தொழில் முடக்கம் நீக்கி தொடர் வெற்றி தரும் பரிகாரங்கள்! - ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/remedies-eliminate-business-freeze-arutachemmal-arun-radhakrishnan

மைசூர் மன்னரின் கனவில் ஒரு நாள் அஷ்டலட்சுமிகளும் தோன்றி, ""நாங்கள் இந்த அரண் மனையைவிட்டு வெளியேற தாங்கள் அனுமதி தரவேண்டும்'' என்று கேட்டனர். அதற்கு அவர், "தைரியலட்சுமியைத் தவிர, மற்ற எல்லா லட்சுமிகளும் வெளியேறு வதில் எனக்கு மறுப்பில்லை' என்றார். தைரியலட்சுமியை மட்டும் ஒருவர் பூஜைசெய்தால், அவரைவிட்டு அஷ்டலட்சுமிகளும் விலகுவதில்லை. வீரமில்லாதவனின் கல்வியும் செல்வமும் பாழாகும் என்பதே உண்மை.

pp

ஒருவரின் ஜாதகத்தில் செல்வத்தைக் குறிப்பவை இரண்டு, ஆறு, பத்தாம் பாவங்களே. இரண்டாம் பாவத்தில் அமர்ந்திருப்பவள் தனலட்சுமி, ஆறாம் பாவத்தை ஆள்பவள் தான்ய லட்சுமி, பத்தாம் பாவத்தை அலங் கரிப்பவள் வீரலட்சுமி.

கேந்திர ஸ்தானங்களாகிய 1, 4, 7, 10-ஆம் வீடுகளுள் முதன்மை யானது தசம கேந்திரம் எனப் படும் பத்தாம் பாவமே. தொழில் ஸ்தானம், ஜீவன ஸ்தானம், ராஜ்ஜிய பரிபாலன ஸ்தானம், கர்ம ஸ்தானம் எனக் குறிப்பிடப்படும் பத்தாம் பாவமே அதிகார மையமாகவும், ஆளுமையின் அடிப்படையாகவும் விளங்கு கிறது. பத்தாமிடத்தில் ராஜயோக கிரகங்கள் அமர்ந்தால் அதிகாரி யாகவோ, மந்திரியாகவோ முடியும். பத்தாம் பாவம் என்னும் தொழில் ஸ்தானம் வலுப்பெற்ற ஜாதகத்தில் இரண்டாம் பாவம

மைசூர் மன்னரின் கனவில் ஒரு நாள் அஷ்டலட்சுமிகளும் தோன்றி, ""நாங்கள் இந்த அரண் மனையைவிட்டு வெளியேற தாங்கள் அனுமதி தரவேண்டும்'' என்று கேட்டனர். அதற்கு அவர், "தைரியலட்சுமியைத் தவிர, மற்ற எல்லா லட்சுமிகளும் வெளியேறு வதில் எனக்கு மறுப்பில்லை' என்றார். தைரியலட்சுமியை மட்டும் ஒருவர் பூஜைசெய்தால், அவரைவிட்டு அஷ்டலட்சுமிகளும் விலகுவதில்லை. வீரமில்லாதவனின் கல்வியும் செல்வமும் பாழாகும் என்பதே உண்மை.

pp

ஒருவரின் ஜாதகத்தில் செல்வத்தைக் குறிப்பவை இரண்டு, ஆறு, பத்தாம் பாவங்களே. இரண்டாம் பாவத்தில் அமர்ந்திருப்பவள் தனலட்சுமி, ஆறாம் பாவத்தை ஆள்பவள் தான்ய லட்சுமி, பத்தாம் பாவத்தை அலங் கரிப்பவள் வீரலட்சுமி.

கேந்திர ஸ்தானங்களாகிய 1, 4, 7, 10-ஆம் வீடுகளுள் முதன்மை யானது தசம கேந்திரம் எனப் படும் பத்தாம் பாவமே. தொழில் ஸ்தானம், ஜீவன ஸ்தானம், ராஜ்ஜிய பரிபாலன ஸ்தானம், கர்ம ஸ்தானம் எனக் குறிப்பிடப்படும் பத்தாம் பாவமே அதிகார மையமாகவும், ஆளுமையின் அடிப்படையாகவும் விளங்கு கிறது. பத்தாமிடத்தில் ராஜயோக கிரகங்கள் அமர்ந்தால் அதிகாரி யாகவோ, மந்திரியாகவோ முடியும். பத்தாம் பாவம் என்னும் தொழில் ஸ்தானம் வலுப்பெற்ற ஜாதகத்தில் இரண்டாம் பாவம் பாதிக்கப்பட்டாலுங்கூட தொழில்மூலம் பொருளாதாரம் உயரும்.

ஒரு குறிப்பிட்ட பாவத்தின் பத்தாம் பாவமே அந்த பாவத்தின் காரகங்களை செயல்படுத்தும். ஒருவருக்கு சொந்தத் தொழில் கைகொடுக்குமா என்பதை ஜாதகத்தின் பத்தாமிடம், பத்தாம் அதிபதி, பத்தாம் அதிபதி நின்ற சாரநாதர், பத்தில் நின்ற கிரகங்கள், நவாம்சத்தில் பத்துக்குரியவர் நின்ற ராசி, சனிக்கு பத்தாமி டம், சனிக்குத் திரிகோணத்தில் நின்ற கிரகங்கள், சனி முதலில் தொடும் கிரகம், சனி நின்ற நட்சத்திர சார அதிபதி ஆகியவையே தீர்மானிக் கின்றன. பத்தில் ஒரு பாவி யாவது இருக்கவேண்டுமென் பது ஜோதிடப் பழமொழி.

* பத்தாம் அதிபதி லக்னத்திலிருந்தால், ஜாத கருக்கு தொழில்மூலம் புகழ், அந்தஸ்து, கௌரவம் கிடைக்கும்.

* பத்தாம் அதிபதி இரண்டிலிருந்தால், குடும்பத் தொழில் செய்யலாம்.

* பத்தாம் அதிபதி மூன்றிலிருந்தால் படிப்புக்கு சம்பந்தமில்லாத தொழில் அமைந்து விரயத்தையும் சிரமங்களையும் தரும்.

* பத்தாம் அதிபதி நான் கிலிருந்தால், தொழில்செய்து வெற்றிவாகை சூடுவர்.

* பத்தாம் அதிபதி ஐந்திலிருந்தால், சுயமுதலீட்டில் குலத் தொழில் புரிவார். உழைப்பை விட வருமானம் மிகுதியாக இருக்கும்.

* பத்தாம் அதிபதி ஆறில் இருந்தால், தொழிலால் கடன் பெருகும். இவர்கள் நல்ல தொழிலாளிகள். ஆனால், நஷ்டப்படும் முதலாளிகள்.

* பத்தாம் அதிபதி ஏழிலிருந்தால், கூட்டுத்தொழில் சிறப் பான பலன் தரும்.

* பத்தாம் அதிபதி எட்டில் நின்றால், தொழில் மூலம் வம்பு, வழக்கு, கட்டப் பஞ்சாயத்து நடக்கும். இந்த அமைப்பு அவமானத்தையும், மன வேதனையும் தரும்.

* பத்தாம் அதிபதி ஒன்பதிலிருந்தாலும், ஒன்பதாம் அதிபதி பத்திலிருந்தாலும் தர்ம கர்மாதிபதி யோகத்தால் தொழிலில் சிறப் புண்டாகும்.

* பத்தாம் அதிபதி பத்தில் இருந்தால், தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழிலில் சாதனை புரிவார்.

* பத்தாம் அதிபதி பதினொன்றில் இருந்தால், லாபமில்லாத தொழிலைச் செய்ய மாட்டார்கள். பெரிய பணப்புழக்கம் உள்ள தொழிலைச் செய்வார்கள்.

* பத்தாம் அதிபதி பன்னிரண்டில் இருந்தால், தொழிலில் நஷ்டம் ஏற்படும். பெரியளவில் இழப்பு ஏற்படும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள தடைகள், முன்னேற்றமின்மை ஆகியவை நீங்கி, அதிகாரமும், செல்வமும் செழித்திட ஜாதகத் தின் பத்தாம் பாவத்திலுள்ள தோஷங்களை நீக்கினால், நலம்பெறலாம்.

பதவி, அதிகாரம் தரும் பத்தாம் பாவத்தை வலுவாக்கும் பரிகாரங்கள்

* தொழில் தொடர்பான பிரச்சினையை சந்திப்பவர்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்து, ஆதித்திய ஹிருதயம் பாராயணம் செய்யவேண்டும்.

* பூஜையறையில் மகாலட்சுமியின் படம் அல்லது எந்திரத்திற்கு முன்பு பஞ்சமுக தீபமேற்றி வணங்கிவந்தால், செல்வமும் செல்வாக்கும் பெருகும்.

*வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் திருப்பதி- திருச்சானூர் பத்மாவதி கோவிலுக் குச் சென்று வணங்கினால் தொழில் சிறப்பாக நடைபெறும்.

* வீட்டில் தெற்கு மற்றும் மேற்கு திசையில் குறைந்த அளவு இடம் ஒதுக்கி பசுமையான செடிகளை வளர்ப்பதால் சுபிட்சம் உண்டாகும்.

* சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி, நீல மலர்களால் அர்ச்சனை செய்துவர, தொழிலில் இருந்து வரும் தொல்லைகள் அகலும்.

* ஒன்பது பிரதோஷங்கள் சிவாலயங் களுக்குச் சென்று, நந்திதேவருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, சிவபெருமானுக்கு வில்வ தளங்களைச் சமர்ப் பிப்பதால், முடங்கிய தொழில் புத்துணர்வடையும்..

* வளர்பிறை சஷ்டியன்று முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வது செவ்வாய்க்கான பரிகாரமாவதால், அதிகார பலம் கூடும்.

* புதன்கிழமைகளில் விரதமிருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவதால் வியாபாரம் விருத்தியாகும்.

* வெள்ளிக்கிழமைகளில் லலிதா சகஸ்ரநாமப் பாராயணம் செய்துவந்தால் வெற்றி தேவதையின் அருள் கிடைக்கும்.

* தேய்பிறை அஷ்டமியில் சொர்ணா கர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வர, தொழிலில் எதிரிகள் விலகுவார்கள்.

* வளர்பிறை தசமியில் காளிகாம்பாளை யும், துர்க்கையையும் வழிபடுவதால், வாழ்க் கைக்குத் தேவையான செல்வம் குறைவின்றிக் கிடைக்கும்.

* வெற்றித் திருநாளான விஜயதசமியன்று எந்தச் செயலைச் செய்தாலும் அது பன் மடங்கு பெருகும் என்பது உறுதி.

ஜெயம் தரும் விஜய தசமி

புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டா டப்படுகிறது. வட இந்தியாவில், இராமன் இராவணனைக் கொன்ற இந்நாள் "ராம்லீலா' என்ற விழாவாக சிறப்பிக்கப்படுகிறது. பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, மீண்டும் அனைத்து ஆயுதங்களையும், தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் விஜயதசமியன்று பெற்றனர்.

மைசூரில் மன்னராட்சி நடந்தபோது, இந்த நாளில் அலங்கரிக்கப்பட்ட யானைமீது மன்னர் ஊர்வலம் வருவது "தசரா' ஊர்வலமாக நடத்தப்பட்டது. தற்போதும் அது கடைப்பிடிக்கப்படுகிறது. தீயசக்தியான மகிஷாசுரனை அழித்த நாளான விஜய தசமியில் துர்க்காதேவியை வழிபட்டால், எல்லா முயற்சிகளிலும் வெற்றிபெறலாம்.

செல்:​ 77080 20714

bala301020
இதையும் படியுங்கள்
Subscribe