Advertisment

கர்மவினை தீர கண்ணன் காட்டிய பரிகாரங்கள்! (20) சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/remedies-shown-by-kannan-get-rid-karma-20-siddhardasan-sunderji-jeevanadi

கிருஷ்ணர் தனது வாழ்வில் தனது நலன், தனது பெற்றோர்கள், மனைவி கள், பிள்ளைகள், தன் குடும் பத்தினர் நலன், தன்னைச் சேர்ந்த யாதவ இனத்து மக்கள் நலனைப் பற்றி மட்டுமே சிந்தித்து, அவர் கள் நிம்மதியாக வாழச் செயல் பட்டு, அவர்களுக்கு தேவை யானவற்றை அடையச் செய்து, அவர்களை மட்டும் காப்பாற்றி வாழ்ந்தாரே தவிர, தனக்கு சம்பந்தமில் லாதவர்கள், ரிஷி, முனிவர்கள் என மற்றவர்களுக்கு எதையும் செய்யவில்லை. எந்தவொரு சூழ்நிலை யிலும், தனக்குத் தெரிந்தவர் களுக்காகவோ, வேண்டாத வர்களுக்கோ எந்தவொரு நன்மையையும் செய்ய வில்லை; தீமைகளையும் செய்யவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

Advertisment

கிருஷ்ணரின் வாழ்க்கைமூலம் நாம் பாவ- சாபம் தீர்க்க அறிந்து கொள்ளவேண்டிய முக்கியமான வாழ்வியில் நடைமுறை வழி இது. இந்த பூமியில் மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவரும், தனது தாய்- தந்தை, மனைவி குழந்தைகள் என தனது குடும்பத்தினருக்காக உழ

கிருஷ்ணர் தனது வாழ்வில் தனது நலன், தனது பெற்றோர்கள், மனைவி கள், பிள்ளைகள், தன் குடும் பத்தினர் நலன், தன்னைச் சேர்ந்த யாதவ இனத்து மக்கள் நலனைப் பற்றி மட்டுமே சிந்தித்து, அவர் கள் நிம்மதியாக வாழச் செயல் பட்டு, அவர்களுக்கு தேவை யானவற்றை அடையச் செய்து, அவர்களை மட்டும் காப்பாற்றி வாழ்ந்தாரே தவிர, தனக்கு சம்பந்தமில் லாதவர்கள், ரிஷி, முனிவர்கள் என மற்றவர்களுக்கு எதையும் செய்யவில்லை. எந்தவொரு சூழ்நிலை யிலும், தனக்குத் தெரிந்தவர் களுக்காகவோ, வேண்டாத வர்களுக்கோ எந்தவொரு நன்மையையும் செய்ய வில்லை; தீமைகளையும் செய்யவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

Advertisment

கிருஷ்ணரின் வாழ்க்கைமூலம் நாம் பாவ- சாபம் தீர்க்க அறிந்து கொள்ளவேண்டிய முக்கியமான வாழ்வியில் நடைமுறை வழி இது. இந்த பூமியில் மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவரும், தனது தாய்- தந்தை, மனைவி குழந்தைகள் என தனது குடும்பத்தினருக்காக உழைத்து சம்பாதித்து, அவர்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் ஏற்படாமல் காப்பாற்றவேண்டும். அவர்கள் மகிழ்ச்சியாக வாழ, தன் சுகத்தைத் துறந்து, ஒரு துறவிபோல் வாழவேண்டும் என்பதே நிம்மதியான நல்ல வாழ்க் கையை அமைத்துக்கொள்ள சரியான வாழ்வியல் வழியாகும். இவனே இல்லறத் துறவி ஆவான்.

துறவு என்றால், தனது ஆசை, பாசம், பதவி, பணம், பொருள் என அனைத்தையும் அனுபவிக்கும் எண்ணம், பற்றில்லாமல் அனைத்தையும் துறந்து, கும்பல் இல்லாமல், கோஷமில்லாமல் தனித்த நிலையில் வாழ்வதே ஆகும். எவன் ஒருவன் இதுபோன்று வாழ்கிறோனோ அவனே உண்மை யான துறவியாவான்.

ff

Advertisment

காவி, ருத்ராட்சம், தாடி, சடைமுடி வைத்துக் கொண்டு அல்லது தலையை மொட்டை யடித்துக்கொண்டு, தனக்கென ஒரு மடம், இடம் அமைத்துக்கொண்டு, தன்னைப் பெரிய ஞானிபோல் கூறிக்கொண்டு, தனக்கென்று ஒரு கும்பலைச் சேர்த்துக்கொண்டு, சீடர்களை வைத்துக்கொண்டு, தன்னைக் காணவருபவர்களிடம் பணம், பொன், பொருட்கள், பெண்களைப் பெற்றுக்கொண்டு, ரதம், பல்லக்கு, வாகனங்களில் பயணித்துக்கொண்டு சுகமாக வாழ்பவன், கடவுள் பெயரைக்கூறி பிறரிடம் காசு, பணம் பெற்றுக்கொண்டு வாழ்பவன் உண்மையான துறவியல்ல. இவனிடம் ஞானமோ, அருளோ இருக்காது. இவர்களைப் போன்றவர்களின் ஆசிர்வாதம், அருள்வாக்கு பலிக்காது என்ற உண்மையை மக்கள் புரிந்துகொண்டு, இவர்களிடம் ஏமாறாமல் இருக்கவேண்டும்.

ஒரு மனிதனின் குடும்ப நல்வாழ்விற்கு, அகத்தியரும் இதே கருத்தைக் கூறியுள்ளார்.

"தாயென்றும் தந்தை யென்றும் பாரியென்றும்

பிள்ளையென்றும் உழைக்கத்தானே சொன்னேன்'

என கூறுகிறார்.

ஒரு மனிதன் தான் உழைத்து சம்பாதித்த பணத்தில், தான் ஆசைப்படுவதையெல்லாம் அனுபவிக்காமல், ஒரு துறவிபோல் துறந்துவிட்டு, தனது தாய்- தந்தை, மனைவி, குழந்தைகளுக்குச் செய்யவேண்டிய பித்ரு, புத்திர, களத்திரக் கடமைகளைச் செய்து, அவர்களை வருத்தமடை யச் செய்யாமல், மனம், வாக்கு, உடம்பால் மகிழ்ச்சி யடையச் செய்து காப் பாற்றவேண்டும் என்கின் றார்.

ஒருவன் தனது தாய்- தந்தை, மனைவி, குழந்தைகள் என இந்த நான்கு உறவுகளையும் கஷ்டமடையச் செய்யாமல் காப்பாற்றி னால், அவர்களுக்கு முற்பிறவிகளில் உண்டான பித்ருதோஷம் என்ற தந்தை சாபம், மாத்ருதோஷம் என்ற தாய் சாபம், களத்திர தோஷம் என்ற மனைவி சாபம், புத்திரதோஷம் என்ற புத்திரர்கள் சாபம் நீங்கும். இப்பிறவி வாழ்க்கையில் இந்த சாப- தோஷங்கள் நிவர்த்தியாகி நம்மை பாதிக்காது. நமது வம்ச வாரிசுகளின் வாழ்விலும் பாதிப்பைத் தராது. முற்பிறவிகளில் இந்த உறவுகளுக்கு நாம் செய்த பாவங்களால் உண்டான இந்த சாபங்களை இப்பிறவியில் நமது குடும்பத்திலுள்ள அதே உறவுகளுக்கு நன்மைகளைச் செய்துதான் தீர்க்க வேண்டும்.

"நான்கு பேருக்கு நன்மை செய்தால், நமக்கு நல்லது நடக்கும்; நமக்கு புண்ணியம் உண்டாகும்' எனக் கூறிக்கொண்டு, தனக்கு சம்பந்தமே இல்லாத யார் யாருக்கோ பணம், பொருள் என தானம், தர்மம் செய்தால் இந்த பாவ- சாபங்கள் தீராது. கையிலுள்ள பணம்தான் விரயமாகும். இந்த நான்கு உறவுகளுக்குச் செய்தால்தான் நன்மை கிடைக்கும்.

பித்ருதோஷம், புத்திர சாபம் நீங்க, அமாவாசை திதி, வருடதிதி, பிண்ட தர்ப்பணம், காசி, கயா, இராமேஸ்வரம் என எங்கு சென்று எதைச் செய்தாலும், நமக்கு சம்பந்தமே இல்லாத கோவில்களுக்கு, மதம், சாதி, கடவுள்களின் பெயரால் மடங்கள் நடத்தும் குருமார்களுக்கு, தானம், பரிகாரம் பூஜை, ஹோமம் என பணம் செலவழித்தாலும் இந்த பாவங்கள் தீராது.

கண்ணனும் அகத்தியரும் நமக்கு பாவ- சாபங்கள் தீர காட்டிய உண்மையான பரிகாரங்களை இந்த நான்கு உறவுகளுக்குச் செய்து வாழ்ந்து பாருங்கள். உங்கள் வாழ்வில் உயர்வு, குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி உண்டாவதை அனுபவத்தில் அறிவீர்கள். நாம் சம்பாதிக்கும் பணம், சொத்துகள் நமது குடும்பத்தினருக்குத்தான். மற்றவர்களுக்கு அல்ல.

(தொடரும்)

செல்: 99441 13267

bala100223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe