Advertisment

கர்மவினை தீர கண்ணன் காட்டிய பரிகாரங்கள்! - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/remedies-shown-by-kannan-get-rid-karma-siddhardasan-sunderji-jeevanadi

கிருஷ்ணாவதாரம் பற்றிக் கூறிவரும் பராசரரை நோக்கி மைத்ரேயர் கேட்கிறார்:

மகரிஷியே, கிருஷ்ணர் இந்த அவதாரத்தில் எங்கே பிறக்கவேண்டும்- யாருடன் எங்கே வசிக்கவேண்டும் என்று தானே தீர்மானித்துதான் பிறந்தார் என்று கூறினீர்கள். இவர் ஒரு அரச குடும்பத்திலோ அல்லது பெரிய செல்வந்தர் குடும்பத்திலோ பிறந்து, சுகமாக வாழவேண்டுமென்று எண்ணிப் பிறக் காமல், காட்டில் மாடுகளை மேய்த்து, காய், கனிகளை உண்டு, மழை, வெயிலி-ல் அலைந்து கஷ்டப்பட்டு வாழும் இடையர்கள் குடும்பத்தில் வாழ திட்டமிட்டு வளர்ந்தது ஏன்?''

Advertisment

"மைத்ரேயரே, மிகவும் அருமையாகக் கேட்டீர். இதற்கு நான்கூறும் பதிலில் உங்களின் முந்தைய கேள்விக்கும் விடை கிடைக்கும். அன்றாடம் மாடு மேய்த்து உணவுதேடி வாழும் குடும்பத்தில் வாழவேண்டுமென்று தீர்மானித்து, ஆயர்பாடி ஆயர்களுடன் வாழ்ந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. முதலில் இடையனாக வாழ்வதற்கு எந்த சாபம் காரணமானது என்பதைக் கூறுகின்றேன்.

Advertisment

ff

தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபின்பு,

கிருஷ்ணாவதாரம் பற்றிக் கூறிவரும் பராசரரை நோக்கி மைத்ரேயர் கேட்கிறார்:

மகரிஷியே, கிருஷ்ணர் இந்த அவதாரத்தில் எங்கே பிறக்கவேண்டும்- யாருடன் எங்கே வசிக்கவேண்டும் என்று தானே தீர்மானித்துதான் பிறந்தார் என்று கூறினீர்கள். இவர் ஒரு அரச குடும்பத்திலோ அல்லது பெரிய செல்வந்தர் குடும்பத்திலோ பிறந்து, சுகமாக வாழவேண்டுமென்று எண்ணிப் பிறக் காமல், காட்டில் மாடுகளை மேய்த்து, காய், கனிகளை உண்டு, மழை, வெயிலி-ல் அலைந்து கஷ்டப்பட்டு வாழும் இடையர்கள் குடும்பத்தில் வாழ திட்டமிட்டு வளர்ந்தது ஏன்?''

Advertisment

"மைத்ரேயரே, மிகவும் அருமையாகக் கேட்டீர். இதற்கு நான்கூறும் பதிலில் உங்களின் முந்தைய கேள்விக்கும் விடை கிடைக்கும். அன்றாடம் மாடு மேய்த்து உணவுதேடி வாழும் குடும்பத்தில் வாழவேண்டுமென்று தீர்மானித்து, ஆயர்பாடி ஆயர்களுடன் வாழ்ந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. முதலில் இடையனாக வாழ்வதற்கு எந்த சாபம் காரணமானது என்பதைக் கூறுகின்றேன்.

Advertisment

ff

தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபின்பு, மகாவிஷ்ணு அழகிய பெண்ணாக மோகினி அவதாரமெடுத்து, அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் தேவர்கள் மட்டும் அமிர்தத்தை குடிக்கச் செய்தார். அமிர்தம் எடுக்க அசுரர்களும்தான் உழைத்தார்கள். ஆனால் அவர்கள் உழைப்பிற்குக் கொடுக்கவேண்டிய கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றியதால், பாமர சாபம் பகவானை பற்றிக்கொண்டது.''

"பராசரரே, பாமர சாப தோஷம் என்னவிதமான பாதிப்புகளைத் தரும்?''

"பாமர சாபம் என்பது, தன்னிடம் வேலை செய்த கூலியாட்கள் வேலை செய்துமுடித்த வுடன், அவர்களுக்கு முறையாகக் கொடுக்க வேண்டிய கூலிப் பணத்தைக் கொடுக்கா மலோ அல்லது கூலியைக் குறைத்துக் கொடுப் பதாலோ உழைத்தவன் மனம் வெறுத்துவிட்ட வாக்குதான் பாமர சாபம்.

கூலியை இழந்த வேலையாள், "என் உழைப்பைப் பெற்றுக்கொண்டு முறையாகக் கூலி கொடுக்காமல் ஏமாற்றி, என் பணத்தில் நிலம், வீடு என வாங்கி எவ்வளவு சொத்து சேர்த்துவைத்தாலும், உனது அடுத்த பிறவியில் நீயோ அல்லது உன் வம்ச வாரிசுகளோ அந்த சொத்தை அனுபவிக்கமுடியாது. எல்லா சொத்தும் அழிந்து, சரியான தொழில் அமையால், எங்களைப்போல் தினமும் கஷ்டப்பட்டு வேலைசெய்து வாழ்வாய்' என்று மனம் வெறுத்து சாபம் விடுவான்.

இந்த பாமர சாபத்தை நிவர்த்திசெய்யவே இராமாவதாரத்தில் அரசர்குலத்தில் பிறந்த பகவான் கிருஷ்ணாவதாரத்தில் மாடு மேய்க்கும் ஆயர்குலத்தில் வளர்ந்து அன்றாடம் உழைத்து வாழ்ந்தார்.

(இன்றையநாளில், பாட்டனார் காலத்தில் மிகப்பெரிய செல்வந்தர்களாக- பண்ணையா ராகலி சொத்துகளுக்கு சொந்தக்காரர்களாக இருந்தவர்களின் வம்ச வாரிசுகள், பேரன்கள் காலத்தில் நிலம், வீடு, ஆபரணம் என அனைத்து சொத்துகளும் அழிந்து, சரியான தொழில் அமையாமல் அன்றாடம் வேலைசெய்து வாழ்கிறார்கள். இவர்கள் வம்சத்தில் உண்டான பாமர சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை நடைமுறை வாழ்வின்மூலமே அறிந்து கொள்ளலாம்.)

கோகுலத்தில் யாதவர்களுடன் வாழ இன்னும் சில காரணங்கள் உண்டு.

கண்ணனின் வளர்ப்புத் தாய் யசோதை, பல வருடங்களாக மகாவிஷ்ணு எதாவதொரு நிலையில் தனக்கு மகனாக வளரவேண்டும்- தான் வளர்க்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்துவந்தாள். அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்ற, அவள் மயக்கத்தில் இருக்கும் போதே கோகுலத்தில் அவளிடம் தன்னைக் கொண்டுபோய் சேர்க்கவைத்து, அவளே தன்னைப் பெற்றெடுத்ததாக அவளை நினைக்க வைத்தார். ஆயர்குலத்தில் வசிக்க இதுவும் ஒரு காரணம்.

இராமாவதாரத்தில் வானரங்கள்தான் இராமரின் அனைத்துப் பிரச்சினைகளிலும் உதவியாக இருந்தன. சீதையை சிறைமீட்க இராவணனுடன் நடந்தபேரில், இராமரின் படை வீரர்களாக இருந்து போர்செய்து, அந்தப் போரில் பல வானரங்கள் உயிரிழந்தன. வானரங்களின் உதவியால் இராவணனை வென்று இராமர் சீதையை சிறைமீட்டார். ஆனால் இராமன் வானரங்களுக்கு அந்தப் பிறவியில் எந்த நன்மையும் செய்யவில்லை.

இராமாவதாரத்தில் வானரங்களாக இருந்தவர்கள்தான் கிருஷ்ணாவதாரத்தில் யாதவ இனமக்களாகப் பிறந்தார்கள். இராமாவதரத்தில், தன்னைக் காப்பாற்றியவர்களுடன் இந்த அவதாரத்தில் உடன்வசித்து, யாதவர்களுக்கு வரும் பிரச்சினை கள், கஷ்டங்களைத் தீர்த்து, அவர்களைக் காப்பாற்றிப் பாதுகாத்தார். நன்றிக் கடனைத் தீர்க்கவே இடையர்களுடன் வளர்ந்தார்.

இராமாவதாரத்தில் தன்னுடன், இறுதி வரை இணைபிரியாமலிருந்து, அனைத்து சிரமங்களிலும் பங்குபெற்று, பல கஷ்டங் களை அனுபவித்த லட்சுமணனுக்கு, அவன் பாசத்திற்கும் உழைப்பிற்கும் ஈடாக இராமர் எதையும் செய்யவில்லை. கிருஷ்ணாவதாரத்தில் லட்சுமணனை பலராமன் என்ற பெயரில் கோகுலத்தில் தனக்கு அண்ணணாகப் பிறக் கச் செய்தார். மகாவிஷ்ணு வைகுந்தத் தில் மட்டு மல்ல; எந்தநிலையிலும் ஆதிசேஷனைவிட்டுப் பிரியமுடியாது. அந்த ஆதிசேஷன்தான் லட்சுமணனாகவும், அடுத்த அவதாரத்தில் பலராமனாகவும் பிறந்தவர்.

இராமனும் லட்சுமணனும் இராமா வதாரத்தில் இணைபிரியாமல் மரணம்வரை வாழ்ந்தார்கள். அதேபோல் கிருஷ்ணரும் பலராமரும் இறுதிவரை இணைபிரியாமல் வாழவேண்டும் என்பதற்காகத்தான் பலராமன் இருக்கும் கோகுலத்திற்கு வந்து வாழ்ந்தார்.

இராமாவதாரத்தில் லட்சுமணன் எப்படி தன் அண்ணன் இராமனுக்குக் கீழ்ப்படிந்து, அண்ணன் இட்ட கட்டளையை சிரமேற் கொண்டு பணிவிடைகளைச் செய்தானோ, அதேபோன்று, அண்ணன் பலராமன் இட்ட கட்டளைகள் அனைத்தையும் செய்து, பலராமன் சொல்லைத் தட்டாமல் பணிவிடைகளைச் செய்து வாழ்ந்தார். துவாரகை நகரை நிர்மாணித்து, பலராமனை அதற்கு அரசனாகச் செய்து, தன் சகோதரக் கடனைத் தீர்த்தார்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala041122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe