சென்ற இதழ் தொடர்ச்சி...

சிம்ம லக்னம்

சிம்ம லக்னத்திற்கு தனவரவைத் தரக்கூடியவர் புதன். புதனே 2, 11-ஆம் அதிபதி. புதன் நல்லநிலையில் இருந்தாலே சிம்ம ராசியினர் சிறப்பான பொருளாதாரத்தை அடையமுடியும். புதன் எப்பொழுதும் சூரியனுக்கு முன் அல்லது பின்பாகவே இருப்பார். சூரியனுடன் இணைந்த புதன் சிம்மத்திற்கு நிறைவான தனவரவைத் தருவார். புதனுக்கு ராகு- கேது சம்பந்தம் இருந்தால் பணவரவில் ஏற்ற- இறக்கம் இருக்கும். புதனுடன் சனி சேர்ந்தால், இவர்கள் மற்றவர்களிடம் ஏமாந்து போவார்கள் அல்லது மற்றவர்கள் இவர்களை ஏமாற்றிவிடுவார்கள்.

இவர்களுடைய வளர்ச்சிக்கு முறையான திட்டமிடுதல் அவசியம். சிம்ம லக்னத்திற்கு புதன், சுக்கிரன் இணைந்தாலும் சிறப்பான வருமா னத்தைப் பெற்றுத் தரும்.

Advertisment

பரிகாரம்

சிம்ம லக்னத்தினர் சிறப்பான தனவரவை அடைய ஞாயிறு மாலை ராகு வேளையில், தேன் தடவிய சப்பாத் தியை பைரவருக்குப் படைத்து உண்ண வேண்டும் .

கன்னி லக்னம்

Advertisment

கன்னி லக்னத்திற்கு தனவரவைத் தரக்கூடிய கிரகங்கள் சுக்கிரன், சந்திரன். சுக்கிரன் 2-ஆம் அதிபதி. சந்திரன் 11-ஆம் அதிபதி.

இந்த கிரக இணைவுகள் கேந்திர, திரிகோணங்களில் இருந்தால், வருடத்தின் 365 நாளும் பணம் வரும். ஒன்றையொன்று பார்த்தாலும் பலன் உண்டு. கன்னி லக்னத்திற்கு 2-க்குரிய சுக்கிரனே ஒன்பதாம் அதிபதியாக வருவதால், ஜாதகரின் பொருளாதாரம் ஜாதகரைவிட ஜாதகரின் பெற்றோருக்குப் பெரிதும் பயன்படும். ஜாதகரும் பெற்றோருக் காகவே சம்பாதிப்பார்.

இந்த கிரக இணைவுடன் ராகு- கேது, செவ்வாய் சம்பந்தம் இருக்கக்கூடாது. ராகு- கேதுக்கள் தனவரவைத் தடை செய்யும். எட்டாமதிபதியாகிய செவ்வாய் சம்பந்தம் சுக்கிரனுக்கோ சந்திரனுக்கோ இருந்தால், வரும் வருமானம் கோர்ட் கேஸ் பிரச்சினைக்கும், முன்னோர்கள் சொத்தைப் பாதுகாப்பதிலும் சென்று விடும். பல நேரங்களில் மீளமுடியாத பொருளாதார இழப்பையும் அவமா னத்தையும் ஏற்படுத்துகிறது.

பரிகாரம்

கன்னி லக்னத்தைச் சேர்ந்தவர்கள் பிரதோஷ நாட்களில் சிவனுக்கு பச்சைப் பயறு, சுண்டல் படைத்து தானம் தந்து உண்டுவர, பூர்வீகக் குற்றம்நீங்கி, குபேர சம்பத்துப் பெறமுடியும்.

துலா லக்னம்

ss

துலா லக்னத்திற்கு தனவரவை ஏற்படுத் தக்கூடிய கிரகங்கள் செவ்வாய், சூரியன். செவ்வாய் 2-ஆம் அதிபதி. சூரியன் 11-ஆம் அதிபதி. இந்த கிரகச் சேர்க்கை கேந்திர, திரிகோணங் களில் இருந்தால் வருமானம், அரசு ஆதரவு உண்டு. ஒன்றையொன்று பார்த் தாலும் வருமானம், அரசு ஆதாயம் உண்டு.

இந்த கிரகங்களுடன் ராகு- கேது சம்பந்தம் அரசு ஆதரவைத் தடைசெய்யும். 11-ஆம் அதிபதி சூரியனே பாதகாதிபதியாக வருவதால், தந்தைவழி உறவினர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்துவதில்லை. பொருளா தாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

பரிகாரம்

துலா லக்னத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளிக் கிழமை லலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்து, சர்க்கரைப் பொங்கல் படைக்க வேண்டும்.

விருச்சிக லக்னம்

விருச்சிக லக்னத்திற்கு தனவரவை ஏற்படுத் தக்கூடிய கிரகங்கள் குரு, புதன். குரு 2-ஆம் அதிபதி. புதன் 11-ஆம் அதிபதி. குரு, புதன் இணைவு கேந்திர, திரிகோணங்களில் இருந்தால், தனவரவு திருப்தி தரும். ஒன்றையொன்று பார்த்தாலும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். குருவுடன் சம்பந்தம்பெறும் ராகு- கேது மிகப்பெரிய வரவைத் தந்து, மீளமுடியாத இழப்பையும் தரும்.

இந்த கிரகங்களுடன் சந்திரன் சம்பந்தம் இருக்கக்கூடாது. விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதியாக இருப்பதால் மனநலம் பாதிக்கப்படுகிறது. பொருளாதாரம் பாதிக்கப்படுவதில்லை.

பரிகாரம்

விருச்சிக லக்னத்தைச் சேர்ந்தவர்கள் வியாழக்கிழமைதோறும் குழந்தைகள் காப்பகம் சென்று மஞ்சள் நிற இனிப்பு தானம்செய்ய வேண்டும்.

தனுசு லக்னம்

தனுசு லக்னத்திற்கு தனவரவைத் தரக்கூடிய கிரகங்கள் சுக்கிரன், சனி. சனி 2-ஆம் அதிபதி. சுக்கிரன் 11-ஆம் அதிபதி.

இந்த கிரகச் சேர்க்கை கேந்திர, திரிகோணங் களில் இருந்தால், வாழ்நாள் முழுவதும் தனவரவு மகிழ்வு தரும். ஒன்றையொன்று பார்த்தாலும் வருமானம் வரும். இந்த கிரக இணைவு எங்கிருந்தாலும் தனவரவில் குறைவிருக்காது.

இந்த கிரகங்களுடன் ராகு- கேது சம்பந் தமிருந்தால் பணம் போகும்வழி தெரியாது. இழப்பு மிகும்.

தனுசு லக்னத்திற்கு 6-ஆம் அதிபதி சுக்கிரன் பதினொன்றாம் அதிபதியாகவும் இருப்பதால், கடுமையான உழைப்பின்மூலம் இந்த யோகத்தைப் பெறமுடியும். சுக்கிரன் இவர்களின் ஆறாமதிபதியாக இருப்பதால், இவர்களின் திறமை எதிரிகளுக்கு அதிகமாகப் பயன்படுகிறது அல்லது நோய்த் தாக்கத் தைத் தருகிறது. இந்த கிரக இணைவுடன் 8-ஆம் அதிபதி சந்திரன் சம்பந்தப்பட்டால், வரும் வருமானம் நோய்தீர்க்க மட்டுமே பயன்படும்.

பரிகாரம்

தனுசு லக்னத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் சூரிய நமஸ்காரம்செய்து ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்யவேண்டும்.

அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாடு செய்ய, பொருளாதாரத்தில் தன்னிறைவு கிடைக்கும்.

மகர லக்னம்

மகர லக்னத்திற்கு தனவரவைத் தரக்கூடிய கிரகங்கள் சனி, செவ்வாய். சனி 2-ஆம் அதிபதி. செவ்வாய் 11-ஆம் அதிபதி.

இந்த கிரகச் சேர்க்கை கேந்திர, திரிகோணங் களில் இருந்தால் தனவரவு பெருகும். ஒன்றையொன்று பார்த்தாலும் வருமானம், தனவரவு மகிழ்ச்சி தரும்.

இந்த கிரக இணைவுடன் ராகு- கேது, சூரியன் சம்பந்தம் பெறின் முன்னேறத் தடை உண்டு. இந்த கிரகங்களுடன் சூரியன் சம்பந்தம் பெற்றால், ஜாதகருக்கு உஷ்ணம் தொடர்பான நோய்கள் மிகுதி யாகும். மேலும், சனி, செவ்வாய் சம்பந்தம் பலமுறை விபத்தையும், கண்டத்தையும் சந்திக்க வைக்கும். பொருளாதாரத்தில் நல்ல பலன் தரும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை காலை 11.00-12.00 மணிக்குள் சனி ஓரையில் நல்லெண்ணெய் தானம் தரவேண்டும். சனிக்கிழமை காலை 8.00-9.00 மணிக்குள் செவ்வாய் ஓரையில் இட்லி, எள்ளுச் சட்னி, தண்ணீருடன் தானம் தரவேண்டும்.

கும்ப லக்னம்

கும்ப லக்னத்திற்கு தனவரவைத் தரக்கூடிய கிரகம் குரு.

இவர்களுக்கு குரு சிறப்பாக அமைந்து விட்டால், வருமானக்குறைவு இருக்காது. குருவுடன் சுக்கிரன் இணைந்தால், வாழ்நாள் முழுவதும் பொருளாதார குறைபாடே இருக் காது. இந்த கிரக இணைவு கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் மிகச்சிறப்பு. இந்த கிரகங்களுடன் ராகு- கேது சம்பந்தம் பெரும் ஏற்ற- இறக்கத்தைத் தரும்.

பரிகாரம்

ஆன்மிகப் பெரியோர்கள், சித்தர்களிடம் வியாழக்கிழமைகளில் வஸ்திர தானம் தந்து நல்லாசி பெறவேண்டும்.

மீன லக்னம்

மீன லக்னத்திற்கு தனவரவைத் தரக்கூடிய கிரகங்கள் செவ்வாய், சனி. செவ்வாய் 2-ஆம் அதிபதி. சனி 11-ஆம் அதிபதி.

இந்த கிரகச் சேர்க்கை கேந்திர, திரிகோணங் களில் இருந்தால், பெரும் தனவரவைத் தரும். ஒன்றையொன்று பார்த்தாலும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். சனி, செவ்வாய் இரண்டும் பகை கிரகங்கள் என்பதால், பொருளா தாரத்தில் சிறப்பான நிலையையும் தரும்.

அத்துடன் விபத்தையும் அறுவைச் சிகிச்சை யையும் தரும். இந்த கிரகம் ராகு- கேது சம்பந்தம் பெறும்போது மீளமுடியாத இழப்பைத் தரும்.

பரிகாரம்

மீன லக்னத்தைச் சேர்ந்தவர்கள் திருச் செந்தூர் முருகனை வழிபடுவதுடன், சனிக் கிழமை வரும் பிரதோஷ நாட்களில் வில்வார்ச் சனை செய்துவர வேண்டும்.

செல்: 98652 20406