Advertisment

27 நட்சத்திரத்திற்கும் தாராபலன் பெருக்கும் பரிகாரங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி சென்ற இதழ் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/remedies-increase-fortune-all-27-stars-prasanna-astrologer-i-anandhi-0

அஸ்வினி

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் தன தாரையான பரணி நட்சத்திர நாளில் அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு 100 கிராம் சிவப்பு நிற குங்குமம் தானம் வழங்கவேண்டும்.

பரணி

Advertisment

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன தாரையான கிருத்திகை நட்சத்திரநாளில் செவ்வரளி மலர்களால் முருகனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

கிருத்திகை

நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தன தாரை ரோகிணி . இவர்கள் பகவத்கீதை படிக்கலாம். அல்லது ஆண்டிற்கு ஒருமுறை குருவாயூர் சென்றுவரலாம்.

ரோகிணி

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரை மிருகசீரிஷம். இவர்கள் எப்பொழுதும் காமதேனுவை வைத்து வழிபட பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும்.

மிருகசீரிஷம்

Advertisment

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரையான திருவாதிரை நட்சத்திரநாளில் சரபேஸ்வரரை வழிபடலாம்.

திருவாதிரை

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரை புனர்பூசம். இவர்கள் ஸ்ரீ ராமரின் பட்டாபிசேஷக காட்சிப் படம் வைத்து வழிபடலாம்.

புன

அஸ்வினி

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் தன தாரையான பரணி நட்சத்திர நாளில் அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு 100 கிராம் சிவப்பு நிற குங்குமம் தானம் வழங்கவேண்டும்.

பரணி

Advertisment

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன தாரையான கிருத்திகை நட்சத்திரநாளில் செவ்வரளி மலர்களால் முருகனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

கிருத்திகை

நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தன தாரை ரோகிணி . இவர்கள் பகவத்கீதை படிக்கலாம். அல்லது ஆண்டிற்கு ஒருமுறை குருவாயூர் சென்றுவரலாம்.

ரோகிணி

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரை மிருகசீரிஷம். இவர்கள் எப்பொழுதும் காமதேனுவை வைத்து வழிபட பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும்.

மிருகசீரிஷம்

Advertisment

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரையான திருவாதிரை நட்சத்திரநாளில் சரபேஸ்வரரை வழிபடலாம்.

திருவாதிரை

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரை புனர்பூசம். இவர்கள் ஸ்ரீ ராமரின் பட்டாபிசேஷக காட்சிப் படம் வைத்து வழிபடலாம்.

புனர்பூசம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரை பூசம். இவர்கள் அமாவாசை காலங்களில் அரச மரத்தை 108 முறைவலம் வரவேண்டும்.

பூசம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரையான ஆயில்யம் நட்சத்திரநாளில் இரண்டு சர்ப்பங்கள் இணைந்ததுபோல் இருக்கும் நாகராஜா சிலைக்கு பாலா பிஷேகம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

ஆயில்யம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரையான மக நட்சத்திர நாளில் அரசும், வேம்பும் பின்னிய நிலையிலுள்ள மரத்தடி விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவேண்டும்.

ss

மகம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன தாரையான பூர நட்சத்திர நாளில் கண்ணாடி வளையல், முகம் பார்க்கும் கண்ணாடி தானம் வழங்கலாம். கைகளில் வளை யோசை கேட்பது போல் கண்ணாடி வளையல் அணியலாம்.

பூரம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரையான உத்திரம். ஸ்டேட் பேங்க்கில் வங்கி கணக்கு வைக்கலாம். அரசு அலுவலகங்களுக்கு உத்திர நட்சத்திரநாளில் சென்றுவரலாம். அல்லது அரசு அலுவலகங்களுக்கு அருகில் குடியிருக்கலாம்.

உத்திரம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரையான அஸ்தம் நட்சத்திரநாளில் சிவன் கோவிலில் வன்னி மரம் மரத்தை 21 முறை வலம்வந்து குறைகளைக் கூற நல்ல பலன் கிடைக்கும்.

அஸ்தம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன தாரையான சித்திரை நட்சத்திர நாளில் சக்கரத் தாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

சித்திரை

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன தாரையான சுவாதி நட்சத்திர நாளில் நாட்பட்ட நோயால் பாதித்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்யவேண்டும்.

சுவாதி

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரையான விசாகம். தினமும் கந்த சஷ்டி கேட்கவேண்டும் அல்லது படிக்கவேண்டும்.

விசாகம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரை அனுஷம். பனை ஓலையில் செய்யப்பட்ட பொருட்களை தானம் வழங்கலாம். பனை ஓலையில் செய்த பொருட்களைப் பயன்படுத்தலாம்.

அனுஷம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரை கேட்டை. காஞ்சி மகாபெரியவர் வழிபாடு பெரிய வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தி தரும்.

கேட்டை

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன தாரை யான மூலம் நட்சத்திர நாளில் வெள்ளெருக்கு விநாயகரை தானம் வழங்கலாம். வீட்டில் வெள்ளெருக்கு விநாயகரை வைத்து வழிபடலாம்.

மூலம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரையான பூராடம் நட்சத்திரநாளில் அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு 100 கிராம் மஞ்சள் தானம் வழங்கவேண்டும்.

பூராடம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரையான உத்திராட நட்சத்திரநாளில் சிவன் கோவிலில் வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற நல்ல பலன் கிடைக்கும்.

உத்திராடம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரையான திருவோணம் நட்சத்திரநாளில் வாமன அவதார காட்சியை எப்பொழுதும் பயன்படுத்தலாம்.

திருவோணம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் உண்டியல் வாங்கி அதில் பணம் சேமிக்கவேண்டும்.

அவிட்டம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரையான சதயம் நட்சத்திரநாளில் கருப்பு விலங்குகளுக்கு உணவு தானம் வழங்க பொருளாதார மேன்மை பெருகும்.

சதயம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரையான பூரட்டாதி நட்சத்திரநாளில் உண்டியலில் ஒரே ஒரு விரலி மஞ்சள் போட்டு சில்லரை காசுகளை சேர்க்க செல்வ செழிப்பு அதிகரிக்கும். சேரும் காசை பூரட்டாதி நட்சத் திரநாளில் எடுத்து அபிசேகப் பொருள் உள் ளிட்ட சுபச்செலவுகளைச் செய்யவேண்டும்.

பூரட்டாதி

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரையான உத்திரட்டாதி நட்சத்திரநாளில் சனிக்கிழமை உளுந்தால் செய்யப்பட்ட உணவுப்பொருளை காகத்திற்கும் ஏழை களுக்கும் அளிப்பது நல்ல பரிகாரமாகும்.

உத்திரட்டாதி

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரையான ரேவதி நட்சத்திரநாளில் நல்லெண்ணெய் தானம் வழங்கலாம்.

ரேவதி

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன தாரை அஸ்வினி. இவர்கள் குதிரை முகம் அல்லது ஆண் குதிரையின் படத்தை தங்கள் விசிட்டிங் கார்டிலும் பெயர்ப் பலகையிலும் பயன்படுத்தலாம்.

(தொடரும்...)

செல்: 98652 20406

bala100125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe