செவ்வாய் பூமி காரகன், ரத்த காரகன் மற்றும் யுத்த காரகன். தைரிய வீரியத்திற்குரிய கிரகம். மேலும் உடன்பிறந்த சகோதரம் மற்றும் பெண்கள் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும் கிரகமாகும்.
இந்த செவ்வாய் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12-ஆமிடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷமென்பது பொதுவிதி. ஒரு கிரகத்தினால் ஏற்படும் நன்மை- தீமைகளை உயிர், பொருள், நோய் காரகத்துவம் என மூன்றாக வகைப்படுத்தலாம். அதன்படி செவ்வாய் பலம்பெற்றால் உயிர் காரகத்துவமான உடன்பிறந்த வர்களின் அன்பு, அனுசரணை, ஆதாயமுண்டு. பெண்களுக்கு ஆண்மை, தைரியம், நிறைந்த குடும்பத்தை கட்டுக்கோப்பாக வழிநடத்தும் கணவர் கிடைப்பார். பொருள் காரகத்துவமான அசையும்- அசையா சொத்துகளின் சேர்க்கை அதிகரிக்கும். நோயெதிர்ப்பு சக்தி நிறைந்தவராக இருப்பார்காள்.
செவ்வாய் பலம்குறைந்தால் உடன்பிறந்த ஆண்கள் கலகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருந்துகொண்டே இருக்கும். பெண்களுக்கு கணவரின் அன்பும், அனுசரணையும் இருக்காது. நோயெதிர்ப்பு சக்தி குறையும். அதேபோல் திருமணத்திற்கு செவ்வாய் தோஷம் கணக்கிட வேண்டுமென்று ஒரு பிரிவினர் கூறினாலும், செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லை என்றொரு கருத்தும் உள்ளது. உலகின் அனைத்து நிகழ்விலும் இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவது நாம் அறிந்ததே. அதனால் செவ்வாய் தோஷம் பற்றி 1,000 பட்டிமன்றம் நடத்தினா லும் இது சர்ச்சைக்குரிய கருத்தாகவே இருக்கும்.
அதேபோல் ஒரு கிரகத்தின் தன்மையை ஆதிபத்திய ரீதியாகவும், நின்ற நட்சத்திர சாரத்திற்கேற்பவும், உடன் இண

அதேபோல் ஒரு கிரகத்தின் தன்மையை ஆதிபத்திய ரீதியாகவும், நின்ற நட்சத்திர சாரத்திற்கேற்பவும், உடன் இணைந்த, சேர்ந்த, பார்த்த கிரகத்திற்கேற்ப அணுகும் போதும் தீர்க்கமான முடிவு கிடைக்கும். அத்துடன் எந்த கிரகமாக இருந்தாலும் பொதுவாக யோகம்- அவயோக மென்று பலன் சொல்லமுடியாது. இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் அனைத்தும் ஒரு ஆதிபத்திற்கு சுபப் பலனை வழங்கினால் மற்றொரு ஆதிபத்தியரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது.
இனி, பன்னிரன்டு லக்னத்திற்கும் செவ்வாய் தோஷப் பரிகாரங்களைக் காணலாம்.
மேஷம்
மேஷ லக்னத்திற்கு செவ்வாய் லக்னாதிபதி மற்றும் அஷ்டமாதிபதி என்பதால், ஒரு நல்லது நடந்தாலும் ஒரு அவச்சொல், அவமானம் ஏற்பட் டாலும் ஜாதகரே காரணமாக இருப்பார். செவ்வாய் தசை, புக்திக் காலங்களில் வம்பு, வழக்கு, சர்ஜரி, தீராத நோய், கடன் இருந்தே தீரும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் முருகனை வழிபடவேண்டும்.
ரிஷபம்
ரிஷப லக்னத்திற்கு செவ்வாய் 7, 12-ஆமதிபதி. செவ்வாய் களத்திர ஸ்தானாதிபதி என்பதால், செவ்வாய் பலம்குறைந்தால் காலதாமதத் திருமணம் நடக்கும். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். தொழில், உத்தியோக நிமித்தமாக அடிக்கடி பிரிந்துவாழும் நிலை ஏற்படும். செவ்வாய்க்கு சனி, ராகு- கேது சம்பந்தமிருந்தால் விவகாரத்து வரை செல்லும். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண உறவை ஏற்படுத்தும். சிலர் செவ்வாய் தசை, புக்திக் காலங்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள் அல்லது அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்வார்கள்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அல்லது காளியை வழிபடவேண்டும்.
மிதுனம்
மிதுன லக்னத்திற்கு செவ்வாய் 6, 11-ஆமதிபதி என்பதால் செவ்வாய் ஆட்சி, உச்சம்பெறுவது சிறப்பல்ல. அதேநேரத்தில் செவ்வாய் சுபவலுப் பெற் றால் மிகப்பெரிய லாபம் கிடைத்து, எவ்வளவு அதிகமான கடன் இருந்தாலும் விரைவில் தீர்ந்துவிடும். செவ்வாய்க்கு சந்திரன் சம்பந்தம் சந்திர மங்கள யோகமாக செயல்படும். செவ்வாய்க்கு குரு சம்பந்தம் குருமங்களமாக செயல்படும். அதனால் செவ்வாயால் கடன், நோய் உருவாகினாலும் தசை முடியும்முன்பு கடன், நோய் நிவர்த்தியாகும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் சிவ வழிபாடு செய்வது நல்லது.
கடகம்
கடக லக்னத்திற்கு செவ்வாய் 5, 10-ஆமதி பதி. ஏக யோகாதிபதி என்பதால் சனி, ராகு- கேது சம்பந்தம் பெறாதவரை செவ்வாய் தசை வரமான காலம். செவ்வாய் சுபவலுப் பெற்ற கடக லக்னத்தினர் பாக்கியவான்கள்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு செய்துவரும் கடக லக்னத்தினருக்கு தொடர் அதிர்ஷ்டம் வந்துகொண்டே இருக்கும்.
சிம்மம்
சிம்ம லக்னத்திற்கு செவ்வாய் 4, 9-ஆமதி பதி. செவ்வாய் ஒரு கேந்திரத்திற்கும் திரி கோணத்திற்கும் அதிபதி. தாய்- தந்தைவழி உறவுகளின் அன்பு, அனுசரணை இருக் கும். தாய்வழி, தந்தைவழி சொத்து மிகைப் படுத்தலாக இருக்கும். செவ்வாய் தசை, புக்திக் காலங்களில் டிரஸ்ட், தர்ம ஸ்தாபனங்கள் அமைத்தல், கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தல், தீர்த்த யாத்திரை செல்லுதல், அரச உத்தியோகம், அரசு பதவி போன்ற பாக்கியப் பலன்கள் அதிகரிக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்வதால் நன்மைகள் இரட்டிப்பாகும்.
கன்னி
கன்னி லக்னத்திற்கு செவ்வாய் 3, 8-ஆமதி பதி என்பதால், செவ்வாய் ஆட்சி, உச்சம் பெறக் கூடாது. செவ்வாய் தசை, புக்திக் காலங்களில் அண்டை, அயலாருடன் எல்லைத் தகராறு, உடன்பிறந்தவர்களுடன் சொத்துத் தகராறு, ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை, விபத்து, கண்டம், சர்ஜரி, வம்பு, வழக்கு உண்டாகும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை புதன் ஓரையில் வாராகி அம்மனை வழிபடவேண்டும்.
துலாம்
துலா லக்னத்திற்கு செவ்வாய் 2, 7-ஆமதி பதி. செவ்வாய் சுபவலுப் பெற்றால் உரிய வயதில் திருமணம் நடக்கும். செவ்வாய் பலம்குறைந்தால் காலதாமதத் திருமணம் அல்லது கலகம் நிறைந்த திருமண வாழ்க்கை அமையும். செவ்வாய் தசை, புக்திக் காலங்களில் சொத்துகளால், கூட்டுத் தொழிலால், வாழ்க் கைத் துணையால் ஆதாயமுண்டாகும். வயோதி கத்தில் செவ்வாய் தசை, புக்தி மாரகத்தைத் தரத் தவறுவதுமில்லை.
பரிகாரம்: செவ்வாய் தசை, புக்திக் காலங் களில் காலபைரவரை வழிபடவேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் 1, 6-ஆமதி பதி. விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் ஆட்சி, உச்சம்பெறுவது சிறப்பல்ல. தங்களுக்கு ஏற்படும் நல்லவை- கெட்டவை இரண்டிற்கும் இவர்களே காரணமாக இருப்பார்கள். முன் கோபத்தால் சொந்த செலவில் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொள்வார்கள். செவ்வாய் தசை, புக்திக் காலங்களில் நோய், கடன், எதிரி தொல்லை, ஏவல், பில்-, சூன்ய தாக்க முண்டாகும்.
பரிகாரம்: செவ்வாயல் பாதிப்பிருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை சரபேஸ்வரரை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு லக்னத்திற்கு செவ்வாய் 5, 12-ஆமதிபதி. செவ்வாய் ஆட்சி, உச்சம்பெற்றால் செவ்வாய் தசைக் காலங்களில் பேரதிர்ஷ்டம் உண்டாகும். செவ்வாய் தசை முடியும்போது இழப்பையும், ஏமாற்றத்தையும், விரயத்தையும் தரத் தவறுவதில்லை.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை குரு ஓரையில் நவகிரக செவ்வாய் பகவானை வழிபட வேண்டும்.
மகரம்
மகர லக்னத்திற்கு செவ்வாய் 4, 11-ஆமதிபதி, பாதகாதிபதி. ஆட்சி, உச்சம்பெற்ற செவ்வாய், தனது தசை, புக்தி ஆரம்பத்தில் ஆதாயத்தையும், தசை முடிவில் பாதகத்தையும் தருகிறது. சிலருக்கு உயிர் காரகத் துவத்தையும், சிலருக்கு பொருள் காரகத்துவத்தையும் பாதிக்கிறது.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை சென்றுவர பாதிப்பு குறையும்.
கும்பம்
கும்ப லக்னத்திற்கு செவ்வாய் 3 , 10-ஆமதிபதி. ஆட்சி, உச்சம், சுபவலுப் பெறுவது மிகச்சிறப்பு. சிலர் லக்னாதிபதி சனியும் செவ்வாயும் பகை கிரகங்கள் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். பகை கிரகங்களுடன் சம்பந்தம் பெறாத செவ்வாய் கும்ப லக்னத் திற்கு தொழில், உத்தியோக உயர்வை நிச்சயம் தரும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை பழநி முருகனை வழிபட நிலையான முன்னேற்றமுண்டாகும்.
மீனம்
மீன லக்னத்திற்கு செவ்வாய் 2, 9-ஆமதிபதி. செவ்வாய் சுப வலுப் பெற்றவர்கள் வங்கிப் பணி, ஆசிரியர் தொழில், ஜோதிடம், நிதி நிர்வாகம் போன்ற பணி களில் தனித் திறமையுடன் மிளிர் கின்றனர். இவர்களுக்கு அரசியல், ஆன்மிகம் போன்ற துறைகளில் ஆர்வமதிகம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை குரு ஓரையில் திருச்செந்தூர் முருகனை வழிபட ஏற்றம் அதிகரிக்கும். எந்தவொரு பலனும் அதன் தசாபுக்திகளிலேயே அப்பட்ட மாக வெளிப்படும். எனவே செவ்வாய்க்குரிய பரிகாரங்களைப் பயன்படுத்தி உயர்வுபெற வாழ்த்துகள்.
செல்: 98652 20406