இராமாவதாரத்தில், வானர இனத்தில் சூரியனின் அம்சமாக வாலி பிறந்தான். இந்திரனின் அம்சத்துடன் அவன் தம்பி சுக்ரீவன் பிறந்தான். இராமனின் மனைவி சீதையைக் கண்டுபிடிக்க உதவுகிறேன் என்று சுக்ரீவன் கூறியதால், இராமன் ஏழு மராமரங்களுக்குப் பின்னால் மறைந் திருந்து, அம்பெய்து வாலியைக் கொன்றார். வானரங்களுக்கு அரசனாக சுக்ரீவனுக்கு முடிசூட்டினார்.
இந்திரன், தன் மகன் வாலியை இராமன் கொன்றதை அறிந்து, இராமனிடம் "என் மகன் வாலி உனக்கு எந்த தீமைகளையும் செய்யவில் லையே, அவனைக் கொன்று கொலை பாவத்தைத் தேடிக்கொண்டாயே இராமா'' என்றான். அதற்கு இராமன், "வாலியை மறைந்திருந்து கொன்று போர் தர்மத்தை மீறிவிட்டேன். இதனால் எனக்கு நீ கூறியபடி கொலை செய்த பாலம் உண்டானது உண்மைதான்.
இந்திரனே, நான் செய்த இந்த பாவத்திற்கு இந்தப் பிறவியில் என்னால் நிவர்த்திப் பரிகாரம் செய்யமுடியாது. எனது அடுத்த பிறவியில், என்னையும் ஒருவன் ம
இராமாவதாரத்தில், வானர இனத்தில் சூரியனின் அம்சமாக வாலி பிறந்தான். இந்திரனின் அம்சத்துடன் அவன் தம்பி சுக்ரீவன் பிறந்தான். இராமனின் மனைவி சீதையைக் கண்டுபிடிக்க உதவுகிறேன் என்று சுக்ரீவன் கூறியதால், இராமன் ஏழு மராமரங்களுக்குப் பின்னால் மறைந் திருந்து, அம்பெய்து வாலியைக் கொன்றார். வானரங்களுக்கு அரசனாக சுக்ரீவனுக்கு முடிசூட்டினார்.
இந்திரன், தன் மகன் வாலியை இராமன் கொன்றதை அறிந்து, இராமனிடம் "என் மகன் வாலி உனக்கு எந்த தீமைகளையும் செய்யவில் லையே, அவனைக் கொன்று கொலை பாவத்தைத் தேடிக்கொண்டாயே இராமா'' என்றான். அதற்கு இராமன், "வாலியை மறைந்திருந்து கொன்று போர் தர்மத்தை மீறிவிட்டேன். இதனால் எனக்கு நீ கூறியபடி கொலை செய்த பாலம் உண்டானது உண்மைதான்.
இந்திரனே, நான் செய்த இந்த பாவத்திற்கு இந்தப் பிறவியில் என்னால் நிவர்த்திப் பரிகாரம் செய்யமுடியாது. எனது அடுத்த பிறவியில், என்னையும் ஒருவன் மறைந்திருந்து, இதேபோல் அம்பினால் தாக்கிக் கொல்வான். இந்தப் பிறவியில் செய்த பாவத்திற்கு அடுத்த பிறவியில் தான் அதற்குரிய தண்டனையை அடையமுடியும்.
இந்திரனே, இன்று நான் உன் மகன் வாலியைக் கொன்ற பாவத்திற் குப் பரிகாரமாக, எனது அடுத்த அவதாரத்தில் உனது அம்சமாகப் பிறக் கும் மகனுக்குத் துணையாக இருந்து, அவனையும், அவன் உடன்பிறப்பு களையும் என் ஆயுள் உள்ளவனரக் காப்பாற்றுவேன்'' என்று இந்திரனுக்கு வாக்கு கொடுத்தார். கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணர் இறந்தபிறகு தான் பாண்டவர்கள் ஐந்து பேரும், திரௌபதியும் இறந்தார்கள்.
இராமன், இந்திரனுக்குக் கூறியதன்மூலம் ஒரு விதித்தன்மையின் உண்மையைப் புரிந்துகொள்ளமுடிகின்றது. இப்பிறவியில் ஒருவன் மற்றொருவனைக் கொலை செய்தால், அடுத்த பிறவியில் கொலை செய்யப்பட்டவனாலேயே அவன் கொலை செய்யப்படுவான். முற்பிறவியில் ஒருவன் செய்த நன்மை- தீமைகளின் அடிப்படையிலேயே அவனது அடுத்த பிறவி வாழ்க்கைப் பலன் நிர்ணயிக்கப்படுகிறது என்பதே கிருஷ்ணர் கூறும் பிறப்பின் தத்துவம்.
இராமாவதாரத்தில் ஒரே தாய்க்கு வாலியும் சுக்ரீவனும் மகன்களாகப் பிறந்ததுபோல், கிருஷ்ணாவதாரத்தில் பாண்டு மன்னன் மனைவியான குந்திதேவிக்கு, சூரியனின் அம்சமான கர்ணன் (சுக்ரீவன்) அண்ணனாக வும், இந்திரனின் அம்சமாக அர்ஜுனன் (வாலி) தம்பியாகவும் பிறந்தார் கள். இருவருக்கும் தந்தை வெவ்வேறு நபர்களானாலும், ஒரே தாய்க்கு இருவரும் பிறந்தார்கள்.
இராமாவதாரத்தில், இராமன் இந்திரனுக்குக் கொடுத்த வாக்குப்படி, கிருஷ்ணாவதா ரத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக் குத் தோழனாக, வழிகாட்டி யாக இருந்து, பாண்டவர் களுக்கு கஷ்டங்கள் ஏற்பட்ட போதெல்லாம் உறுதுணையாக இருந்து காப்பாற்றினார். போர்க்களத்தில் அர்ஜுனன் மூலமே அண்ணனான கர்ண னைக் கொல்லச் செய்தார். இந்திர னுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். இராமாவதாரத் தில் அண்ணன் வாலி கொல்லப் படுவதற்கு சுக்ரீவன் காரணமானதால், அடுத்த பிறவியில் சுக்ரீவன் அண்ணனாகப் பிறந்து, இந்திரகுமாரன் தம்பி அர்ஜுன னால் கொல்லப்பட்டான்.
இந்த நிகழ்வுமூலம் ஒரு உண்மையை கிருஷ்ணர் நமக்கு போதிக்கிறார். முற்பிறவியில் தன் சகோதர, சகோதரிகளுக்கு முறை யாக சொத்துகளைப் பிரித்துக் கொடுக்காமல், அவர்களை வீட்டைவிட்டு துரத்திக் கஷ்டப் படச் செய்து சகோதர சாபத் தைப் பெற்றால், இப்பிறவியில் அதற்கு தண்டனையாக, தனக்கு நியாயமான சொத்துகள் கிடைக்காமல், தன் குடும்பத் தாரால் ஒதுக்கப்படுவான்.
முற்பிறவியில் மூத்தவனாகப் பிறந்து, தனது தம்பியின் சொத்து களை அபகரித்து, தம்பியை கஷ்டப்படச் செய்தவன் இப் பிறவியில் தம்பி அண்ணனாக வும், அண்ணன் தம்பியாக வும் ஒரே தாய்க்குப் பிறந்து, இவனுக்குரிய சொத்துகளைத் தராமல் அண்ணனாகப் பிறந்த தம்பி அனுபவிப்பான்.
முற்பிறவியில் தம்பியாகப் பிறந்து, உடன்பிறந்த அண்ண னுக்கு சொத்தினைத் தராமல் ஏமாற்றியிருந்தால், இப்பிறவி யில் அண்ணன் தம்பியாகவும், தம்பி அண்ணனாகவும் பிறப் பார்கள். இவனுக்குரிய சொத் தினைத் தராமல் தம்பியே அனுபவிப்பான்.
இப்பிறவியில் தனது குடும்பத்து உறவுகளுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ செய்யும் பாவங்களுக்கு உண் டான தண்டனைகளை இப் பிறவியில் அனுபவிக்க மாட்டான். அடுத்த பிறவியில் தான் அனுபவிப்பான். இன்றைய நாளில், பொய் சொல்லி பிறரை ஏமாற்றி, அடுத்தவர் நிலத்தை அபகரித்து, லஞ்சம் பெற்று வாழும் அரசு அதிகாரிகள், அரசியவாதிகள், மதம், சாதி, இனம், கடவுள் எனக் கூறி மக்களை ஏமாற்றி சுகமாக வாழ்பவர்கள், அடுத்த பிறவியில் தான் இந்த பாவங்களுக்கு உண்டான தண்டனையை அனுபவிப் பார்கள் என்பதை கிருஷ்ண ரின் வரலாறுமூலம் அறிந்து கொள்வோம்.
கிருஷ்ணரின் வாழ்வில் உண்டான இன்னும் ஒரு பாவ- சாபத்தையும், இதற்கு கிருஷ் ணர் செய்த நிவர்த்திகளை யும் அடுத்து அறிவோம்.
(தொடரும்)
செல்: 99441 13267