கிருஷ்ணரின் ஜாதகத்திலுள்ள சனி, ராகு சேர்க்கைமூலம், அவரின் முற்பிறவி பாவ- சாபங்களையும், அதனால் அவர் வாழ்வில் அனுபவித்துத் தீர்த்த பித்ரு தோஷப் பலன்களையும் அறிவோம்.
இராமாவதாரத்தில் இராமன், தன் தாய்- தந்தைக்கு ஒரு மகன் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யவில்லை. அதேபோல் தான் பெற்ற மகன்களாகிய லவன், குசன் இருவருக்கும், ஒரு தந்தை செய்ய வேண்டிய செயல்களையும் செய்யவில்லை. இது பித்ரு தோஷம், புத்திர சாபத்தை உருவாக்கியது. அதேபோல் முந்தைய அவதாரங்களில் பல அசுர மன்னர்களைக் கொன்று, பல குழந்தைகளுக்கு தந்தை பாசம் கிடைக்கவிடாமல் செய்த பாவமும் சேர்ந்து, பாவ- தோஷத்தை வலுவாக்கியது.
இந்த தோஷ பாதிப்புகளால் கிருஷ்ணா வதாரத்தில், பெற்றவர்களாலேயே புறக் கணிக்கப்பட்டு, நந்தகோபன்- தேவகி யிடம், மூன்றாம் மனிதர் ஆதரவில் தத்துப் பிள்ளையாக வளர்ந்தார். கிருஷ்ணர், பெற்றோர்களுடன் பூர்வீகத்தில் வாழ முடியவில்லை. தன் முன்னோர்கள் சொத்து களை அனுபவிக்க முடியவில்லை. தனது குடும்பத்தார், உறவுகள், சொந்த இனத் தாரால் எந்த நன்மையும் அடையவில்லை. மாடு மேய்த்து வாழும் ஆ
கிருஷ்ணரின் ஜாதகத்திலுள்ள சனி, ராகு சேர்க்கைமூலம், அவரின் முற்பிறவி பாவ- சாபங்களையும், அதனால் அவர் வாழ்வில் அனுபவித்துத் தீர்த்த பித்ரு தோஷப் பலன்களையும் அறிவோம்.
இராமாவதாரத்தில் இராமன், தன் தாய்- தந்தைக்கு ஒரு மகன் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யவில்லை. அதேபோல் தான் பெற்ற மகன்களாகிய லவன், குசன் இருவருக்கும், ஒரு தந்தை செய்ய வேண்டிய செயல்களையும் செய்யவில்லை. இது பித்ரு தோஷம், புத்திர சாபத்தை உருவாக்கியது. அதேபோல் முந்தைய அவதாரங்களில் பல அசுர மன்னர்களைக் கொன்று, பல குழந்தைகளுக்கு தந்தை பாசம் கிடைக்கவிடாமல் செய்த பாவமும் சேர்ந்து, பாவ- தோஷத்தை வலுவாக்கியது.
இந்த தோஷ பாதிப்புகளால் கிருஷ்ணா வதாரத்தில், பெற்றவர்களாலேயே புறக் கணிக்கப்பட்டு, நந்தகோபன்- தேவகி யிடம், மூன்றாம் மனிதர் ஆதரவில் தத்துப் பிள்ளையாக வளர்ந்தார். கிருஷ்ணர், பெற்றோர்களுடன் பூர்வீகத்தில் வாழ முடியவில்லை. தன் முன்னோர்கள் சொத்து களை அனுபவிக்க முடியவில்லை. தனது குடும்பத்தார், உறவுகள், சொந்த இனத் தாரால் எந்த நன்மையும் அடையவில்லை. மாடு மேய்த்து வாழும் ஆயர்குல மக்களையே தன் உறவாகக்கொண்டு, மாடுகளை மேய்த்து தன் சுய உழைப்பால் வாழ்ந்தார்.
கிருஷ்ணர் தான் பெற்ற குழந்தைகளாலும் எந்த நன்மைகளையும் அனுபவிக்கவில்லை. கிருஷ்ணர் மரணமடைவதற்குமுன்பே, அவர் பெற்றபிள்ளைகள் இறந்துவிட்டார்கள். அதனால் பெற்ற பிள்ளைகளாலும் உதவியில்லாமல் போனது.
ஒரு மனிதன் தனது முற்பிறவி களில், தன்னைப் பெற்ற தாய்- தந்தைக்கு அவர்களின் வயது முதிர்ந்த காலத்தில் உணவு, உடை, இருப்பிடம் தந்து அவர்களை நல்லபடியாகக் காப்பாற்றி பெற்ற கடனைத் தீர்க்காமல் இருந்திருந்தால், இப்பிறவி யில் அவனுக்கு பெற்றவர்களாலும் தான் பெற்ற பிள்ளைகளாலும் நன்மை கிடைக்காது என்பதை கண்ணன் தன் வாழ்வின்மூலம் மக்களை அறியச் செய்துள்ளார்.
இந்தப் பிறவியில் யார் ஒருவர் தன்னைப் பெற்ற தாய்- தந்தையரையும், தான் பெற்ற பிள்ளைகளையும் காப்பாற்றாமல் இருக்கிறாரோ அவர் அடுத்த பிறவியில் தன் பெற்றோர்களாலும், பிள்ளைகளாலும் புறக்கணிக்கப்பட்டு, அனாதைபோல் வாழ்ந்து மடிவார். சிலருக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் போகும், இன்னும் சிலர், இளம் வயதிலேயே தந்தையை இழக்க நேரிடும். அல்லது தான் பெற்ற பிள்ளையை இழக்க நேரும்.
வாசக அன்பர்கள், கிருஷ்ணரின் வாழ்க்கைமூலம், ஒரு உண்மையை அறிந்துகொள்ளவேண்டும். இன்றையநாளில், குழந்தை பாக்கியமில்லாத பலர் ஏதாவதொரு குழந்தையைத் தத்துப்பிள்ளையாக எடுத்துக்கொண்டு, தங்கள் பிள்ளையாக சகல உரிமைகளையும் தந்து வளர்த்துவருகிறார்கள். இந்த தத்துப்பிள்ளை எடுக்கும் வழக்கம், செட்டிநாட்டுப் பகுதி செட்டியார் இன மக்களிடம் அதிகமாக இருந்தது. இப்போது எல்லாரும் இந்த முறையில் ஒரு பிள்ளையை சுவீகாரம் எடுத்து வளர்த்துவருகிறார்கள்.
ஒரு குழந்தையை சுவீகாரம் எடுக்கும்முன்பு, அதற்குப் பிறப்பு ஜாதகம் இருந்தால், அதிலுள்ள பாவ- சாப தோஷங்களை நன்கு ஆராய்ந்து பார்த்து, தாய்- தந்தை, குடும்ப ஒற்றுமையை, பூர்வீக சொத்துகளை அழித்து விடும் எந்த தோஷமும் இல்லையென்றால் அந்தக் குழந்தையைத் தத்து எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு குழந்தையைப் பெற்றபின்பு, வளர்க்க முடியாத வறுமை சூழ்நிலையில் உள்ளவர்கள்தான் தான் பெற்ற பிள்ளையைப் பிறருக்குத் தத்து கொடுப்பார்கள். அந்தக் குழந்தை பிறந்தபின்புதான் அவர்கள் வாழ்வில் வறுமையை அடைந்துகூட இருப்பார்கள். சில குழந்தைகள் பிறந்தபின்பு அந்த குழந்தையின் தாய் அல்லது தந்தை என யாராவது ஒருவர் இறந்திருக்கலாம் அல்லது பிரிந்திருக்கலாம். இதற்குக் காரணம் அந்தக் குழந்தையின் முற்பிறவி பாவ- சாபப் பதிவுகள்தான்.
இதுபோன்று தோஷமுள்ள குழந்தைகளைத் தத்தெடுத்து, இனி நாங்கள்தான் தாய்- தந்தை என வாக்குத்தத்தம் செய்தவர்கள் எவ்வளவு பெரிய செல்வந்தர்களாக இருந்தாலும், இந்த தத்துப்பிள்ளை வந்தவுடன், அந்த செல்வச் சிறப்பு அழிந்து குறைவுபடலாம். தத்து எடுத்த தாய்- தந்தைக்கு கண்டங்கள், கஷ்டங்கள், நோய்த் தாக்கம், துஷ்ட சக்திகள் பாதிப்பு, தத்துப்பிள்ளையால் தாய்- தந்தை ஒதுக்கப்படுதல் போன்று ஏதாவது பாதிப்பினை அடைய நேரும். ஆனால் அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்து, பிறருக்குத் தத்துக் கொடுத்த பெற்றோர்கள், அதன்பின்பு செல்வம் சம்பாதித்து வாழ்வில் உயர்ந்த நிலையினை அடைந்துவிடுவார்கள்.
இந்த தத்துப்பிள்ளை பற்றிய உண்மையை கிருஷ்ணர் பிறப்பு, வாழ்க்கைமூலம் அறிந்து கொள்வோம்.
கிருஷ்ணர், தேவகியின் கர்ப்பத்தில் கருவாகி உருவானவுடனேயே, அவரின் பெற்றோர்களான வசுதேவரும் தேவகியும், கம்சனால் நாடு, நகரம் இழந்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். பல சிரமங் களை அடைந்தார்கள்.
கிருஷ்ணர் பிறந்தவுடனேயே அவரை வசுதேவர் தூக்கிச்சென்று, தந்தகோபன் வீட்டில் வைத்து விட்டான். கிருஷ்ணர் நந்தகோபனுக்கு தத்துப்பிள்ளையாக ஆயர்பாடியில் அவர்களுடனே வளர்ந்துவந்தார். கிருஷ்ணர் வசுதேவர், தேவகியை விட்டுப் பிரிந்தபின்பு, கம்சன் இருவரையும் சிறையிலிருந்து விடுவித்தான். ஆனால் ஆயர்பாடியில் யாதவர்களும், நந்தகோபனும் கம்சனால் மிகவும் சிரமப்பட்டார்கள்.
ஆயர்பாடியைவிட்டு கோகுலம் சென்றார்கள். பின்பு அங்கிருந்து பிருந்தாவனம் சென்று வசித்தார்கள். கண்ணனின் முற்பிறவி பாவ- சாபப் பதிவுகள் அவரை வளர்த்தவர்களைப் பாடாய்ப்படுத்திவிட்டது. இதனையே "தத்துவப்பிள்ளை தோஷம' எனக் கூறுவார்கள். நமது வாழ்வில் ஒருவர் நம்முடன் சேரும்போது, நன்மையும், மற்றொருவர் சேரும்போது தீமை களும் நடக்கின்றன. இதற்குக் காரணம் நம்முடன் சேர்ந்தவர்களின் யோகமும், தோஷமும்தான் காரணம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
(தொடரும்)
செல்: 99441 13267