Advertisment

27 நட்சத்திரத்திற்கும் தாராபலன் பெருக்கும் பரிகாரங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/remedies-increase-fortune-all-27-stars-prasanna-astrologer-i-anandhi

ன தாரை எனும் சம்பத்து தாரையை மேம்படுத்தும் பரிகாரங்கள்!

பணம் எப்பேர்ப்பட்ட தவறுகளையும் மறைக்க உதவும் ஒரு பெரிய ஆயுதம்.

நான் சிறு வயதாக இருக்கும்போது நம்மைவிட வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்று வீட்டு பெரியவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் தற்போது பணம் அதிகம் வைத்திருப்பவர்களை மரியாதையுடன் பேசவேண்டிய நிலைக்கும் உலகம் தள்ளப்பட்டுவிட்டது. இக்காலத்தில் அதை வைத்துதான் உறவுகளின் தகுதியை தீர்மானிக்கிறார்கள். வசதி படைத்தவர்கள் கௌரவத்திற்காக கோவில் கட்டுவதற்கு லட்ச லட்சமாய் நன்கொடையாகக் கொடுப்பார்கள். ஆனால் உடன்பிறந்த சகோதர- சகோதரிகளுக்குப் பணத்தை வட்டியில்லாத கடனாக கொடுக்கக்கூட தயங்குகிறார்கள்.

ஒரு உறவினரின் வீட்டு விசேஷத்திற்கு ஆஈ ரூம் போட்டு கொடுத்தால் மொய் 5,000 முதல் 10,000 ரூபாய், அதே மண்டபத்தில் இருக்கும் சாதாரண அறையில் தங்க வைக்கும் உறவினரின் திருமண நிகழ்விற்கு 1,000 அல்லது 2,000 ரூபாய் மட்டுமே, என அன்பளிப்பு மாறுகிறது.

Advertisment

ss

ஆக செல்வ நிலையை பொருத்துதான், உறவுகளின் நிலை வலுப்படுகிறது.

ஏனென்றால், பணம் அதிகம் வைத்

ன தாரை எனும் சம்பத்து தாரையை மேம்படுத்தும் பரிகாரங்கள்!

பணம் எப்பேர்ப்பட்ட தவறுகளையும் மறைக்க உதவும் ஒரு பெரிய ஆயுதம்.

நான் சிறு வயதாக இருக்கும்போது நம்மைவிட வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்று வீட்டு பெரியவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் தற்போது பணம் அதிகம் வைத்திருப்பவர்களை மரியாதையுடன் பேசவேண்டிய நிலைக்கும் உலகம் தள்ளப்பட்டுவிட்டது. இக்காலத்தில் அதை வைத்துதான் உறவுகளின் தகுதியை தீர்மானிக்கிறார்கள். வசதி படைத்தவர்கள் கௌரவத்திற்காக கோவில் கட்டுவதற்கு லட்ச லட்சமாய் நன்கொடையாகக் கொடுப்பார்கள். ஆனால் உடன்பிறந்த சகோதர- சகோதரிகளுக்குப் பணத்தை வட்டியில்லாத கடனாக கொடுக்கக்கூட தயங்குகிறார்கள்.

ஒரு உறவினரின் வீட்டு விசேஷத்திற்கு ஆஈ ரூம் போட்டு கொடுத்தால் மொய் 5,000 முதல் 10,000 ரூபாய், அதே மண்டபத்தில் இருக்கும் சாதாரண அறையில் தங்க வைக்கும் உறவினரின் திருமண நிகழ்விற்கு 1,000 அல்லது 2,000 ரூபாய் மட்டுமே, என அன்பளிப்பு மாறுகிறது.

Advertisment

ss

ஆக செல்வ நிலையை பொருத்துதான், உறவுகளின் நிலை வலுப்படுகிறது.

ஏனென்றால், பணம் அதிகம் வைத்திருப் பவர்கள் நல்லவர்கள் மற்றும் புத்திசாலிகள் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் பதிந்துவிட்டது. அதனால் தான் நமது முன்னோர்கள் "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே' என்று எப்போதோ அழகாகச் சொல்லி விட்டார்கள். உழைப்பால் முன்னேறியவன் அந்தஸ்து பார்க்க மாட்டான்.

அப்படி அந்தஸ்து பார்க்கும் செல்வந்தன் நேர்மையான உழைப்பால் செல்வம் சேர்த்திருக்க மாட்டான். எது எப்படி யிருந்தாலும் பணம் பிரதான காரணி என்பது யாராலும் மறுக்க முடியாத நிதர்சன மான உண்மை.

ஜோதிடரீதியாக ஒருவருக்கு பணத்தை வழங்குவது தன தாரை அல்லது சம்பத்து தாரையாகும்.

தாரை என்றால் தருவது. நம்மை வந்துசேர்வது என்று பொருள். சம்பத்து தாரை என்னும் இரண்டாவது நட்சத்திரமே ஒருவருக்கு பலவித நன்மைகளைத் தரும். அதாவது உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமே ஒருவரின் அனைத்து தேவைகளைப் பூர்த்திசெய்து தரும்.

அந்த நட்சத்திரக்காரர்களே உங்களுக்கு பல வகைகளிலும் உதவிகரமாக இருப்பார்கள். சென்ற வாரம் நாம் பார்த்த ஜென்ம தாரை (நட்சத்திரம்) ஒருவரின் பிறப்பின் நோக்கம் எதுவோ அதைச் செய்யும். தன தாரை மற்றும் சம்பத்து தாரை எனும் இரண்டாவது நட்சத்திரம் அனைத்து தேவைகளைப் பூர்த்திசெய்து கொடுக்கும். பணவரவு, உரிய வயதில் திருமணம், நல்ல குடும்ப வாழ்க்கை, புத்திர பாக்கியம் உருவாகுதல், எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைப்பது, நல்ல வேலை கிடைப்பது, மனம் மகிழும் சம்பவங்களை நடத்துவது தன தாரை எனும் சம்பத்து தாரையாகும். ஒரு ஜாதகத்தில் ஜென்ம நட்சத்திரத்திற்கு இரண்டாவது நட்சத்திர சாரத்தில் அதிக கிரகம் நின்றால் ஜாதகருக்கு எந்த தசா புக்தி நடந்தாலும் தாராளமான தன வரவு இருக்கும். உரிய வயதில் திருமணம் நடக்கும். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். குடும்ப உறுப்பினர்கள் ஜாதகருக்கு மரியாதை கொடுப்பார்கள். ஜாதகரால் சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட முடியும். பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில் ஜாதகரை வெற்றிபெற யாராலும் முடியாது. வாய் ஜாலம் நிறைந்தவர். வாய் ஜாலத்தால் குடும்ப உறவுகளிடம் நற்பெயர் சம்பாதிப்பார். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்.

தன தாரை நட்சத்திர சாரத்தில் எந்த கிரகமும் இல்லையெனில் உரிய வயதில் திருமணம் நடந்து குடும்பம் அமையாது. குடும்பத்தை நடத்த போதிய பொருளாதாரம் இருக்காது. இவரின் வார்த்தையை குடும்ப உறவுகள் மதிக்க மாட்டார்கள். வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாதது போன்ற அசவுகரியங்கள் இருக்கும்.

உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 2-ஆவது நட்சத்திரம், 11வது நட்சத்திரம் 20-ஆவது நட்சத்திரம் இந்த மூன்றுமே சம்பத்து தாரை நட்சத்திரங்கள்தான். உதாரணமாக கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரணி, பூரம், பூராடம் மூன்றும் தன சம்பத்து தாரையாக பலன் தரும்.

பணவரவை அதிகரிக்க 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இந்த பரிகாரத்தை பயன்படுத்தலாம்.

நமது தென் தமிழகத்தில் உணவிற்கு பிறகு வெற்றிலை போடும் வழக்கம் உண்டு. சாப்பிட்ட உணவு ஜீரணமாக வெற்றிலையுடன் பாக்கு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவார்கள். சிலர் புகையிலையுடன் வெற்றிலையை சுவைப்பார்கள். பாக்கு, புகையிலையிலுள்ள போதை வஸ்துக்கள் ஆரோக்கிய கேட்டை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வெற்றிலையின் மணத்திற்கு லட்சுமி கடாட்சத்தை ஈர்க்கும் சக்தியுண்டு என்ற தார்ப்பரியமும் இதில் உள்ளது.

தற்போது கலாச்சார மாற்றத்தால் விருந்து சாப்பிட்ட பிறகு பீடா சாப்பிடும் கலாச்சாரம் வட மாநிலத்திலிருந்து நமக்கு வந்தது. வட மாநிலத்தவர் பயன்படுத்தும் பீடாவில் வெற்றிலையுடன் பண வரவை அதிகரிக்கும் தேன், குல்கந்து, குங்குமப்பூ, சேர்ந்து சாப்பிடுவதால் அவர்களுக்கு தாராள தனவரவு உள்ளது. வெற்றிலை சாப்பிடுவது நல்லதா? ஆரோக்கிய கேடானதா? என்ற இரண்டுவிதமான கருத்துக்கள் உள்ளது. அத னால் வெள்ளிக்கிழமைகளில் வெற்றிலையுடன் தேன், குல்கந்து, குங்குமப் பூ பான் மசாலா கலக்காமல் சாப்பிட பணவரவு கூடும்.

மேலும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று வீட்டிலுள்ள மகாலட்சுமி படத்தின்முன்பு 6 வெற்றிலை, 2 கொட்டை பாக்கு, 2 ஏலக்காய், 2 லவங்கம், 2 துண்டு பட்டை, 5 ரூபாய் புதிய நாணயம் மற்றும் பழத்துடன் படைக்க வேண் டும். தெரிந்த மகாலட்சுமி மந்திரம் கூறவேண்டும். பின்பு பழத்தைத் தவிர மீதமுள்ள அனைத்து பொருட்களையும் பச்சைத் துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி தென்மேற்கில் உள்ள பீரோவில் வைக்கவேண்டும். ஒவ்வொரு பௌர்ணமி யன்றும் இந்த பூஜையைக் கடைபிடித்து வரவேண்டும். காயினை சேமித்து சுபப் பொருட்கள் வாங்கலாம்.

இனி 27 நட்சத்திரத்தினரும் தன தாரையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை வரும் இதழில் பார்க்கலாம்.

செல்: 98652 20406

bala030125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe