Advertisment

27 நட்சத்திரத்திற்கும் தாராபலன் பெருக்கும் பரிகாரங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி சென்ற இதழ் தொடர்ச்சி (07.02.25)... 

/idhalgal/balajothidam/remedies-increase-fortune-all-27-stars-prasanna-astrologer-i-anandhi-2

னிதர்களுக்கு எதிரியாக, சத்ருவாக இருப்பது தடைகள். பிறப்பு முதல் வாழ்நாள் முடிவுவரை தினமும் தடைகள், தாமதங்களை சந்திக்காத மனிதர்களே கிடையாது. தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி வாழ்க்கையில் வெற்றிவாகை சூடுபவர்களும் வாழ்கிறார் கள். தடைக்கற்களை தகர்க்க முடியாமல் வாழ்க்கை இழப்பவர்களும் உள்ளார்கள். நவகிரக தாக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு அதீத தடை, தாமதங்கள் இருக்கும். வேலை வாய்ப்பு, திருமணம், சொத்து விற்பனை, தொழில்முயற்சி போன்றவற்றில் தடைகளும், தாமதங்களும் அதிகரிப்பவர்கள், அந்த போராட்டமான நிலை மாற சாதக தாரையை பயன்படுத்த வேண்டும். ஒரு செயலில் வெற்றி பெற விரும்புபவர்கள் சாதக தாரையை பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றிபெறலாம்.

உங்களின் பாதகங்களை சாதக மாக்க, வழக்குகளில் வெற்றி பெற, நல்ல உத்தியோக கிடைக்க, புதிய தொழில் துவங்க, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட, புதிய கடன் வாங்க, கடன் தீர்க்க, இனம்புரியாத நோய்க்கு வைத்தியம் செய்திட, திருமணத்திற்கு வரன் பார்க்க, புதிய சொத்துகள் வாங்க, பழைய சொத்துகளை விற்க, பிறர்

னிதர்களுக்கு எதிரியாக, சத்ருவாக இருப்பது தடைகள். பிறப்பு முதல் வாழ்நாள் முடிவுவரை தினமும் தடைகள், தாமதங்களை சந்திக்காத மனிதர்களே கிடையாது. தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி வாழ்க்கையில் வெற்றிவாகை சூடுபவர்களும் வாழ்கிறார் கள். தடைக்கற்களை தகர்க்க முடியாமல் வாழ்க்கை இழப்பவர்களும் உள்ளார்கள். நவகிரக தாக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு அதீத தடை, தாமதங்கள் இருக்கும். வேலை வாய்ப்பு, திருமணம், சொத்து விற்பனை, தொழில்முயற்சி போன்றவற்றில் தடைகளும், தாமதங்களும் அதிகரிப்பவர்கள், அந்த போராட்டமான நிலை மாற சாதக தாரையை பயன்படுத்த வேண்டும். ஒரு செயலில் வெற்றி பெற விரும்புபவர்கள் சாதக தாரையை பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றிபெறலாம்.

உங்களின் பாதகங்களை சாதக மாக்க, வழக்குகளில் வெற்றி பெற, நல்ல உத்தியோக கிடைக்க, புதிய தொழில் துவங்க, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட, புதிய கடன் வாங்க, கடன் தீர்க்க, இனம்புரியாத நோய்க்கு வைத்தியம் செய்திட, திருமணத்திற்கு வரன் பார்க்க, புதிய சொத்துகள் வாங்க, பழைய சொத்துகளை விற்க, பிறர் உதவியை நாடவும், குலதெய்வ வழிபாடு செய்யும் ஏற்ற தாரை சாதக தாரையாகும். ஜென்ம நட்சத்திரத்திற்கு ஆறாவது நட்சத்திரமான சாதக தாரையை இயக்கினால் நூறு சதவிகிதம் வெற்றியுண்டு.

Advertisment

sssd

ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தின் ஆறாவது நட்சத்திரம் சாதக தாரை.

அதாவது 6, 15, 24-ஆவது நட்சத்திரங் களாகும். உதாரணமாக ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் என்றால் திருவாதிரை, சுவாதி, சதயம் சாதக தாரையாகும். சாதக தாரை யில் சகல சுப காரியங்களும் செய்யலாம். சாதக தாரை நாளில் எதிர் பார்த்த உதவி கள் கிடைக்கும். அனுகூலமான பலன்கள் நடக்கும்.

Advertisment

ஜோதிடத்தில் பல்வேறு துணுக்கங் கள் உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் சாதக தாரையின் நட்சத்திரத்தில் அதிக கிரகம் நிற்பதும், தசை நடத்துவதும் சுபப் பலனை மிகைப்படுத்தும் அமைப்பாகும்.மிதுன லக்னத்தில் பிறந்த ஒருவர் புதனின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை, ரேவதியில் பிறந்திருந்தால் அவருக்கு சாதக தாரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டமாகும். மிதுன லக்னத் திற்கு 6-ஆம் அதிபதி செவ்வாய் தசையில் ஜாதகர் நோய், கடனால் அவதிப் படுவார். நிலையான உத்தியோகம் அமையாது என்று கூறும் பலன் பொருந்தாது. மிதுன லக்னம் புதனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் நட்சத்திரங்கள் சாதக தாரையாக செயல்பட்டு புகழ், அந்தஸ்து, கௌரவம் உயரும். செல்வாக்கும், சொல்வாக்கும் நிரம்பியவர்களாக இருப்பார்கள். சுய ஜாதகத்தில் 6-ஆம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் அதிக கிரகம் இருக்கக்கூடாது. ஆனால் சாதக தாரையின் சாரத்தில் அதிக கிரகம் இருந்தால் தனது எதிரியை எப்படி கவிழ்ப்பது என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். ஆரோக்கியம் நிரம்பியவராக இருப்பார்கள் அத்துடன் பொருளாதாரத் தேவைகளை சரிசெய்யும் திறமை இருக்கும். தொட்டது துலங்கும். சாதக தாரையின் நட்சத்திரத்தில் எந்த கிரகமும் இல்லையெனில் வாழ்க்கை சுமையாகிவிடும். எதையும் எதிர்கொள்ளும் வலிமை இருக்காது.

தடை, தாமதங்கள், அதிக சங்கடங்களை சந்திக்க நேரும். ஒரு ஜாதகத்தில் சாதக தாரையின் ஒரு மனிதனின் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்கிறது.

பரிகாரம்

கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சாதக தாரை திருவாதிரை, சுவாதி, சதயம்.

இவர்கள் தினமும் ராகு காலத்தில் வீட்டில் தீபமேற்றி துர்க்கை வழிபாடு செய்யவேண்டும்.

சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு சாதக தாரை புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. இவர்கள் சாதக தாரை நாட்களில் அல்லது தினமும் சுந்தர காண்டம் படிக்க தடை, தாமதங்கள் அகலும்.

சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சாதக தாரை பூசம், அனுஷம், உத்திரட்டாதி. இவர்கள் சாதக தாரை நாட்களில் சிவ வழிபாடு செய்ய மேன்மையான பலன்கள் உண்டாகும்.

சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆயில்யம், கேட்டை, ரேவதி. இவர்கள் சாதக தாரை நாட்களில் மகா விஷ்ணுவை பச்சை வஸ்திரம் சாற்றி வழிபட சாதகமான பலன்கள் நடக்கும்.

செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தினருக்கு சாதக தாரை மகம், மூலம், அஸ்வினி. சாதக தாரை நாட்களில் அருகம்புல் மாலை சாற்றி விநாயகர் வழிபாடு செய்ய சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.

ராகுவின் திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சாதக தாரை பூரம், பூராடம், பரணியாகும். இந்த நட்சத்திர நாட்களில் மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட, தொட்டது துலங்கி ஐஸ்வர்யம் பெருகும்.

குருவின் நட்சத்திரங்களான புனர் பூசம், விசாகம், பூரட்டாதியில் பிறந்தவர் களுக்கு சாதக தாரை உத்திரம், உத்திராடம், கிருத்திகை. இவர்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவேண்டும் அல்லது கேட்க வேண்டும்.

சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதியை ஜென்ம நட்சத்திரமாகக் கொண்டவர்கள் சாதக தாரையான அஸ்தம், திருவோணம், ரோகிணி நட்சத்திர நாட்களில் பைரவர் வழிபாடு செய்யவேண்டும்.

புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதியில் பிறந்தவர்களுக்கு சாதக தாரை சித்திரை, அவிட்டம், மிருக சீரிஷம். இவர்கள் சாதக தாரை நாட்களில் சரபேஸ்வரரை வழிபட அபிவிருத்தி உண்டாகும்.

தொடரும்

செல்: 98652 20406

bala070225
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe