Advertisment

தாராபலன் பெருக்கும் பரிகாரங்கள்! 27 நட்சித்திரத்திற்கும் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/remedies-increase-wealth-27-constellations-prasanna-astrologer-i-anandhi

வாழ்க்கையில் வளர்ச்சி யடைய வெற்றி அவசியமானது.

அந்த வெற்றியை வழங்குவதில் ஜோதிடத்திற்கும் பரிகாரத் திற்கும் அதீத பங்கு உண்டு.

ஜோதிடத்தின் ஒரு பகுதி யான தாராபலன் ஜாதகருக்கு பல்வேறு விதத்தில் உறுதுணையாக விளங்குகிறது. சமஸ்கிருத மொழியில் தாரா அல்லது தாரை என்றால் நட்சத்திரம் எனப் பொருள். மனோகாரகன் எனப்படும் சந்திர பகவான் இடம்பெற்றுள்ள நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம நட்சத்திரம் இடம்பெறும் ராசியே ஜாதகருக்கு "ஜென்ம ராசியாக' எடுத்துக்கொள்ளப்படுகிறது. சந்திர பகவான் ஒரு ராசியில் இரண்டேகால் நாட்கள் சஞ்சாரம் செய்கிறார். அதாவது 54 மணி நேரம் ஒரு ராசியில் சந்திர பகவான் நிற்கிறார். ஒரு ராசிக்கு இரண்டேகால் நட்சத்திரமாகும். அதாவது 9 பாதங்களாகும். எனவே சந்திர பகவான் ஒருபாதம் கடக்க 6.00 மணி நேரம் எடுத்துக் கொள்கி றார். ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்திலிருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ணி வரும் எண் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 வரை உள்ள எண்களுக்கு தாரை களின் பெயர்களை வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அறிவது என்னவென்றால் தினமும் ஆறுமணி நேரத்திற்கு ஒருமுறை நட்சத்திர பாதம் மாறும் சந்திரன் அதற்கேற்ப தன் கோட்சார பலன்களை தாரை அல்லது தாரா பலன் என்ற முறையில் வழங்குகிறார். தாரைகள் முதலில் ஜென்ம நட்சத்திரத்தில் தொடங்கி ஒன்பது நட்சத்திரம் வரை கணக்கிடப்பட்டு பின் மீண்டும் முதலில் இருந்து கணக்கிடப்படுகிறது.

Advertismen

ss

தாரைகளின் பெயர்கள்:

1. ஜென்ம தாரை

2. சம்பத்து தாரை

3. விபத்து தாரை

4. சேமத் தாரை

5. பிரத்தயக்கு தாரை

6. சாதக தாரை

7. வதைத்தாரை

8. மித்திர தாரை

9. பரமமித்ர தாரை

தாரா பலம் என்பது சில முக்கிய செயல்களுக்காக தனது சுய ஜென்ம நட்சதிர அடிப்படையில் கணக்கிடுவதாகும்.

ஜென்ம நட்சதிரம் முதல் நாம் ஒரு காரியம் செயல்பட எடுத்துக்கொள்ள இருக்கும் நட்சத்திரம்வரை எண்ணி, அதன் கூட்டுத்தொகையை ஒன்பதால் வகுக்க மீதி, 0, 2, 4, 6, 8 வந்தால் மிக சிறப்பு. மீதி 1, 3, 5, 7 வந்தால் சிறப்பல்ல. அவரவர் பிறந்த நட்சத்திரத்தின் சுபத்தாரா பலன் கொண்ட நட்சத்திரங்கள் 12 ராசிகளிலிலும் அமையும். அதேபோல் அசுபத்தாரா நட்சத்திரங்களும் 12 ராசிகளிலும் அமையும். ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கு நல்ல தாரா என்று சொல்லப்படுகின்ற 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 17, 18, 20, 22, 24, 26, 27.

.நட்சத்திரங்கள் எந்த ராசிகளில் வருகிறதோ அந்த ராசி குறிப்பிடும் பாவ காரகங்கள் அந்த நட்சத்திரத்தில் பிறந்த மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்போது அந்த பாவக காரகங்களில் நேர்மறை பலன்கள் நிகழும். 1, 3, 5, 7, 10, 12, 14, 16, 19, 21, 23, 25 இந்த நட்சத்திரங்கள் எந்த ராசிகளில் வருகிறதோ அந்த ராசி குறிப்பிடும் பாவக காரங்கள் அந்த நட்சத்திரத்தில் பிறந்த மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்போது அந்த பாவக காரகங்களால் எதிர்மறை பலன்கள் நிகழும்.

உதாரணமாக மீன ராசி, ரேவதி நட்சத்திர நபர் தன் வாழ்வில் மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திர நபரை சந்திக்கும் காலம் அவருக்கு சம்பத்து தாரா பலன் காரணமாக அவரது இரண்டாம் பாவ தனம்; வாக்கு காரகம் சிறப்பாக இயங்க ஆரம்பிக்கும்.

இதுவே ஒரு மேஷ ராசி, பரணி நட்சத்திர நபரும் மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திர நபரும் ஒரே இடத்தில் சந்திக்கும் காலங்களில் மேஷ ராசி நபருக்கு 12-ஆம் பாவக காரகம் எதிர்மறையாக வேலை செய்யும். 12-ஆம் பாவம் விரயம், தூக்கம் இவற்றின் காரகம் கொண்டது. இங்கே மேஷ ராசி நபர் தன் 12-ஆம் பாவ காரகப் பலனை மீன ராசி நபரிடம் இழப்பார்.

இதேபோல் ஒரு கடக ராசி, ஆயில்யம் நபரும் அவரது 4-ஆவது ராசியில் வரும் வதை தாரா நட்சத்திரமான 7-ஆவது சுவாதி நட்சத்திர நபரும் ஒரே இடத்தில் சந்திக்கும் காலம் ஆயில்யம் நபருக்கு துலா ராசி நபரால் அவரது முயற்சிகள் எல்லாம் தடைப்பட்டு போகும்.

ஒரு கடக ராசி ஆயில்யம் நபர் தனக்கு எட்டாம் ராசியான கும்ப ராசியில் வரும் மைத்திர தாரா நட்சதிரமான பூரட்டாதி நபரை சந்திக்கும் காலம் தன் வாழ்வில் துன்பங்களிலிருந்து விடுபடும் வழியை அறிவார்.

இப்படி தாரா பலனின் சூட்சுமங்களை அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது ரகசியங்கள் ஜோதிட உண்மைகள் வெளிப்படும்.

இருப்பினும் சிறப்பில்லாத நாளாக இருந்தாலும் அதற்கான பரிகாரமும் தேவைப்படுகிறது. இந்த கட்டுரையில் 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் சுப தாரைகளை மேலும் வலுப்படுத்தக்கூடிய பரிகாரங்களும் அசுப தாரையால் ஏற்படக் கூடிய இன்னல்களை அகற்றக்கூடிய பரிகாரங் களும் கொடுக்க இருக்கிறேன். படித்து பயன்பெற வாழ்த்துகள்.

1. ஜென்ம தாரை

சந்திரன் எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசி ஜென்ம ராசியாகும். சந்திரன் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அது ஜென்ம நட்சத்திரமாகும். ஒரு ஜாதகத்தில் பிரதானமான பலன்களை எடுத்துரைப்பது விதியெனும் லக்னமாக இருந்தாலும் விதியால் ஏற்படும் வினைகளைத் தீர்ப்பது மதியெனும் சந்திரனாகும். ஆக விதிக்கு துணையாக இருப்பது மதி எனும் சந்திரனாகும்.

அதனால்தான் சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தை வைத்து பிறந்தநாள் கொண்டாடுகிறோம். திருமணப் பொருத்தம் பார்க்கிறோம், ஜாதகரீதியான தசை புக்தி மற்றும் கோட்சார பலன்கள் கணிக்கிறோம். எழுதப்பட்ட கர்மா விதிப்படிதான் நடக்கும் என்றாலும் விதியால் ஏற்படப் போகும் விளைவுகளை உணரும் உள்ளுணர்வைத் தருவதும் சந்திரன்தான். சந்திரன் வளர்ந்து தேயும் கிரகம் என்பதால் சந்திரன் நின்ற பாகவம்மூலம் கிடைக்கும் பலன்களும் நிதானிக்க முடியாத விதத்தில்தான் இருக்கும்.

ஒரு ஜாதகத்தில் விதிக்கு தீர்வு தரும் மதி எனப்படும் சந்திரனின் நிலை மிகமிக முக்கியம். ஒருவரின் சுய ஜாதகத்தில் சந்திரனின் மூலம்தான் அனைத்து விதமான யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன.

ஜென்ம நட்சத்திரம் சுய ஜாதகத்தில் வலிமைபெற்றால் உள்ளுணர்வு சிறப்பாக இயங்கி வெற்றிமேல் வெற்றி தொடரும். சந்திரனுக்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் உள்ளுணர்வு சிறப்பாக இயங்காது. மனக் குழப்பம் மனசஞ்சலத்தால் உள்ளுணர்வு சிறப் பாக இயங்காது. மனபயத்தால் தோல்வியை தழுவ நேரும். பிறந்த நட்சத்திரத்திலிருந்து எண்ணி வரும் 1, 10, 19-ஆவது நட்சத்திரம் ஜென்ம தாரையாக பலன்தரும்.

ஜென்ம தாரையின் அதிபதி சூரியன். ஜென்ம தாரை என்பது ஒருவரின் பிறந்த நட்சத்திரமாகும். உதாரணமாக ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அதன் அனு ஜென்ம நட்சத்திரமான மக நட்சத்திரத்திலும், திரி ஜென்ம நட்சத்திரமான மூல நட்சத்திர நாட்களில் முக்கிய நிகழ்வுகளைத் தவிர்க்கவேண்டும். ஜென்ம நட்சத்திர நாட்களில் மன சஞ்சலம் மிகுதியாக இருப்பதுடன் உடல் ஆரோக்கியம் சீராக இருக்காது. சிலருக்கு மிகுதியான பொருள் விரயம் இருக்கும். காரியத் தடை இருக்கும். மிகச்சுருக்கமாக மத்திம பலன்கிட்டும். எனவே இயன்றவரை திருமணம், வளைகாப்பு, தீட்சை பெறுதல், யுத்தம், புதிய தொழில் ஒப்பந்தம், நோய்க்கு புதிய சிகிச்சை, பயணம் ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும். தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் தானதர்மம் செய்தல், புதிய ஆடை அணிதல், விருந்து சாப்பிடுதல் விதை விதைத்தல் ஆகியவற்றை செய்யலாம். ஜென்ம தாரை நாட்களில் தோஷத்தைக் குறைக்க வாழைக்காய் தானம் தரலாம். ஜென்ம நட்சத்திரமான ஜென்ம தாரையை இயக்கக்கூடிய வாழ்வியல் பரிகாரம் அவசியமாகிறது. அவரின் ஜென்ம தாரைக்குரிய வடிவங்களை இயக்கினாலும் ஜென்ம தாரையால் நல்ல பலன்களை அடையமுடியும்.

27 நட்சத்திரத்திற்கும் ஜென்ம தாரையை இயக்கக்கூடிய பரிகாரங்கள்

(தொடரும்...)

செல்: 98652 20406

bala201224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe