Advertisment

கர்மவினை தீர கண்ணன் காட்டிய பரிகாரங்கள்!(26) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்)

/idhalgal/balajothidam/remedies-shown-by-kannan-remove-karma26

ண்களுக்குத் தொடரும் ஊழ்வினைத் தாக்கம்போல், பெண்களுக்கும் பிறவிகளில் தொடர்ந்து பாதிப்புகளைத் தரும்.

Advertisment

மனித இனத்தில் ஆண்- பெண் என்று இரண்டு பிரிவாகப் பிறக் கிறார்கள். இருபாலரும் இணைந்து இந்த பூமியில் மனித இன விருத் தியை உண்டாக்குகிறார்கள். ஆண்- பெண் இருவருக்கும் ஆன்மாவின் நிலை ஒன்றுபோல்தான் அமைந் திருக்கும்.

Advertisment

ஆண்களுக்குள்ள ஆசை, பாசம், பற்று, கோபம், பொறாமை, பகை, பசி, தாகம், நோய், உணர்ச்சிகள், செயல்திறமை, எல்லாவற்றையும் அனுபவிக்கும் உரிமை என அனைத்தும் ஆண்களைப்போல் பெண்களுக்கும் உண்டு. ஆனால் வம்ச விருத்திக்கு மூலமான விந்தின் வளர்ச்சி ஆண்களிடம் இரண்டு மாதமும், பெண்களின் கர்ப்பத்தில் பத்து மாத காலமுமாக இருக்கும்.

பஞ்சமா பாவங்கள் எனக்கூறப் படும் பித்ரு சாபம், புத்திர தோஷம், சகோதர சாபம், பெண் (தாய்) சாபம், களத்திர ச

ண்களுக்குத் தொடரும் ஊழ்வினைத் தாக்கம்போல், பெண்களுக்கும் பிறவிகளில் தொடர்ந்து பாதிப்புகளைத் தரும்.

Advertisment

மனித இனத்தில் ஆண்- பெண் என்று இரண்டு பிரிவாகப் பிறக் கிறார்கள். இருபாலரும் இணைந்து இந்த பூமியில் மனித இன விருத் தியை உண்டாக்குகிறார்கள். ஆண்- பெண் இருவருக்கும் ஆன்மாவின் நிலை ஒன்றுபோல்தான் அமைந் திருக்கும்.

Advertisment

ஆண்களுக்குள்ள ஆசை, பாசம், பற்று, கோபம், பொறாமை, பகை, பசி, தாகம், நோய், உணர்ச்சிகள், செயல்திறமை, எல்லாவற்றையும் அனுபவிக்கும் உரிமை என அனைத்தும் ஆண்களைப்போல் பெண்களுக்கும் உண்டு. ஆனால் வம்ச விருத்திக்கு மூலமான விந்தின் வளர்ச்சி ஆண்களிடம் இரண்டு மாதமும், பெண்களின் கர்ப்பத்தில் பத்து மாத காலமுமாக இருக்கும்.

பஞ்சமா பாவங்கள் எனக்கூறப் படும் பித்ரு சாபம், புத்திர தோஷம், சகோதர சாபம், பெண் (தாய்) சாபம், களத்திர சாபம் என்ற இந்த ஐந்து விதமான சாபங்கள் ஆண் களின் வாழ்க்கையில் பாதிப்பைத் தருவதுபோல், பெண்களின் வாழ்க்கையிலும் பாதிப்பைத் தரும். ஒரு பெண் தன் குடும்ப உறவு களுக்குச் செய்யும் தீமைகளால், பாவ- சாப- தோஷ பாதிப்பினை அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவிப் பாள். அவர்களின் முற்பிறவி கர்மவினைப் பதிவுகளால்தான், பெண்களும் இந்த பூமியில் பல பிறவிகள் பிறந்து வாழ்கிறார்கள். கர்மவினைப் பதிவு ஆண்- பெண், பேதமின்றி இருபாலரையும் தாக்கும்.

விவசாய வயலில், நெல் விதைகளை ஓரிடத்தில் விதைத்து, நாற்றுப் பயிராக வளர்ந்தவு டன், அந்த நெல் நாற்றுகளை வேறொரு நிலத்தில் வளர்த்துப் பலன் பெறுவது போல், பெண்களின் வாழ்க்கை இரு நிலைகளில் அமைந்துள்ளது.

பெண்கள் பிறந்து வளர்வது ஓரிடம், பெற்ற தாய்- தந்தையால் வளர்க்கப்பட்டு, அவள் பருவம் அடைந்தவுடன் பெற்றவர் களே வேறொரு ஆணிற்குத் திருமணம் செய்துகொடுத்து, அனுப்பிவிடுகிறார்கள்.

parigaram

அந்தப் பெண் தனது தாய்- தந்தை, சகோதரர் கள் என அனைத்து உறவுகளையும் துறந்து, தான் மணம்முடித்துச் செல்லும் வீட்டில் கணவனுடனும், அவள் குடும்பத்தாருடனும் வாழ்க்கையைத் தொடங்குகிறாள்.

ஒரு பெண் திருமணம் முடித்து, கணவன் வீடு சென்றபின்பு, கணவனின் குடும்பத்தைத் தனது குடும்பமாகவும், கணவனின் உறவினர் களைத் தன் உறவாகவும்கொண்டு, குடும்பப் பொறுப்பினை ஏற்று, தன் கணவன் வம்சம் விளங்க வாரிசுகளைப் பெற்றெடுத்து, குடும்ப வாழ்வில் உண்டாகும் நன்மை- தீமைகளில் பங்குகொண்டு, தன்வாழ்வின் இறுதிவரையில் குடும்பத் தலைவியாக வாழ்கிறாள்.

பெண்ணின் திருமணத்திற்குப்பின்பு அவளின் மாமனார்- மாமியார், இவளை மருமகள் என்ற பெயரில் மற்றொரு மகளாக- பெறாமல் பெற்றமகளாக சகல உரிமை களையும் தந்து, தாங்கள் சம்பாதித்த வீடு, நிலம், சொத்துகள் என அனைத்திலும் உரிமை, பாத்தியதை தந்துவிடுகிறார்கள். பிறந்த வீட்டில் இல்லாத அனைத்து உரிமைகளும், அவள் கணவன் வீட்டில் கிடைக்கிறது.

பெண்களின் திருமணத்திற்குப்பிறகு கணவனின் பெற்றோரே அவளுக்கு தாய்- தந்தையாகிறார்கள். பெற்றவர்களைப்போல் மதித்துக் காப்பாற்ற வேண்டிய மாமனார்- மாமியாரை மதிக்காமல், வயது முதிர்ந்த காலத்தில் அவர்களின் தேவைகளையறிந்து, பேணிக் காப்பாற்றாமல், அவர்கள் பசியும், பட்டினியுமாய் உணவை எதிர்பார்த்துக் காத்திருக்க, தானும், தன் கணவன், குழந்தை களுடன், அறுசுவை உணவை உண்டு வாழும் மருமகளுக்கு பித்ரு தோஷம், தாய் சாபம் உண்டாகும்.

கணவனின் வயது முதிர்ந்த பெற்றோரை கவனியாமல், தங்களுடன் வைத்துக்காப்பாற் றாமல், அவர்களை ஒரு சுமையாகக் கருதி, அவர்கள் உழைத்து, சம்பாதித்துக் கட்டிய வீட்டைவிட்டு வெளியேற்றுவது, முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவது, அவர்கள் சம்பாதித்து, சேர்த்துவைத்த சொத்துகளை முதுமைக் காலத்தில் அவர்களை அனுபவிக்க விடாமல் அபகரித்துக் கொள்வது போன்ற இன்னும் பல கொடுமைகளைச் செய்யும் மருமகள்களுக்கு பித்ரு சாபம் உண்டாகும்.

வயது முதிர்ந்த மாமனார்- மாமியாரை, வீட்டைவிட்டு வெளியேற்றாமல், வீட்டி லேயே வைத்துக்கொண்டு, அவர்களை எதிரி போல் பாவித்து, அவர்கள் சுதந்திரமாக, இயல்பாக இருக்கவிடாமல், வேலைக்காரர் களாக எண்ணி வேலை செய்யவைத்து கொடுமை செய்யும் பெண்களுக்கு மாம னார்- மாமியார் மனம் வெறுத்துவிட்ட வாக்கு பித்ரு துவேஷத்தை உண்டாக்கி வைத்துவிடும்.

மாமனார்- மாமியாருடன் கூட்டுக் குடும்பமாக வாழாமல், தன் கணவனைப் பிரித்து அழைத்துக்கொண்டு தனிக் குடித்தனம் செல்லும் பெண்களுக்கு, தாய்- தந்தையையும் அவர்கள் பெற்ற மகனையும் பிரித்துவைத்ததால் பித்ரு சோக பாதிப்பு உண்டாகும்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala240323
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe