கும்ப ராசியில் அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள் உள்ளன.
கும்ப ராசி, அவிட்ட நட்சத் திரத்தில் பிறந்தவர்கள் ராட்சச கணத்தைச் சேர்ந்தவர்கள் என ஜோதிடம் கூறுகிறது. அதற்காக ராட்சச குணமுடையவர்கள் என்று சொல்லவியலாது. ஏனெனில் இவர்களின் மிருகம் பெண் சிங்கம். பெரும்பாலும் இவர்கள் மெலிலிந்த தேகத்துடனும், குள்ளமாகவும் இருப்பார்கள். கல்வியில் ஊக்கமும், ஆச்சார அனுஷ்டானங்களில் பற்று தலும் இருக்கும். தெய்வீக வழிபாடுகளிலும் சிறந்திருப் பார்கள். எவ்வளவு மேதைகளாக இருந்தாலும் பிரபலமாவது கடினம். ஏனென்றால் ஆணா யினும் பெண்ணாயினும் ஒருவர் செய்யும் உதவிகளை உடனே மறந்துவிடுவார்கள். பலர் எவ்வித பாரபட்சமும் பாராது அடுத்தவருக்கு தீங்குவிளை விப்பார்கள். இதுபோன்ற கொள்கைகளைக் கைவிட்டுச் செல்வார்களேயானால் சிறந்து விளங்கலாம். இவர்கள் வயிற்றுவலி தொந்தரவால் அவதிப்படு வார்கள். கும்ப ராசியில் பிறந்த இவர்களுக்கு எப்பொழுதும் சனி பகவானும், ராகு பகவானும் துணைநிற்பார்கள்.
சதய நட்சத்திரத்தில் பிறந் தவர்களின் மிருகம் பெண் குதிரை. இவர்கள் இராஜராஜசோழன் பிறந்த நட்சத்திரத்தைப் பெற்றவர்கள். தஞ்சை வளநாடு செழிக்கவைத்த இராஜராஜசோழன் வாழ்ந்த வாழ்க்கை இவர் கள் வாழ்வார்கள். இவர் களுக்கு கேள்வி ஞானம் அதிகம்.
மேலும் இவர்கள் ஒருவிதத்தில் அனைவருக்கும் உதவியாக இருப்பார்கள். எனவே இவர்களை மற்றவர்கள் கொள்ளிக்கண் கொண்டு பார்ப்பார்கள். அதனால் கண்ணேறு (கண் திருஷ்டி) படும். ஆகவே இவர்கள் வருடம் ஒருமுறையாவது கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்துகொள்ளவேண்டும்.
ஒரு எலுமிச்சம்பழம் எடுத்து, அதனிடம் மௌனமாக "கண் திருஷ்டி ஒழியவேண்டும்' என்று மும்முறை வேண்டி வேப்ப மரத்தடியில் புதைக்கவேண்டும். இவர்களது இஷ்ட தெய்வம் சனியும் ராகுவும். சனிக்கிழமைதோறும் சனீஸ்வரரை வணங்கிவரவேண்டும். சனிக்கிழமை ராகு காலத்தில் (காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்குள்) ராகுவையும் வணங்கி வரவேண்டும். சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கை யில் எந்தவிதத்திலும் முன்னேறிவிடுவார்கள். தங்களை நம்பிவருபவர்களை அரவணைத்துச் செல்வதில் வல்லமை படைத்தவர்கள். பெண்களின் நட்பை எளிதில் பெற்றுவிடு வார்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந் தாலும் ஒருவராகப் பிறப்பார்கள். அதற்கடுத்து ஆணாக இருந்தால் பெண்ணும், பெண்ணாக இருந்தால் ஆணும் பிறப்பார்கள். இவர்களால் தாய்மாமன் வீடு உயரும். தன்மனை குறையும். தாய்மாமன் வீடு மிகவும் நொடித்துப் போயிருந்தாலும், படிப்படியாக முன்னேற் றமடைவார்கள். இது முற்றிலும் உண்மை. எனவே இவர்களைப் பொருத்தளவில் தாய் மாமன் வீட்டில் வளர்வது நல்லது. இவர்களுக்கு உகந்த கிரகம் ராகு- கேதுக்களாகும். எனவே இவர்கள் செவ்வாய்க்கிழமையன்று காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்குள் கேது பகவானையும், சனிக்கிழமையன்று காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்குள் ராகு பகவானையும் வணங்கிவர நன்மை யுண்டு. இவர்கள் கல்வியில் உயர்ந்த வர்கள். பித்தம் சம்பந்தமான வியாதி இருக்கும். இவர்களில் பெரும்பாலான ஜாதகர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் இருக்கும். எனவே நல்ல ஜோதிடர்களிடம் ஜாதகத்தைக் காண்பித்து ஆலோசனை பெற்று, பிரம்மஹத்தி தோஷமிருந்தால் அதனை நிவர்த்திசெய்து கொள்ளவும்.
பரிகாரங்கள்
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் ஈரோடு மாவட்டம், கொடுமுடியிலுள்ள சனி பகவானையும், நாகராஜரையும் வணங்கி வர நன்மையுண்டு.
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சென்று அங்குள்ள சனீஸ்வரரையும், நாகராஜரை யும் வணங்கிவர நன்மையுண்டு. மேலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டு மென்றால் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்துகொள்ளவேண்டும். கும்பகோணம் அருகே திருவிடை மருதூர் மகாலிங்கேஸ்வரரை காலை 9.00 மணிக்குள் வணங்கி, பிரம்மஹத்தி தோஷநிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந் தவர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் காஞ்சிபுரம் சென்று, அங்குள்ள ஆதிசேஷனை யும் சித்திரகுப்தரையும் வணங்கிவர மேன்மையுறலாம். எந்த நாளிலும் சென்று வழிபடலாம்.
செல்: 94871 68174