Advertisment

பெருந்துயர் நீக்கி பேரின்பம் தரும் பரிகாரங்கள்! -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/remedies-remove-bliss-s-vijayanarasimhan

ஜாதகத்திலுள்ள சில தோஷங்களையும் அதற்கான பரிகாரங்களை இங்கு காண்போம்.

புத்திர தோஷம்

மானுடவாழ்வில் மட்டற்ற மகிழ்ச்சி யளிக்கும் குழந்தை பாக்கியமானது, நாம்செய்த கர்மவினைகளின் பலனாக ஏற்படும் பேரின்பமாகும். இந்தப் பேரின்பமே துன்பமாகும்போது தோஷமாகிறது. புத்திர தோஷமென்பது குழந்தைப் பேற்றை மட்டுமின்றி, கர்ப்பம் தரித்தவுடன் ஏற்படும் கருச் சிதைவு, கருக்கலைத்தல், குழந்தை பிறந்தவுடன் மரித்தல், பிறக்கும்போதே ஊனமாய்ப் பிறத்தல், குறைமாதப் பிரசவம் ஏற்படல், பிறந்தவுடன் தாய் அல்லது தந்தைக்கு மரணம் ஏற்படல் என இவையனைத் துமே புத்திர தோஷமாகும்.

Advertisment

ஐந்தாம் வீடு, 9-ஆம் வீடு, அதன் அதிபதிகள், புத்திர காரகன் குரு ஆகியோர் அமருமிடம் ஆகியவை பாதிப்படையும்போது புத்திர தோஷம் ஏற்படுகிறது. 5-ஆமதிபதி 3, 6, 8 மற்றும் 12-ல் அமர்ந்தாலும், 5-ஆமதிபதி மிதுனம், கன்னி ராசிகளில் தனியாக அமர்ந்தாலும், பாவ கிரகங்களோடு இணைவு பெற்றாலும், 5 மற்றும் 7-ஆமதிபதிகள் பரிவர்தனையானாலும், புத்திர பாவத்தில் தீய கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது அமர்ந்தாலும், காரகன் குரு அமர்ந்தாலும், சந்திரனுக்கு 7-ல் சூரியன் இருந்தாலும், சனிக்கு 7-ல் புதன் இருந்தாலும், சூரியன் இரட்டை ராசியில் இருக்க, அவரை செவ்வாய் பார்த்தாலும், சுபர் பார்வையின்றி 5 மற்றும் 8-ஆம் பாவாதிபதிகள் பரிவர்த்தனை பெற்றா லும், 5-ஆம் வீட்டின்மீது அசுபர் ப

ஜாதகத்திலுள்ள சில தோஷங்களையும் அதற்கான பரிகாரங்களை இங்கு காண்போம்.

புத்திர தோஷம்

மானுடவாழ்வில் மட்டற்ற மகிழ்ச்சி யளிக்கும் குழந்தை பாக்கியமானது, நாம்செய்த கர்மவினைகளின் பலனாக ஏற்படும் பேரின்பமாகும். இந்தப் பேரின்பமே துன்பமாகும்போது தோஷமாகிறது. புத்திர தோஷமென்பது குழந்தைப் பேற்றை மட்டுமின்றி, கர்ப்பம் தரித்தவுடன் ஏற்படும் கருச் சிதைவு, கருக்கலைத்தல், குழந்தை பிறந்தவுடன் மரித்தல், பிறக்கும்போதே ஊனமாய்ப் பிறத்தல், குறைமாதப் பிரசவம் ஏற்படல், பிறந்தவுடன் தாய் அல்லது தந்தைக்கு மரணம் ஏற்படல் என இவையனைத் துமே புத்திர தோஷமாகும்.

Advertisment

ஐந்தாம் வீடு, 9-ஆம் வீடு, அதன் அதிபதிகள், புத்திர காரகன் குரு ஆகியோர் அமருமிடம் ஆகியவை பாதிப்படையும்போது புத்திர தோஷம் ஏற்படுகிறது. 5-ஆமதிபதி 3, 6, 8 மற்றும் 12-ல் அமர்ந்தாலும், 5-ஆமதிபதி மிதுனம், கன்னி ராசிகளில் தனியாக அமர்ந்தாலும், பாவ கிரகங்களோடு இணைவு பெற்றாலும், 5 மற்றும் 7-ஆமதிபதிகள் பரிவர்தனையானாலும், புத்திர பாவத்தில் தீய கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது அமர்ந்தாலும், காரகன் குரு அமர்ந்தாலும், சந்திரனுக்கு 7-ல் சூரியன் இருந்தாலும், சனிக்கு 7-ல் புதன் இருந்தாலும், சூரியன் இரட்டை ராசியில் இருக்க, அவரை செவ்வாய் பார்த்தாலும், சுபர் பார்வையின்றி 5 மற்றும் 8-ஆம் பாவாதிபதிகள் பரிவர்த்தனை பெற்றா லும், 5-ஆம் வீட்டின்மீது அசுபர் பார்வை விழவும், 7-ஆம் வீட்டுக்குக் கேந்திரத்தில் குரு அமர்ந்து, உச்சம்பெற்ற 6-ஆமதிபதி இணைவுபெற்றாலும் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படாது.

புத்திர பாக்கியத்துக்குத் தடையேற்படுத்தும் அமைப்புகள் பாவிகள் மத்தியில் குரு அல்லது 5-ஆமதிபதி அமரவும், 5-ஆம் பாவமும் பாவகர்த்தாரியில் இருக்கவும், குடும்ப ஸ்தானத்தில் தீயகிரகங்கள் இடம்பெறவும், குருவுடன் ராகு அல்லது சனி இணைய அல்லது பார்க்க குழந்தை பாக்கியத்துக்குத் தடை ஏற்படுத்தும்.

இவை தவிர சர்ப்பசாபம் (5-ஆமதிபதி, ராகு இணைவு, லக்னத்தில் ராகு- கேது, 9-ல் ராகு- கேது) ஏற்பட்டாலும் குழந்தைகள் பிறப்பது அரிது. முன்னோர் சாபம், தாயின் சாபம் ஆகியவற்றா லும் குழந்தையின்மை ஏற்படும்.

Advertisment

dd

பரிகாரங்கள்

தம்பதிகள் இராமேஸ் வரம் சென்று அக்னி தீர்த்தத்தில் கைகோர்த்தபடி நீராடி, பின்னர் கோவிலுக் குள் இருக்கும் தீர்த்தங்களிலும் நீராடி மனமுருகி ஸ்வாமி தரிசனம் செய்துவந்தால் தோஷம் நிவர்த்தியாகும்.

நாகதோஷமுடையவர்கள் திருப் புல்லாணி சென்று நாகப்பிரதிஷ்டை செய்துவர தோஷம் நிவர்த்தியாகும். காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் ஆகிய தலங்களுக்குச் சென்றும் வழிபட்டுவரலாம். பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்துவர சாபம் நிவர்த்தியாகும்.

"மூலதோ ப்ரஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரதோ சிவ ஸ்வரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நமஹ' என்ற ஸ்லோகத்தைச் சொல்லி அரசமரத்தைச் சுற்றிவந்து வணங்குவதும் நல்லது.

காலசர்ப்ப தோஷப் பரிகாரம்

காலசர்ப்ப தோஷம் என்பது ராகு- கேதுக்களுக்கிடையே அனைத்து கிரகங்களும் அமர்வதால் ஏற்படுவதாகும். இந்த தோஷம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் 35 வயதுக்குப்பிறகே முன்னேற்றங்கள் ஏற்படும். திருமணமும் தாமதப்படும்.

இந்த தோஷத்திற்கு மிக சக்திவாய்ந்த, பிரசித்திபெற்ற பரிகாரத் தலம் திருக்காளத்தி எனப்படும் காளஹஸ்தி திருத்தலமா கும். ராகு- கேதுக்களின் வெள்ளிப் பிரதிமைகளுடன், பூஜைப் பொருட்களோடு, புரோகிதரை வைத்து சிரத்தையுடன் பரிகாரம் செய்து, ராகு-கேது பிரதிமைகளை மூன்றுமுறை தலையைச் சுற்றி உண்டியலில் இட்டு, ஸ்வாமியை மனமுருகி வேண்டிவர தோஷம் நிவர்த்தியாகும்.

செவ்வாய் தோஷப் பரிகாரம்

செவ்வாய் லக்னம், சந்திரன், சுக்கிரனிலிருந்து 1, 2, 4, 7, 8 மற்றும் 12 ஆகிய இடங்களில் அமர செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. இதற்குப் பல விதிவிலக்குகளும் உண்டு. இது திருமண தாமதத்தைத் தருகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ் வின்மை, பிரிவினை ஆகியவற்றையும் தருகிறது.

செவ்வாய்க்கிழமை விரதமிருப்பது, கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வணங்குவது நல்லது. செவ்வாய், வெள்ளியன்று துர்க்கை வழிபாடும் பயனளிக்கும். சீர்காழி அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோவில் மிகச்சிறந்த பரிகாரத் தலமாகும். இங்குள்ள சித்தாமிர்தக் குளத்தில் நீராட தோஷம் நீங்கும். பழநி முருகனையும் வழிபடலாம்.

களத்திர தோஷப் பரிகாரம்

களத்திர காரகன் குரு, சுக்கிரன் மற்றும் ஒவ்வொரு லக்னத்துக்குமான களத்திர ஸ்தானாதிபதி பாதிப்படைய களத்திர தோஷம் ஏற்படுகிறது. காரகன் களத்திர ஸ்தானத்திலேயே இருக்கவும், 7-ஆமதிபதி 7-ல் இருக்கவும், 7-ஆமதிபதி உச்சம்பெற்று 7-ல் இருந்தாலும், லக்னத்தில் சனியும், 7-ல் செவ்வாயும் இருக்க அல்லது 7-ல் இருவரும் சேர்ந்திருக்கவும், 7-ஆமதிபதி 6, 8-ல் அல்லது 12-ல் இருக்கவும், 2-ஆம் பாவத்தில் சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது இருக்க அல்லது இவர்கள் 4, 7, 8-ல் இருக்கவும், 2-ஆமதிபதி 3, 6, 8, 12 ஆகிய வீடுகளில் இருக்கவும் களத்திர தோஷம் ஏற்படுகிறது. திருமணத் தாமதம், தடைகளைத் தரும். கலப்புத் திருமணம், இருதார மணம், களத்திர மரணம் இவை யாவுமே களத்திர தோஷமே.

குலதெய்வ வழிபாடு, இஷ்டதெய்வ வழிபாடு, கிரகரீதியான அதிதேவதை களின் வழிபாடு ஆகிய வற்றைச் செய்வது நல்லது.

இராமாயணத்தில் சுந்தர காண்டத்தைப் படிப்பதும், மார்கழி மாதத்தில் திருப் பாவை, திருவெம்பாவை படித்தலும் தோஷப் பரிகாரமாகும். தாமதமின்றித் திருமணம் நடக்க பாராயணம் செய்யவேண்டிய ஸ்ரீ சுயம்வர பார்வதி ஸ்லோகம்:

"ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி

யோகேஸ்வரி யோக பயங்கரி

ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய

முகஹ்ருதயம் மமவசமாகர்ஷய

ஆகர்ஷய ஸ்வாஹா.'

மாங்கல்ய தோஷப் பரிகாரம்

ஜாதகத்தில் 8-ஆமிடத்தில் தீயகிரகங்கள் இடம்பெற, தொடர்புற ஏற்படுவது மாங்கல்ய தோஷமாகும். துணை மரணம், பிரிவு, விவாகரத்து, தாமதத் திருமணம், மறுமணம், கண்டங்கள் ஏற்படல் என இவையனைத்துமே மாங்கல்ய தோஷத்தின் விளைவுகளாகும். எட்டாம் வீட்டுக்குரிய கிரக வழிபாடு, அம்பிகை வழிபாடு, குலதெய்வ- இஷ்டதெய்வ வழிபாடுகள் நற்பலன் தரும்.

சிறப்பான தோஷப் பரிகாரங்கள்

ஆண் ஜாதகத்தில் சூரியன் 4, 7 மற்றும் 12-ஆமிடங்களில் இருக்குமானால் அல்லது சனியுடனோ, மாந்தியுடனோ ஒரே ராசியில் 5 பாகைக்குள் இருக்குமானால் அது கலீப (ஆண்மைக் குறைவு) தோஷத்தையும், மத்திய வயதில் இதய நோயையும், வயது முதிர்ந்த காலத்தில் பக்கவாத நோயையும் உண்டாக்கும். இதற்குப் பரிகாரம்- புருஷ சூக்தம், சூரிய சாவித்திரி மந்திர ஜபம் செய்வித்து, உதக சாந்தியும் செய்யவேண்டும்.

பெண்களின் ஜாதகத்தில் சூரியன் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருக்குமானால் அதனால் ஜாதகிக்கு உடல் வலிமையின்மை, சோகை ஏற்படுவதுடன், கர்ப்பச்சிதைவும், கணவன்- மனைவியிடையே பிரச்சினையும் ஏற்படும். இதற்குப் பரிகாரம்- சத்யநாராயண பூஜை செய்தல்; நுனிவாழை இலைபோட்டு சர்க்கரைப் பொங்கலிட்டு, பழத்துடன் பசு மாட்டுக்குப் படைத்தல்; அன்னதானம் செய்தல்; மாணவர்களுக்கு ஆடை, புத்தகங்கள் மற்றும் உதவிபுரிதல் போன்றவற்றை செய்தால் தோஷம் நிவர்த்தியாகும்.

எனவே, கிரகங்கள் எந்த இடங்களில் இருந்தால் என்ன தோஷம்? பரிகாரத் தலம் எது? பரிகாரங்கள் செய்யும் முறைகள் என்ன என்னும் விவரங்கள் மேலே கொடுக் கப்பட்டுள்ளன. இவை பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன்.

செல்: 63836 25954

bala101221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe