமுற்றவர்கள், விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.

மன சஞ்சலத்திலிருந்து விடுபட விநாயகரை தினமும் 21 முறை வலம் வரவேண்டும்.

சனிக்கிழமை அரச மரத்தடியில் தீபமேற்றி வழிபடவும்.

வீட்டில் பயன்படாத பழைய பேட்டரி, துணிகள், கடிகாரம், செருப்புகள் ஆகிய வற்றை நீக்கவும்.

செல்: 98652 20406

bala250920
இதையும் படியுங்கள்
Subscribe