சென்ற இதழ் தொடர்ச்சி......
6-ஆம் அதிபதியால் ஏற்படும் தீயபலன் களும் அதற்கான பரிகாரங்களும்...
சிம்மம்
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சூரியன். ஆறாமதிபதி சனி. கீரியும் பாம்பும் போன்ற பகையுண்டு. சனி சிம்மத்தில் நின்றாலும், மகரம், கும்பத்தில் ஆட்சிபலம் பெற்றாலும், துலாத்தில் உச்சமடைந்தாலும், சுயசாரத்திலிருந்தாலும் கடன் வாழ்வாதாரத்தை அசைக்கும். இந்த இடங்களில் சனிதசை நடந்தால் கடன் வாங்குவதைத் தவிர்த்து சிக்கனமாக வாழ முயற்சிக்க வேண்டும். ஜனனகால ஜாதகத்தில் சூரியன், சனி சம்பந்தம் எந்தவிதத்தில் இருந்தாலும் யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது. ஜாமின் போடக்கூடாது. சனிதசைக் காலத்தில் ஆடம்பரத்தைக் குறைத் துக்கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும். லக்னம், லக்னாதிபதி, சனிக்கு குருபார்வை இருந்தால் பெரிய பாதிப்பிருக்காது.
பரிகாரம்
தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதுடன் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யவேண்டும். அல்லது ஒலிக்கச்செய்து கேட்கவேண்டும். ஞாயிற்றுக்கிழமை சிவ வழிபாடு செய்யவும். அமாவாசை நாட்களில் பசுவுக்குப் புல், அகத்திக்கீரை, பழம் கொடுக்கவும். அரசு மருத்துவமனை நோயாளிகளுக்குத் தேவையான உணவு, தண்ணீர், மருந்து தானம் தரவும்.
கன்னி
லக்னாதிபதி புதன். ஆறாமதிபதி சனி. புதனும் சனியும் நட்பு கிரகங்கள் என்பதால் பெரும் பாதிப்பிருக்காது என்பது பலரின் கருத்து. ஜனனகால ஜாதத்தில் புதன், சனியின் வலிமைக்கேற்பவும், சம்பந்தத்திற்கேற்பவும் சாதகம் மற்றும் பாதகம் மாறுபடும். சனி ஒளியற்ற கிரகமென்பதால் தன்னுடன் இணைந்த கிரகத்தின் ஒளிக்கேற்ப நன்மை- தீமைகளைத் தரும்
சென்ற இதழ் தொடர்ச்சி......
6-ஆம் அதிபதியால் ஏற்படும் தீயபலன் களும் அதற்கான பரிகாரங்களும்...
சிம்மம்
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சூரியன். ஆறாமதிபதி சனி. கீரியும் பாம்பும் போன்ற பகையுண்டு. சனி சிம்மத்தில் நின்றாலும், மகரம், கும்பத்தில் ஆட்சிபலம் பெற்றாலும், துலாத்தில் உச்சமடைந்தாலும், சுயசாரத்திலிருந்தாலும் கடன் வாழ்வாதாரத்தை அசைக்கும். இந்த இடங்களில் சனிதசை நடந்தால் கடன் வாங்குவதைத் தவிர்த்து சிக்கனமாக வாழ முயற்சிக்க வேண்டும். ஜனனகால ஜாதகத்தில் சூரியன், சனி சம்பந்தம் எந்தவிதத்தில் இருந்தாலும் யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது. ஜாமின் போடக்கூடாது. சனிதசைக் காலத்தில் ஆடம்பரத்தைக் குறைத் துக்கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும். லக்னம், லக்னாதிபதி, சனிக்கு குருபார்வை இருந்தால் பெரிய பாதிப்பிருக்காது.
பரிகாரம்
தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதுடன் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யவேண்டும். அல்லது ஒலிக்கச்செய்து கேட்கவேண்டும். ஞாயிற்றுக்கிழமை சிவ வழிபாடு செய்யவும். அமாவாசை நாட்களில் பசுவுக்குப் புல், அகத்திக்கீரை, பழம் கொடுக்கவும். அரசு மருத்துவமனை நோயாளிகளுக்குத் தேவையான உணவு, தண்ணீர், மருந்து தானம் தரவும்.
கன்னி
லக்னாதிபதி புதன். ஆறாமதிபதி சனி. புதனும் சனியும் நட்பு கிரகங்கள் என்பதால் பெரும் பாதிப்பிருக்காது என்பது பலரின் கருத்து. ஜனனகால ஜாதத்தில் புதன், சனியின் வலிமைக்கேற்பவும், சம்பந்தத்திற்கேற்பவும் சாதகம் மற்றும் பாதகம் மாறுபடும். சனி ஒளியற்ற கிரகமென்பதால் தன்னுடன் இணைந்த கிரகத்தின் ஒளிக்கேற்ப நன்மை- தீமைகளைத் தரும். புதன் என்ற புக்தி கிரகம், சனி என்ற மந்தகிரகத்துடன் கேந்திர, திரிகோண, பார்வை என எந்தவழியில் சம்பந்தம் பெற்றாலும் புத்தி தடுமாற்றம் ஏற்படும். ஒரு ஜாதகத்தில் புதன், சனி சம்பந்தமிருந்தால் ஏமாற்றுபவர் அல்லது ஏமாந்துபோனவர் அல்லது ஏமாந்துபோகப் போகிறவர் என்று கூறலாம்.
ஏமாற்றுபவர்: ஜாதகத்தில் புதன் வலிமைபெற்று சனியின் பலம் குறைந்தவர்கள் ஏமாற்றுபவர்கள். புதன் வலிமைபெற்றவர்கள் தன் புத்திசாலித்தனத்தைப் பயன் படுத்தி சனிவலிமை குறைந்தவர்களை ஏமாற்றுவார்கள்.இந்த அமைப்பு அதிகமாக இலவச ஆஃபர் கொடுப்பவர்கள், முதலீட்டை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறுபவர்கள், காலிமனை விற்பவர்கள், ஆவண முறைகேடு (க்ர்ஸ்ரீன்ம்ங்ய்ற்) செய்பவர்கள், பொய்க்கணக்கு கூறுபவர்களுக்கு மட்டுமே இருக்கும். புதன், சனியுடன் ராகு சம்பந்தம் பெறுபவர்கள் லாபத்திற்காக- வெற்றிக்காக சட்டத்திற்குப் புறம்பான செயலையும் செய்யத் தயங்குவதில்லை. ஏமாற்றுபவர்களுக்கு மறைவு ஸ்தானங்களான 6, 8, 12 வலிமை அதிகமாக இருக்கும்.
ஏமாறுபவர்கள்: ஜாதகத்தில் சனி வலிமைபெற்று, புதன் வலிமையற்றவர்கள் ஏமாறுபவர்கள். ஒருவரின் புத்திசாதுர்யத்தைக் கணிப்பதில் சனி வல்லவர். சனி வலிமை பெற்றவர்கள் அதிகமாக சொந்தத் தொழில் செய்பவர்களாகவும், பணப் புழக்கம் அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மிகக் குறிப்பாக பரம்பரைத் தொழிலை செய்பவர்களாக இருப்பார் கள். மேலும் இவர்கள் தொழிலின் ஆழம் புரியாதவர்கள். புதனின் வலிமைக் குறைவால் தவறான முதலீடு (குறிப்பாக பங்குச் சந்தை) செய்வதுடன், தவறான வாடிக்கை யாளரைத் தேர்வுசெய்து பெரும் முதலீட்டை இழப்பார்கள். அத்துடன் ஜாமின் கையெழுத்துப்போட்டு, அதற்குப் பொறுப்பேற்று ஏமாறுவார்கள். புதன், சனியுடன் கேது சம்பந்தம் பெறுபவர்கள் தவறான தொழில் கூட்டாளிகளைத் தேர்வுசெய்து வழக்கு களை சந்திப்பார்கள்.
மேலும் அன்றாடம் நடைமுறையில் சிறிய செயலுக்குக்கூட அடுத்தவர்களை நம்பியிருப்பதுடன் தொடர் ஏமாற்றத்தையும் சந்திக்கிறார்கள். இவர்கள் ஜாதகத் தில் புதன், சனி சம்பந்தமானது மறைவு ஸ்தானமான 6, 8, 12-ல் இருக்கும். இவர்கள் தொழிலை மிக கவனமாக நடத்தவேண்டும்.
கோட்சார புதனானது சனியுடன் சம்பந்தம் பெறும்போது இழப்பு அதிகமாகவும், மற்ற நேரங்களில் குறைவாகவும் இருக்கிறது.
அத்துடன் புதன், சனிதசை நடைபெறும்போது மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டும்.
மிகச் சுருக்கமாக புதன், சனி சம்பந்தப் பட்டால் முடிவெடுக்கும் திறனில்லாமல் ஏமாறுபவர்களாகவோ, ஏமாற்றுபவர் களாகவோ, ஏமாறப் போகிறவர்களாகவோ இருக்கிறார்கள். உளவியல்ரீதியாக, இந்த கிரக இணைவிருப்பவர்கள் தொடர்ந்து ஏமாற்றத்தைச் சந்தித்து மனச்சோர்வால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள்.
பரிகாரம்
புதன் வலிமை குறைந்தவர்கள் புதன்கிழமை தோறும் சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்து பச்சைப்பயறு தானம் தரவேண்டும். பச்சைப்பயறு சாப்பிடவேண்டும். சனி வலிமை குறைந்தவர்கள் பிரதோஷ வழிபாடு செய்வதுடன், சனிக்கிழமைகளில் எள் சாதம், எள்ளுருண்டை சாப்பிடவேண்டும். வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்று அவல், பொரி, பாயசம் வைத்து நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கிவர, மேற்கண்ட தோஷம் விலகும்.
துலாம்
துலா லக்னத்தில் பிறந்தவருக்கு சுக்கிரன் லக்னாதிபதி. குரு ஆறாமதிபதி. குரு, சுக்கிரன் சம்பந்தமானது பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்றத்தைத் தரும் கிரக இணைவு. இத்துடன் ராகு இணைந்தால் பிரம்மாண்ட பொருள் சேர்க்கை உண்டாகும். கேட்காமலேயே பொருளுதவி தேடிவரும். இந்த கிரக இணைவுடன் கேது சேர்ந்தால் பெரும் பொருளைக் கொடுத்து மீளமுடியாத இழப்பையும் தரும். துலா லக்னத்திற்கு குரு, கேது இணைவானது. தனுசு, மீனம், கடக ராசிகளில் இருந்தால், பெரும் பொருளைக் கொடுத்து, தாங்கமுடியாத இழப்பையும் தரும். ஜனனகால ஜாதகத்தில் மேலே கூறிய இடங்களில் குரு, கேது இருப்பவர்களும், மீனத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்திருப்பவர்களும் கடன் கொடுக்கும் நிதிநிறுவனங்கள் இருக்கும் திசையில் தலைவைத்துக்கூட படுக்கக்கூடாது. இது வயிறு நிறைய சாப்பாடு போட்டு, ஜீரணமாகும்முன்பு தர்ம அடி கொடுக்கும் கிரக அமைப்பாகும். குரு சுக்கிரனின் நட்சத்திரத்திலும், சுக்கிரன் குருவின் நட்சத்திரத்திலும் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.
பரிகாரம்
வீட்டில் துளசிச் செடி வைத்து தினமும் தண்ணீர் ஊற்றி வழிபட பாவங்கள் விலகும். சிவாலயங்களில் உழவாரப் பணிகளை மேற்கொண்டால் பிறவிப்பயனை அடைய இயலும். விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரை வெள்ளிக்கிழமைகளில் துளசியால் அர்சித்து வழிபட்டால் கடன் நெருங்காது. சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அறுகம்புல், ஏழு தேங்காய்மாலை சாற்றி அவல், பொரி, கடலை, வெல்லம், கொழுக்கட்டை, அப்பம், வடை, அதிரசம், முறுக்கு, சுண்டல், முக்கனிகள், வெற்றிலை, பாக்கு போன்றவற்றில், தங்களால் முடிந்த நிவேதனம் வைத்து தூபம் தீபமேற்றி பூஜைசெய்வதால் சகலவிதமான தடைகள், சங்கடங்கள் விலகும்.
விருச்சிகம்
விருச்சிகம் காலபுருஷ எட்டாமிடம் என்பதால், நடப்பதை யூகிக்கும் முன்பே விபரீத விளைவுண்டாகும். லக்னாதிபதி செவ்வாயே ஆறாமதிபதியாக இருப்பதால், செயல்பாட்டில் வேகம் இருக்கும்; விவேகம் இருக்காது. செவ்வாயுடன் ராகு சம்பந்தம் இருந்தால் காலத்தால் தீராத கடன், நோயையும் தரும். செவ்வாயுடன் கேது இருந்தால் கடனால் அவமானம், வழக்கு அல்லது ஆயுள்பங்கம் ஏற்படுத்தக்கூடிய நோயைத் தருகிறது. செவ்வாய் ஆட்சி, உச்சம்பெற்றவர்கள் தேவையறிந்து, திரும்பக் கட்டக்கூடிய திறனறிந்து கடன் பெறவேண்டும். இந்த லக்னத் திற்கு சந்திரன் பாதகாதிபதி. செவ்வாய், சந்திரன் சம்பந்தம் விருச்சிகத்திற்கு சந்திர மங்கள யோகமாகாது. செவ்வாயயும் சந்திரனும் சாரப்பரிவர்த்தனை பெற்றவர்கள். செவ்வாய், சந்திர தசையின் காலத்தில் வெளியூர் மற்றும் வெளி மாநிலம் சென்று பிழைப்பு நடத்தினால் பாதிப்பிருக்காது. செவ்வாய், சந்திரன் சம்பந்தமிருக்கும் விருச்சிக லக்னத்தினர் கடனால் படும் வேதனைகள் சொல்லிமாளாது.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை பகல் 10.00- 11.00 மணிவரையான சந்திர ஓரையில் விநாயகருக்கு வெள்ளெருக்கம் பூவினால் மாலை அணிவித்து வழிபடவும். சந்திர தசையால் கடன் தொல்லை மிகுதியாக அனுபவிப்பவர்கள், பௌர்ணமி திதியில் விரதமிருந்து சத்திய நாராயணரை வழிபட மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். பௌர்ணமி திதியில் வயது முதிர்ந்தவர்களுக்கு உணவுதானம் செய்வது மிகச்சிறப்பு. பிரதோஷ நாட்களில் பச்சரிசி மாவில் மாவிளக்கு செய்து நந்திக்கு நெய்தீபமேற்றி வழிபட்டால் கடன்சுமை குறையும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 98652 20406