Advertisment

கர்மவினை தீர கண்ணன் காட்டிய பரிகாரங்கள்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/remedies-shown-by-kannan-get-rid-karma-chithardasan-sunderji-jeevanadi-8

ண்கள், தங்களின் தந்தைக்குச் செய்யும் கொடுமைகளால் மட்டும் பித்ரு தோஷம், பெற்றோர் சாபம் உண்டாவதில்லை. ஒரு ஆண்மகனின் வம்சம் விளங்க, வாரிசுகளைப் பெற்றுதரும் மனைவியின் தாய்- தந்தைக்குத் தரும் கஷ்டங் களாலும் ஆண்களுக்கு பித்ரு சாப பாதிப்பு கள் உண்டாகும்.

Advertisment

பெண்கள் எவ்வாறு தன் மாமனாருக்கு மருமகள் என்ற நிலையில் மகள் என்ற உரிமை யைப் பெறுகிறாளோ அதே போன்றுதான் ஒரு ஆணும், தனது மனைவியின் தாய், தந்தைக்கு மருமகன் என்ற நிலையில் மகன் என்ற உறவினை அடைகிறான்.

ஒரு பெண்ணைப் பெற்று வளர்த்து, அவள் பருவமடைந்தவுடன் முன்பின் தெரியாத அறிமுகமில்லாத ஒரு ஆண்மகனுக் குத் தன் மகளை, அவள் ஆயுள் வரை எந்த கஷ்டமும் இல்லாமல் அன்புடன் சுகமாக வைத்து, ஒற்றுமையாகக் குடித்தனம் செய்து, காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில், தனது மகளைத் திருமணம் செய்துவைக்கிறான். தனது பெண்ணையும் தந்து, அவனைத் தனது மகனாக உறவுகொண்டாடி, மதித்து, மகிழ்ச்சியடைகிறான்.

ஆண்களும், தங்கள் மாமனார்- மாமியாரைத் தனது தாய், தந்தைக்குச் சமமாக நேசித்து அவர்களின் ஆயுள்வரை, பாதுகாத்துக் காப்பாற்ற வேண்டும். ஒரு மகன் பெற்றவர் களுக்கு செய்யும் கடமையைச் செய்யவேண்டும்.

Advertisment

மணம் புரிந்த மனைவியின் வீட்டில், வரதட்சணை, சீர்வரிசை, மனைவி குடும்ப சொத்துகளில் பாகம் என்று எதிர்பார்ப்புகளைக் கொண்டு, தனது மாமனார், மாமியாருக்கு சிரமம், நிம்

ண்கள், தங்களின் தந்தைக்குச் செய்யும் கொடுமைகளால் மட்டும் பித்ரு தோஷம், பெற்றோர் சாபம் உண்டாவதில்லை. ஒரு ஆண்மகனின் வம்சம் விளங்க, வாரிசுகளைப் பெற்றுதரும் மனைவியின் தாய்- தந்தைக்குத் தரும் கஷ்டங் களாலும் ஆண்களுக்கு பித்ரு சாப பாதிப்பு கள் உண்டாகும்.

Advertisment

பெண்கள் எவ்வாறு தன் மாமனாருக்கு மருமகள் என்ற நிலையில் மகள் என்ற உரிமை யைப் பெறுகிறாளோ அதே போன்றுதான் ஒரு ஆணும், தனது மனைவியின் தாய், தந்தைக்கு மருமகன் என்ற நிலையில் மகன் என்ற உறவினை அடைகிறான்.

ஒரு பெண்ணைப் பெற்று வளர்த்து, அவள் பருவமடைந்தவுடன் முன்பின் தெரியாத அறிமுகமில்லாத ஒரு ஆண்மகனுக் குத் தன் மகளை, அவள் ஆயுள் வரை எந்த கஷ்டமும் இல்லாமல் அன்புடன் சுகமாக வைத்து, ஒற்றுமையாகக் குடித்தனம் செய்து, காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில், தனது மகளைத் திருமணம் செய்துவைக்கிறான். தனது பெண்ணையும் தந்து, அவனைத் தனது மகனாக உறவுகொண்டாடி, மதித்து, மகிழ்ச்சியடைகிறான்.

ஆண்களும், தங்கள் மாமனார்- மாமியாரைத் தனது தாய், தந்தைக்குச் சமமாக நேசித்து அவர்களின் ஆயுள்வரை, பாதுகாத்துக் காப்பாற்ற வேண்டும். ஒரு மகன் பெற்றவர் களுக்கு செய்யும் கடமையைச் செய்யவேண்டும்.

Advertisment

மணம் புரிந்த மனைவியின் வீட்டில், வரதட்சணை, சீர்வரிசை, மனைவி குடும்ப சொத்துகளில் பாகம் என்று எதிர்பார்ப்புகளைக் கொண்டு, தனது மாமனார், மாமியாருக்கு சிரமம், நிம்மதி யில்லாத நிலையைத் தந்து வாழ்ந் தால், அந்த ஆண்களுக்கும் மாமனார்மூலம் பித்ரு சாப- பாவ- சோக- தோஷ பாதிப்புகள் உண்டாகும்.

முற்பிறவிகளில் தனது மாமனார்- மாமியாருக்குச் செய்த கொடுமை களால், இப்பிறவி யில் தந்தையில் லாத பெண் மனைவியாக அமையலாம். மாமனார் வீட்டில் இருந்து எந்த நன்மையும் கிடைக்காமல் போகலாம். மாமனார் பகையாளிபோல எண்ணக் கூடும். இதுபோன்ற பலன்கள் பித்ரு சாபம் பெற்றவர்கள் என அறிந்துகொள்ளவேண்டும்.

ff

ஒரு ஆணின் பிறப்பு ஜாதகத்தில் சூரியன், சனி, ராகு- கேது சம்பந்தம் பெற்றிருந்தால் அவர்களுக்கு பெற்றவர்களாலும், மாமனார்- மாமியார்களாலும் பெரிய நன்மைகளை அடையமுடியாமல் செய்து விடும். பெண்களுக்கு கூறியுள்ள பித்ரு சாப பாதிப்பு கள் ஆண்களுக்கும் பொருந்தும்.

ஆண்- பெண் இருபாலரின், திருமணத்திற்குப் பின்பு, இவர்கள் எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி இருந்தால், மாமனார் வீட்டிலிருந்து, அன்பும், பாசமும், மரியாதையும், குடும்ப சொத்துகளும், கிடைத்து, ஒற்றுமையுடன் வாழ்ந்தால், இவர்கள் தனது முற்பிறவிகளில் தனது மாமனார்- மாமியாரை பெற்ற தாய்- ததந்தைபோல் மதித்துக் காப்பாற்றிய வர்கள். அவர்கள் மனநிறைவுடன் வழங்கிய நல் ஆசீர்வாதத்தால், இந்தப் பிறவியில், மனைவிவழி உறவுகளால் நன்மைகளை அடையச்செய்து வருகிறது. முற்பிறவி, பூர்வ ஜென்ம புண்ணியப் பலன் செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பிறவியிலும், நமது தாய்- தந்தைக்குப் பட்ட கடனை, அந்தந்தப் பிறவியிலேயே தீர்த்து விட்டால் பித்ரு, பாவ- சாப- தோஷம் நிவர்த்தியாகி அடுத்த பிறவியில் நம்மையோ அல்லது நமது வம்ச வாரிசுகளையோ பாதிப்படையச் செய்யாது.

ஒரு குழந்தையைச் பெற்று வளர்க்கும் தாய்- தந்தை, நமது பிள்ளை பெரியவனாகி, நம்மைக் காப்பாற்றுவான் என்று எதிர்பார்த்து வளர்ப்பதில்லை. நமது குழந்தையை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க வேண்டுமென்று எண்ணித்தான் வளர்ப்பார்கள்.

பெற்ற தாய் தனது ரத்தத்தை பாலாகத் தந்து, வாய்க்கு ருசியான உடலுக்கு பலம் தரும் உணவை அறிந்து ஊட்டி வளர்ப்பாள். தந்தை தன் ரத்தத்தை வேர்வையாக்கி உழைத்து சம்பாதித்து. நமக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் தந்து, கல்வி தந்து, பருவ காலத்தில் உத்தியோகம் தேடித்தந்து, ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைப்பான். பெற்ற பிள்ளைக்கு ஆயுள்வரை ஒரு தாய்- தந்தை செய்யும் கடமையை செய்துவருகிறார்கள். இதன்மூலம் நாம் நம்மைப் பெற்றவர்களுக்கு பித்ரு கடனைப் பெற்றுவிடுகின்றோம்.

நாம் குழந்தையாக இருக்கும் போது பெற்றவர்கள் இளமையாக, உழைக்கும் உடல் சக்தியுடன் இருப்பார்கள். நாம் இளமைப் பருவத்தில் இருக்கும்போது, நமது பெற்றோர், வயதாகி உடல் உழைக்கும் சக்தியின்றி இருப்பார்கள். இந்த காலத்தில் நாம் குழந்தையாக இருக்கும்போது அவர்கள் நமக்குத் தந்த உணவு, உடை, இருப்பிடம் அவர்களின் நோய் தீர்க்க மருத்துவம் என அனைத்தையும் தந்து, அவர் களை மகிழ்ச்சியுடன் வைத்துக் காப்பாற்றவேண்டும்.

இப்பிறவியில் நமது பெற்றவர் களிடம் குழந்தையாக இருந்து பட்ட கடனை, அவர்களின் முதுமைக் காலத்தில், இப்பிறவியிலேயே திரும்ப செலுத்தி கடனை தீர்த்துவிட்டால், பித்ரு சாபம்- பாவம்- சோகம்- தோஷ பாதிப்புகள் உண்டாகாது.

பெற்ற தாய்- தந்தை, மாமனார்- மாமியாரை மதிக்காமல், அவர்களை கவனித்துக் காப்பாற்றாமல், பசியும் பட்டினியுமாய் அலையவைத்து, சிரமப் படச் செய்துவிட்டு, பிறகு பித்ரு தோஷம், புத்திர சாபம் என்று கூறிக்கொண்டு கோவில், பூஜை, யாகம் என செய்துகொண்டிருந்தால் பாவ- சாபம் தீராது.

"ஆடுகின்ற தேவதைகள் அப்பா கேளு அரிய தந்தை யினம் சேருமென்று தோணார்' என்று அகத்தியர் பெருமான் கூறுகின்றார்.

தமிழ் மக்களே, தெய்வம், தேவதை என்று தோளிலும், தேரிலும் வைத்து தூக்கிக்கொண்டு ஆடிப்பாடி, பலவிதமான வழிபாடுகளைச் செய்கின்றீர்களே, உண்மையில் அவை தெய்வம், தேவதைகள் அல்ல. உன்னைப் பெற்றெடுத்து வளர்த்து மனிதனாக்கிய உனது தாய்- தந்தைதான் தெய்வம் என்று அறியாமல் வாழ்கின்றீர்களே. அவர்களை தெய்வமாக வழிபட்டு, காப்பாற்றி அவர்களின் ஆசியைப் பெறுங்கள். தெய்வக் கருணை, கடாட்சத்தை, பெற்றவர்களால் மட்டுமே தரமுடியும். அவர்களின் ஆன்மா மனநிறைவுடன் இருந்தால் பித்ரு சாபம் பாதிக்காது என்கிறார்.

இல்லறவாசிகள், ஆன்மிகப் பரிகாரங் களை நடைமுறையில் தனது குடும்ப உறவுகளுக்குச் செய்யவேண்டும். பணம், பொருள் செலவழித்து செய்யும் ஆஸ்திகப் பரிகாரங்களால் எந்த பாவமும் தீராது; பலனும் கிட்டாது என்கின்றார் அகத்தியர்.

இன்றையநாளிலும் பெற்ற தாய்- தந்தையை தெய்வமாகப் போற்றி மதித்து வாழ்ந்தவர்கள் சமுதாயத்தில் பெரிய தலைவர்களா அந்தஸ்து, அதிகார பதவிகளை அடைந்துள்ளார்கள்; வாழ்வில் உயர்ந்துள்ளார்கள் என்பதை அனுபவத்தில் காண்கின்றோம்.

கோவில், பூஜை, யாகம், தானம், தர்மம் என எங்கேயோ, எவருக்கோ செலவுசெய்யும் பணம், பொருளை பெற்ற தாய்- தந்தைக் கும் மாமனார்- மாமியார்க்கும் செய்து அவர்களை மகிழ்ச்சிடையச் செய்யுங்கள். உங்களின் முற்பிறவி பித்ரு பாவ- சாப- சோக- தோஷ பாதிப்புகள் அனைத்தும் நிவர்த்தியாகும். இப்பிறவியிலும், உங்கள் வம்ச வாரிசுகளையும் பாவம் பற்றாது. இப்பிறவி பித்ருக் கடனை இப்பிறவியிலேயே தீர்ப்போம். ஆஸ்திக குருமார்கள், மடாதி பதிகள் பீடாதிபதிகள், குறி சொல்வோர் பணத்தை வாங்கிக்கொண்டு, வழக்கம்போல் வேத பரிகாரங்களைத்தான் கூறுவார்கள்.

கடவுளை வணங்குவது அவரவர் நம்பிக்கை. ஆனால் அவரவர் கர்மவினை, பாவ- சாபங்களை தடுத்துக்கொள்வது, தீர்ப்பது அவரவர் கடமை. அதனால்தான் "நன்மையும் தீமையும் பிறர்தரவாரா' என்று கூறினார்கள். பாவ- சாபம் தீர்க்க சித்தர்கள் அறிவுரை கூறமாட்டார்கள். சரியான வழியைக் கூறுவார்கள். நாம் தான் அந்தப் பாதையில் பயணம் செய்து கொள்ளவேண்டும்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala070423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe