மாந்தி தோஷம் போக்கும் பரிகாரங்கள்! - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/remedies-drowsiness-prasanna-astrologer-i-anandi

ஜோதிடத்தில் பலன் சொல்ல பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும், கர்மவினைத் தாக்கத்தையும், தோஷத்தின் வலிமையையும் நிர்ணயம் செய்வதில் பிரசன்ன ஜோதிடமே பிரதானமாகத் திகழ்கிறது. ஒரு பிரசன்னத்தின் கதாநாயகனான மாந்தியே கர்மவினையை உணர்த்துபவர். அது கண்டமாக செயல்படுமா என்பதை ராகு- கேதுக்கள் தெளிவுபடுத்துவார்கள்.

பிரசன்னத்தில் மட்டுமல்ல; ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் மாந்தி நின்ற இடத்தைக்கொண்டும் தோஷத்தைத் தீர்மானம் செய்யலாம். ஒருவருக்கு மாரக தசை வரும்போது ஜனனகால ஜாதகத்தில் மாந்தி நின்ற வீட்டின் தொடர்பான பொருள் வந்து மாரகத்தைத் தரும்.

இந்தக் கட்டுரையில் மாந்தி பற்றி சில முக்கியக் குறிப்புகளைக் காணலாம்.

நவகிரகங்களில் சூரியன் முதலான ஒன்பது கிரகங்களுக்கும் ஒரு துணைக்கோள் உள்ளது.

கிரகம்- துணைக்கோள்

சூரியன்- காலன்

சந்திரன்- பரிவேடன்

செவ்வாய்- தூமன்

புதன்- அர்த்தப் பிரகர்ணன்

வியாழன்- எமகண்டன்

சுக்கிரன்- இந்திர தனுசு

சனி- குளிகன்

ராகு- வியதீபாதன்

கேது- தூமகேது

சனியின் துணைக்கோளான குளிகனைத்தவிர, ஏனைய கிரகங்களின் துணைக்கோள்கள் பெரு மளவில் ஜாதகப் பலன் காண பயன்படுவதில்லை. இதில் குளிகன் எனப்படுபவரே மாந்தியாவார். குளிகன் என்றாலும், மாந்தி என்றாலும் ஒருவரையே குறிக்கும். மாந்தி மற்ற கிரகங்களின் துணைக்கோள்களைவிட வீரியமான கிரகமாவார். சனீஸ்வரரைப்போல் வல்லமை பெற்றவர்தான் மாந்தி. சனிக்கு நிகரானவர் எனலாம்.

தன் தந்தையைப்போலவே ஒரு ஜாதகரின் வாழ்க்கையை அழிக்கும் தன்மையும், நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு உயர்ந்த இடத்தைத் தரும் வல்லமையும் மாந்திக்கு உண்டு. ஆகவே, மற்ற துணைக்கோள்கள்போல் இல்லாமல், மாந்தி தனித்தன்மையான துணைக்கோளாக உள்ளார்.

கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஜாதகத்தில் குறிப்பார்கள்.

ஜோதிடத்தில் பலன் சொல்ல பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும், கர்மவினைத் தாக்கத்தையும், தோஷத்தின் வலிமையையும் நிர்ணயம் செய்வதில் பிரசன்ன ஜோதிடமே பிரதானமாகத் திகழ்கிறது. ஒரு பிரசன்னத்தின் கதாநாயகனான மாந்தியே கர்மவினையை உணர்த்துபவர். அது கண்டமாக செயல்படுமா என்பதை ராகு- கேதுக்கள் தெளிவுபடுத்துவார்கள்.

பிரசன்னத்தில் மட்டுமல்ல; ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் மாந்தி நின்ற இடத்தைக்கொண்டும் தோஷத்தைத் தீர்மானம் செய்யலாம். ஒருவருக்கு மாரக தசை வரும்போது ஜனனகால ஜாதகத்தில் மாந்தி நின்ற வீட்டின் தொடர்பான பொருள் வந்து மாரகத்தைத் தரும்.

இந்தக் கட்டுரையில் மாந்தி பற்றி சில முக்கியக் குறிப்புகளைக் காணலாம்.

நவகிரகங்களில் சூரியன் முதலான ஒன்பது கிரகங்களுக்கும் ஒரு துணைக்கோள் உள்ளது.

கிரகம்- துணைக்கோள்

சூரியன்- காலன்

சந்திரன்- பரிவேடன்

செவ்வாய்- தூமன்

புதன்- அர்த்தப் பிரகர்ணன்

வியாழன்- எமகண்டன்

சுக்கிரன்- இந்திர தனுசு

சனி- குளிகன்

ராகு- வியதீபாதன்

கேது- தூமகேது

சனியின் துணைக்கோளான குளிகனைத்தவிர, ஏனைய கிரகங்களின் துணைக்கோள்கள் பெரு மளவில் ஜாதகப் பலன் காண பயன்படுவதில்லை. இதில் குளிகன் எனப்படுபவரே மாந்தியாவார். குளிகன் என்றாலும், மாந்தி என்றாலும் ஒருவரையே குறிக்கும். மாந்தி மற்ற கிரகங்களின் துணைக்கோள்களைவிட வீரியமான கிரகமாவார். சனீஸ்வரரைப்போல் வல்லமை பெற்றவர்தான் மாந்தி. சனிக்கு நிகரானவர் எனலாம்.

தன் தந்தையைப்போலவே ஒரு ஜாதகரின் வாழ்க்கையை அழிக்கும் தன்மையும், நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு உயர்ந்த இடத்தைத் தரும் வல்லமையும் மாந்திக்கு உண்டு. ஆகவே, மற்ற துணைக்கோள்கள்போல் இல்லாமல், மாந்தி தனித்தன்மையான துணைக்கோளாக உள்ளார்.

கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஜாதகத்தில் குறிப்பார்கள். மாந்தியினால் விளையும் நன்மை, தீமைகளையும் கூறுவார்கள். தமிழ்நாட்டைப் பொருத்த வரை, மாந்தி என்ற கிரகம் இருப்பதை நன்கறிந்திருந்தாலும், பெரும்பாலும் அது ஜாதகத்தில் குறிப்பிடப்படுவதில்லை. மிக அபூர்வமாக ஒருசில ஜோதிடர்களே மாந்தியை ஜாதக ராசிக்கட்டத்தில் குறிக் கின்றனர். தற்போது பெரும்பான்மையான ஜோதிடர்கள் சாப்ட்வேரைப் பயன்படுத்தி ஜாதகம் தயார் செய்வதால், ஜாதகக் கட்டத்தில் மாந்தி இடம்பெறுகிறது. ஜாத கத்தில் மாந்தியின் நிலையை நிர்ணயித்துப் பலனறியவேண்டும்.

மாந்தியின் சில தனித்தன்மைகள்

திதி சூன்யம் மாந்தியை பாதிப்பதில்லை.

தசாபுக்திப் பலன்கள் மாந்தியைக் கட்டுப்படுத்தாது.

மாந்தி நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீசம் பெறுவது மாந்திக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மாந்தியுடன் நின்ற கிரகம் வக்ரம், அஸ்த மனம் பெறுவது மாந்தியை பாதிக்காது.

திதி, யோகம், கரணம், ஓரை மாந்தியை மட்டுப்படுத்தாது.

மாந்திக்குக் கோட்சாரப் பலன் கிடை யாது. கேந்திர- திரிகோணங்களில் நின்றால் பலம்பெறுவதுமில்லை. மற்ற இடங்களில் நின்றால் பலமிழப்பதுமில்லை.

மாந்திக்கு ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீசம் என்ற தன்மையுமில்லை.

மாந்தி கடிகாரச் சுற்றுமுறையில் வலம்வரும் கிரகமாகும்.

மாந்திக்கு 2, 7, 12-ஆம் பார்வை உண்டு. தான் பார்க்கும் பாவகத்தை பாதிப்பார்.

எந்த கிரகம் மாந்தியின் சேர்க்கை அல்லது பார்வை பெறுகிறதோ, அந்த கிரகம் அல்லது அந்த பாவம் பாதிக்கப்படும். அந்த லக்ன சுபரின் சாரம் பெற்றால் மட்டும் மாந்தி மட்டுப்படுவார்.

pp

மாந்தியால் ஏற்படும் தீமைகள்

ஜனனகால ஜாதகத் தில் மாந்தி நின்ற இடத்துடன் கோட்சார சனி, செவ்வாய், ராகு- கேது சம்பந்தம் பெற்றால்- இரவில் நிம்மதியான தூக்கமின்மை, தூங்கும் போது திடீரென்று பயத்தால் விழித்துக் கொள்வது, தாமாகவே பேசிக்கொள்வது, கெட்ட கனவுகள் தோன்றி உறக்கத்தைக் கலைப்பது, சித்தப்பிரமை பிடித்தவர்கள்போல அமைதியாக இருப்பது, சித்தப்பிரமையே பிடிப்பது, பைத்தியம் பிடிப்பது, தூக்கத்தில் தானாகவே பேசிக் கொள்வது, குடும்பத்தில் துர்மரணங்கள் நிகழ்வது போன்ற பல பாதிப்புகள் ஏற்படும்.

ஒருவருடைய ஜாதகத்தில் மாந்தியுடன் சேர்க்கை அல்லது பார்வை பெற்ற கிரகமும், பாவகமும் பாதிக்கப்படும்.

ஜாதகத்தில் மாந்தியின் பொதுப் பலன்கள்

பொதுவாக 10-ஆம் வீடு, 11-ஆம் வீடு தவிர, மற்ற வீடுகளில் நல்ல பலன் தருவதில்லை.

பகலில் பிறந்த ஜாதகருக்கு, மாந்தி நின்ற இடத்திற்கு 1, 5, 6 ஆமிடங்களில் கோட்சார சனி சஞ்சரிக்கும் காலம், மிகுந்த கஷ்டம் தரும்.

இரவில் பிறந்த ஜாதகருக்கு, மாந்தி நின்ற வீட்டுக்கு 1, 3, 11-ல் கோட்சார சனி சஞ்சரிக்கும் காலம், ஜாதகருக்கு மிகுந்த கஷ்டம் ஏற்படும்.

ஜாதகத்தில் மாந்தி நின்ற ராசியதிபதி லக்னத் திற்கு கேந்திரம், திரிகோணம் ஆகியவற்றில் அமையப்பெற்றால், ஜாதகர் பெரும் செல்வத் திற்கு அதிபதியாகவும்; செல்வம், செல்வாக்கு, பூமி, மனை, வாகனம் உள்ளிட்ட எல்லா ஐஸ்வர் யங்களுடனும் வாழ்வார். லக்னத்திற்கு 11-ல் மாந்தி நின்றாலும் ராஜயோக வாழ்க்கை கிடைக்கும்.

லக்னத்திற்கு 6, 8, 12-ல் சந்திரன், மாந்தி சேர்க்கை பெற்றால், ஜாதகருக்கு பயவுணர்வு எப்பொழும் இருக்கும். துக்கம், தூக்கம் நிறைந்த வராக இருப்பார்.

ஆண் ஜாதகருக்கு, மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்தால், ஜாதகரின் சகோதரர் தீயபழக் கங்கள் மிகுந்தவராக இருப்பார்.

லக்னத்திற்கு 4-ல் மாந்தி, கேது சம்பந்த மிருந்தால் மிகுந்த துரதிர்ஷ்டமாகும். அதிருப்தி மிகுதியாக இருக்கும். ஒரு இடத்திலும் நிலையாக வாழமுடியாது. நாடோடிபோல் வாழ்க்கை அமையும். தாய்க்கும் தோஷமாகும்.

பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 8-ல் ராகு- கேதுக்கள், மாந்தி சேர்க்கை பெற்றால், கடுமையான மாங்கல்ய தோஷமாகும்.

லக்னத்திற்கு 2, 5, 8, 11 ஆகிய இடங்களில் மாந்தி நின்றால், ஜாதகர் இந்தப் பிறவியில் செய்யும் கர்மப்பலனை அடுத்த பிறவியில் அனுபவிக்கநேரிடும்.

லக்னத்திற்கு 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் மாந்தி நின்றால், ஜாதகர் இந்தப் பிறவியில் தமக்குத் தெரிந்தே சந்தர்ப்ப சூழ்நிலையால் பல தவறுகளில் ஈடுபடுவார்.

நவகிரகங்கள் மாந்தியுடன் இணைந்த பலன்கள்

சூரியன் + மாந்தி

தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர் களால் ஏற்பட்ட சாபத்தை உணர்த்தும்.

பூர்வீக சொத்தை அனுபவிக்கமுடியாது. தனது குலத்தாரிடமே பகை, கருத்து வேறுபாடு ஏற்படும்.

வலது கண் பாதிப்பு இருக்கும்.

பிதுர்காரகனாகிய சூரியனுடன் லக்னத் திற்கு மூன்று மற்றும் ஒன்பதில் அமர, தந்தைக்கு பெரும் கண்டத்தைத் தருகிறது.

பரிகாரம்: திலஹோமம் செய்வது நல்ல பலன் தரும்.

சந்திரன் + மாந்தி

தாய் மற்றும் தாய்வழி முன்னோர்களி டையே ஏற்பட்ட சாபத்தை உணர்த்தும்.

தாய்வழி உறவுகளிடையே பிரிவினையை ஏற்படுத்தும்.

மனபயம் மிகுதியாக இருக்கும்.

இடது கண் பாதிப்பிருக்கும்.

சந்திரனும் மாந்தியும் இணைந்து லக்னத் திற்கு நான்கு மற்றும் பத்தாம் இடங்களில் அமரும்போது ஜாதகரின் தாய்க்கு கஷ்டத் தைத் தருகின்றன. அவச்சொல், சுகமின்மை, நிம்மதியின்மை போன்ற அசுபப் பலன் களையும், கண்டத்தையும் தரும்.

பரிகாரம்: அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்.

செவ்வாய் + மாந்தி

உடன்பிறந்தவர்களிடையே விரோத மிருக்கும். தீராத ரத்த சம்பந்த நோய்த்தாக்கம் இருக்கும்.

சொத்துகளால் விருத்தியிருக்காது. வாஸ்துக் குற்றமுள்ள வீடு, மனை அமையும்.

பரிகாரம்: சஷ்டி திதியில் முருகன் வழிபாடு நல்ல பலன் தரும்.

புதன் + மாந்தி

தாய்மாமன் ஆதரவு கிடைக்காது. கன்னிப் பெண் சாபமிருக்கும். கல்வியில் தடை ஏற்படும். புரிந்துகொள்ளும் தன்மையிருக்காது. நம்பிக்கை மோசடியை சந்திக்கநேரும்.

பரிகாரம்: புதன்கிழமை சக்கரத்தாழ்வார் வழிபாடு, மாற்றத்தையும் ஏற்றத்தையும் மிகுதிப்படுத்தும்.

குரு + மாந்தி

கருச்சிதைவு ஏற்படும்.

கருத்தரிக்கும் தன்மை குறைவாக இருக்கும். குழந்தைகளுக்கு கண்டம், தோஷம் இருக்கும். குழந்தைகளால் நிம்மதிக்குறைவு ஏற்படும். மனதிற்குப் பிடித்த குழந்தைகள் பிறக்காது. மனதிற்குப் பிடித்த குழந்தைகள் பிறந்தாலும், மனதிற்குப் பிடிக்காத வாழ்க்கையைக் குழந்தைகள் தேர்ந்தெடுப்பார்கள்.

குரு சாபம் தேடிவரும்.

பண இழப்பு மிகுதியாக இருக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் சித்தர் ஜீவசமாதி வழிபாட்டால் நற்பலனை அதிகரிக்கமுடியும்.

சுக்கிரன் + மாந்தி

பெண் சாபத்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

மனைவியால் கடும் சாபம், கண்டம் ஏற்படும். ஆடம்பரப் பொருட்கள் எளிதில் கிட்டாது அல்லது விரைவில் பழுதாகிவிடும்.

பரிகாரம் :வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்களின் நல்லாசி, பெண் சாபத்திலிருந்து விடுதலை பெற்றுத்தரும்.

சனி + மாந்தி

குலதெய்வக் குற்றம், சாபத்தைக் காட்டும்.

நிலையான வேலையாட்கள் கிடைக் கமாட்டார்கள். தகுதிக்குத் தகுந்த வேலை கிடைக்காது அல்லது உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைக்காது. உறவுகளுடையே பிரிவையும் தரும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சை, மனபயம் இருந்துகொண்டே இருக்கும்.

பரிகாரம்: கால் ஊனமுற்ற முதியவர்களுக்கு செயற்கை உடலுறுப்பு வாங்க நிதியுதவி செய்யவேண்டும்.

ராகு + மாந்தி

விஷபயம் ஏற்படும். மானத்தைக் காக்க போராடநேரும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் துர்க்கை, காளி வழிபாடு பயத்தைத் தீர்க்கும்.

கேது + மாந்தி

விஷபயம் இருக்கும். பிரிவினைகள், வழக்குகள், தண்டனைகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலனை அதிகரிக்கும்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

செல்: 98652 20406

bala310120
இதையும் படியுங்கள்
Subscribe