Advertisment

கர்மவினை தீர கண்ணன் காட்டிய பரிகாரங்கள்! (19) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/remedies-shown-by-kannan-get-rid-karma-19-chithardasan-sunderji-jeevanadi

ருவருக்கு குழந்தைகளே பிறக்காமல் போவதற்கு அவரவர் முற்பிறவியில் உண்டான பித்ருதோஷம், புத்திரசாபம், பாமர சாபம் போன்ற கர்மவினைப் பதிவுகள் தான் காரணம். தன் இறப்பிற்குப்பின்பு, கர்ம காரியம் செய்ய மாததிதி, வருடதிதி, பிண்ட திதிக் கொடுத்தால்தான் தனது ஆத்மா அமைதியடைந்து சொர்க்கம் சேருமென்று சிலர் கூறுவதால் உண்டான தவறான எண்ணத்தால், தனது இனத்திலோ, உறவு களிலோ ஒரு குழந்தையை சுவீகாரம் எடுத்து வளர்ப்பதால், அவர்களே தங்களுக்கு பிரச்சினைகளை, சொத்து அழிவை உருவாக்கிக்கொள்கின்றார்கள்.

Advertisment

குழந்தையில்லாதவர்கள் பிள்ளையைத் தத்தெடுக்கக்கூடாது அல்லது தோஷங்கள் இல்லாத குழந்தையை கவனமாக ஜாதக ஆய்வினைசெய்து சுவீகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

Advertisment

ff

இனி சனி, ராகு சேர்க்கையால், உண்டான பாமர சாபத்தை கிருஷ்ணர் தன் நடை முறை செயல்கள்மூலம் எவ்வாறு நிவர்த்தி செய்தார் என்பதையும், அவரின் முந்தைய அவதாரங்களில் உண்டான பாமர சாபங்கள் எவை என்பதையும் அறிவோம்.

தேவர்களும் அசுரர்களும் இணைந்து, மந்தரமலையை மத்தாகக் கொண்டு, பாற்கடலை

ருவருக்கு குழந்தைகளே பிறக்காமல் போவதற்கு அவரவர் முற்பிறவியில் உண்டான பித்ருதோஷம், புத்திரசாபம், பாமர சாபம் போன்ற கர்மவினைப் பதிவுகள் தான் காரணம். தன் இறப்பிற்குப்பின்பு, கர்ம காரியம் செய்ய மாததிதி, வருடதிதி, பிண்ட திதிக் கொடுத்தால்தான் தனது ஆத்மா அமைதியடைந்து சொர்க்கம் சேருமென்று சிலர் கூறுவதால் உண்டான தவறான எண்ணத்தால், தனது இனத்திலோ, உறவு களிலோ ஒரு குழந்தையை சுவீகாரம் எடுத்து வளர்ப்பதால், அவர்களே தங்களுக்கு பிரச்சினைகளை, சொத்து அழிவை உருவாக்கிக்கொள்கின்றார்கள்.

Advertisment

குழந்தையில்லாதவர்கள் பிள்ளையைத் தத்தெடுக்கக்கூடாது அல்லது தோஷங்கள் இல்லாத குழந்தையை கவனமாக ஜாதக ஆய்வினைசெய்து சுவீகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

Advertisment

ff

இனி சனி, ராகு சேர்க்கையால், உண்டான பாமர சாபத்தை கிருஷ்ணர் தன் நடை முறை செயல்கள்மூலம் எவ்வாறு நிவர்த்தி செய்தார் என்பதையும், அவரின் முந்தைய அவதாரங்களில் உண்டான பாமர சாபங்கள் எவை என்பதையும் அறிவோம்.

தேவர்களும் அசுரர்களும் இணைந்து, மந்தரமலையை மத்தாகக் கொண்டு, பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்கும்போது, அந்தமலை சாய்ந்து விடாமலிருக்க, மகாவிஷ்ணு கூர்ம அவதாரமெடுத்து, மலையின் அடிப்பகுதியில் அச்சாக இருந்து தாங்கிக் கொண்டார். அமிர்தம் எடுத்தபின்பு, அசுரர்களின் உழைப்பிற்குக் கூலியாகக் கொடுக்கவேண்டிய அமிர்தத்தை, மோகினி அவதாரமெடுத்து, தேவர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு, அசுரர்களுக்குத் தராமல் ஏமாற்றிவிட்டார்.

மகாவிஷ்ணு தன்னிடம் வேலைசெய்த, அசுர வேலைக்காரர்களின் கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றியதால், அந்த வேலைக்காரர்கள் மனம் வெறுத்துவிட்ட பாமர சாபம் மகாவிஷ்ணுவைப் பற்றிக்கொண்டது.

இராமாவதாரத்தில், இராவணணால் இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை சிறைமீடக, வானரங்கள் எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவிசெய்தன. போரில் பல வானரங்கள் தங்கள் இன்னுயிரை நீத்து இறந்து போயின. பாமர வானரங்களின் உழைப்பைப் பெற்று, தன் மனைவியை மீட்டபின்பு இராமர், அவர்களுக்கு பிரதிபலனாக எந்த நன்மைகளையும் செய்யவில்லை. இதன்மூலமும் பாமர சாபம் ஏற்பட்டுவிட்டது.

இந்த இரண்டு சாபங்களையும் நீக்க வேண்டுமென்றால் அவர்களைப்போல் ஒரு பாமர கூலியாளாக வாழ்ந்துதான் நிவர்த்தி செய்யவேண்டுமென்பது இயற்கை விதி. இந்த பூமியில் கடவுளானாலும், மனிதர்களானா லும் பிறந்துவிட்டால் தனது முற்பிறவிகளில், எந்த வாழ்க்கை நிலையில் உள்ளவர்களைத் துன்புறுத்தி செயல்பட்டு பாவங்களை சம்பாதித்துக்கொண்டார்களோ, அடுத்த பிறவியில், அவர்களைப் போன்றே வாழ்க்கை அமைந்து, வாழ்ந்துதான் சாபங்களை நிவர்த்தி செய்துகொள்ளமுடியும். உடல் ஊனமுற்றவர்களுக்கு பாவம் செய்தால், அடுத்த பிறவியில் உடல் ஊனமுற்றவனா கப் பிறந்து அனுபவித்துதான் பாவத்தைத் தீர்க்கமுடியும். ஒருவன் சொத்தை ஏமாற்றிப் பறித்தால், அடுத்த பிறவியில், ஒருவனால் ஏமாற்றப்பட்டு பணத்தை இழக்க நேரும்.

இந்த பூமியில் ஒருவன் எவ்வளவு பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அந்த செல்வத்தை அவன் அனுபவிக்க முடியாமல், முற்பிறவி பாவ- சாபம் தடுத்து, அன்றாடம் உழைத்துப் பணம் சம்பாதித்துப் பிழைக்கும் வாழ்க்கையை விதி அமைத்து விடும். இதை மக்கள் புரிந்துகொள்ளவே, கிருஷ்ணர் பாமரனாக வாழும் வாழ்க்கையைத் தானே அமைத்துக்கொண்டு வாழ்ந்தார்.

இந்த மனித சமுதாயத்தில் எதனையும், சரியாகச் செய்யத் தெரியாதவர்களை, "மாடுமேய்க்கத்தான் சரியானவர்கள்' என்று கூறுவார்கள். மனிதர்களின் ஆதரவின்றி, பசுக்களின் ஆதரவால் வாழும் யாதவர் குலத்தில் ஒரு பாமரனாக வாழ முடிவெடுத்து, ஆயர் குலத்தலைவனான நந்தகோபனுக்கும், தேவகிக்கும் மகனாக பூமியில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார். கிருஷ்ணர் தன் முற்பிறவி பாவ- சாபங்களைத் தீர்த்து வாழ்வதற்கு, சாதி, மதம் என எதனையும் பார்க்கவில்லை. பாமரனுக்கு செய்த பாவத்தை, ஒரு பாமரத் தொழிலாளியாக வாழ்ந்து நிவர்த்திசெய்தார். கிருஷ்ணர் வாழ்க்கை மூலம் சாதி, மதம் பிறப்பால் உண்டா னது அல்ல; செய்யும் தொழிலால்தான் உண்டானது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

இராமாவதாரத்தில் வானரங்களாக இருந்தவர்கள், கிருஷ்ணாவதாரத்தில் யாதவ இன மக்களாகப் பிறந்திருந்தார் கள். கிருஷ்ணர் தன் அவதார முடிவுவரை, அவர்களில் ஒருவனாக வாழ்ந்தார். மற்றவர்கள் இவரைத் தாழ்வாகப் பேசினா லும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், யாதவர்களுக்கு உண்டான சிரமங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றி, இறுதிவரை இடையனாக வாழ்ந்து பாமர சாபத்தை நிவர்த்திசெய்தார்.

இந்த பூமியில் மக்கள் பசுவின் பாலை அமிர்தமென்று கூறுவார்கள். பசுவின் பால் தாய்ப்பாலுக்கு இணையாகச் செயல்பட்டு, குழந்தைகள் உயிரைக் காப்பாற்றும் சக்திகொண்டது. கூர்மா வதாரத்தில், அசுரர்களுக்கு அமிர்தத் தைக் கொடுக்காமல் ஏமாற்றியதால், கிருஷ்ணாவதாரத்தில் மாடுகளை மேய்த்து பசும் தரும் பாலைப் பாகு பாடின்றி அனைவருக்கும் பகிர்ந்தளித்து பருகச் செய்தார்.

இந்த பாமர சாபங்களை நிவர்த்தி செய்யவே, மகாவிஷ்ணு கிருஷ்ணா வதாரத்தில் இடையனாக, யாதவர்குலத் தைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தார்.

ஒரு மனிதனின் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2-ஆவது ராசிகளில் ராகு அல்லது கேது இருந்தா லும், அதேபோன்று சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2-ஆவது ராசிகளில் ராகு அல்லது கேது இருந்தாலும், அவர்களுக்கு முற்பிறவியில் தனது தாய்- தந்தை, மகன்களுக்கு செய்த பாவத்தால் உண்டான பித்ரு தோஷம், புத்திர சாப பாதிப்பு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala030223
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe