Advertisment

தாராபலன் பெருக்கும் பரிகாரங்கள்! 27 நட்சித்திரத்திற்கும் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி(சென்ற வார தொடர்ச்சி...)

/idhalgal/balajothidam/remedies-increase-wealth-27-constellations-prasanna-astrologer-i-anandhi-0

ருவர் பிறந்த நட்சத்திரமே ஜென்ம நட்சத் திரமாகும். அந்த ஜென்ம நட்சத்திரத்தின்படி இந்த ஜென்மத்தில் அனுபவிக்கவேண்டிய அனைத்து சுப- அசுபங்களும் பதிவாகி இருக்கும். இந்த ஜென்மத்தில் ஆன்மா அனுபவிக்கவேண்டிய நிகழ்வுகளை உள்ளடக்கியது உடல்காரகனாகிய சந்திரன். உடல் அனுபவிக்கும் அசுபங்கள் குறைந்து சுபம் உண்டாக ஜென்ம நட்சத்திர வழிபாடு அவசியம். இனி 27 நட்சத்திரத்திற் கான ஜென்ம நட்சத்திர வழிபாட்டை பார்க்கலாம்.

அஸ்வினி

குதிரைக்கு கொள்ளு, பட்சிகளுக்கு தானியம் வழங்கவேண்டும். ஆண்டாள் வழிபாடு, மீனாட்சியம்மன் வழிபாடு சிறப் பான பலன் தரும்.

பரணி

வீட்டில் தினமும் நெய் தீபம் ஏற்றவேண்டும். வலம்புரிச் சங்கு வைத்து வழிபடலாம். அல்லது துர்க்கை, காளி வழிபாட்டால் மேன்மை பெற முடியும்.

Advertisment

ss

கிருத்திகை

தீப தரிசனம் செய்வதுடன், முருகன் வழிபாடு செய்யவேண்டும். கோவில்களுக்கு விளக்கு ஏற்ற எண்ணெய் வாங்கி தருவதால் சுபப் பலன்களைப் பெறமுடியும்.

ரோகிணி

தினமும் கிருஷ்ணர் வழிபாடு செய்யவேண்டும். பண்டிகை காலங்களில் ரதம் இழுத்தல்

ருவர் பிறந்த நட்சத்திரமே ஜென்ம நட்சத் திரமாகும். அந்த ஜென்ம நட்சத்திரத்தின்படி இந்த ஜென்மத்தில் அனுபவிக்கவேண்டிய அனைத்து சுப- அசுபங்களும் பதிவாகி இருக்கும். இந்த ஜென்மத்தில் ஆன்மா அனுபவிக்கவேண்டிய நிகழ்வுகளை உள்ளடக்கியது உடல்காரகனாகிய சந்திரன். உடல் அனுபவிக்கும் அசுபங்கள் குறைந்து சுபம் உண்டாக ஜென்ம நட்சத்திர வழிபாடு அவசியம். இனி 27 நட்சத்திரத்திற் கான ஜென்ம நட்சத்திர வழிபாட்டை பார்க்கலாம்.

அஸ்வினி

குதிரைக்கு கொள்ளு, பட்சிகளுக்கு தானியம் வழங்கவேண்டும். ஆண்டாள் வழிபாடு, மீனாட்சியம்மன் வழிபாடு சிறப் பான பலன் தரும்.

பரணி

வீட்டில் தினமும் நெய் தீபம் ஏற்றவேண்டும். வலம்புரிச் சங்கு வைத்து வழிபடலாம். அல்லது துர்க்கை, காளி வழிபாட்டால் மேன்மை பெற முடியும்.

Advertisment

ss

கிருத்திகை

தீப தரிசனம் செய்வதுடன், முருகன் வழிபாடு செய்யவேண்டும். கோவில்களுக்கு விளக்கு ஏற்ற எண்ணெய் வாங்கி தருவதால் சுபப் பலன்களைப் பெறமுடியும்.

ரோகிணி

தினமும் கிருஷ்ணர் வழிபாடு செய்யவேண்டும். பண்டிகை காலங்களில் ரதம் இழுத்தல் நல்லது. மேலும், சக்கரத்தாழ்வார் வழிபாட்டால் இன்பமாக வாழமுடியும்.

மிருகசிரிடம்

குரு ராகவேந்திரர் சுவாமிகளை ஜென்ம நட்சத்திரநாளில் வழிபடவேண்டும். மகாவிஷ்ணுவின் வாகனமான கருடாழ் வாரை வழிபடுவது சிறப்பு. மேலும் அவல் பாயசம் தானம் வழங்கலாம்.

திருவாதிரை

ஜென்ம நட்சத்திரநாளில் நடராஜர் அல்லது சிவவழிபாடு செய்யலாம். தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்கவேண்டும். ஸ்படிக மாலை அணிந்துகொள்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறமுடியும்

புனர்பூசம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ ராமரை பட்டாபிஷேக காட்சியில் வழிபடலாம். தினமும் ஸ்ரீ ராம ஜெயம் எழுதலாம். நாய்களுக்கு உணவிடுவதன்மூலம் சிறப்பான நன்மைகளை அடைய முடியும்.

பூசம்

சக்திவேல் வழிபாடு செய்வதன்மூலம் மகத்தான பலனைப் பெறடியும். முருகன் வழிபாடு. மயிலுக்கு உணவு வழங்கலாம்.

ஆயில்யம்

புற்றுக்கண் உள்ள இடங்களுக்கு சென்று புற்று வழிபாடு, சர்ப்ப வழிபாடு செய்யவேண்டும். ஸ்ரீ ரங்கம் சென்று வருவதும் ஸ்ரீ ரங்க நாதரை வழிபடுவதும் வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தி தரும்.

மகம்

வீட்டில் துளசிமாடம் வைத்து வழிபடலாம். சிவன் வழிபாட்டாலும் சூரிய நமஸ்காரத்தாலும் ஆன்ம பலத்தை அடையமுடியும்.

பூரம்

கண் சிகிச்சைக்கு உதவுவதால் ஒளிமயமான எதிர்காலம் அமையும். அம்மன் வழிபாட்டால் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியும். ஆடி மாதம் கூழ் தானம் செய்யலாம் .

உத்திரம்

ஆண்கள் வருடம் ஒருமுறை சுவாமி அய்யப்பனை தரிசிக்க வாழ்வாதாரம் உயரும். வயது முதிர்ந்தவர்களுக்கு ஊன்று கோல் தானம் வழங்கலாம்.

அஸ்தம்

தினமும் காலையில் எழுந்தவுடன் இரண்டு கரங்களையும் சூடு பறக்க தேய்த்து கண்ணில் ஒற்றிக்கொண்டு கைகளைப் பார்க்கவேண்டும். மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமி வழிபாடு நல்லது. மருத்துவ சிகிச்சைக்கு உதவலாம்.

சித்திரை

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் ஸ்வஸ்திக் சின்னத்தை அதிகம் பயன்படுத்தவேண்டும் வள்ளலார் வழிபாடு செய்வதும் மகர ஜோதி தரிசனம் செய்வதும் உகந்தது.

ஸ்வாதி

தினமும் செந்தூரம் தரிப்பது நல்லது. சுவாதி நட்சத்திரநாளில் பானகம் படைத்து லட்சுமி நரசிம்மரை வழிபடவேண்டும். பானகம் தானம் வழங்கவேண்டும்.

விசாகம்

காவடி செலுத்தி முருகனை வழிபட வேண்டும். வசதியற்றவர்களின் திருமணத் திற்கு உதவலாம். தாயிடம் ஆசிர்வாதம் பெறவேண்டும்.

அனுஷம்

தாமரை மலர் அணிவித்து மகாலட்சுமியை வழிபடவேண்டும். காஞ்சி மகாப்பெரியவர் மற்றும் காஞ்சி காமாட்சியம்மனை வழிபட்டு நற்பலன்கள் பெறலாம்.

கேட்டை

புதன் ஓரையில் விநாயகருக்கு அருகம் புல் அணிவித்து வழிபடவும். இந்திரன் வழிபாடு சகல சம்பத்துகளை யும் பெற்றுத்தரும். குடை தானம் வழங்க லாம்.

மூலம்

மூலம் நட்சத்திரநாளில் வெற்றிலை மாலை அணிவித்து ஆஞ்சனேயர் வழிபாடு செய்யலாம். ஸ்ரீ ராம ஜெயம் எழுதலாம்.சரஸ்வதி தேவியின் வழிபாடு நன்மை பயக்கும்.

பூராடம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை வழிபடலாம். தினமும் லலிதா சகஸ்ஹர நாமம் கேட்கலாம் அல்லது படிக்கலாம். பழங்கள், கனிகளை தானம் வழங்க முத்தாய்ப் பான முன்னேற்றம் உண்டு.

உத்திராடம்

பசுக்களுக்கு உணவு தானம் வழங்கலாம். பலா மரக்கன்றுகளை நடலாம். ஸ்ரீ தட்சிணா மூர்த்தியை வழிபட அனைத்து வளங்களும் கிடைக்கப்பெறும்.

திருவோணம்

வசதியற்றவர்களின் மருத்துவ செலவிற்கு உதவவேண்டும். புன்னை மரக்கன்றுகளை நடவேண்டும். மகா விஷ்ணு வழிபாடு ஏற்றமான பலன் தரும்.

அவிட்டம்

ஆதரவற்றவர்களின் தேவையறிந்து உதவவேண்டும். ஹயக்கிரீவர் வழிபாடு நல்லன தரும். சனிக்கிழமை சுந்தரகாண்டம் படிக்க வேண்டும்.

சதயம்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர், வெளிநாட்டில் வசிப்பது சிறப்பு. உளுந்து தானம் வழங்க வேண்டும். தினமும் திருவாசகம் படிக்கவேண்டும்.

பூரட்டாதி

வியாழக்கிழமை குபேரன் வழிபாடு செய்யவேண்டும். கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் சென்றுவர யோகம் அதிகமாகும். யானையிடம் ஆசிர்வாதம் பெறவேண்டும்.

உத்திரட்டாதி

வெள்ளிக்கிழமை காமதேனுவை வழிபடலாம். புனித நீர் நிலைகளில் நீராடலாம். வீட்டில் ஸ்ரீ சக்கரம் வைத்து வழிபட நன்மைகள் மிகுதியாகும்.

ரேவதி

இராமர் பாதம் அல்லது விரும்பிய தெய்வங்களின் பாதங்களை வைத்து வழிபட வெற்றிகள் உண்டாகும். அதே போல் ஸ்ரீ ரங்கநாதரின் வழிபாடு சுபத்தை அதிகமாக்கும். மீன்களுக்கு உணவிடுவதும் உங்களுக்கு ஆன்ம பலத்தை அதிகரிக்கும்.

இனி அடுத்த வாரம் சம்பத்து தாரையை வளப்படுத்தும் பரிகாரங்களை காணலாம்.

(தொடரும்...)

செல்: 98652 20406

bala271224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe