சிம்ம ராசியில் மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதங்கள் உள்ளன. இந்த ராசியில் ஆவணி மாதம் சூரியன் ஆட்சியாக விளங்குவார். எனவே இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்த வர்கள் பல விஷயங்களில் சிறந்து விளங்குவார்கள்.
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் தகப்பனார் இருப்பது அரிது. தாயாரிடம் அதிகப் பற்றுள்ள வர்கள். சிவந்த மேனி, வாக்குவண்மை, தைரியம் நிறைந்த வர்கள். சாஸ்திர ஆராய்ச்சியில் தேர்ச்சியடைவார்கள். வேதங்களில் பற்றுதல் இருக்கும். இவர்களில் பலரது மணவாழ்க்கை சரியாக அமையாது. (ஏனெனில் உறவுக் காரப் பெண்ணையோ, ஆணையோ "இவள்தான் பெண்; இவர்தான் மாப்பிள்ளை' என்று பேசி வைத்திருப்பார்கள். கடைசியில் இருவரும் மாறிவிடுவார்கள். தன் விருப்பப்படி திருமணம் செய்துகொள்வார்கள்.) பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். பிரபலமாக விளங்குவார்கள். உன்னதப் பதவியில் செல்வம், செல்வாக்குடன் இருப்பார்கள். மூன்றாவது சுற்றாக அஷ்டமத்துச் சனி வரும்பொழுது, பாதிப்பு ஏற்படுத்தும்.
"குணம் நாடி குற்றமும் நாடி அதனில் மிகை நாடி மிக்க கொளல்' என்று திருவள்ளுவர் சொல்லியதற்கிணங்க, அர்த் தாஷ்டமச் சனியின்போது குணமும் குற்றமும் அளந்து பார்த்து அதற்குத் தகுந்தாற்போல் தண்டனையைக் கொடுத்துவிடுவார். எனவே இவர்கள் தில்லைக்காளியம்மன் கோவிலுக்கு அடிக்கடி சென்றுவந்தால் சிறப்பான வாழ்க்கை அமையும்.
பூர நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் சிவனருளைப் பெற்றிருப்பார்கள். அதிகமாக உணவுண்பார்கள். வியாதிகள் ஏற்பட்டாலும் உடனே குணமாகும். தொழிலில் ஊக்கத் துடன் இருப்பார்கள். தன் அந்தஸ்துக்குக் குறைவாக இருப்பவர்களுடன் அலட்சிய மாக நடந்துகொள்வார்கள். சிலர் எப்போதும் கோபமாகவும், படபடப்புடனும் செயல்படு வார்கள். இவர்களுக்கு தாய், தந்தையர்மீது பற்றுதல் அதிகம்.
திருமணமானவுடன் பெரும் பாலும் ஐந்து ஆண்டுகள் கழித்து தந்தை மறைந்துவிடுவார். தாயுடன் இருப்பார்கள். ஆண்- பெண் இருபாலருக்கும் தாய்- தந்தை பார்த்துவைக்கும் திருமணமே நடக்கும். புத்திர பாக்கியம் உண்டு.
உத்திரம் 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். தாய்- தந்தையரைப் பேணிக் காப்பார்கள். அண்டினோரை ஆதரிப்பார்கள். பெரும்பாலும் வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் வாழ்வார்கள். எவ்வளவுதான் நன்றாக வேலை செய்தாலும் மற்றவர்கள் இவர்களை நல்லவர்கள் எனச் சொல்லமாட்டார்கள். இவர்கள் அதற்காக அஞ்சவும் மாட்டார்கள். எது சரியென்று படுகிறதோ அதனைச் செய்துவிடுவார்கள்.
பரிகாரங்கள்
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிதம்பரத்திலுள்ள தில்லைக்காளியம்மனை ஒருமுறையேனும் வணங்கிவரவேண்டும். இவர்கள் கேது தசையில் பிறந்தவர்கள் என்பதால் பிரம்மஹத்தி தோஷம் கண்டிப்பாக இருக்கும். எனவே ஆண், பெண் இருபாலரும் பிரம்மஹத்தி தோஷநிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் எல்லா நாட்களிலும் காலை 7.00 முதல் 9.00 மணிக்குள் தோஷநிவர்த்தி செய்வதுண்டு.
பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒருமுறையேனும் திருமணஞ்சேரி சென்று, அங்குள்ள ராகு பகவானை வணங்கிவரவேண்டும். திருச்செந்தூர் சென்றுவந்தால் திருப்புமுனை ஏற்படும். எனவே வாழ்வில் ஒருமுறையேனும் திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்துவர உயர்வடையலாம்.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூவனூர் சென்று வாஞ்சியம்மனை வணங் கிவர வேண்டும். அல்லது உங்கள் ஊரிலுள்ள அம்மன் கோவிலை வணங்கிவர செல்வாக்கு உயரும். உங்கள் ஜாதகத்தை நல்ல ஜோதிடரிடம் காண்பித்து பிரம்மஹத்தி தோஷம் இருக்கிறதென்றால் அதற்கான நிவர்த்தியைச் செய்துகொள்ளவேண்டும்.
செல்: 94871 68174