12 லக்னத்திற்கும் சந்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/remedies-remove-moon-dosha-12-lagna-prasanna-astrologer-i-anandhi

சூரியனுக்கு அடுத்ததாக நமது கண்களுக்குப் புலப்படும் இயற்கை சக்தி சந்திரன். பெண்மையும் மென்மையும் நிறைந்த கிரகம். சந்திரன் மாத்ருகாரகனா வார். ஒரு ஜாதகத்தில் உடல்காரகன், மாத்ருகாரகன் மற்றும் மனோகாரகனா கிய சந்திரன் நல்ல பலம் பெற்றிருந்தால் மட்டுமே வாழ்வில் நடக்கும் அனைத்து சுப- அசுப நிகழ்வுகளை எதிர்கொண்டு கடக்கும் மனோதிடம் உண்டாகும்.

ஒருவர் அளவுக்கு அதிகமான இன்பத்தில் இருந்தாலும், தாங்கமுடியாத துயரத்தில் வாழ்ந்தாலும் சந்திரனே காரணமாக அமைகிறது. ஒருவரின் சுய ஜாதகத்தில் சந்திரனின் நிலைப்பாடு மிகமிக முக்கியம். மனம்சார்ந்த போராட்டத்தை சந்திக்காத மனிதர்கள் இருப்பது அரிது.

ஒருவர் எந்த ராசி, லக்னமாக இருந்தாலும் சந்திரனின் பலம் குறைந்தால் மன அழுத்தம், மனம்சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். மனிதனுக்கு அதிகப்படியான மன அழுத்தம், மன உளைச்சல் பிரச்சினைகளைத் தருவதில் சந்திரனுடன் சம்பந்தம் பெறும் ராகு- கேது மற்றும் சனியின் பங்கு அளப்பரியது.

ஒளித்தன்மை கொண்ட சந்திரன்மீது கோட்சாரத்தில் இருள் நிறைந்த இந்த மூன்று கிரகங்களும் பயணிக்கும்பொழுதும், சந்திர தசாபுக்திகள் வரும் காலகட்டத்திலும், சந்திரன்- ராகு, சந்திரன்- கேது, சந்திரன்- சனி இவர்களின் தசாபுக்திக் காலங்களி லும் மனதைச் சார்ந்த ஒரு வகையான அழுத்தத்துடன் அனைத்து விஷயங்களும் நடக்கும். விதியை மதியால் மட்டுமே வெல்ல முடியும். ஒரு ஜாதகத்தில் குற்றம் மற்றும் குறைகளை மதி எனும் சந்திரனுக்குப் பரிகாரம் செய்வதன்மூலம் நீக்கமுடியும்.

இனி பன்னிரண்டு லக்னங்களுக்கும் சந்திர தோஷம் நீக்கும் பரிகாரங்களைக் காணலாம்.

மேஷம்

மேஷ லக்னத்திற்கு சந்திரன் நான்காமதி பதி. சுய ஜாதகத்தில் சந்திரன் பலம்பெற்றால் சுகபோக வாழ்க்கை அமையும். தாய், தாய்வழி உறவுகளின் அன்பும் அரவணைப்பும் இருக்கும். பதினாறு வகை செல்வங்களும் நிரம்பியிருக்கும். ஆடம்பரமான சொத்துகள் நிறைந்தவர். விவசாயம், ரியல் எஸ்டேட், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் அதிகம். சிறிய முயற்சியில் அதிக வருமானம் கிடைக்கும். உழைக்காத வருமானம் உண்ட

சூரியனுக்கு அடுத்ததாக நமது கண்களுக்குப் புலப்படும் இயற்கை சக்தி சந்திரன். பெண்மையும் மென்மையும் நிறைந்த கிரகம். சந்திரன் மாத்ருகாரகனா வார். ஒரு ஜாதகத்தில் உடல்காரகன், மாத்ருகாரகன் மற்றும் மனோகாரகனா கிய சந்திரன் நல்ல பலம் பெற்றிருந்தால் மட்டுமே வாழ்வில் நடக்கும் அனைத்து சுப- அசுப நிகழ்வுகளை எதிர்கொண்டு கடக்கும் மனோதிடம் உண்டாகும்.

ஒருவர் அளவுக்கு அதிகமான இன்பத்தில் இருந்தாலும், தாங்கமுடியாத துயரத்தில் வாழ்ந்தாலும் சந்திரனே காரணமாக அமைகிறது. ஒருவரின் சுய ஜாதகத்தில் சந்திரனின் நிலைப்பாடு மிகமிக முக்கியம். மனம்சார்ந்த போராட்டத்தை சந்திக்காத மனிதர்கள் இருப்பது அரிது.

ஒருவர் எந்த ராசி, லக்னமாக இருந்தாலும் சந்திரனின் பலம் குறைந்தால் மன அழுத்தம், மனம்சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். மனிதனுக்கு அதிகப்படியான மன அழுத்தம், மன உளைச்சல் பிரச்சினைகளைத் தருவதில் சந்திரனுடன் சம்பந்தம் பெறும் ராகு- கேது மற்றும் சனியின் பங்கு அளப்பரியது.

ஒளித்தன்மை கொண்ட சந்திரன்மீது கோட்சாரத்தில் இருள் நிறைந்த இந்த மூன்று கிரகங்களும் பயணிக்கும்பொழுதும், சந்திர தசாபுக்திகள் வரும் காலகட்டத்திலும், சந்திரன்- ராகு, சந்திரன்- கேது, சந்திரன்- சனி இவர்களின் தசாபுக்திக் காலங்களி லும் மனதைச் சார்ந்த ஒரு வகையான அழுத்தத்துடன் அனைத்து விஷயங்களும் நடக்கும். விதியை மதியால் மட்டுமே வெல்ல முடியும். ஒரு ஜாதகத்தில் குற்றம் மற்றும் குறைகளை மதி எனும் சந்திரனுக்குப் பரிகாரம் செய்வதன்மூலம் நீக்கமுடியும்.

இனி பன்னிரண்டு லக்னங்களுக்கும் சந்திர தோஷம் நீக்கும் பரிகாரங்களைக் காணலாம்.

மேஷம்

மேஷ லக்னத்திற்கு சந்திரன் நான்காமதி பதி. சுய ஜாதகத்தில் சந்திரன் பலம்பெற்றால் சுகபோக வாழ்க்கை அமையும். தாய், தாய்வழி உறவுகளின் அன்பும் அரவணைப்பும் இருக்கும். பதினாறு வகை செல்வங்களும் நிரம்பியிருக்கும். ஆடம்பரமான சொத்துகள் நிறைந்தவர். விவசாயம், ரியல் எஸ்டேட், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் அதிகம். சிறிய முயற்சியில் அதிக வருமானம் கிடைக்கும். உழைக்காத வருமானம் உண்டு. முன்னோர் களின் சொத்துகளை வம்சாவளியாகப் பயன்படுத்துவார்கள். அரசு பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவுண்டு. சந்திரன் பலம்குறைந்தால் ஏற்ற- இறக்க மான வருமானம் இருக்கும். சொத்துகள் சேராது அல்லது சொத்துகள் பயன்படாது. தாயின் ஆதரவு குறையும்.

பரிகாரம்: திங்கட்கிழமை பாலாபிஷேகம் செய்து பெண் தெய்வங்களை வழிபட வேண்டும்.

ரிஷபம்

ரிஷப லக்னத்திற்கு சந்திரன் முயற்சி ஸ்தானாதிபதி; சகாய ஸ்தானாதிபதி; வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் வழங்கக்கூடிய உபஜெய ஸ்தானாதிபதி. சந்திரன் சுப வலுப்பெற்றால் உடன்பிறந்தவர்களால் அனுகூலமுண்டு. தொட்டது துலங்கும். திட்டு மிட்டு செயல்படுவார்கள். பயணங்களால் ஆதாய முண்டாகும். ஆதாயமில்லாத செயலைச் செய்ய விரும்பாதவர்கள். எல்லா விஷயமும் வேகமாகவும் தனக்கு சாதகமாகவும் நடக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும். சந்திரன் பலம்குறைந்தால் திட்டமிட்டு செயல்படத் தெரியாது. உடன்பிறந்தவர்களின் அன்பு, அனுசரணை குறையும். ஓரிடத்தில் நிலையாக வசிக்கமுடியாது. அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்வார்கள்.

பரிகாரம்: திங்கட்கிழமை சுக்கிர ஓரையில் வடக்கு நோக்கிய பெண் தெய்வங்களை வழிபடவேண்டும்.

cc

மிதுனம்

மிதுன லக்னத்திற்கு சந்திரன் தன ஸ்தானாதி பதி. சுய ஜாதகத்தில் சந்திரன் பலமானால் தொடர்ச்சியான வருமானம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் இவர்களின் பேச்சிற்குக் கட்டுப்படுவார்கள். சூழ்நிலைக்கேற்ப பேசி காரியம் சாதிப்பார்கள். கடினமாக உழைக்க விரும்பமாட்டார்கள். மற்றவர் களுக்கு ஆலோசனை கூறி அதன் மூலம் ஆதாயம் தேடுவார்கள். சிறிய வேலை செய்துவிட்டு கடுமையாக உழைத்தவர்கள்போல் பாவனை காட்டுவார்கள். சந்திரன் பலம்குறைந்தால் நிலையான வருமானம் இருக்காது. குடும்ப உறவுகளின் அன்பு, ஆதரவு குறையும். எதனையும் மிகைப்படுத்தலாகக் கூறுவார்கள். யாராவது எதிர்த்தால் அமைதி யாவார்கள். கெஞ்சினால் மிஞ்சுவார்கள்; மிஞ்சினால் கெஞ்சுவார்கள்.

பரிகாரம்: திங்கட்கிழமை குளத்து மீன்களுக்குப் பொரியிட வேண்டும்.

கடகம்

கடக லக்னத்திற்கு சந்திரன் லக்னாதிபதி. சுய ஜாதகத்தில் சந்திரன் பலம்பெற்றால் அழகான தோற்றப் பொலிவும், தாயன்பும் நிறைந்தவர்கள். நினைத்த செயலை நினைத்த மாத்திரத்தில் செய்துமுடிக்கும் மனப்பான்மை உள்ளவர்கள். சுறுசுறுப்பாக இருப்பார்கள். சுய முயற்சியால் வெற்றிக்கனியை சுவைப்பவர்கள். சுக வாழ்க்கையில் நாட்டமுண்டு. கற்பனை சக்தி, சாத்வீக குணம், எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். சுய ஜாதகத்தில் சந்திரன் பலம்குறைந்தால், வெளியே தைரியமாக இருந்தாலும் உள்ளத்தில் பயமே மேலோங்கி நிற்கும். தன்னையும் நம்ப மாட்டார்கள்; பிறரையும் நம்பமாட்டார்கள். சந்தேக குணம் மிகுதியாக இருக்கும்.

பரிகாரம்: பௌர்ணமி காலங்களில் சிவசக்தியை வழிபடவேண்டும்.

சிம்மம்

சிம்ம லக்னத்திற்கு சந்திரன் விரயாதிபதி என்பதால் வலுக்கக்கூடாது. சந்திரன் பலம்பெற்றால் தேவையற்ற விரயங்கள், வைத்தியச் செலவு இருக்கும். வருமானம் உயர உயர சுகம் தேடுவதில் அதிக சிந்தனை ஏற்படுவதால், பெரும் முதலீடுள்ள தொழிலில் இருப்பவர்கள் கடுமையான தோல்வியை சந்திக்கிறார்கள். ஆரோக்கியமான உடலும் தெளிவான சிந்தனையும்கொண்ட ஒருவரே வாழ்வில் வெற்றிபெறமுடியும். மன சஞ்சலத்தால் இவர்களுக்கு ஆரோக்கியக் கேடு அதிக மாகும். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு.

பரிகாரம்: பௌர்ணமியன்று தயிர்சாதம் தானம் வழங்கவேண்டும்.

கன்னி

கன்னி லக்னத்திற்கு சந்திரன் லாபாதிபதி. சுய ஜாதகத்தில் சந்திரன் பலம்பெற்றால் உழைக்காத வருமானமுண்டு. தொட்டது துலங்கும். வாழ்வின் முன்னேற்றம், தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். இவர்களின் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே இவர்களைத் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் திறமையாகப் பயன்படுத்திக்கொள்வார்கள். வழக்குகளில் வெற்றியுண்டாகும். சுய ஜாதகத்தில் சந்திரன் பலம்குறைந்தால் மனதின் வேகத்திற்கேற்றவாறு இவரது செயல்களில் வேகம் இருக்காது. காரண மற்ற கவலைகளால் வாழ்க்கையைத் தொலைப்பவர்கள்.

பரிகாரம்: திங்கட்கிழமை வெண் பொங்கல் படைத்து அம்பிகையை வழிபட வேண்டும்.

துலாம்

துலா லக்னத்திற்கு சந்திரன் தொழில் ஸ்தானாதிபதி. சந்திரன் சுப வலிமைபெற்றவர்கள் ஆழ்ந்த புலமையும், தொழில் ஞானமும், தெளிவான உள்ளுணர்வும், மன நிறைவும் நிரம்பியவர்கள். முறையான திட்டமிடுதல் மூலம் அனைத்துவிதமான நன்மைகளையும் அடைவார்கள். தனது சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப்போகும் அனைத்து ஏற்ற- இறக் கங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள். தொழிலுக்கு அரசு ஆதரவுண்டு. சுய ஜாதகத்தில் சந்திரன் பலம்குறைந்தால் நிலையான- நிரந்தரமான தொழில் அமையாது. உறவுகளின் உழைப்பை, ஆதரவைச் சார்ந்தே வாழ்வார்கள்.

பரிகாரம்: பௌர்ணமி திதியில் மகாலட்சுமியை வழிபடவேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதி பதி என்பதால், சந்திரன் எந்த நிலையில் இருந்தாலும் சந்திர தசை, புக்திக் காலங்களில் விழிப்புடன் செயல்படவேண்டும். பூர்வீகத்தில் வசிக்கக்கூடாது. வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு.

பரிகாரம்: திங்கட்கிழமை செவ்வாய் ஓரையில் சிவனை வழிபடவேண்டும்.

தனுசு

தனுசு லக்னத்திற்கு சந்திரன் அஷ்ட மாதிபதி. அஷ்டமாதிபதி வலுக்கக் கூடாது. சந்திர தசை, புக்திக் காலங்களில் விபத்து, சர்ஜரி, வம்பு, வழக்குண்டு. வெகுசிலர் விபரீத ராஜயோகத்தை அனுபவிப்பார்கள். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். சுயதொழில்புரிபவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

பரிகாரம்: திங்கட்கிழமை குரு ஓரையில் சித்தர்களை வழிபடவேண்டும்.

மகரம்

மகர லக்னத்திற்கு சந்திரன் ஏழாமதிபதி, மாரகாதிபதி. நல்ல அழகான வாழ்க்கைத் துணை அமையும். நிறைய நண்பர்கள் இருப் பார்கள். புதுப்புது நண்பர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் முதலீடு அதிகமில்லாத சுயதொழில் செய்யலாம். இவர்களை வாடிக்கையாளர்கள் அதிகம் தேடித்தேடி வருவார்கள். சிறு சில்லரை வணிகம் செய்தால் பெரும் லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்யக்கூடாது. சந்திரன் பாதகாதிபதி என்பதால் நல்லவர்களையும், கெட்டவர்களையும் எளிதில் இனம்காணத் தெரியாது. இளகிய மனதால் எல்லாரையும் எளிதில் நம்பிக் கொடுத்துவிட்டுப் பின்னர் யோசிப்பார்கள். சந்திர தசை, புக்திக் காலங்களில் ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பாதிப்பிருக்கும்.

பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விரதமிருந்து விநாயகரை அறுகம்புல் சாற்றி வழிபடவும்.

கும்பம்

கும்ப லக்னத்திற்கு சந்திரன் ஆறாமதிபதி என்பதால் சுய ஜாதகத்தில் சந்திரன் வலுக்கக் கூடாது. சந்திர தசை, புக்திக் காலங்களில் மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும். சுயமாக சிந்திக்கும் திறனும், முடிவெடுக்கும் திறனும் இல்லாதவர்கள். கிடைக்கும் சந்தர்ப்பத் தையும், வாய்ப்பையும் பயன்படுத்தத் தெரியாத வர்கள். பிறரால் ஏமாற்றப்படுவார்கள். சதா எதையாவது நினைத்துக் கவலைப்பட்டு நோயை வளர்ப்பவர்கள். நோய்க்கு வைத்தி யம் செய்து கடன் உருவாகும். மனக் கட்டுப் பாடு இல்லாதவர்கள். அதிக முதலீட்டில் சொந்தத் தொழில் செய்யக்கூடாது. அடிமைத் தொழிலே சிறப்பு.

பரிகாரம்: தினமும் மாலை 4.30 மணிமுதல் 6.00 மணிவரையிலான நித்திய பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மரை வழிபடவேண்டும்.

மீனம்

மீன லக்னத்திற்கு சந்திரன் ஐந்தாமதிபதி என்பதால் சுய ஜாதகத்தில் சந்திரன் வலுப்பெறுவது மிகச் சிறப்பு. ஆழ்மன சிந்தனை நிறைந்தவர்கள். ஓரிடத்தில் நிலையாக இருக்காமல், சுறுசுறுப் பாக இயங்கி புதிய முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். பூர்வீக சொத்துகளால் மிகுதி யான பலனுண்டு. குலதெய்வ அனுக்கிரகம் நிறைந்தவர்கள். பிள்ளைகளால் பெற்றோ ரும், பெற்றோரால் பிள்ளைகளும் பயன் பெறுவார்கள். எதையும் வரும்முன் அறியும் தீர்க்கதரிசிகள். தொழில் தொடர்பான ஆலோசனை வழங்குவதில் மதிமந்திரியாகத் திகழ்வார்கள். பகல்- இரவு பாராமல் உழைத்து அனைத்து வசதிகளையும் தேடிக் கொள்பவர்கள். சுய ஜாதகத்தில் சந்திரன் பலம்குறைந்தால் புத்தி, சிந்தனை ஒரேமாதிரி இருக்காது. சந்திரன் வளர்பிறை- தேய்பிறை என வளர்வதும், பிறகு தேய்வதுமாக இருப்பதால் இவர்களது வாழ்க்கை வளர்வதும் தேய்வது மாக இருக்கும்.

பரிகாரம்: தினமும் சந்திர ஓரையில் சிவ வழிபாடு செய்துவரவும். சந்திர பலத்தை சமன் படுத்த உரிய வழிபாட்டு முறைகளைப் பயன் படுத்துவது நல்லது.

செல்: 98652 20406

bala240223
இதையும் படியுங்கள்
Subscribe