Advertisment

தாராபலன் பெருக்கும் பரிகாரங்கள்! 24 நட்சரத்திற்கும் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/remedies-increase-wealth-24-stars-prasanna-astrologer-i-anandhi

சென்ற வாரம் விபத்து தாரை பற்றிய தகவல்களை பார்த்தோம்.

இந்த வாரம் சேஷம தாரை பலன்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.

சேஷம தாரை

இதன் அதிபதி குரு. ஜென்ம நட்சத்திரத் திற்கு நான்காவது நட்சத்திரம். ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவருக்கு ரோகிணி, அஸ்தம், திருவோண நட்சத்திர நாட்கள் சேஷமத் தாரையாகும். அன்று எல்லாவிதமான சுப காரியங்களும் செய்யலாம். தொட்டது துலங்கவும், புதிய முயற்சிகளில் வெற்றியடையவும் உகந்த தாரை யாகும். திருமணம் மற்றும் பெண் பார்க்க ஏற்ற தாரை. வராக்கடனை வசூல் செய்யலாம்.

வியாபாரம் தொடங்கினால் தன விருத்தி அடையும். நிலம், வீடு, வாகனம், கால் நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள், பறவைகள் வாங்கலாம். கல்வி கற்க ஆரம்பிக்கவும், செயற்கை முறை கருத்தரிப்பிற்கும் ஏற்ற தாரை. கிணறு தோண்டலாம். உடல் ஆரோக்கியம் சீரடையும். தடைப்பட்ட அனைத்துக் காரியங்களையும் செய்யலாம்.

Advertisment

ss

பெரியோர்களை சந்தித்து நல்லாசி பெறலாம். உயர் அதிகாரிகளை சந்தித்து அவர் களின் ஆதரவு பெறலாம். தர்ம காரியங்கள் பொதுக் காரியங்களில் ஈடுபடலாம். தீராத நோய்க்கு மருத்துவரை சந்திக்கலாம். அனைவருடைய அன்பையும் ஆதரவையும் பெற ஏற்ற தாரையாகும்.

வீடு, வாகனம், ஆபரணம் பற்றிய சிந்தனை அதிகமாக இருந்தால் சுய ஜாதக ரீதியாக சேஷம தாரை இயங்குகிறது என்பது பொருள்.

தடைப்பட்ட அனைத்து செயல்களையும் சேஷம தாரையில் நடைமுறை படுத்தினால் தடை, தாமதங்கள் அகலும். சொத்துகள் சேஷம தாரை நட்சத்திர நாளில் வாங்கினால் வாழ்நாள் முழுவதும் அந்த சொத்து உங்களுக்கு பலன் தரும். சொத்தின் மதிப்புகள் உயரும். தாய்வழிச் சொத்தில் வில்லங்கம் உள்ளவர்கள் 4-ஆவது தாரை நாளில் பேச

சென்ற வாரம் விபத்து தாரை பற்றிய தகவல்களை பார்த்தோம்.

இந்த வாரம் சேஷம தாரை பலன்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.

சேஷம தாரை

இதன் அதிபதி குரு. ஜென்ம நட்சத்திரத் திற்கு நான்காவது நட்சத்திரம். ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவருக்கு ரோகிணி, அஸ்தம், திருவோண நட்சத்திர நாட்கள் சேஷமத் தாரையாகும். அன்று எல்லாவிதமான சுப காரியங்களும் செய்யலாம். தொட்டது துலங்கவும், புதிய முயற்சிகளில் வெற்றியடையவும் உகந்த தாரை யாகும். திருமணம் மற்றும் பெண் பார்க்க ஏற்ற தாரை. வராக்கடனை வசூல் செய்யலாம்.

வியாபாரம் தொடங்கினால் தன விருத்தி அடையும். நிலம், வீடு, வாகனம், கால் நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள், பறவைகள் வாங்கலாம். கல்வி கற்க ஆரம்பிக்கவும், செயற்கை முறை கருத்தரிப்பிற்கும் ஏற்ற தாரை. கிணறு தோண்டலாம். உடல் ஆரோக்கியம் சீரடையும். தடைப்பட்ட அனைத்துக் காரியங்களையும் செய்யலாம்.

Advertisment

ss

பெரியோர்களை சந்தித்து நல்லாசி பெறலாம். உயர் அதிகாரிகளை சந்தித்து அவர் களின் ஆதரவு பெறலாம். தர்ம காரியங்கள் பொதுக் காரியங்களில் ஈடுபடலாம். தீராத நோய்க்கு மருத்துவரை சந்திக்கலாம். அனைவருடைய அன்பையும் ஆதரவையும் பெற ஏற்ற தாரையாகும்.

வீடு, வாகனம், ஆபரணம் பற்றிய சிந்தனை அதிகமாக இருந்தால் சுய ஜாதக ரீதியாக சேஷம தாரை இயங்குகிறது என்பது பொருள்.

தடைப்பட்ட அனைத்து செயல்களையும் சேஷம தாரையில் நடைமுறை படுத்தினால் தடை, தாமதங்கள் அகலும். சொத்துகள் சேஷம தாரை நட்சத்திர நாளில் வாங்கினால் வாழ்நாள் முழுவதும் அந்த சொத்து உங்களுக்கு பலன் தரும். சொத்தின் மதிப்புகள் உயரும். தாய்வழிச் சொத்தில் வில்லங்கம் உள்ளவர்கள் 4-ஆவது தாரை நாளில் பேச்சுவார்த்தை நடத்தினால் காரியச் சித்தி உண்டாகும்.

விற்க முடியாமல் உள்ள சொத்துகளை சேஷம தாரைநாளில் விற்க முயற்சி செய்தாள் நல்ல விலை கிடைக்கும். புதிய வாகனம் வாங்க, கட்டட பணிகள் துவங்க, வாஸ்து குறைபாடை சீர்படுத்த மிக உன்னதமான தாரையாகும். நீண்டநாள் நோய் தாக்கத்தில் வாழ்பவர்கள் மாற்று முறை வைத்தியத்தை இந்த தாரை நாட்களில் துவங்க நோயிலிருந்து பரிபூரண குணம் கிடைக்கும். புதிய வைத்திய முறையை ஆரம்பிக்க ஒரு வாரம் முன்பு பேதி மருந்து சாப்பிட்டு குடலை சுத்தம் செய்யவேண்டும். அதன்பிறகு குறைந்தது ஏழு நாட்கள் எந்த மருந்தும் சாப்பிடக்கூடாது. புதிய மருந்து களை சேஷம தாரையில் உட்கொள்ள ஆரம் பித்தால் வெகுவிரைவில் பலன் தெரியும். போரிங் போட, கிணறு வெட்ட, முதன்முறை யாக கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள் வாங்க சிறப்பான தாரையாகும். கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் சேஷம தாரை நாளில் ஹயக்ரீவர், சரஸ்வதிதேவியை வழிபட கற்கும் ஆர்வம் மேம்படும். பாதியில் நின்ற கட்டடப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கலாம்.

ஒருவருக்கு சேஷம தாரை என்பது ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 4, 13, 22-ஆவது நட்சத்திரமாகும். ஆனால் 22-ஆவது நட்சத்தி ரம் வைநாசிகம் என்பதால் அதைத் தவிர்ப் பது நல்லது.

ஒரு ஜாதகத்தில் சேஷம தாரை யின் நட்சத்திர சாரத்தில் அதிக கிரகம் நிற்பது சுபத்துவமான அமைப்பாகும்.

சேஷம தாரையின் நட்சத்திர சாரத்தில் நின்று ஒரு கிரகம் தசா நடத்தினால் தாய், தாய்வழி உறவினர் களின் அன்பும் அனுசரனையும். தாய்வழிச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியமும் உண்டாகும். நல்ல வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும். வீட்டில் நல்ல அதிர்வலைகள் நிரம்பி இருக்கும்.

விவசாயம், கால்நடை வளர்ப்பதில் ஆர்வம் மிகுதியாகும். இல்வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆடம்பரப் பொருட்கள் வீட்டில் அதிகமிருக்கும்.

நல்ல கல்வி அறிவு உண்டு. படித்த படிப்பிற்கு ஏற்ற தொழில் உத்தியோகம் அமையும்.

பெற்றோர்களுடன் சேர்ந்து கூட்டு குடும்பமாக வாழ்வார்கள். அக்கம்பக்கதில் இருப்பவர்கள் இவர் களிடம் ஆலோசனை கேட்பார்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்திருக்கும்.

சேஷம தாரை நட்சத்திர சாரத்தில் எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் தாயின் ஆரோக்கியம் கெடும். வறுமை, வாஸ்து குறைவான வீட்டில் வாழுதல் போன்ற நிலை நீடிக்கும். எளிதில் சொத்து அமையாது. கற்ற கல்வி பயன் தராது.

இனி 27 நட்சத்திரத்தினரும் சேஷம தாரையை இயக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

அஸ்வினி

இவர்களின் 4-ஆவது தாரையான ரோகிணி நட்சத்திர நாளில் திருக்கோவில்களில் தேர் அல்லது ரதம் இழுத்தால் சகல ஐஸ்வர்யங் களும் தேடிவரும்.

பரணி

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருக சீரிஷ நட்சத்திர நாளில் கோமாதா வழிபாடு செய்துவந்தால் வாழ்க்கை வளமாகும்.

கிருத்திகை

தலைமை பண்பு நிறைந்த கிருத்திகை நட்சத்திரத்தினர் திருவாதிரை நட்சத்திர நாளில் ஸ்ரீ ருத்ரம் கேட்க அல்லது படிக்க அனைத்துப் பாவங்களும் விலகும்.

ரோகிணி

சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூச நட்சத்திரத்தன்று நாய்களுக்கு உணவிட ஏற்றம் மிகுதியாகும்.

மிருகசீரிஷம்

இந்த நட்சத்திரத்தினர் பூச நட்சத்திர நாட்களில் வேல் வழிபாடு செய்துவர வெற்றிமேல் வெற்றி தொடரும்.

திருவாதிரை

இவர்கள் தங்களது 4-ஆவது தாரையான ஆயில்ய நட்சத்திர நாளில் ஸ்ரீ ராமானுஜரை வழிபட செல்வமும் செல்வாக்கும் பெருகும்.

புனர்பூசம்

புனர்பூச நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திர மாக கொண்டவர்கள் மக நட்சத்திரத்தன்று கோவில் கோபுரத்தை தரிசிக்க தடைகள் அகலும்.

பூசம்

இந்த நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் 4-ஆவது நட்சத்திரமான பூர நட்சத்திரநாளில் வளையல் தானம் வழங்க ஏற்றமான பலன்கள் கிடைக்கும்.

ஆயில்யம்

இவர்களுக்கு நான்காவது தாரை உத்திரம். அன்று வயது முதிர்ந்தவர்களுக்கு ஊன்று கோல் வழங்க சகல செல்வங்களும் கிடைக்கப்பெறும்.

மகம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்த நட்சத்திரநாளில் விநாயகருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட நல்ல பலன் உண்டாகும்.

பூரம்

சுக்கிரனின் பூர நட்சத்திரத்தை சேர்ந்தவர் களுக்கு சித்திரை சேஷம தாரையாகும். இவர்கள் முத்து மோதிரம் அணிய சகல சௌபாக்கியமும் கிட்டும்.

உத்திரம்

இவர்களின் சேம தாரை சுவாதியாகும். இவர்கள் சுவாதி நட்சத்திரநாளில் பானகம் தானம் வழங்க வாழ்வாதாரம் உயர்வதை அனுபவத்தில் உணரமுடியும்.

அஸ்தம்

அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சேஷம தாரை விசாகம். இவர்கள் விசாக நட்சத்திரத்தன்று பஞ்சாமிர்த அபிசேகம் செய்து முருகனை வழிபட கேட்டது கிடைக்கும்.

சித்திரை

அனுஷ சித்திரை நட்சத்திரத்தின் சேஷம தாரையாகும். குடை தானம் வழங்க சகலவிதமான பாக்கிய பலன்களும் உண்டாகும்.

சுவாதி

ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த வர்களுக்கு கேட்டை சேஷம தாரையாகும். இவர்கள் கோவில் யானைக்கு பச்சை புல் தானம் உணவாக வழங்க செல்வம், புகழ், அந்தஸ்து, கௌரவம் உயரும்.

விசாகம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மூலம் சேஷம் தாரையாகும். இவர்கள் தினமும் ஸ்ரீராம ஜெயம் எழுத சகல சம்பத்துகளையும் பெறமுடியும்.

அனுஷம்

ஸ்ரீ காஞ்சி மகான் அவதார நட்சத்திரமான அனுஷத்திற்கு சேஷமதாரை பூராடம். ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மனை வழிபட வாழ்க்கைப் பயணம் சுமூகமாகும்.

கேட்டை

இவர்களின் சேஷம தாரை உத்திராடம். இவர்கள் இதய நோயாளிகளுக்கு உதவுவதன் மூலம் வேண்டிய வரத்தை அடைய முடியும்.

மூலம்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சேஷம தாரை திருவோணம். இவர்கள் குடை தானம் வழங்க வெற்றி வாகை உண்டாகும்.

பூராடம்

இவர்களுக்கு அவிட்ட சேஷம தாரை யாகும். இவர்கள் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களை நண்பர்களாக்கி கொடுக்கல்- வாங்கல் வைத்துக்கொண்டால் தவிட்டு பானை எல்லாம் தங்கமாகும்.

உத்திராடம்

இதில் பிறந்தவர்களுக்கு சதயம் சேஷம தாரையாகும். நாகாபரணம் தரித்த சிவனை வழிபாடு செய்வதன்முலம் வேண்டிய வரங்களை பெறமுடியும்.

திருவோணம்

இந்த நட்சத்திரத்தை ஜென்ம தாரையாக கொண்டவர்களுக்கு பூரட்டாதி சேஷம தாரையாகும். குபேரன் வழிபாட்டால் குன்றாத செல்வம் பெறமுடியும்.

அவிட்டம்

அவிட்ட நட்சத்திரத்தினரின் சேஷம தாரை உத்திரட்டாதி நட்சத்திரமாகும்.

இவர்கள் வீட்டில் ஸ்ரீ சக்கரம் வைத்து வழிபட செல்வவளம் பெருகும்.

சதயம்

இவர்களுக்கு சேஷம தாரை ரேவதி நட்சத்திரம். பெற்றோர்களை, பெரியோர் களை பாத பூஜை செய்து வழிபட ஸ்திரமான முன்னேற்றம் உண்டாகும்.

பூரட்டாதி

இதன் சேஷம தாரை அஸ்வினி நட்சத்தி ரம். இதில் பிறந்தவர்கள் இயலாதவர்களுக்கு மருத்துவ உதவி வழங்க சுகமான வாழ்க்கை பெறலாம்.

உத்திரட்டாதி

இதில் பிறந்தவர்களுக்கு பரணி நட்சத்திரம் சேஷம தாரையாகும். வலம்புரி சங்கு வைத்து வழிபடலாம்.

ரேவதி

இவர்களின் சேஷம தாரை கிருத்திகை. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் தானம் வழங்கலாம்.

இனி அடுத்த வாரம் 5-ஆவது தாரையான பிரத்யக் தாரை பற்றி பார்க்கலாம்.

தொடரும்

செல்: 98652 20406

Advertisment
bala240125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe