கடக ராசியில் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்ய நட்சத்திரங்கள் உள்ளன. புனர்பூசத்திற்கு வியாழ தசையும், பூசத்திற்கு சனி தசையும், ஆயில்யத்திற்கு புதன் தசையும் வரும்.
புனர்பூசத்தில் பிறந்தவர்கள் பெரும்பகுதி மிதுன ராசிப் பலன்களைக் கொண்டவர்கள். இவர்கள் படிப்பைவிட அதிகமாக தொழிலையே நம்புவார்கள். கெட்டிக்காரத் தனத்துடனும், தன்னைத்தானே புகழ்ந்து பேசிக்கொண்டும் இருப்பார்கள். இவர்கள் அரசாங்க வேலைக்குச் செல்வதை விட தொழில் அல்லது தனியார்த் துறைகளில் சிறந்து விளங்கு வார்கள். சொந்த பந்தங்களுடன் பிரியமில்லாமல் இருப் பார்கள். பெண்களுடன் பழகிவருவதால் சிலர் சமூகத்தில் அவப்பெயருக்கு ஆளாவர். ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் தட்சிணாமூர்த்தியை வணங்கி வரவேண்டும்.
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அங்க லட்சணத்துடன் இருப்பார்கள். கல்வ
கடக ராசியில் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்ய நட்சத்திரங்கள் உள்ளன. புனர்பூசத்திற்கு வியாழ தசையும், பூசத்திற்கு சனி தசையும், ஆயில்யத்திற்கு புதன் தசையும் வரும்.
புனர்பூசத்தில் பிறந்தவர்கள் பெரும்பகுதி மிதுன ராசிப் பலன்களைக் கொண்டவர்கள். இவர்கள் படிப்பைவிட அதிகமாக தொழிலையே நம்புவார்கள். கெட்டிக்காரத் தனத்துடனும், தன்னைத்தானே புகழ்ந்து பேசிக்கொண்டும் இருப்பார்கள். இவர்கள் அரசாங்க வேலைக்குச் செல்வதை விட தொழில் அல்லது தனியார்த் துறைகளில் சிறந்து விளங்கு வார்கள். சொந்த பந்தங்களுடன் பிரியமில்லாமல் இருப் பார்கள். பெண்களுடன் பழகிவருவதால் சிலர் சமூகத்தில் அவப்பெயருக்கு ஆளாவர். ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் தட்சிணாமூர்த்தியை வணங்கி வரவேண்டும்.
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அங்க லட்சணத்துடன் இருப்பார்கள். கல்வியில் திறமை, தெய்வீக வழிபாடுமிக்கவர்கள். ஆச்சார, அனுஷ்டானங் களை அறிந்திருப்பார்கள். பேச்சில் சாமர்த் தியம் இருக்கும். பண விஷயங்களில் சுயநலப் புலிகளாக இருப்பார்கள். இவர்களது மிருகம் ஆண். எனவே ஆண்கள் மட்டுமே சிறந்து வாழமுடியும். பெண்ணாகப் பிறந்துவிட்டால் வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்காது. அவ்வாறு பெண் பிறந்தால் பெற்றோர் அவர்களை நன்றாகப் படிக்க வைக்கவேண்டும்.
அவரவர் தகுதிக்கேற்ப அரசாங்க வேலைக்குச் சென்று விடுவார்கள். சனீஸ்வரரை எப்போதும் வணங்கிவர வேண்டும். வாழ்க்கையில் ஒருமுறையேனும் தேனி மாவட்டத்திலுள்ள குச்சனூர் சென்று சனீஸ்வரரை வணங்கி, அருகிலுள்ள தட்சிணா மூர்த்தியையும் வணங்கிவர நன்மையுண்டாகும். ஆண், பெண் இருபாலரும் பிரம் மஹத்தி தோஷநிவர்த்தி செய்து கொள்வது நல்லது.
ஆயில்யத்தில் பிறந்தவர் களுக்கு புதன் தசை வரும். இவர் களால் மாமியாருக்கு தோஷம் என்ற கருத்து நிலவுகிறது. லக்னத் திற்கு 3-ஆம் இடம் மாமனார்; 10-ஆமிடம் மாமியார் ஸ்தானம்.
இந்த இடங்களில் புதன் வந்தால்தான் மாமியாருக்கு கெடுதலைக் கொடுக்கும். அப்படி இல்லையென்றால் மாமனார், மாமியார் நல்ல ஆயுளோடு இருப் பார்கள். எனவே புதனைக் கொண்டுதான் திருமணப் பொருத்தத்தைப் பார்க்க வேண்டுமே தவிர மற்ற கிரகங் களை வைத்துப் பார்க்கக் கூடாது. இவர்கள் சிவந்த மேனி யுடன் லட்சணமாக இருப் பார்கள். கல்வியில் திறமையும், தொழிற்கல்வியில் தேர்ந் தவர்களாகவும் இருப்பார்கள். 35 வயதுக்குமேல் அரசாங்க வேலையில் சிறந்து விளங்கு வார்கள். இவர்கள் பிரம் மஹத்தி தோஷப் பரிகாரம் செய்துகொள்ளவேண்டும். இரண்டு குழந்தை பாக்கியம் உடையவர்கள். தாய்- தந்தையரிடம் மரியாதையோடு இருப் பார்கள். தீர்க்கமான ஆயுளோடு வாழ் வார்கள்.
பூச நட்சத்திரத்தில் பிறந்த ஆண்- பெண் இருபாலருக்கும் சனீஸ்வரர்தான் கடவுள். இவரை வாரந்தோறும் வணங்கிவரவேண்டும். அல்லது கீழ்க்காணும் சுலோகத்தைச் சொல்லி வணங்கிவந்தால் பிணி, வறுமை, பகை நீங்கி மேன்மையுறலாம்.
"மந்தனாம் சனியே யுந்தன்
மகத்துவம் அறிந்து கொண்டேன்
வந்ததோர் துயரம் நீக்கு
மனதினில் அமைதி ஊட்டு.'
தினசரி பூஜையறையில் ஒரே நேரத்தில் 18 முறை சொல்லி வணங்கவும். இவர்களுக்கு பாட்டனார் தோஷமிருக்கும். அது நீங்க பிரம்மஹத்தி தோஷநிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு கேது தசை முடியும் தறுவாயில் முகத்தில் கட்டிகள் வந்து நீங்கும். அந்தக் கட்டி கண், மூக்கு, செவி ஆகிய இடங்களில் வந்தால் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது. இரவு நேரங்களில் மஞ்சள்பொடியை மட்டும் தடவினால் போதும். இவர்களுக்கு கேது தசை ஆரம்பித்து ஏழு வருடம் முடியும் வரை 27 காணைப் பயிறு (கொள்ளு) எடுத்து வெள்ளைத் துணியில் முடிந்து பூஜை யறையில் வைத்து வணங்கிவர, கேது தசை தோஷம் நீங்கும். இதுபோக பிரம் மஹத்தி தோஷநிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். திருப்பரங்குன்றம் சென்றுவணங்கிவ ரவேண்டும்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் எல்லா நாட்களிலும் காலை 7.00 முதல் 9.00 மணிக்குள் பிரம்மஹத்தி தோஷநிவர்த்தி செய்வார்கள். கட்டணம் ரூ.900-க்குள் ஆகும்.
புனர்பூசம், பூசம், ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பரிகாரம்:
கும்பகோணம்- திருவிசைநல்லூர்
அருகேயுள்ள திருந்துதேவன்குடியில் கற்கடேஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு காலை 10.30 மணிக்குள் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த அபிஷேக எண்ணெய் வாங்கி வந்து உபயோகப்படுத்த வேண்டும். எல்லா நாட்களிலும் தோஷநிவர்த்தி செய்வார்கள்.
செல்: 94871 68174