Advertisment

அஷ்டம தோஷம் நீக்கும் பரிகாரங்கள்!

/idhalgal/balajothidam/remedies-remove-ashtama-dosha

பிறப்புமுதல் இறப்புவரை ஒரு மனிதனை வாழவிடாமல் விரட்டும் கருணையற்ற தோஷம் அஷ்டமாதிபத்திய தோஷம். எவ்வளவு சாதனை செய்த மனிதர் களையும் இருந்த இடம் தெரியா மல் நிர்கதியாக நிற்கவைப்பது அஷ்டம ஸ்தானமாகும்.

Advertisment

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டுக் குரியவரே அஷ்டமாதிபதியாவார். அந்த அஷ்ட மாதிபதியும் அஷ்டமத்தில் நின்ற கிரகங்களும் ஒருவருக்கு யோக, அவயோகத்தைத் தருகின்றன. எட்டாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் காரகத்துவம் சார்ந்த பயம் இருந்துகொண்டே இருக்கும். ஒருவருக்கு பிறரின் கோபத்தால் ஏற்படும் சாபத்தைக் குறிக்குமிடம் 8-ஆம் பாவகமாகும். ஒருவருடைய ஜாதகத்தில் 8-ஆம் பாவக அதிபதி, 8-ல் நின்ற கிரகங்களே ஒருவருக்கு எதிர்பாராத துன்பம், அவதூறுகளைத் தருபவர்கள்.

எட்டாமிடத்தின்மூலம் ஆயுள் மட்டுமல்ல; தீராத நோய், விபத்து, கண்டம், அவமானம், வறுமை, மன நிம்மிதியின்மை, தற்கொலை எண்ணம், நீதிமன்ற வழக்கு, பிரச்சினை போன்றவற்றை அறியமுடியும். ஒருசிலர் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தா லும் வம்பு, பொய்வழக்கு, அவமானம், கண்டம், விபத்து தேடிவருவதற்கு அஷ்ட மாதிபதியே காரணம்.

8-ஆமிடம் அசுப வலுப்பெற்றால் போலீஸ், நீதிமன்ற வழக்கு, கட்டப் பஞ்சாயத்து, நஷ்டம், அவமானம், தற்கொலை எண்ணம், சிறை தண்டனை உண்டாகும். இவர்களில் பெரும்பான்மை யோர், ஷேர், சீட்டு, ரேஸ், தவறான நடவடிக்கைகள்மூலம் பணத்தைத் தொலைத்து கடனாளியானவர்கள்.

Advertisment

8-ஆமிடத்தில் நின்ற கிரகம் தனது சமசப்தமப் பார்வையால் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால், 8-ஆமிடம் மிகவும் வலுப்பெற்ற ஜாதகர்கள் முரட்டுப் பிடிவாதம், முன்கோபம், கடுமையான வார்த்தைகளால் பிறரை நோகச்செய்யும் இயல்பு உடையவர்கள். பெண்கள் ஜாதகத்தில் அஷ்டமாதிபதியே மாங்கல்ய பலம் பற்றியும் தெரிவிப்பவர். 8-ஆமிடத்தில் நிற்கும் பாவ கிரகங்கள் மட்டுமல்ல; சுப கிரங்களும் ஜாதகரை நிலைகுலைய வைக்கும்.

8-ஆமதிபதி சுப வலுப்பெற்றால் லாட்டரி, ரேஸ், வாரிசில்லாத சொத்து போன்ற விபரீத ராஜயோகமும் உண்டாகும்.

அஷ்டமாதிபதி பன்னிரண்டு பாவகங் களில் நிற்பதால் ஏற்படும் சுப- அசுபங் களைக் காணலாம்.

எட்டாமதிபதி லக்னத்தில்

பிறந்ததுமுதல் வாழ்நாள் இறுதிவரை தொல்லைகளை அதிகம் சந்திப்பவர்கள். தொட்டது துலங்காது. தீராத பிரச்சினைகளை சுமப்பவர்கள். கௌரவம், புகழ், அந்தஸ்து குறைவுபடும். எதிரிகள் மத்தியில் வாழும் சூழல் ஏற்படும். நாத்திகம் பேசுவார். உடல்நலக்குறைவு, தற்கொலை எண்ணம், தாழ்வுமனப்பான்மை, தொடரும் துரதிர்ஷ்டம், தனிமை உணர்வு, தொழிலை இழுத்து மூடவேண்டிய நிலை, தீராத கடன், விபத்து, வழக்குகள், தலைமறைவாக வேண்டிய சூழல் வரும். தலை, முகம் தொடர்பான பாதிப்பும் வரலாம். கௌவரவ அடிம

பிறப்புமுதல் இறப்புவரை ஒரு மனிதனை வாழவிடாமல் விரட்டும் கருணையற்ற தோஷம் அஷ்டமாதிபத்திய தோஷம். எவ்வளவு சாதனை செய்த மனிதர் களையும் இருந்த இடம் தெரியா மல் நிர்கதியாக நிற்கவைப்பது அஷ்டம ஸ்தானமாகும்.

Advertisment

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டுக் குரியவரே அஷ்டமாதிபதியாவார். அந்த அஷ்ட மாதிபதியும் அஷ்டமத்தில் நின்ற கிரகங்களும் ஒருவருக்கு யோக, அவயோகத்தைத் தருகின்றன. எட்டாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் காரகத்துவம் சார்ந்த பயம் இருந்துகொண்டே இருக்கும். ஒருவருக்கு பிறரின் கோபத்தால் ஏற்படும் சாபத்தைக் குறிக்குமிடம் 8-ஆம் பாவகமாகும். ஒருவருடைய ஜாதகத்தில் 8-ஆம் பாவக அதிபதி, 8-ல் நின்ற கிரகங்களே ஒருவருக்கு எதிர்பாராத துன்பம், அவதூறுகளைத் தருபவர்கள்.

எட்டாமிடத்தின்மூலம் ஆயுள் மட்டுமல்ல; தீராத நோய், விபத்து, கண்டம், அவமானம், வறுமை, மன நிம்மிதியின்மை, தற்கொலை எண்ணம், நீதிமன்ற வழக்கு, பிரச்சினை போன்றவற்றை அறியமுடியும். ஒருசிலர் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தா லும் வம்பு, பொய்வழக்கு, அவமானம், கண்டம், விபத்து தேடிவருவதற்கு அஷ்ட மாதிபதியே காரணம்.

8-ஆமிடம் அசுப வலுப்பெற்றால் போலீஸ், நீதிமன்ற வழக்கு, கட்டப் பஞ்சாயத்து, நஷ்டம், அவமானம், தற்கொலை எண்ணம், சிறை தண்டனை உண்டாகும். இவர்களில் பெரும்பான்மை யோர், ஷேர், சீட்டு, ரேஸ், தவறான நடவடிக்கைகள்மூலம் பணத்தைத் தொலைத்து கடனாளியானவர்கள்.

Advertisment

8-ஆமிடத்தில் நின்ற கிரகம் தனது சமசப்தமப் பார்வையால் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால், 8-ஆமிடம் மிகவும் வலுப்பெற்ற ஜாதகர்கள் முரட்டுப் பிடிவாதம், முன்கோபம், கடுமையான வார்த்தைகளால் பிறரை நோகச்செய்யும் இயல்பு உடையவர்கள். பெண்கள் ஜாதகத்தில் அஷ்டமாதிபதியே மாங்கல்ய பலம் பற்றியும் தெரிவிப்பவர். 8-ஆமிடத்தில் நிற்கும் பாவ கிரகங்கள் மட்டுமல்ல; சுப கிரங்களும் ஜாதகரை நிலைகுலைய வைக்கும்.

8-ஆமதிபதி சுப வலுப்பெற்றால் லாட்டரி, ரேஸ், வாரிசில்லாத சொத்து போன்ற விபரீத ராஜயோகமும் உண்டாகும்.

அஷ்டமாதிபதி பன்னிரண்டு பாவகங் களில் நிற்பதால் ஏற்படும் சுப- அசுபங் களைக் காணலாம்.

எட்டாமதிபதி லக்னத்தில்

பிறந்ததுமுதல் வாழ்நாள் இறுதிவரை தொல்லைகளை அதிகம் சந்திப்பவர்கள். தொட்டது துலங்காது. தீராத பிரச்சினைகளை சுமப்பவர்கள். கௌரவம், புகழ், அந்தஸ்து குறைவுபடும். எதிரிகள் மத்தியில் வாழும் சூழல் ஏற்படும். நாத்திகம் பேசுவார். உடல்நலக்குறைவு, தற்கொலை எண்ணம், தாழ்வுமனப்பான்மை, தொடரும் துரதிர்ஷ்டம், தனிமை உணர்வு, தொழிலை இழுத்து மூடவேண்டிய நிலை, தீராத கடன், விபத்து, வழக்குகள், தலைமறைவாக வேண்டிய சூழல் வரும். தலை, முகம் தொடர்பான பாதிப்பும் வரலாம். கௌவரவ அடிமைகளாக- எந்த சம்பளமும் வாங்காமல் பிடித்த நண்பர்கள் குடும்பத்திற்கு எடுபிடி வேலைகள் செய்வார்கள். சனிக்கிழமை காலை 7.00-8.00 மணிவரையிலான குரு ஓரையில் சிவ வழிபாடு செய்யவும்.

எட்டாமதிபதி இரண்டில்

தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி நின்றால் வறுமை, பேச்சால் பெரும் நஷ்டம், குடும்பத்தைப் பிரிதல், தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த வேலை கிடைக்காது. மிகுதியான பொருள் இழப்பால் சேமிப்பு இருக்காது. இழந்த பொருள் திரும்பக் கிடைக்காது. குடும்ப உறுப்பினர்களால் வெறுத்து ஒதுக்கப்படுவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாது. வழக்குகளில் தோல்வி வரலாம். கணவன்- மனைவியிடையே அடிக்கடி மனஸ்தாபம் ஏற்படும். குழந்தைகள் காலதாமதமாகப் பேசுவார்கள். எட்டாம் பாவகம் சிலருக்கு சில நன்மை களையும் செய்யும். 2-ல் நின்ற கிரகத்திற்கு லக்ன சுபர் சம்பந்தம் மற்றும் சுபயோகம் பெற்றால் உயில் சாசனம் மூலமாக சொத்து சுகங்கள், மனைவிவழி சொத்துகள், சூது, ரேஸ், லாட்டரி, புதையல் போன்றவற்றா லும் திடீர் தனலாபம் கிடைக்கும்.வெகுசிலர் கடின உழைப்பிற்குப்பிறகு முன்னேற்றமடைவார்கள். சனிப் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு, உளுந்து தானம் செய்யவேண்டும்.

எட்டாமதிபதி மூன்றில்

உடன் பிறந்த சகோதரர்களால் இன்னல் கள் வம்பு வழக்கு, நஷ்டம் மிகுதியாகும். அவர்களுடன் ஒற்றுமையாக இருக்கமுடியாது. வெகுசில அண்ணன்கள் சகோதரர்களுக்கு பயந்தே வாழ்கிறார்கள். முக்கிய சொத்துகள், பாகப் பிரிவினை போன்ற எதற்கும் முறையான ஆவணம் இருக்காது. சொத்துத் தகராறு, பாகப்பிரிவினை போன்றவற்றால் மன சஞ்சலம் உண்டாகும். சிலருக்கு மதம் மாறும் சிந்தனை மேலோங்கும். தெய்வ நம்பிக்கை குறையும். சிலர் அடிக்கடி தேவையற்ற அலைச்சல் தரும் பயணங்களை மேற்கொள்ள நேரும். அடிக்கடி வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும். சொல் புத்தியும் இருக்காது; சுய புத்தியும் கிடையாது. பயவுணர்வு மிகுதியாக இருக்கும். தைரியம், வீரியம் குறைவுபடும். கற்பனையில் வாழ்வார்கள். செவித்திறன் குறைவுபடலாம். கீழ்ப்படியாத வேலையாட்கள் கிடைப்பார்கள். விலையுயர்ந்த ஆபரணங்களை அடிக்கடி கைமறதியாக வைப்பார்கள் அல்லது அடகு வைப்பார்கள். சனிக்கிழமை காலை 6.00-7.00 மணிக்குள் சிவ வழிபாடு செய்வது நல்லது.

dd

எட்டாமதிபதி நான்கில்

கல்வியில் ஓரிரு கல்வியாண்டு வீணாகும் அல்லது பாதியில் நின்றுபோகும். படிப்பு சார்ந்த விஷயங்களில், பள்ளிப்படிப்பில் ஆர்வம் குறையும். தாயின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காது. தாயின்மேல் எவ்வளவு அன்பைப் பொழிந்தாலும் தாயார் வெறுப்யை உமிழ்வார். தாய்மாமன், தாய்வழி உறவுகளுடன் சொத்து தொடர்பான சண்டை சச்சரவுகள் மிகுதியாக இருக்கும். வீடு வாசல் போன்ற சொத்து தொடர்பான விஷயங்கள் கானல்நீராகவே இருக்கும். பழைய சொத்துகள், வாஸ்துக் குறைவான சொத்துகள் கிடைக்கும். வாகனங் கள் அடிக்கடி பழுதடையும். விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஆதாயம் குறையும். வளர்ப்புப் பிராணிகள் அடிக்கடி இறக்கும். உடல்நலக் குறைவு மிகுதியாகும். வீட்டில் தெய்வ கடாட்சம் இருக்காது. சனிக்கிழமை காலை 9-00-10.30 வரையிலான ராகு வேளையில் சிவதரிசனம் செய்யவேண்டும்.

எட்டாமதிபதி ஐந்தில்

குழந்தையின்மை, அபார்ஷன், அவப்பெயர், அவமானம், மன நிம்மதி யின்மை, முடிவெடுக்கும் திறனின்மை, பெரும் நஷ்டம், தற்கொலை எண்ணங்கள், வறுமை ஏற்படும். உயில் சொத்து, பாலிசி பணம் போன்றவற்றில் சர்ச்சைகள் உண்டாகும். அதிர்ஷ்டம் குறைவுபடும். பங்குச் சந்தையில் இழப்புண்டாகும். பூர்வீகம் சிறக்காது. வெளிநாட்டில், வெளியூரில் அந்நியர்கள் மத்தியில் வாழும் நிலை உண்டாகும். சிலர் சந்நியாசியாக பரதேசம் செல்வார்கள். சிலர் சிறை தண்டனை அனுபவிப்பார்கள். பூர்வீகச் சொத்துகள் வம்பு வழக்கில் கைவிட்டுப் போகும். குலதெய்வ அனுக்கிரகம் இருக்காது. அல்லது குலதெய்வ கோபம் உண்டாகும். கல்லூரிப் படிப்பைத் தவறவிடுவார்கள். குழந்தைகளால் ஆதாயமிருக்காது. சனிக்கிழமை மகாவிஷ்ணுவை வழிபடவும்.

எட்டாமதிபதி ஆறில்

ஒரு மறைவு ஸ்தானாதிபதி மற்றொரு மறைவு ஸ்தானத்தில் நிற்பதால், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். நன்மை யும் தீமையும் கலந்தே நடக்கும். நேர்வழியில் புகழடைவது குறைவு. அசுப செயல்களால் புகழடைவார்கள். ஒரு பெரிய வெற்றிக்குப்பின் மிகப்பெரிய அவமானம் இருக்கும். சனி, ராகு- கேது போன்ற அசுப கிரகங்களின் சம்பந்தம் பெரிய சுபப் பலனைத் தராது. தாய்மாமனுக்கு கண்டம், தீராத நோய், தத்துப் புத்திர யோகம் ஏற்படும். பெண்ணானால் கணவருக்கு ருண, ரோக, சத்ரு தொல்லை அல்லது திருமண, தாம்பத்ய வாழ்வில் சிக்கல் நீடிக்கும். ஏதோ வொரு நோய்த் தாக்கம் இருக்கும். வேலை பார்க்குமிடத்தில் பகை அதிகம் வரும். சனிக்கிழமை 8.00-9.00 மணிவரையிலான செவ்வாய் ஓரையில் சரபேஸ்வரரை வழிபடவும்.

எட்டாமதிபதி ஏழில்

இரு திருமணம், தொழில் கூட்டாளி பிரச்சினை, நண்பர்களால் வம்பு, வழக்கு, திருமண வாழ்வில் பிரிவு, தீயவருடன் இணைந்திருக்கும் நிலை ஏற்படலாம். விபத்து நடக்கலாம். சம்பாதிக்கும் பணம் வாழ்க்கைத் துணைவரின் கடன் அல்லது நோய்க்கு செலவாகும். கடனால் மீளமுடியாத அவஸ்தை உண்டாகும். திருமண வாழ்வில் தோல்வியை சந்தித்து நீதி மன்றத்தை அணுகியவர்கள் அதிகம். திருமணத்திற்குப்பிறகு வசதியாக வாழவேண்டுமென ஆசைப்பட்டு கடன்பட்டுக் கலங்குவார்கள். அடுத்த திருமண வாழ்க்கையும் எளிதில் அமையாது. இளமையில் திருமணம் செய்தால் நிச்சயம் இருதார அமைப்பைத் தந்துவிடும். அல்லது திருமணத்தை தாமதப்படுத்தி ஏங்க வைத்துவிடும். நல்ல நண்பர்கள் அமையமாட்டார்கள். அவர்களால் கடன் உருவாகும். கூட்டுத் தொழில் சிறப்பில்லை. சனிக்கிழமை காலை 10.00-11.00 மணிவரையிலான சுக்கிர ஓரையில் பார்வதி- பரமேஸ்வரரை வழிபடவும்.

எட்டாதிபதி எட்டில்

லக்னாதிபதி பலம் குறைந்தால் ஆயுள்பங்கம் ஏற்படும். வாழ்நாள் முழுவதும் ஏதாவது பிரச்சினையில் சிக்கித் தவிப்பர். நோய்கள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை தாங்கமுடியாத அளவில் இருக்கும். வம்பு, வழக்கு, விபத்து ஏற்படும். இந்த ஜென்மத்தில் மற்றவர்களுக்கும் தங்களுடைய உறவுகளுக்கும் என்னதான் உதவி செய்தாலும், உழைத்துக் கொட்டினாலும் அதற்கான அங்கீகாரமும் மரியாதையையும் இவர்களுக்குத் திரும்ப வரவே வராது. நீ எனக்கு என்ன செய்தாய் என்றுதான் இவர்களைப் பார்த்துக் கேட்பார்கள். இவர்கள் வெறும் கடமைக்காகவும் கடனுக்காகவும்தான் உயிர்வாழ்வார்கள். என்னைவிட்டு விடுங்கள்; நான் எங்காவது கண்காணாத இடத்திற்குச் சென்றுவிடுகிறேன். நான் தனிமையை விரும்புகின்றேன் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும். ஆறுதலாய் இருக்க முன்வருபவரையும் நோகடித்து விலக்குவர். சனிக்கிழமை இரவு 8.00-9.00 மணி வரையிலான சனி ஓரையில் காலபைரவரை வழிபடவும்.

எட்டாமதிபதி ஒன்பதில்

தந்தைக்கு கண்டம் அல்லது தந்தையுடன் பிரிவு, தந்தைவழி சொத்து நஷ்டமாதல், தொழில் இழப்பு, சேமிப்பும் கைகொடுக்காத நிலை ஏற்படும். தந்தை, தந்தைவழி உறவு களால் எந்தப் பயனும் இருக்காது. பலர் தந்தைக்காக, தந்தைவழி உறவினர்களால் கடன், வம்பு வழக்கை சுமக்கிறார்கள். சிலருக்கு தந்தை எந்த பயனுமில்லாமல் வீட்டில் சும்மா இருப்பார். இல்லையென்றால் இவர்களின் தந்தை ஹிட்லர்போல நடந்துகொள்வார். இவர்களுக்கு தந்தைமூலம் கிடைக்கக்கூடிய சுகபோகம், தார்மீகம், பயன்கள் ஆகிய அனைத் தும் இல்லாமல் இருக்கும். தந்தையின் சொத்தை அனுபவிக்கக்கூடிய பிராப்தம், கொடுப்பினை இவர்களுக்குக் கிடையாது. மேலும் இவர்களின் வாழ்க்கைக்கு இவர்களின் தந்தை எடுக்கும் முடிவு என்றைக்குமே இவர் களுக்கு சாதகமாகவே முடியாது. பாதகமாக தான் முடியும். பித்ருகள் தாக்கம் மிகுதியாக இருக்கும். வெளியூரில் அல்லது வெளிநாட்டில் சிக்கித் தவித்தல், வெளிநாட்டு தொடர்புகளால் சிறை தண்டனை, பெரும் நஷ்டம் ஏற்படும். மதத்தை இழிவு படுத்துபவர். மற்றவர் சொத்தை அபகரிப்பவர் அல்லது பிறருடைய பினாமி சொத்து தானே தேடிவரும். சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட் களில் முன்னோர்களை வழிபடுவது சிறப்பு.

எட்டாமதிபதி பத்தில்

தொழிலில் சாதனை படைக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கும். அதற்கான வேகம் இருக்காது. தொழிலில் அடிக்கடி நஷ்டம், தொழிலுக்காக அதிக உழைப்பு, துன்பங்களை சந்திக்க நேரும். தொழிலில் இவர்களுக்கு கண்டிப்பாக மீளமுடியாத நட்டம் இருக்கும். இவர்களுக்கு நிலையான உத்தியோகம், சொந்தத் தொழில் அமையாது. பல தொழில் வித்தகராக இருப்பார்கள். ஆனால் எந்தத் தொழிலும் இவர்களுக்குக் கை கொடுக்காது. உத்தியோகத்தில் இருந்தார்கள் என்றால், இவர்களின் மேலதிகாரிகள் அதிகமாக இவர்களை வேலைவாங்குவது, நயவஞ்சகம் செய்வது, பழிதீர்ப்பது போன்றவை நடக்கும். இவர்களுடன் வேலைசெய்யும் சக ஊழியர்கள் இவர்களை முன்னேற விட மாட்டார்கள். இதுபோன்ற கிரக அமைப்பிருக் கும் அரசு ஊழியர்கள் பணிக் காலத்தில் வேலையை இழப்பார்கள் அல்லது ராஜினாமா செய்வார்கள். மனைவி, மாமியார் மற்றும் சொந்த பந்தங்களால் அவமானப்படுவார்கள். சனிக்கிழமை வெற்றிலை மாலை சாற்றி ஆஞ்சனேயரை வழிபடவும்.

எட்டாமதிபதி பதினொன்றில்

அஷ்டமாதிபதி பதினொன்றில் சுப வலுப்பெற்றால் மறைமுக லாபம் பெருகும். அந்தப் பணம் தொழில் மூலமாக கிடைக்குமா? பூர்வீகச் சொத்திலிருந்து கிடைக்கும்? பங்குப் பணமா அல்லது அதிர்ஷ்டப் பணமா அல்லது பிள்ளை இல்லாத சொத்தா என்பது ஜனனகால ரீதியான தசாபுக்தியைப் பொருத்தது. பிறக்கும்போது பொருளாதாரத்தில் மிகத் தாழ்வான நிலையில் இருந்தவர்களுக்குக்கூட சரளமான பணப்புழக்கம் இருக்கும். அஷ்டமாதிபதி ஒருவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்க முடிவுசெய்துவிட்டால் அதனை யாராலும் அணைபோட்டு நிறுத்த முடியாது. அஷ்டமாதிபதி அசுப வலுப்பெற்றால் மூத்த சகோதரத்துக்கு கண்டம் அல்லது மூத்த சகோதரர்களால் பொருள் இழப்பு ஏற்படும். வழக்குகளில் பெற்றி கிடைக்காது. வறுமை, தரித்திரம் ஜாதகரை வழிநடத்தும். சனிக்கிழமை அஷ்ட பைரவர்களை வழிபடவும்.

எட்டாமதிபதி பன்னிரண்டில்

ஒரு மறைவு ஸ்தானாதிபதி மற்றொரு மறைவு ஸ்தானத்தில் மறைவதால், பலர் குறுக்குவழியில் விபரீத ராஜயோகத்தை அனுபவிக்கிறார்கள். பூர்வீகத்தைவிட்டு வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு நல்ல பலனுண்டு. பூர்வீகத்தில் வாழ்பவர்களுக்கு வேற்று மதம், இனம், மொழி, நாட்டைச் சார்ந்தவர்களால் லாபம் உண்டாகும். பெரும்பாலும் சுபப் பலனைத் தரும் வாய்ப்பு குறைவு. இவர்கள் அடிமைகளாக, தனிமை விரும்பிகளாக வாழ்கிறார்கள். படு கஞ்சராக மாறலாம். சரியாக உண்ண முடியாத, தூங்கமுடியாத நோய் பாதிப்பு ஏற்படலாம். தாம்பத்திய வாழ்வில் சிக்கல் வரலாம். தினமும் மாலை 4.30 முதல் 6.00 மணிவரை சிவ வழிபாடு செய்யவேண்டும். ஒருவருக்கு சாதகமான வினை நடந்தால் அந்த ஜாதகருக்கு நல்வினையை நடத்து பவருக்கும் 1, 5, 9 சம்பந்தம் இருக்கும். வம்பை விலைகொடுத்து வாங்கப் போனால் கூட வம்பு அவர்களைவிட்டு விலகியோடும். தவறே செய்தால்கூட அதன் விளைவு பாதிப் பைத் தராது. துன்பம் தரும் வினை நடந்தால், அந்த ஜாதகருக்கு துன்ப வினையை நடத்து பவருக்கும் அஷ்டம ஸ்தான சம்பந்தம் இருக்கும். வம்பைத் தேடி விலைகொடுத்து வாங்குவார்கள்.

செல்: 98652 20406

bala290722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe