கர்மவினை தீர கண்ணன் காட்டிய பரிகாரங்கள்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/remedies-shown-by-kannan-get-rid-karma-chithardasan-sunderji-jeevanadi-7

ந்த பூமியில் மனிதர்களாகப் பிறந்தவர்கள், அவதாரங்களே ஆனாலும் அவரவர் வினைகளை அனுபவித்துதான் தீர்க்கவேண்டும். அவரவர் தம் முற்பிறவி பாவ- சாபங்களை அறிந்து, சுய அறிவாலும் யுக்தியாலும் தடுத்து, உழைப்பால் உயர்வடையலாம் என்று கிருஷ்ணர் தன் வாழ்க்கையின்மூலம் காட்டியுள்ளார். ஒருவர் தன் முற்பிறவி விதியைத் தன் மதியால் தடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு கிருஷ்ணரின் வாழ்வே சாட்சி.

இன்று சில ஜோதிடர்கள், பரிகாரம் செய்துவைக்கும் நபர்களுடன் கூட்டுசேர்ந்து பூஜை, ஹோமம், திருக்கல்யாணம், தானதர்மம் போன்றவற்றை செய்யவேண்டும் எனக் கூறி, பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு பங்குபோட்டுக் கொள்கின்றனர். ஜோதிடப் பலன்பார்த்து சரியான வழிமுறைகளைக் கூறுவதில்லை. இன்றைக்கு ஜோதிடத் தொழில் மிகப்பெரிய வியாபாரமாகிவிட்டது. கோவில்களுக்கு கூட்டம் சேர்க்கும் செயலைத்தான் பலரும் செய்து வருகிறார்கள். இதுபோன்ற சிலரால் மக்களுக்கு ஜோதிடம் பொய் என்னும் எண்ணம் வலுவடைந்து, ஜோதிடம் மீது நம்பிக்கையிழந்து வருகிறார்கள். ஏமாறுபவர் இருக்கும்வரை ஏமாற்றுபவரும் இருப்பார்கள்.

கிருஷ்ணர் ஜாதகத்தில் சனி கிரகம் விருச்சிக ராசியில் உள்ளது. அதற்கு ஒன்பதாவது ராசியான கடகத்தில் செவ்வாய் உள்ளது. இது சனி, செவ்வாய் சேர்க்கையைக் குறிப்பிடுகிறது. ஒருவரின் ஜாதகத்திலுள்ள செவ்வாய் அவரது சகோதரன், ரத்த சம்பந்தமான பங்காüகள், உடல் வலிமை, மனவலிமை, வீரம், புகழ், வெற்றி நிலம், போர்க்களம், போராட்டங்கள், ஆயுதங்கள், இராணுவம், காவல்துறை, நெருப்பு, வெடிபொருட்கள், படைத்தலைமை, எதிரி,

ந்த பூமியில் மனிதர்களாகப் பிறந்தவர்கள், அவதாரங்களே ஆனாலும் அவரவர் வினைகளை அனுபவித்துதான் தீர்க்கவேண்டும். அவரவர் தம் முற்பிறவி பாவ- சாபங்களை அறிந்து, சுய அறிவாலும் யுக்தியாலும் தடுத்து, உழைப்பால் உயர்வடையலாம் என்று கிருஷ்ணர் தன் வாழ்க்கையின்மூலம் காட்டியுள்ளார். ஒருவர் தன் முற்பிறவி விதியைத் தன் மதியால் தடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு கிருஷ்ணரின் வாழ்வே சாட்சி.

இன்று சில ஜோதிடர்கள், பரிகாரம் செய்துவைக்கும் நபர்களுடன் கூட்டுசேர்ந்து பூஜை, ஹோமம், திருக்கல்யாணம், தானதர்மம் போன்றவற்றை செய்யவேண்டும் எனக் கூறி, பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு பங்குபோட்டுக் கொள்கின்றனர். ஜோதிடப் பலன்பார்த்து சரியான வழிமுறைகளைக் கூறுவதில்லை. இன்றைக்கு ஜோதிடத் தொழில் மிகப்பெரிய வியாபாரமாகிவிட்டது. கோவில்களுக்கு கூட்டம் சேர்க்கும் செயலைத்தான் பலரும் செய்து வருகிறார்கள். இதுபோன்ற சிலரால் மக்களுக்கு ஜோதிடம் பொய் என்னும் எண்ணம் வலுவடைந்து, ஜோதிடம் மீது நம்பிக்கையிழந்து வருகிறார்கள். ஏமாறுபவர் இருக்கும்வரை ஏமாற்றுபவரும் இருப்பார்கள்.

கிருஷ்ணர் ஜாதகத்தில் சனி கிரகம் விருச்சிக ராசியில் உள்ளது. அதற்கு ஒன்பதாவது ராசியான கடகத்தில் செவ்வாய் உள்ளது. இது சனி, செவ்வாய் சேர்க்கையைக் குறிப்பிடுகிறது. ஒருவரின் ஜாதகத்திலுள்ள செவ்வாய் அவரது சகோதரன், ரத்த சம்பந்தமான பங்காüகள், உடல் வலிமை, மனவலிமை, வீரம், புகழ், வெற்றி நிலம், போர்க்களம், போராட்டங்கள், ஆயுதங்கள், இராணுவம், காவல்துறை, நெருப்பு, வெடிபொருட்கள், படைத்தலைமை, எதிரி, ரத்தம், வெட்டுகாயம், விபத்து என இன்னும் பலவற்றைக் குறிக்கும் உதாரண கிரகமாகும். பெண்கள் ஜாதகத்தில் சகோதரனையும், திருமணத்திற்குப் பின்பு கணவனையும் குறிப்பிடும்.

ஒருவர் ஜாதகத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் முற்பிறவிகüல் எத்தகைய பாவங்களைச் செய்திருப்பார்கள்- அதன் விளைவாக இப்பிறவியில் என்னவிதமான சிரமங்களை அனுபவிப்பார்கள் என்று பொதுவான பலன்களைக் காணலாம்.

சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 12 ஆகிய ராசிகüல் செவ்வாய் இருந்தால் சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றுள்ளதாக அறிந்துகொள்ளலாம். இந்த சேர்க்கை, ஒருவரின் முற்பிறவியில் தன்னுடன் பிறந்த சகோதரர்களுக்கும், ரத்த சம்பந்தமான பங்காüகளுக்கும் செய்த தீமைகளை அறியச்செய்கிறது. நாம் செய்த தீமைகளால் பாதிக்கப்பட்ட அவர்கள் மனம் வெறுத்து விட்ட சகோதர சாபத்தை அறிந்து கொள்வோம்.

சனி, செவ்வாய் சேர்க்கைபெற்ற ஜாதகர்கள் தங்களது முற்பிறவியில் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்து, தனது சகோதர- சகோதரிகüன் உழைப்பால், உதவியால் செல்வம் சேர்த்து, குடும்ப சொத்துகளை உயர்த்திக் கொண்டு, பின்னர் அவர்களுக்குரிய பாகத்தைப் பிரித்துத் தராமல் நம்பிக்கை துரோகம் செய்து ஏமாற்றி அபகரித்துக் கொண்டு, அவர்களை வாழ்க்கையில் துன்பம், வறுமையால் சிரமப்பட வைத்திருப்பார்கள்.

fsdf

முன்னோர்கள் தேடிவைத்த பூர்வீக சொத்துகள் அனைத்தையும் தானே அபகரித்துக்கொண்டு, தன்னைப் பெற்ற தாய்- தந்தை, சகோதர- சகோதரிகளுக்குத் தராமல், அவர்களைக் குடியிருந்த வீட்டைவிட்டு வெüயேற்றி பசியும் பட்டினியமாய் அலையவிட்டு, தானும் தன் மனைவி, குழந்தைகளும் மட்டும் அனுபவித்து சுகபோகமாக வாழ்ந்த தால், பாதிக்கப்பட்டவர்கள் விட்ட சாபமுண்டு.

இவர்கள் மற்றவர் செய்யும் தொழில், பூமி, நிலம், சொத்துகளைத் தனது ஆள்பலம், அதிகார பலம், அரசியல் பலத்தால் பறித்துக்கொண்டு, அவர்களை சிரமப்படுத்த செய்தது; மற்றவர்கüடம் வாங்கிய பணத்தைத் திரும்பத் தராமல் ஏமாற்றியது; தொழில், உத்தியோகம் செய்யுமிடத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் சக தொழிலாளர்கள் பற்றி தனது முதலாüயிடம், மேலதிகாரியிடம் தவறான தகவல்களைக் கூறி, அவர்கள் பிழைப்பைக் கெடுத்தது; தொழில் செய்யுமிடத்தில், தொழில் பற்றிய ரகசியங்களை தொழில் எதிரிகüடம் கூறி பணம் பெற்றுக்கொண்டு முதலாüக்கு துரோகம் செய்தது; கூட்டுத்தொழில் செய்து, கூட்டாüகளுக்கு முறையாகத் தரவேண்டிய லாபத்தையும், அவர்கள் முதலீடு செய்த மொத்த பங்குப் பணத்தையும் நஷ்டக் கணக்கு காட்டி அவர்களை ஏமாற்றி தானே அபகரித்துக் கொண்டது என இதுபோன்ற இன்னும் பல பாவங்களை செய்ததால், இவர்கள் இப்பிறவி வாழ்க்கையில் அனுபவிக்கும் பலன்களைத் தெரிந்துகொள்வோம்.

வாசகர்களாகிய உங்கள் ஜாதகத்தில் இதுபோன்று சனி, செவ்வாய் சம்பந்தம் பெற்றிருந்தால், முற்பிறவியில் இவற்றில் ஏதாவது சில பாவங்களைச் செய்திருப்பீர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் அனுபவிக்கும் சிரமங்களுக்கான காரணத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.

சனி, செவ்வாய் சம்மந்தம் பெற்றவர்கüன் இப்பிறவி வாழ்க்கையில் இவர்கüன் திருமணத்திற்குப்பிறகு பெற்ற தாய்- தந்தை, உடன்பிறந்த சகோதர- சகோதரிகள், ரத்த சம்பந்த பங்காüகள், மற்ற உறவுகள், மனைவிவழி உறவுகள், மைத்துனர், சொந்த இன மக்களால் எந்த நன்மையும் கிடைக்காது. குடும்ப உறவுகள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள்.

ஆனால் இவர்களை புறக்கணித்து விடுவார்கள். சகோதர- சகோதரிகள் உறவுகள் கூட தங்கள் பங்கை வாங்கிப்போகத்தான் வருவார்கள். பணம், பொருள் என எதையும் தரவில்லையென்றால், உறவு கொண்டாடி வராமலே போய்விடுவார்கள்.

இவர்கள் தன் குடும்பத்தினர், சகோதர- சகோதரிகளை ஒரு தந்தையைப் போலிருந்து, அவர்களுக்குச் செய்யவேண்டிய அனைத்தையும் செய்து நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தாலும், இறுதியில் அவர்களால் எந்த நன்மையும் கிடைக்காது. அவரவர் திருமணத்திற்குப்பிறகு இவர்களை ஒதுக்கிவிட்டு ஒதுங்கிப் போய்விடுவார்கள். இவர்களது உதவிபெற்ற உறவினர்களும் நன்மையடைந்த நண்பர்களும் இவரின் கஷ்ட காலங்கüல் உதவிசெய்ய மாட்டார்கள். பொதுவாக குடும்பத்தினரும் உறவுகளும் நண்பர்களும், இவரால் நமக்கென்ன நன்மை என்ற சுயநலத்துடன்தான் பழகுவார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் நன்றி கெட்டவர்கள், விசுவாசம் இல்லாதவர்களை மட்டுமே சந்திப்பார்கள்.

குடும்பத்தில் பணம், சொத்து, பாகப்பிரிவினைத் தகராறு உண்டாகும். பூர்வீக சொத்துகள் கிடைக்காமல் போகலாம். அல்லது நியாயமாகக் கிடைக்க வேண்டிய அளவு கிடைக்காமல் குறைவான அளவே கிடைக்கலாம். பூர்வீக சொத்துகள் கிடைத்தாலும் அதனை இவர்கள் அனுபவிக்கமுடியாமல் போகலாம்.

அல்லது அவைமூலம் நன்மைகள், உயர்வை அடையமுடியாமல் போய்விடும். முன்னோர் கள் தேடிவைத்த சொத்து, தொழில், வியாபாரம், பதவி போன்றவை விரயமாகி, இவர்கள் சுயமாக உழைத்து சம்பாதித்த பணம், சொத்தில் சேமித்துதான் வாழ்வில் உயர்வை அடையமுடியும்.

இவர்களுக்கு நிரந்தரமான தொழில் அமையாது. அவ்வாறு அமைந்தாலும் அதிலும் தடை, தாமதம், பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு அடிக்கடி தொழிலை மாற்றி வெவ்வேறு தொழில்களைச் செய்து பிழைக்கவேண்டிய நிலையும் ஏற்படும். தொழில் செய்யுமிடத்தில் சுமூகமான நிலை இருக்காது. உடன் பணிபுரியும் தொழிலாளர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு சிரமங்களை அடைய நேரும். மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். செய்யாத குற்றத்திற்கு தண்டனையும் அவப்பெயரும் உண்டாகும். அரசியல் கட்சிகüல் இருந்தாலும், அதிகாரப் பதவிகüல் இருந்தாலும் இவர் நம்பிய கட்சித் தலைவர் இவரை ஏமாற்றிவிடுவார், தொழில், உத்தியோகம், வேலையிழப்பு அல்லது வேலையை விட்டுவிட்டு தானே விலகிச் செல்வது போன்ற நிகழ்வுகள் உண்டாகலாம். இவரது உழைப்பிற்கேற்ற உயர்வு கிடைக்காது. எவ்வளவு சம்பாதித் தாலும் கையில் பணம் தாங்காது. மருத்துவச் செலவு, வீண் செலவுகள் ஏற்பட்டு பணம் விரயமாகிவிடும். இவர்கள் பிறரிடம் அடிமைபோல வாழநேரிடும்.

இவர்களது உழைப்பு, திறமை, பணம், சொத்து போன்றவற்றையெல்லாம் மற்றவர்கள் அனுபவிப்பார்கள். இவர்கள் விரும்பியபடி எதுவும் நடக்காது. இவர்கள் பிறருக்காக சிபாரிசு செய்து பின்னின்று செய்யும் செயல்கள் எல்லாம் வெற்றியைத் தரும். அந்த வெற்றியால் கிடைக்கும் நன்மைகளை மற்றவர்கள் அனுபவிப்பார்கள். ஆனால் இவர்கள் வாழ்வில் உயர்வு பெறத் தடையாகும்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala240223
இதையும் படியுங்கள்
Subscribe