Advertisment

திருஷ்டி தோஷம் போக்கி நலம் தரும் பரிகாரங்கள்! -பொ. பாலாஜிகணேஷ்

/idhalgal/balajothidam/remedies-get-rid-dhristi-dosha-b-balajiganesh

"கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது' என்பது நம் முன்னோர்களின் பழமொழி. மனிதனின் கண்பார்வைக்குத் தனித்த மகத்துவம் உண்டு.

Advertisment

பொறாமை மிக்கவர்கள் பார்வையால் ஒருவரது உடல்நலம், தொழில், வியாபா ரம் பாதிக்கப்படுவதுண்டு. கண் பார்வை மூலமாகப் பிறருக்கு பாதிப்பு ஏற்படுவதை கண்திருஷ்டி என்று கூறுவர். ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் லட்சியங் களும், ஆசைகளும் உண்டு. அதற்காக மனிதன் தன் எண்ணங்களை நிறைவேற்ற போராடுகிறான். தனக்கு சமமான மனிதர் உயர்வடையும்பொழுது, சிலருக்கு உயர் வடையும் மனிதரைப் பார்க்கும்பொழுது ஏக்கமாகவும், பலருக்கு பொறாமையாக வும் எண்ணங்கள் தோன்றுகின்றன. நம்முடைய தீய எண்ணங்களின் வெளிப்பாடே திருஷ்டியாகும்.

Advertisment

கண்திருஷ்டி பாதிப்பிற்குள்ளான நபர் அடிக

"கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது' என்பது நம் முன்னோர்களின் பழமொழி. மனிதனின் கண்பார்வைக்குத் தனித்த மகத்துவம் உண்டு.

Advertisment

பொறாமை மிக்கவர்கள் பார்வையால் ஒருவரது உடல்நலம், தொழில், வியாபா ரம் பாதிக்கப்படுவதுண்டு. கண் பார்வை மூலமாகப் பிறருக்கு பாதிப்பு ஏற்படுவதை கண்திருஷ்டி என்று கூறுவர். ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் லட்சியங் களும், ஆசைகளும் உண்டு. அதற்காக மனிதன் தன் எண்ணங்களை நிறைவேற்ற போராடுகிறான். தனக்கு சமமான மனிதர் உயர்வடையும்பொழுது, சிலருக்கு உயர் வடையும் மனிதரைப் பார்க்கும்பொழுது ஏக்கமாகவும், பலருக்கு பொறாமையாக வும் எண்ணங்கள் தோன்றுகின்றன. நம்முடைய தீய எண்ணங்களின் வெளிப்பாடே திருஷ்டியாகும்.

Advertisment

கண்திருஷ்டி பாதிப்பிற்குள்ளான நபர் அடிக்கடி உடல் மற்றும் மனச் சோர்வு கொள்வார். அந்த நபர் எடுக்கும் முயற்சிகளில் தொடர்ந்து தடை, தாமதங்கள் ஏற்படும். தொழிலில் நஷ்டம், வேலையிடத்தில் பிரச்சினை, வீட்டில் சண்டை, சச்சரவுகள், உடல்நல பாதிப்பு, தனது உறவினர்கள், நண்பர்களிடையே பகை போன்றவை ஏற்படும்.

புதிதாக ஆடை உடுத்தினால் அந்த ஆடை எதிர்பாராத விதத்தில் கிழிந்து போவது, தீப்பற்றிக்கொள்வது, மேலும் அந்த புதிய ஆடையில் நீக்கமுடியாத கரைகள் ஏற்படுவது, அடிக்கடி எதிர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றுவது, தேவையற்ற கவலை, தூக்க மின்மை, கெட்ட கனவுகள் போன்றவை கண் திருஷ்டி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ஏற்படும்.

dd

கண் திருஷ்டி கழிப்பதற்கு சிறந்த வழிமுறைகள் கண் திருஷ்டி கழிப்பதற்கு மிகச்சிறந்த நேரமாக, இரவு- பகல் இரண்டும் கலவையாக இருக்கும் அந்திவேளையே ஆகும். கண் திருஷ்டி பாதிப்புகளை நீக்கிக்கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கு திருஷ்டி கழிக்கும் சமயத்தில், திருஷ்டி கழிப்பவர் திருஷ்டி கழிப்பு கொள்ளும் நபரைவிட வயதில் மூத்தவராக இருக்கவேண்டும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

கண் திருஷ்டி கழிப்பவர், கடுகு, கல் உப்பு, மூன்று காய்ந்த சிவப்பு மிளகாய்களை ஒன்றாகச் சேர்த்து வலக்கையில் வைத்துக்கொண்டு, கிழக்குதிசை நோக்கி நின்றவாறு, திருஷ்டி கழிப்புகொள்ளும் நபரை உட்காரவைத்து, "ஊரு கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு, கண்ட கண்ணு, கள்ளக் கண்ணு, அந்தக் கண்ணு, இந்தக் கண்ணு எல்லா கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகுபோல வெடிக்கட்டும்' என்று, இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில் போடவேண்டும்.

வீட்டிற்கு வரும் நபர்களால் திருஷ்டி ஏற்படுவதைத் தவிர்க்க உருளிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வாசம்மிக்க பொருட்களை அதில் போட்டு மிதக்கவிட்டு வீட்டின் நிலைவாசலுக்கு வெளியே வைக்கவேண்டும்.

தினந்தோறும் பழைய பூக்களை எடுத்து வீசி, தண்ணீரை மாற்றி, புதிய பூக்களை அந்தப் பாத்திரத்தில் வைக்கவேண்டும்.

வண்ண மீன்களைக்கூட கண் திருஷ்டியைப் போக்கும் ஒரு சாதனமாகப் பயன்படுத்தலாம். வீட்டிற்குள் நுழையும் நபர்களின் பார்வை முதலில் மீன்தொட்டியின்மீது படும்வகையில், வீட்டின் முன்புறம் அல்லது ஹால் அறையில் வாஸ்து சாஸ்திர அடிப்படையில் வண்ண மீன்தொட்டியை வைக்கவேண்டும்.

தினமும் குளிக்கும் நீரில் சிறிதளவு கல் உப்பு போட்டு நன்கு கலக்கி, அந்த நீரில் குளித்தால் கண் திருஷ்டி தோஷங்கள் நீங்கி, உடல் மற்றும் மனம் உற்சாகமாக இருக்கும். குழந்தைகளை கண் திருஷ்டி பாதித்துள்ளதாக கருதினால், செம்புக் காசு அல்லது செம்புக் காப்பை குழந்தைகளின் கையில் அணிவிக்கவேண்டும்.

திருஷ்டி தோஷம் நம் வீட்டைத் தாக்காமலிருக்க வீட்டிற்கு முன்பு பூசணிக்காய், அரக்கர் உருவம்கொண்ட பொம்மை களை வைப்பதைவிட, வாழைமரம் மற்றும் இன்னபிற செடிகளை வீட்டிற்கு முன்பாக நட்டு வளர்த்தால் உங்கள் வீட்டை பிறரின் கண் திருஷ்டி தோஷங்கள் அண்டாது.

மேலும் சிறு குழந்தைகளின் கால் கட்டைவிரலின் நகத்தின்மீது கருப்புமை வைப்பதால் எவ்வகையான திருஷ்டி களும் அந்தக் குழந்தைகளைத் தாக்காது.

இந்த திருஷ்டிப் பரிகாரங்கள் அனைத்தும் தொன்று தொட்டு நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தவையாகும்.

செல்: 98425 50844

bala071022
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe