Advertisment

கர்மவினை தீர கண்ணன் காட்டிய பரிகாரங்கள்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/remedies-shown-by-kannan-get-rid-karma-chithardasan-sunderji-jeevanadi-6

கிருஷ்ணரின் வாழ்க்கையை கிருஷ்ண தத்துவம் என்று கூறுவார்கள். தத்துவம் என்றால், எந்த காலத்திலும் மாறாதது; எந்த சக்தியாலும் மாற்ற முடியாத நிலையான தன்மையையுடையது என்று அர்த்தமாகும். இதனையே நாம் விதி என்று கூறுகிறோம்.

Advertisment

ஒருவனின் விதியை எந்த சக்தியாலும் மாற்றவோ, அழித்துத் தீர்க்கவோ முடியாது. ஆனால் அவரவர் மதியால் விதியைத் தடுத்துக்கொள்ளமுடியும். ஒருவன் இப்பிறவியில் தன் செயல்கள்மூலம், தனக்குத்தானே செய்துகொள்ளும் செயல்களால் உண்டாகும் பலன்களை இந்தப் பிறவி வாழ்விலேயே அனுபவித்துத் தீர்ப்பான். ஆனால் தனது தாய்- தந்தை, மனைவி, குழந்தை என குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், தனக்கு சம்பந்தமே இல்லாத மற்றவர்களுக்கும் செய்யும் பாவங்களுக்கு உண்டான தண்டனையை இந்த பூமியில் பிறக்கும் அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவிப்பான்.

Advertisment

ஒரு மனிதன் பெற்ற சாபத்தை, செய்த பாவத்தை கடவுள், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், குடும்ப உறவுகள் என யாரும் பங்குபோட்டுக்கொள்ள முன்வரமாட்டார்கள். அவரவர் வினையை அவரவரேதான் தீர்க்கவேண்டும். ஒருவர் தான் விதைத்ததைதான் அறுவடை செய்யமுடியும் என்பதே கிருஷ்ண தத்துவமாகும்.

வாசகர்களாகிய உங்கள் ஜாதகத்தில், இதுபோன்று கிரக இணைவு, சேர்க்கை இருந்தால், நீங்களும் உங்கள் முற்பிறவி பாவ- சாபங்கள் என்னவென்று அறிந்துகொள்ளுங்கள். ஜாதகம் இல்லாதவர்கள் இதில் கூறப் பட்டுள்ளதுபோல் வாழ்க்கைப் பலன்களை அனுபவித்துக்கொண்டிருந்தால், உங்களுக்கும் இதுபோன்று முற்பிற

கிருஷ்ணரின் வாழ்க்கையை கிருஷ்ண தத்துவம் என்று கூறுவார்கள். தத்துவம் என்றால், எந்த காலத்திலும் மாறாதது; எந்த சக்தியாலும் மாற்ற முடியாத நிலையான தன்மையையுடையது என்று அர்த்தமாகும். இதனையே நாம் விதி என்று கூறுகிறோம்.

Advertisment

ஒருவனின் விதியை எந்த சக்தியாலும் மாற்றவோ, அழித்துத் தீர்க்கவோ முடியாது. ஆனால் அவரவர் மதியால் விதியைத் தடுத்துக்கொள்ளமுடியும். ஒருவன் இப்பிறவியில் தன் செயல்கள்மூலம், தனக்குத்தானே செய்துகொள்ளும் செயல்களால் உண்டாகும் பலன்களை இந்தப் பிறவி வாழ்விலேயே அனுபவித்துத் தீர்ப்பான். ஆனால் தனது தாய்- தந்தை, மனைவி, குழந்தை என குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், தனக்கு சம்பந்தமே இல்லாத மற்றவர்களுக்கும் செய்யும் பாவங்களுக்கு உண்டான தண்டனையை இந்த பூமியில் பிறக்கும் அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவிப்பான்.

Advertisment

ஒரு மனிதன் பெற்ற சாபத்தை, செய்த பாவத்தை கடவுள், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், குடும்ப உறவுகள் என யாரும் பங்குபோட்டுக்கொள்ள முன்வரமாட்டார்கள். அவரவர் வினையை அவரவரேதான் தீர்க்கவேண்டும். ஒருவர் தான் விதைத்ததைதான் அறுவடை செய்யமுடியும் என்பதே கிருஷ்ண தத்துவமாகும்.

வாசகர்களாகிய உங்கள் ஜாதகத்தில், இதுபோன்று கிரக இணைவு, சேர்க்கை இருந்தால், நீங்களும் உங்கள் முற்பிறவி பாவ- சாபங்கள் என்னவென்று அறிந்துகொள்ளுங்கள். ஜாதகம் இல்லாதவர்கள் இதில் கூறப் பட்டுள்ளதுபோல் வாழ்க்கைப் பலன்களை அனுபவித்துக்கொண்டிருந்தால், உங்களுக்கும் இதுபோன்று முற்பிறவி பாவ- சாபப் பதிவுகள்தான் காரணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள கிருஷ்ணர் ஜாதகத்துக்கு தமிழ் ஜோதிடமுறையில் பலன் கூறப்படுகிறது. எனவே ராசி, லக்னம், தசை, புக்தி, நட்சத்திரம் என எதுவும் பார்க்கத் தேவையில்லை.

கிருஷ்ணரின் ஜாதகத்தில் அவரின் இப்பிறவி வாழ்க்கையில், தொழில் செய்து பிழைக்கும் நிலையைக் காட்டும் சனி விருச்சிக ராசியில் உள்ளது. சனி இருக்கும் ராசிக்கு 9-ஆவது ராசியான கடக ராசியில், ஒரே நட்சத்திர மண்டலத்தில் செவ்வாய், சுக்கிரன், ராகு இணைந்து சனியின் தொடர்பைப் பெறுகின்றன.

சனி கிரகம், ஒருவரின் இப்பிறவி வாழ்க்கை, தொழில் ஆகியவற்றைக் குறிக்கும் உதாரண கிரகமாகும். ராகு ஒருவரின் முற்பிறவி பாவங்களைக் குறிக்கும் உதாரண கிரகமாகும். செவ்வாய் சகோதரன், பூமி, எதிரி, கடன், போர் ஆகியவற்றைக் குறிக்கும் உதாரண கிரகமாகும். சுக்கிரன் மனைவி, திருமணம், வீடு, பொருள், சொத்து ஆகியவற்றைக் குறிக்கும் உதாரண கிரகமாகும்.

ஒருவர் ஜாதகத்தில் சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் ராகு இருந்தால், அவர் பித்ரு தோஷம், புத்திர சாபம், பாமர சாபம் உள்ளவரென்று அறிந்துகொள்ளலாம். சனி, ராகு, சேர்க்கைபெற்ற ஜாதகர்கள், கீழ்க்கண்ட பாவங்களில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ தனது முற்பிறவிகளில் செய்திருப்பார்கள்.

முற்பிறவிகளில் தன்னைப் பெற்ற தாய்- தந்தையையும், தான் பெற்ற பிள்ளைகளையும் பேணிக்காப்பாற்றாமல், பசியும் பட்டினி யுமாய் அலையச் செய்து தவிக்கவிட்டது.

ss

அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றியது. அல்லது அவர்களையே வயது முதிர்ந்த காலத்தில் கவனியாமல் தான் வெளியேறியது. பெற்றோர், புத்திரர்களுக்கு தந்தை செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாமல் தவிர்த்தது. இதனால் பித்ரு தோஷம், புத்திரசாபம் இப்பிறவியில் தாக்கும்.

உடல் ஊனமுற்றோர்களைத் துன்புறத் தியது. தன்னிடம் வேலை செய்த யாட்களின் கூலியைக் குறைத்துக்கொடுத்து தன் வாழ்வை உயர்த்திக்கொண்டது. அல்லது கூலியே கொடுக்காமல் ஏமாற்றியது. இதனால் வேலையாட்கள் வயிறெரிந்துவிட்டது பாமர சாபம்.

முற்பிறவியில் பணபலம், பதவி, அதிகார பலம், ஆள் பலத்தால், தனக்கு சம்பந்தமே இல்லாத தனக்குக் கீழானவர்களை அடித்துத் துன்புறத்தியது; ஆயுதங்களால் தாக்கியது; கொலை செய்தது; அவர்கள் சொத்துகளை பலவந்தமாய் அபகரித்துக்கொண்டது; தனது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், உதவி செய்த நண்பர்களுக்கும் துரோகம் செய்தது;

தனக்கு கீழான பெண்களைத் துன்புறுத்தியது; அவர்களைக் கெடுத்தது; ஏவல், பில்லி, சூனியம் போன்ற செயல்களைப் பிறருக்குச் செய்தது; மாயம், மந்திரம் போன்ற செயல்களை தொழிலாகச் செய்து பிழைத்தது; பாமர மக்களை ஏமாற்றி பணம் பறித்தது; பொது சொத்துகளை அபகரித்தது.

பறவை, மிருகங்களை வேட்டை யாடிக்கொன்றது; துஷ்ட சக்திகளை வழிபட்டது; திருடுதல், பொய் சொல்லுதல், பிறரை ஏமாற்றி வாழ்ந்தது; ஆயுதங்கள், வாகனங்களால் பிறருக்கு பாதிப்புகளை உண்டாக்கியது போன்று இன்னும் பல செயல்களை செய்திருப்பார்கள் என்று இந்த சனி, ராகு சேர்க்கைமூலம் அறிந்துகொள்ளலாம்.

சனி, ராகு சேர்ந்த ஜாதகர்கள், பிறக் கும்போதே பெரிய கண்டத்திலிருந்து தப்பித்திருப்பார்கள். பெற்ற தாய்- தந்தையரால் புறக்கணிக்கப்படுவார்கள். பெற்றோரைப் பிரிந்து வாழநேரிடும். சிலர் மூன்றாம் மனிதர், உறவினர்கள் ஆதரவில் வளர்க்கப்படுவார்கள். பூர்வீகத்தில் வாசம் செய்யமுடியாது. முன்னோர்கள் தேடிய பூர்வீக சொத்துகளால் நன்மை அடையமுடியாது. தாயின் கர்ப்பத்தில் கருவாக இருக்கும்போதே, தாய்- தந்தைக்கு கண்டங்கள், கஷ்டங்கள் அடையச் செய்துவிடுவார்கள்.

சனி, ராகு இணைந்த ஜாதகர்களுக்கு பெற்ற தாய்- தந்தையாலும் நன்மை இராது; தான் பெற்ற பிள்ளைகளாலும் நன்மை கிடைக்காது. மாற்று இணைத்தார், மாற்று மொழி பேசுபவர்கள், தன்னைவிட கீழான நிலையில் வசதி, வாய்ப்பு, செல்வ நிலையில் குறைந்துள்ள பாமர மக்கள் ஆதரவு கிடைக்கும். ஏவல், பில்லி, சூனியம், துஷ்ட சக்திகளால் பாதிப்புகளை அடைய நேரிடும்.

இந்தப் பிறவியில் தன் குடும்பத்தாராலோ, குடும்ப சொத்துகளாலோ எந்த உதவியும் கிடைக்காது. இவர்கள் இப்பிறவி வாழ்க்கைக்குத் தேவையான சொத்து, பூமி, வீடு, தொழில், திருமணம் என அனைத்தையும் இவர்களே உழைத்து பணம் சம்பாதித்து அமைத்துக்கொள்ளவேண்டும். இவர்கள் பிறக்கும்போது எவ்வளவு பெரிய உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கீழான மக்கள் ஆதரவால், கீழான தொழிலைச் செய்து பின் வாழ்வில் உயர்வடைவார்கள்.

சனி, ராகு கிரகச் சேர்க்கைப்பெற்ற ஜாதகர்கள், தங்களின் முற்பிறவி பாவ- சாப- தோஷப் பதிவுகளுக்கு தண்டனைகளை, தங்கள் வாழ்வில் இளமைக்கால வயதுகளில் அனுபவித்து நிவர்த்திசெய்து தீர்த்து முடித்து, தனது 30 வயதிற்குமேல் அல்லது தனது திருமணத்திற்குப்பின்பு, தான் செய்யும் தொழிலில் ஆரம்பத்தில் சாதாரண நிலையிலிருந்து, படிப்படியாக உயர்வடைவார்கள். நிர்வாகப் பொறுப்புள்ளவர்களாகி விடுவார்கள். ஆரம்பகால வாழ்க்கையில் அடிமைத் தொழில் செய்து, அனுபவிக்க வேண்டிய வயதில் எதனையும் அனுபவிக்க முடியாது; இருக்காது. அனுபவிக்க முடியாத பின் வயது வாழ்வில் செல்வம், செல்வாக்கு, பதவி, புகழ் என அடைந்துவிடுவார்கள்.

இந்த சனி, ராகு கிரகச் சேர்க்கை உள்ள ஜாதகர்களில் அதிகமானோர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகவே உள்ளார்கள். சிலர் பொய் பேசியும், பிறரை ஏமாற்றும் தொழில்கள், சட்டத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்து, வாழ்வில் உயர்ந்தும்விடுவார்கள். இன்னும் சிலர் மந்திரம், தந்திரம், துர்வேததைகள் வழிபாடு, ஆன்மிக மடங்களை வைத்து தங்களை பெரிய ஆன்மிகவாதிகள்போல் காட்டிக்கொண்டு, மக்களை ஏமாற்றி பெரும் பணத்தை சம்பாதித்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் அரசியலில் ஈடுபட்டு, தலைவர்களாகி பதவி, பணம், புகழ் அடைந்து தங்கள் வாழ்க்கையை உயர்த்திக்கொள்கிறார்கள். இவர்களின் மூளை பிறரை ஏமாற்றி தன் காரியத்தை சாதித்துக்கொள்வதில் திறமையாக செயல்படும். உடல்பலம், புத்தி, யுக்திபலம் ஆகியவைதான் இவர்களின் மூலதனம். எந்த ராசி, லக்னத்தில் ஒருவர் பிறந்திருந்தாலும், அவரின் ஜாதகத்தில் சனி, ராகு சேர்ந்திருந்தால் இதுபோன்ற பலன்களைத்தான் அடைவார்கள்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala200123
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe