விருச்சிக ராசியில் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்கள் இடம் பெறும்.

விசாகம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் கல்வியில் மந்தமாக இருந்தாலும், தொழிலில் சிறந்தவர்களாக இருப்பார்கள். மோட்டார் வாகனத்தை இயக்குவதில் வல்லவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் கொண்டவர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெற தீவிரமாக முனைவார்கள். தைரியம் அதிகம் உண்டு. இவர்களுக்கு மிருகமாக பெண்புலி அமைகிறது. ராட்சச கணம். ஆனால் பெண்புலி வருவதால் சாந்தமாகவே இருப்பார்கள். எதையும் நேருக்கு நேர் செய்வார்கள். இளமையில் தந்தையைப் பிரிவார்கள். தாய் முதுமைவரை இருப்பார். இவர்களுக்குப் பெரும்பாலும் தம்பி, தங்கைகள் இருக்கமாட் டார்கள். மனைவியிடம் அன்பாக இருப் பார்கள். இவர்களது ஆயுள் 85 வரை செல்லும்.

vv

Advertisment

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கல்வியில் உயர்ந்தவர்களாக விளங்குவார்கள். பலர் கருமை நிறத்தவர்களாக இருப்பார்கள். முகம் லட்சணமாக இருக்கும். ஆச்சார, அனுஷ்டானங்களில் பற்றுதல் உண்டு.

பெரியவர்களிடம் விசுவாசத்துடன் இருப் பார்கள். பெரிய காரியங்களை தந்திரங்களி னாலும், உபாயங்களாலும் முடிக்க முயல்வார்கள். நல்ல குணத்துடன் பழகுவார்கள்.

மனைவியிடம் அன்பாக நடந்துகொள் வார்கள். மனைவியின் பேச்சிற்கு அதிக மதிப் பளிப்பார்கள். தாய்- தந்தையிடம் பிரியமாக நடந்துகொள்வார்கள். இவர்களது வாழ்க்கை யில் எப்பொழுதும் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டே இருக்கவேண்டும். ஆயினும், தங்களது திறமையால் சமாளித்து வெற்றிபெறு வார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு மூன்றும் பெண் குழந்தைகளாக இருக்கும். நான்காவதாகதான் ஆண் குழந்தை உண்டு.

Advertisment

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலானோர் கெட்டிக் காரர்களாக இருப்பார்கள்.

தொழிற்கல்விக்கு சொந்தக் காரர்கள். 70 வயதிற்குமேல் வாழ் வார்கள். புத்தி சாதுர்யத் தினாலும், தைரியத்தினா லும் கடைசிமூச்சுவரை உற்சாகத்தையும், உழைப்பையும் கொண்டிருப் பார்கள். மனைவி, கணவன், பிள்ளைகளிடம் அதிகப் பிரியம் கொண்டிருப்பார்கள். இவர்களது இளமைக்காலத்தில் காதல் திருமணம் செய்யநேர்ந்தால், அஷ்டம ராசியான மிதுன ராசியில் பிறந்தவர்களைத் தவிர்க்க வேண்டும். இவர்களது மிருகம் கலைமான்.

இவர்கள் அடுத்தவர்களுக்கு உபயோகமாக இருப்பார்களே தவிர, தீமை செய்யமாட்டார்கள். ராட்சச குணம் என்பது வரவே வராது.

தாய்- தந்தையர் பார்த்துவைக்கும் திருமணம் நடந்தால் பெரும்பகுதி பெண்களுக்கு கணவர் இருக்கமாட்டார். பிற்கால வாழ்க்கையில் அரசுப் பணியில் இருப்பார்கள். நல்ல குணங்களுடன் பழகுவார்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந் தவர்கள் பெரும்பகுதியினர் பிரம்மஹத்தி தோஷம் அடைந்தவர்கள். இவர்கள் 19 வயதிற்குமேல் பிரம்மஹத்தி தோஷநிவர்த்தி செய்துகொள்ளவேண்டும்.

பரிகாரங்கள்

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் மதுரை அருகே சோழவந்தான் அருகிலுள்ள சனீஸ் வரரை வணங்கிவரவேண்டும். பிரம்மஹத்தி தோஷநிவர்த்தி செய்யவேண்டும்.

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவிடைமருதூர் ஸ்ரீமுகாம்பிகையை வணங்க வேண்டும். மேலும் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்யவேண்டும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோவை அருகே பல்லடத்திலுள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலுக்குச் சென்றுவர வேண்டும். பிரம்மஹத்தி தோஷநிவர்த்தி செய்யவேண்டும்.

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நீசமாகி இருப்பதால் ஒருமுறையேனும் கும்ப கோணம்- திருவிசைநல்லூர் அருகிலுள்ள திருந்துதேவன்குடியிலுள்ள கற்கடகேஸ்வரர் கோவில் சென்று நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெய் வாங்கிவந்து கோவிலில் சொன்னபடி உபயோகப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் சந்திர தோஷம் நீங்கும்.

செல்: 94871 68174

________________________

உடல் பிணி, உள்ளப் பிணி தீர்க்கும் தன்வந்திரி தைலாபிஷேக விழா!

வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மூலவர் ஸ்ரீதன்வந்திரிக்கு 28-11-2019 முதல் 14-12-2019 வரை காலை 8.00 மணிமுதல் 11.30 மணிவரை தைலாபிஷேகமும், மாலையில் பாராயணங்களும் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து 14-12-2019 கர்ப்பரக்ஷாம்பிகை ஹோமத்துடன் 108 சுவாசினிகள் பங்கேற்கும் சுவாசினி பூஜை என்கிற சுமங்கலி பூஜையும் நடைபெறவுள்ளது.

தன்வந்திரி மூல மந்திரஜெபம் மற்றும் ஹோமத்துடன் நல்லெண்ணெயைக் கொண்டு உலகமக்களின் ஆரோக்கியம் கருதியும், ருண ரோக நிவர்த்திக்காகவும், நவகிரக தோஷ நிவர்த்திக்காகவும், உடல்ரீதியாகவும் சருமரீதியாகவும் ஏற்படும் தோஷங்கள் குறைவதற்காகவும் தைலக்காப்பு எனும் தைலத் திருமஞ்சனம் நடைபெறவுள்ளது.

நல்லெண்ணெய்யினால் தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம் செய்வதால் நோய் விரைவில் குணமடையும். ஆயுள் தோஷம் நீங்கும். மனத்தடைகள் விலகும். மனநோய்கள் அகலும். நவகிரகங்களால் ஏற்படும் கஷ்டங்கள் குறையும். சர்க்கரை நோய், புற்று நோய், வலிப்பு நோய், மூட்டு வலி, வாய்ப்புண், வயிற்றுப்புண், குடல் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

கணவன்- மனைவி ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிடைக்கவும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்றுசேரவும், குழந்தை பாக்கியம் போன்ற பல்வேறு வேண்டு தல்களை முன்வைத்து 108 சுமங்கலி பூஜையும், கட்டுப் பிரார்த்தனையும் யாகத்துடன் நடைபெறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை- 632 513.

வேலூர் மாவட்டம், தொலைபேசி: 04172- 230033, 230274. அலைபேசி: 94433 30203.

Email : [email protected]